மெந்தகாப் தொடருந்து நிலையம்
மெந்தகாப் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Mentakab Railway Station மலாய்: Stesen Keretapi Mentakab); சீனம்: 文德甲火车站 என்பது மலேசியா, பகாங், தெமர்லோ மாவட்டம், மெந்தகாப் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் மெந்தகாப், தெமர்லோ, பெந்தோங், கெந்திங் மலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[2]
மெந்தகாப் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| கேடிஎம் இண்டர்சிட்டி Mentakab Railway Station | |||||||||||||||||||||
சிங்கப்பூர் - மெந்தகாப் இண்டர்சிட்டி தொடருந்து | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | மெந்தகாப், பகாங், மலேசியா | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°29′04″N 102°20′36″E / 3.48444°N 102.34333°E | ||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | ||||||||||||||||||||
தடங்கள் | தீபகற்ப மலேசியா கிழக்கு கரை வழித்தடம் | ||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து[1] | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | ||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடத்தில் (KTM East Coast Railway Line) இந்த நிலையம் உள்ளது. மலேசியாவில் அதிக அளவிலான பயணிகளைக் கொண்ட தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[3]
தொடருந்து சேவைகள்
தொகுஇந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) தொடருந்து சேவைகளை வழங்கி வருகிறது. தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரை பகுதியின் கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் தொடருந்து நிலையம் தொடங்கி நெகிரி செம்பிலான் கிம்மாஸ் தொடருந்து நிலையம் (Tumpat–Gemas) வரையிலான நிலையங்களில் இருந்து வரும் தொடருந்துகள் இந்த மெந்தகாப் நிலையத்தைக் கடந்து செல்கின்றன.
மெந்தகாப் நகரம்
தொகுமெந்தகாப் (Mentakab) பகாங் மாநிலத்தில், தெமர்லோ மாவட்டத்தில் உள்ள நகரம். இந்த நகரம் முன்பு பாசிர் ராவா என்று அழைக்கப்பட்டது. பின்னர் பெயர் மாற்றம் பெற்று மெந்தகாப் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நகரம் தெமர்லோ, லஞ்சாங், கம்போங் துவாலாங், மெங்காராக், மற்றும் கெர்டாவ் ஆகிய வட்டாரங்களுக்கு அருகில் உள்ளது. 1901-ஆம் ஆண்டு இந்த நகரை பகாங் மாநிலத்தின் தலைநகராக நியமிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்தது. இருப்பினும் நிலப் பற்றாக் குறையினால், குவாந்தான் நகரம் மாநிலத் தலைநகராகத் தகுதி பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mengkarak Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 13 July 2023.
- ↑ "Mentakab KTM Railway Station is a KTM train station situated at and named after the town of Mentakab, Pahang. Mentakab is one of major town in inner Pahang. The Mentakab Railway Station is one of the major stations of KTM's East Coast Line. KTM intercity and express trains stop at this Station". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.
- ↑ "Mentakab Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.
- ↑ 4.0 4.1 "KTM Train Schedule effective on April 1, 2021" (PDF). April 1, 2021.