யாம்பில் பிராந்தியம்

கசகஸ்தானின் மாகாணம்

ஜம்பில் பிராந்தியம் (Jambyl Region, காசாக்கு மொழி: Жамбыл облысы , جامبىل) என்பது கஜகஸ்தானின் ஒரு பிராந்தியம் ஆகும். இதன் தலைநகரம் தாராஸ் நகரமாகும். இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை 1,000,000 ஆகும். தலை நகரின் மக்கள் தொகை 335,100 என்று உள்ளது. இப்பிராந்தியம் கிர்கிஸ்தானின் எல்லையில் உள்ளது. மேலும் இது உஸ்பெகிஸ்தானுக்கு மிக அருகில் உள்ளது. இந்த மாகாணத்தின் அண்டை மாகாணங்களாக கரம்பண்டா பிராந்தியம் (வடக்கே), துர்கிஸ்தான் பிராந்தியம் (மேற்கில்), அல்மாட்டி பிராந்தியம் (கிழக்கில்) ஆகிய மூன்று மாகாணங்கள் உள்ளன. மாகாணத்தின் மொத்த பரப்பளவு 144,200 சதுர கிலோமீட்டர்கள் (55,700 sq mi) ஆகும். இந்த மாகாணம் இதன் வடகிழக்கில் பால்காஷ் ஏரியின் எல்லையாக உள்ளது.

ஜம்பில் பிராந்தியம்
Ʒambíl oblísí
Жамбыл облысы
மாகாணம்
ஜம்பில் பிராந்தியம்-இன் சின்னம்
சின்னம்
கஜகஸ்தானின் வரைபடத்தில், ஜம்பில் மாகாணத்தின் இருப்பிடம் காட்டப்பட்டுள்ளது
கஜகஸ்தானின் வரைபடத்தில், ஜம்பில் மாகாணத்தின் இருப்பிடம் காட்டப்பட்டுள்ளது
ஆள்கூறுகள்: 44°0′N 72°0′E / 44.000°N 72.000°E / 44.000; 72.000
நாடு கசக்கஸ்தான்
தலைநகரம்தாராஸ்
அரசு
 • அக்கீம்கரீம் கோகிரேக்பேவ்
பரப்பளவு[1]
 • மொத்தம்1,44,264 km2 (55,701 sq mi)
மக்கள்தொகை (2013-02-01)[2]
 • மொத்தம்10,71,645
 • அடர்த்தி7.4/km2 (19/sq mi)
நேர வலயம்East (ஒசநே+6)
 • கோடை (பசேநே)not observed (ஒசநே+6)
அஞ்சல் குறியீடு080000
தொலைபேசி இலக்கத் திட்டம்+7 (726)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுKZ-ZHA
வாகனப் பதிவு08, H
மாவட்டங்கள்10
மாநகரங்கள்4
சிற்றூர்கள்367
இணையதளம்www.zhambyl.gov.kz

மக்கள் வகைப்பாடு தொகு

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஜம்பில் பிராந்திய மக்கள் தொகையானது 1,130,099 என்று இருந்த‍து. [3]

இனக்குழுக்கள் (2020): [4]

  • கசக்குகள் : 72.81%
  • உருசியர் : 9.60%
  • டங்கன் : 5.29%
  • துருக்கியர் : 3.07%
  • உஸ்பெக்கியர் : 2.54%
  • மற்றவர்: 6.69%

நிர்வாக பிரிவுகள் தொகு

இந்த மாகாணம் நிர்வாக ரீதியாக பத்து மாவட்டங்களாகவும், தாராஸ் நகரப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. [5]

  1. பேசாக் மாவட்டம்
  2. ஜம்பில் மாவட்டம்
  3. கோர்டே மாவட்டம்
  4. மெர்கி மாவட்டம்
  5. மொயின்கும் மாவட்டம்
  6. சரிசு மாவட்டம்
  7. ஷு மாவட்டம்
  8. தலாஸ் மாவட்டம்
  9. துரார் ரிஸ்குலோவ் மாவட்டம்
  10. ஜுவாலி மாவட்டம்

ஜனதாஸ், கரட்டாவு, ஷு, மற்றும் தாராஸ் ஒரு நகரத்தின் நிர்வாக அந்தஸ்தைக் கொண்டுள்ளன. [5]

பொருளாதாரம் தொகு

மாகாணத்தின் முக்கியமான தொழில்களில் பாறை பாஸ்பேட் சுரங்கம் ( கரடாவைச் சுற்றி) உள்ளது. கஜகஸ்தானின் நன்செய் வேளாண்மையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக சு நதி பள்ளத்தாக்கு உள்ளது.

காட்சியகம் தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு