மை. சி. சத்யூ
மைசூர் சிறீனிவாஸ் சத்யூ (Mysore Shrinivas Sathyu) (பிறப்பு ஜூலை 6,1930) இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும், மேடை வடிவமைப்பாளரும் மற்றும் கலை இயக்குனரும் ஆவார். இந்தியப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட 'கார்ம் ஹவா' (1973) என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர்.[1] 1975இல் இந்திய அரசில் குடிமக்களுக்கு நான்காவதாக வழங்கப்பெறும் உயர் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2]
மைசூர் சிறீனிவாஸ் சத்யூ | |
---|---|
2010இல் சத்யூ | |
பிறப்பு | 6 சூலை 1930 மைசூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர் மேடை வடிவமைப்பாளர் கலை இயக்குநர் |
அறியப்படுவது | கார்ம் ஹவா மற்றும் பாரா |
வாழ்க்கைத் துணை | சாமா சைதி |
ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகன்னட பிராமணக் குடும்பத்தில் பிறந்த சத்யூ மைசூரில் வளர்ந்தார். மைசூரில் ஆரம்பக்கல்வியும் பின்னர் பெங்களூரில் தனது உயர்கல்வியையும் தொடர்ந்தார். 1952 ஆம் ஆண்டில், இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். சத்யூ வட இந்தியவைச் சேர்ந்த சியா இசுலாம் பிரிவைச் சேர்ந்த சாமா சைதி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
தொழில் வாழ்க்கை
தொகுசத்யூ 1952-53 இல் இயங்குக் கலை கலைஞராக சுயாதீனமாகப் பணி புரிந்தார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக வேலையில்லாமல் இருந்த பிறகு, திரைப்படத் தயாரிப்பாளர் சேத்தன் ஆனந்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். இந்துஸ்தானி நாடக அரங்கம், அபீப் தன்வீரின் ஓக்லா நாடக அரங்கம், கன்னட பாரதி மற்றும் தில்லியிலுள்ள பிற நாடகக்குழுக்களின் தயாரிப்புகளுக்கான அரங்க வடிவமைப்பு மற்றும் விளக்குகளை வடிவமைப்பது உட்பட பல பணிகளை மேற்கொண்டார். ஒரு வடிவமைப்பாளராகவும் இயக்குநராகவும் பணியாற்றினார். பின்னர் திரைப்படங்களில், கலை இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும், தயாரிப்பாளராகவும் மற்றும் இயக்குனராக பணியாற்றியுள்ளார். சேத்தன் ஆனந்தின் ஹக்கீக்கத் என்றா படத்தில் ஒரு சுயாதீன கலை இயக்குனராகப் பணியாற்றினார். இது இவருக்கு அங்கீகாரத்தையும் சிறந்த கலை இயக்கத்திற்கான 1965இல் பிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது. சத்யூவின் திரைப்படங்களில் 15 க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களும், இந்தி, உருது மற்றும் கன்னட மொழிகளில் 8 திரைப்படங்களும் அடங்கும்.[2]
இவரது சிறந்த படைப்பு, கர்ம் ஹவா (1973), பல்ராஜ் சாஹனீ மற்றும் கைபி ஆசுமி உட்பட 1950களின் மார்க்சிய கலாச்சார ஆர்வலர்களைக் கொண்ட கடைசித் திரைப்படங்களில் ஒன்றாகும். கார்ம் ஹவா 1974 இல் தேசிய ஒருமைப்பாட்டு விருது உட்பட பல இந்திய தேசிய விருதுகளை வென்றது.[3] இது கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் அகாதமி விருதுகளில் இந்தியாவின் சார்பில் திரையிடப்பட்டது. இது சிறந்த திரைக்கதைக்கான பிலிம்பேர் விருதை வென்றது. [4]
சத்யு தற்போது முக்கியமாக தொலைக்காட்சி மற்றும் மேடையுடன் தொடர்புடையவராக உள்ளார். 2013 ஆம் ஆண்டில், சத்யு பிரபலமான கூகுளின் ரீயூனியன் விளம்பரத்தில் இடம்பெற்றார். அதில் இவர் யூசுஃப் என்ற வயதான பாகித்தானியர் பாத்திரத்தில் நடித்தார். இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் பிரபலமானது.[5] [6] [7] சத்யு இந்திய மக்கள் நாடக சங்கத்தின் புரவலர்களில் ஒருவராகவும் இருக்கிறார். சுதீர் அத்தவர் எழுதிய குல் இ பகாவலி என்ற இசை நாடகத்தை இயக்கினார்; 2018 ஆம் ஆண்டில் 8 வது உலக நாடக ஒலிம்பிக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 'தாரா ஷிகோ', அமிர்தா, பக்ரி, குரி, அக்ரி ஷாமா போன்ற பல நாடகங்களையும் இயக்கியுள்ளார். 2014 இல், இவரது முதல் படமான கார்ம் ஹவா மறுசீரமைப்பிற்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Back Story: Separate lives". Mint. 27 July 2012 இம் மூலத்தில் இருந்து 1 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181101140149/https://www.livemint.com/Leisure/xh9EvT8R5nSO58eu3RJgRL/Film--Back-story.html.
- ↑ 2.0 2.1 Barnouw, Erik, and S. Krishnaswamy, Indian Film, New York and London, 1963.
- ↑ Chakravarty, Sumita S., National Identity in Indian Popular Cinema, 1947–1987, Austin, Texas, 1993
- ↑ Azmi, Kafi and Shama Zaidi, Three Hindi Film Scripts, 1974.
- ↑ "Back with the wind". The Hindu. 14 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-11-14.
- ↑ "Google Search: emotional Google India reunion advert goes viral". The Telegraph. 19 November 2013. Archived from the original on 20 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-11-14.
- ↑ "Google India-Pakistan Search Ad". TIME. 14 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-11-14.