திரியாங் தொடருந்து நிலையம்
திரியாங் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Triang Railway Station மலாய்: Stesen Keretapi Triang); சீனம்: 金直凉站 என்பது மலேசியா, பகாங், பெரா மாவட்டம், திரியாங் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் திரியாங் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
திரியாங் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| கேடிஎம் இண்டர்சிட்டி Triang Railway Station | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | திரியாங், பகாங், மலேசியா | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 3°14′44″N 102°24′42″E / 3.24556°N 102.41167°E | ||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||
இயக்குபவர் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||
தடங்கள் | தீபகற்ப மலேசியா கிழக்கு கரை வழித்தடம் | ||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||||||||||||||||||
இணைப்புக்கள் | உள்ளூர் போக்குவரத்து[1] | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | ||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடத்தில் (KTM East Coast Railway Line) இந்த நிலையம் உள்ளது. மலேசியாவில் அதிகம் நடமாட்டம் இல்லாத தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.
திரியாங் பகுதியில் வாழ்பவர்கள் பெரும்பாலோர் பயிர்த் தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர். இந்தப் பகுதியில் நிறைய செம்பனைத் தோட்டங்களும் ரப்பர் தோட்டங்களும் உள்ளனர். அதனால் பெரும்பாலோர் வேளாண் துறையைச் சார்ந்துள்ளனர்.
தொடருந்து சேவைகள்
தொகுஇந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) தொடருந்து சேவைகளை வழங்கி வருகிறது. தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரை பகுதியின் கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் தொடருந்து நிலையம் தொடங்கி நெகிரி செம்பிலான் கிம்மாஸ் தொடருந்து நிலையம் (Tumpat–Gemas) வரையிலான நிலையங்களிலிருந்து வரும் தொடருந்துகள் இந்த திரியாங் நிலையத்தைக் கடந்து செல்கின்றன.
- எக்சுபிரஸ் ராக்யாட் 26/27 (தும்பாட் தொடருந்து நிலையம் >>> கிம்மாஸ் தொடருந்து நிலையம் - Ekspres Rakyat Timuran Train No. 26/27 Tumpat–JB Sentral[2]
- எக்சுபிரஸ் மாக்முர் 34/35 (கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம் >>> கிம்மாஸ் தொடருந்து நிலையம் - Ekspres Makmur 34/35 Kuala Lipis–Gemas[2]
திரியாங் நகரம்
தொகுதிரியாங் (Triang) நகரம் பகாங் மாநிலத்தின் பெரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்.
நெகிரி செம்பிலான், பகாவ் நகரத்திலிருந்து பகாங், தெமர்லோ நகரத்திற்கு செல்லும் வழியில் திரியாங் நகரம் உள்ளது. அங்கு இருந்து கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை வழியாக பெந்தோங், குவாந்தான் நகரத்திற்குச் செல்லலாம்.
மலாயா அவசரகாலம்
தொகுபகாங் ஆற்றின் துணை ஆறான திரியாங் ஆற்றின் பெயரிலிருந்து இந்த இடத்திற்குத் திரியாங் என பெயர் வந்தது. 1900-களின் தொடக்கத்தில் மலாயா தொடருந்து நிறுவனம் இங்கு ஒரு சிறிய ரயில் நிலையத்தைக் கட்டியது. சிங்கப்பூரில் இருந்து வந்த இரயில்கள் இங்கு நின்று சென்றன.
1950-க்குள் பல ஆயிரம் மக்கள் தொகையுடன், திரியாங் ஒரு பிரதானமான சீன நகரமாக வளர்ந்தது. 1948 - 1960 மலாயா அவசரக்காலத்தில், மலாயா பிரித்தானிய இராணுவம் பல கிராமப்புற சீனர்களைப் பலவந்தமாகப் புதிய கிராமங்களில் குடியேறச் செய்தது.
2020-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திரியாங் நகரத்தின் மக்கள் தொகை 5,322 ஆகும். இவர்களில் 45% பேர் சீன இனத்தவர்கள். பெரும்பாலானவர்கள் திரியாங் நகரம் அல்லது புதிய கிராமங்களில் வசிக்கிறார்கள்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kemayan Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 13 July 2023.
- ↑ 2.0 2.1 "KTM Train Schedule effective on April 1, 2021" (PDF). April 1, 2021.
- ↑ "Triang (City, Malaysia) - Population Statistics, Charts, Map and Location". www.citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 14 July 2023.