மெர்சிங் வானூர்தி நிலையம்

மெர்சிங் நகரில் அமைந்துள்ள வானூர்தி நிலையம்

மெர்சிங் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: MEPஐசிஏஓ: WMAU); (ஆங்கிலம்: Mersing Airport மலாய்: Lapangan Terbang Mersing) என்பது மலேசியா, ஜொகூர், மெர்சிங் மாவட்டம், மெர்சிங் நகரில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்தில் உள்ளது. [2]

மெர்சிங்
வானூர்தி நிலையம்
Mersing Airport
வான்படம்: மெர்சிங் நகரம் இடதுபுறத்தில் உள்ளது
  • ஐஏடிஏ: MEP
  • ஐசிஏஓ: WMAU
    WMAU is located in மலேசியா
    WMAU
    WMAU
    மெர்சிங் வானூர்தி
    நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்
இயக்குனர்மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
அமைவிடம்மெர்சிங்
மெர்சிங் மாவட்டம்
ஜொகூர்
மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
ஆள்கூறுகள்02°23′00″N 103°51′34″E / 2.38333°N 103.85944°E / 2.38333; 103.85944
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
15/33 500 1,640 புல்தரை
Sources: Aeronautical Information Publication Malaysia[1]

தீபகற்ப மலேசியாவின் மேற்குப் பகுதியில்; மலேசியத் தலைநகரமான கோலாலம்பூர் மாநகரில் இருந்து 355 கி.மீ.; ஜொகூர் மாநிலத் தலைநகரமான ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 127 கி.மீ.; பகாங் மாநிலத் தலைநகரமான [குவாந்தான்]] மாநகரில் இருந்து 165 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. மெர்சிங் நகரில் இருந்து வடமேற்கே 6.1 கி.மீ. தொலைவில் உள்ளது.

பெயர் வரலாறு

தொகு

மெர்சிங் எனும் பெயர் மாவ் செங் போர்ட் (Mau Sheng Port) எனும் சீன மொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. 1880-ஆம் ஆண்டு முதல், மெர்சிங் எனும் சொல் ஜொகூர் மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும் அமீர் சிங் (Amir Singh) அல்லது மென் சிங் (Men Singh) என்று பெயர் கொண்ட சீக்கிய வணிகர் ஒருவரிடம் இருந்தும், மெர்சிங் எனும் பெயர் பெறப்பட்டு இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது. ஒரு தீர்க்கமான முடிவு கிடைக்கவில்லை.[3]

பொது

தொகு

மெர்சிங் மாவட்டத்தில் நிறைய சுற்றுலாத் தீவுகள் உள்ளன. அழகிய கடற்கரைகளில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த நகரத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடல்கரை அழகிற்குப் பிரபலமானவை. இந்த நகரத்தில் இருந்துதான் தென்சீனக் கடலில் இருக்கும் சுற்றுலாத் தீவுகளுக்குப் படகு ஏறிச் செல்ல வேண்டும்.

மெர்சிங் நகரம் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது. ஜொகூர் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு முக்கிய நகரங்களில் மெர்சிங் நகரமும் ஒன்றாகும். மற்றொரு நகரம் கோத்தா திங்கி.

மெர்சிங் நகரம்

தொகு

தெற்கு மற்றும் கிழக்கு ஜொகூரை இணைக்கும் முதன்மைச் சாலையில் மெர்சிங் நகரம் அமைந்துள்ளது. பகாங் மாநிலத்தின் தலைநகர் குவாந்தான் உட்பட மற்ற கிழக்குக்கரை நகரங்களை மெர்சிங் வானூர்தி நிலையம் இணைக்கின்றது. மேலும் தியோமான் தீவு போன்ற தென்சீனக் கடல் தீவுகளுக்குச் செல்வதற்கு மெர்சிங் வானூர்தி நிலையம் பயன்படுத்தப்படுகிறது..[4]

இயற்கைச் சுற்றுச்சூழல் சுற்றுலா, மீன்பிடித் தொழில், கடல் சார் மீன்வளர்ப்புத் தொழில், விவசாயம் மற்றும் இலகு வகை தொழிற்சாலைகள் ஆகியவை இந்த நகரத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள்.[5]

மெர்சிங் மாவட்டத்தில் ஏழுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவை உள்நாட்டு; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன. தியோமன் தீவிற்கு சுற்றுலாப் பயணிகளை விமானம் மூலம் கொண்டு செல்ல மெர்சிங் வானூர்தி நிலையம் பயன்படுத்தப்படுகிறது.

சான்றுகள்

தொகு
  1. AIP Malaysia: Index To Aerodromes பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
  2. "Mersing Airport – Gateway to Tioman & Other Islands". 13 March 2016.
  3. "Toponymy Heritage Places". பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
  4. Latif, Zulkifly Ab (14 July 2020). "Mersing's main claim to fame is it being the principal gateway to Johor's group of islands as well as the neighboring Pahang's Tioman island". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
  5. "Mersing is a town in Johor, Malaysia. It remains as a fishing village despite the developing city centre of Johor Bahru". johor.attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.

மேலும் காண்க

தொகு

புற இணைப்புகள்

தொகு