ரவி யாதவ்

இந்திய ஒளிப்பதிவாளர்

ரவி யாதவ் (Ravi Yadav) என்பவர் ஓர் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் இந்தி மற்றும் தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் அப்பாஸ் மற்றும் முஸ்தான் பர்மவல்லா மற்றும் ஆர். கே. செல்வமணி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் சென்னை எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவில் பட்டயப் படிப்பு முடிப்பதற்கு முன்பே படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினார். இவர் தனது வகுப்பு தோழர்கள் மற்றும் நண்பர்களுடன் தமிழ்த் திரைப்படங்களில் படப்பிடிப்பைத் தொடங்கினார். ரவி தனது முதல் படத்தை எந்தவொரு திரைப்பட படைப்பாளி, ஒளிப்பதிவாளரின் உதவி இல்லாமல் சுயாதீனமாக செய்தார். மேலும் இரண்டு தமிழ் படங்களை தயாரித்து பின்னர் பாலிவுட்டுக்கு மாறினார். பாலிவுட் இரட்டை இயக்குனர்களான அப்பாஸ்-முஸ்தானுடன் ஹம்ராஸ், தார்சன், ஐட்ராஸ், 36 சீனா டவுன், நகாப், ரேஸ் 1, பிளேயர்கள், ரேஸ் 2 போன்ற குறிப்பிடத்தக்க இந்தி திரைப்படங்களில் பணியாற்றினார்.

ரவி யாதவ்
பிறப்புதமிழ்நாடு, திருத்தணி
பணிஒளிப்பதிவாளர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சப்னா ரவி யாதவ்
பிள்ளைகள்வாக்மின் அக்ஷர் யாதவ்

ரோஹின் தராக் யாதவ்

உய்ர் நிலக்ஷ் யாதவ்

திரைப்படவியல்

தொகு

ஒளிப்பதிவாளராக

தொகு

இயக்குநராக

தொகு

ரவி யாதவ் தெலுங்குத் திரைப்படமான மரோ சரித்ராவை இயக்கியுள்ளார். இது 1978 ஆம் ஆண்டு அதே பெயரில் வந்த படத்தை தழுவி எடுக்கபட்டதாகும். இப்படத்தைதை தில் ராஜு தயாரித்தார். இந்த படத்திற்கான உரையாடலை உமர்ஜி அனுராதா எழுத கதையை கே. பாலச்சந்தர் எழுதியுள்ளார். ரவி இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றினார்.

தயாரிப்பாளராக

தொகு

ஆர். கே. செல்வமணி இயக்கிய 2007 ஆம் ஆண்டு தமிழ் மொழி நாடகப் படமான குற்றப்பத்திரிகை படமானது ரவி யாதவின் யாதவாலயா பிலிம்சால் தயாரிக்கபட்டது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோஜா ஆகியோருடன் ராம்கி, ரகுமான் ஆகியோர் நடித்தனர். இளையராஜா இசையமைத்தார். இப்படமானது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை மற்றும் இலங்கை உள்நாட்டுப் போரை பின்னணியாகக் கொண்டது. இந்த படம் 1991 இல் எடுக்கப்பட்டு, பதின்மூன்று ஆண்டுகளாக வெளியிட முடியாமல் இந்திய தணிக்கைத் துறையிடம் சிக்கிக்கொண்டது, இப்படமானது கடுமையான அரசியல் செய்திகளுடன் உள்ளதாக தணிக்கை வாரியம் அனுமதிக்க மறுத்ததால், படம் இறுதியாக 2007 மார்ச் மாதம் பல வெட்டுக்களுடன் வெளியானது.

குறிப்புகள்

தொகு

http://www.indiaglitz.com/channels/tamil/review/9117.html பரணிடப்பட்டது 2007-04-06 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_யாதவ்&oldid=4173345" இலிருந்து மீள்விக்கப்பட்டது