மூக்கனேரி (Mookaneri) (கன்னங்குறிச்சி ஏரி) 58 ஏக்கர் பரப்பில் அமைந்த நீர்த்தேக்கமாகும்.[2] இது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ளது. இது சேலம் நகரத்திற்கு நீர் வழங்கும் முக்கிய ஏரியாகும். சேர்வராயன் மலை அடிவாரத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது. மூக்கனேரியின் நீர் ஆதாரமாக ஏற்காடு மலை உள்ளது. ஏற்காடு மலைவாழிடத்தில் பெய்யும் மழைநீரானது இந்த ஏரியினை வந்தடைகின்றது. மலைகளிலிருந்து வரும் மழை நீர் புத்தேரியினை அடைந்து, அதன் உபரி நீரானது கொத்துக்காரன் ஓடை வழியாக மூக்கனேரியினை அடைகிறது.[3][4]

மூக்கனேரி
கன்னங்குரிச்சி ஏரி
ஒரு அழகான ஏரி காட்சி
அமைவிடம்கன்னங்குறிச்சி, சேலம், இந்தியா
ஆள்கூறுகள்11°41′12″N 80°14′33″E / 11.6867°N 80.24238°E / 11.6867; 80.24238
வகைஏரி
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு58 ஏக்கர்கள் (23 ha)[1]
குடியேற்றங்கள்சேலம்

இந்த ஏரியில் மனிதனால் உருவாக்கப்பட்ட 47 சிறு தீவுகள் உள்ளன. ஒவ்வொரு தீவும் ஏரி படுக்கையிலிருந்து சுமார் 10 அடி உயரமும் சில ஆயிரம் சதுர அடி பரப்பிலும் பரவியுள்ளது. இப்பகுதியில் கிட்டத்தட்ட 12000 மரங்கள் உள்ளன. இத்தீவுத் திட்டுகள் ஏரியினை தூர்வாரியபோது அகற்றப்பட்ட களிமண்ணைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட சிறு மணல் திட்டுகளாகும். இதில் மண் அரிப்பினைத் தடுக்கும் வகையில் தினை உள்ளிட்ட சிறு தானியங்கள் விதைக்கப்பட்டன. பின்னர் வேம்பு, ஆலமரம், நாவல், அரசமரம், மற்றும் வெட்டிவேர் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.[5]

மூக்கனேரில் தீவுகள்

மறுசீரமைப்பு தொகு

சேலத்தில் உள்ள மூக்கனேரி கழிவுநீர் மற்றும் குப்பைகளால் பெருமளவு தன்னுடைய தன்மையினை இழந்து கொண்டிக்கின்றது. சேலம் குடிமக்கள் மன்றத்தின் சார்பாக நகர்வாழ் குடிமக்கள் கூட்டாக ஏரியைச் சீரமைக்க ஏற்படுத்திய பொது முயற்சியின் கீழ் 87 லட்சம் திரட்டப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி தாமதப்பட்டதால், 2010 மே மாதம் ஏரியினைப் புனரமைக்கும் பணியினைத் தொடங்கினர்.[6]

விலங்குகள் தொகு

 
மூக்கனேரி

மூக்கனேரி பறவைகளைப் பார்வையிடும் பிரபலமான இடமாகும். மரங்களின் பசுமையான வளர்ச்சியுடன் ஏரி பகுதியில் மிதக்கும் தீவுகள் பறவைகளின் கருவறை போன்று, பறவைகளுக்கு தங்குமிடமாக உள்ளன. பறவைகளுக்குத் தேவையான உணவு இந்த ஏரியில் போதுமான அளவில் கிடைக்கின்றது. பொதுவாக கொக்குகளும் மீன்கொத்திகளும் இந்த ஏரியில் காணப்படும் பறவைகளாகும். இந்த ஏரியில் 169க்கும் மேற்பட்ட இனங்கள் காணப்பட்டுள்ளன. இவற்றில் பூநாரைகளை காண்பது அற்புதமாக இருக்கும். நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, சாம்பல் நிற வாலாட்டிக் குருவி, சாதா உள்ளான், சூறைக்குருவி, மீசை ஆலா, பைலனின் கோழி, மஞ்சள் குருகு, வயல் கதிர்க்குருவி, சிட்ரின் வாலாட்டி, சின்னத் தகைவிலான், பழுப்புத்தலை கடற்பறவை, மஞ்சள் மூக்கு நாரை, பாம்புத்தாரா மற்றும் கருந்தலை குல் உள்ளிட்ட புலம்பெயர் பறவைகளை நாம் காணலாம்.[7][8][8][8] இப்பகுதியிலுள்ள பறவைக் கண்காணிப்பாளர்களும் இயற்கை ஆர்வலர்களும் இந்த ஏரியினை சரணாலயமாக மாற்றவேண்டும் என விரும்புகிறார்கள்.[8]

