மோர்னி மோர்க்கல்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

மோர்னி மோர்க்கல் (Morné Morkel, பிறப்பு: அக்டோபர் 6 1984),[1] தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை விரைவு பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் சர்ரே அணிக்காக இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவர் சிறந்த வேகத்தில் பந்துவீசுவதாக முன்னாள் தென்னாப்பிரிக்க அணியின் விரைவு வீச்சாளர் அலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.[2] மேலும் மட்டையாளராகவும் சிறப்பான பங்களிப்பை அணிக்கு அளித்து வந்தார். இவருக்கு அல்பி மோகல் எனும் சகோதரர் உள்ளார். அவரும் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இவர்களின் தந்தையும் தென்னாபிரிக்க மாநில துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மோர்னி மோர்க்கல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மோர்னி மோர்க்கல்
உயரம்6 அடி 6 அங் (1.98 m)
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு
பங்குபந்து வீச்சுசாளர்
உறவினர்கள்அல்பி மோகல் (சகோதரர்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 300)திசம்பர் 26 2006 எ. இந்தியா
கடைசித் தேர்வுஜனவரி 2 2015 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 89)சூன் 6 2007 எ. ஆசியா XI
கடைசி ஒநாபநவம்பர் 23 2015 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்65
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 67 103 103 128
ஓட்டங்கள் 751 214 1,459 319
மட்டையாட்ட சராசரி 11.92 8.56 14.16 9.38
100கள்/50கள் 0/0 0/0 0/4 0/0
அதியுயர் ஓட்டம் 40 25 82* 35
வீசிய பந்துகள் 12,729 5,164 18,714 6,211
வீழ்த்தல்கள் 227 176 361 205
பந்துவீச்சு சராசரி 29.30 23.98 27.50 24.64
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
6 2 13 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 2 0
சிறந்த பந்துவீச்சு 6/23 5/21 6/23 5/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15/– 28/– 35/– 33/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 24 2015

டிசம்பர் 26, 2006 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் அறிமுகமானார்[3]. பின் நிலையில்லாத ஆட்டத் திறனால் 2009 ஆம் ஆண்டுகளில் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இவருக்குப் பதிலாக இவரின் சகோதரர் அல்பி மோகலுக்கு அணியில் இடம் கிடைத்தது. இவர் 86 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மார்ச் , 2018 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 300 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இந்தச் சாதனை புரிந்த ஐந்தாவது தென்னாப்பிரிக்க வீரர் ஆனார். சூன் 6, 2007 இல் இவர் ஆசிய லெவன் அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமான இவர் 117 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்,[3] செப்டம்பர் 11, 2007 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அறிமுகமாகி 44 பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.[3] 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவரின் சகோதரரான அல்பி மோகலுடன் இனைந்து துவக்க ஓவர்களை வீசினர். இதன்மூலம் துவக்க ஓவர்களை வீசிய முதல்சகோதரர்கள் எனும் சாதனையைப் படைத்தனர்.

பெப்ரவரி 26, 2018 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்டத் தொடரின் முடிவில், சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்தியன் பிரீமியர் லீக்

தொகு

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் மூன்று பருவங்களிலும் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ஷேன் வோர்ன் தலைமையிலான இந்த அணி முதல் பருவகாலத்திற்கான கோப்பையைக் கைப்பற்றியது. பின் நான்காவது பருவத்திற்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணியாக விளங்கினார். இந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 25 இலக்குகளாஇக் கைப்பற்றினார். இதன் மூலம் அந்த பருவகாலத்தில் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்து கருஞ்சிவப்பு தொப்பியைப் பெற்றார். பின் 2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.

சான்றுகள்

தொகு
  1. Warner, David (2011). The Yorkshire County Cricket Club: 2011 Yearbook (113th ed.). Ilkley, Yorkshire: Great Northern Books. p. 374. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905080-85-4.
  2. Speed trial, by Telford Vice, Cricinfo, retrieved 27 December 2004
  3. 3.0 3.1 3.2 "Morne Morkel", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-16

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோர்னி_மோர்க்கல்&oldid=3226088" இலிருந்து மீள்விக்கப்பட்டது