குளிர்சாதன இரண்டாம் வகுப்பு (2A), குளிர்சாதன மூன்றாம் வகுப்பு (3A), படுக்கை வகுப்பு (SL), முன்பதிவற்ற பெட்டிகள் (GS) & பொருட்கள், மின்னாக்கி மற்றும் காவலர் பெட்டி (EOG)
மாற்றுத்திறனாளி அனுகல்
இருக்கை வசதி
உண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்)
படுக்கை வசதி
உண்டு (படுக்கை வசதி பெட்டிகள்)
உணவு வசதிகள்
இல்லை
காணும் வசதிகள்
பெரிய சாளரங்கள்
பொழுதுபோக்கு வசதிகள்
ஆம்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு
WAP-4 Locomotive from Erode, Arakkonam Electric Shed
இந்தத் தொடருந்து கர்நாடகா அரண்மனை நகரமான மைசூருவை தமிழ்நாடு முத்து நகரத்துடன் இணைக்கிறது. ஆரம்பத்தில் மதுரை இருந்து பெங்களூரு வரை இயக்கப்பட்ட இந்த ரயில், தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது, பின்னர் அது பெங்களூரிலிருந்து மைசூரு வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் அந்த ரயில் தெற்கு ரயில்வேக்கு சொந்தமானது, எனவே 16731/16732 என எண்ணப்பட்டுள்ளது. இப்போது அது 16235/16236 என மறுபெயரிடப்பட்டுள்ளது, எனவே இப்போது அது தென்மேற்கு ரயில்வேயால் இயக்கப்படுகிறது. தென்மேற்கு இரயில்வேயில் மைசூர் கோட்டத்தின் மிகவும் பழமையான ரயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ரயிலை ஈரோடு வழித்தடத்திற்குப் பதிலாக கரூர்-நாமக்கல்-சேலம் வழியாக திருப்பி விடுமாறு தென் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டி எண் 16235/தூத்துக்குடி→மைசூர் விரைவு வண்டி 052கிலோமீட்டர் என்ற வேகத்தில் 776 கிலோமீட்டரை 1 நாள் இரவு கடந்து 17மணி 05நிமிடங்களில் கடக்கிறது. மறுமார்கத்தில் 16236/மைசூர்–தூத்துக்குடி விரைவு வண்டி அதேபோல் 52கி.மீ என்ற வேகத்தில் 776கிலோமீட்டரை 1 நாள் இரவு கடந்து 17மணி 15நிமிடங்களில் கடக்கிறது. இதன் குறைந்தபட்ச வேகம் 52கி.மீ ஆகும். அதிகபட்ச வேகம் 110கி.மீ ஆகும்
16231 – தூத்துக்குடியில் இருந்து தினசரி மாலை 17 மணி 15 நிமிடங்களுக்கு புறப்பட்டு மறுநாள் காலை மைசூர் சந்திப்பிற்கு காலை 10 மணி 20 நிமிடங்களுக்கு சென்றடைகிறது.
16232 – மைசூர் சந்திப்பில் இருந்து தினசரி மாலை 18 மணி 20 நிமிடங்களுக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணி 55 நிமிடங்களுக்கு தூத்துக்குடியை சென்றடைகிறது.
16235 ~ தூத்துக்குடி → மைசூர் சந்திப்பு ~ மைசூர் விரைவு வண்டி