மீன் பிடிப்பு தொகு

 
பரிசல் ஒன்றில் பயணம் செய்யும் ஒருவர்

இந்த ஏரி இப்பகுதியின் நிலத்தடி நீர் சேமிப்பின் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியில் கட்லா, ரோகு, குறவை உள்ளிட்ட மீன்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள மீனவர்களும், மீன் ஆர்வலர்களும் இந்த ஏரியில் மீன்களைப் பிடித்துச் செல்கின்றனர். ஓடத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கும் காட்சியானது இந்த ஏரியின் அழகினை மேம்படுத்துவதாக உள்ளது.[9]

வசதிகள் தொகு

இந்த ஏரிப்பகுதியில் உள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடும் இடமும், சிறிய கலையரங்கமும் இயற்கையான சூழலில் அமைக்கப்பட்டுள்ளது. நடையோரங்களில் அமர்வதற்கு இருக்கைகள், பூந்தொட்டிகள், ஏரியின் வழியே நடப்பவர்களுக்கான நடை பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பரிசலில் சென்று ஏரித் தீவுகளைப் பார்வையிட வசதியும் உள்ளது.[10][11]

சுற்றுச்சூழல் கவலைகள் தொகு

ஆண்டு தோறும் விநாயக சதுர்த்தியின் போது விநாயகர் சிலைகள் இங்குக் கரைக்கப்படுவதால் மூக்கனேரி மாசுபட வாய்ப்பு ஏற்படுகிறது.[12][13]

புகைப்படத் தொகுப்பு தொகு

 

மேற்கோள்கள் தொகு

  1. Ananth, M.k (1 September 2013). "Pathways to man-made islands in Mookaneri Lake demolished". The Hindu (சேலம்: The Hindu). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pathways-to-manmade-islands-in-mookaneri-lake-demolished/article5081428.ece. பார்த்த நாள்: 2 February 2018. 
  2. "Mookaneri Lake bund found ‘encroached upon’". தி இந்து (Salem: The Hindu). 30 December 2015. http://www.thehindu.com/news/national/tamil-nadu/mookaneri-lake-bund-found-encroached-upon/article8020048.ece. பார்த்த நாள்: 2 February 2018. 
  3. "Mookaneri Lake filling up". தி இந்து (Salem: The Hindu). 26 May 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/mookaneri-lake-filling-up/article7885914.ece. பார்த்த நாள்: 2 February 2018. 
  4. "Mookaneri Looks Like Ocean". தினகரன் (இந்தியா) (Salem: Dinakaran). 13 August 2018 இம் மூலத்தில் இருந்து 13 ஆகஸ்ட் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180813111312/http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=878799. பார்த்த நாள்: 13 August 2018. 
  5. "TN couple to get married on an island". Salem: தி நியூஸ் மினிட். 18 October 2017. பார்க்கப்பட்ட நாள் 2 February 2018.
  6. "Back from the brink". Salem: The Hindu. 12 July 2013. பார்க்கப்பட்ட நாள் 2 February 2018.
  7. "Kannankurichi (Mookaneri) Lake, Salem". ebird. பார்க்கப்பட்ட நாள் 2 February 2018.
  8. 8.0 8.1 8.2 8.3 . Salem. 
  9. "Once dry, now generates income". தி இந்து (Salem: The Hindu). 3 January 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Once-dry-now-generates-income/article13977590.ece. பார்த்த நாள்: 2 February 2018. 
  10. Muthahar Saqaf, Syed (26 May 2016). "Mookaneri Lake, a major tourist attraction". தி இந்து (Salem: The Hindu). http://www.thehindu.com/news/national/tamil-nadu/mookaneri-lake-a-major-tourist-attraction/article8647514.ece. பார்த்த நாள்: 2 February 2018. 
  11. "Salem’s green warrior". Mint (Salem: livemint.com). 7 November 2015. http://www.livemint.com/Leisure/tZc3CAq1yJcXmRlnrKEh8O/Salems-green-warrior.html. பார்த்த நாள்: 2 February 2018. 
  12. "Confusion over immersion of Vinakaya idols at Mookaneri Lake". தி இந்து (Salem: The Hindu). 7 September 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Confusion-over-immersion-of-Vinakaya-idols-at-Mookaneri-Lake/article14625485.ece. பார்த்த நாள்: 2 February 2018. 
  13. "Petition seeks study of pollution caused to lake water". தி இந்து (Salem: The Hindu). 2 September 2017. http://www.thehindu.com/news/cities/Coimbatore/petition-seeks-study-of-pollution-caused-to-lake-water/article19607737.ece. பார்த்த நாள்: 2 February 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கனேரி&oldid=3743549" இலிருந்து மீள்விக்கப்பட்டது