பப்பு யாதவ்

இந்திய அரசியல்வாதி
(ராஜேஷ் ரஞ்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராஜேஷ் ரஞ்சன் பீகாரிய அரசியல்வாதி. இவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1967-ஆம் ஆண்டின் டிசம்பர் 24-ஆம் நாளில் பிறந்தார். பீகாரில் உள்ள பூர்ணியாவை சொந்த ஊராகக் கொண்டவர். இவர் மதேபுரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பப்பு யாதவ்
இந்திய மக்களவை உறுப்பினர்
மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்சந்தோஷ் குமார் (அரசியல்வாதி)
தொகுதிபூர்ணியா மக்களவைத் தொகுதி
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
முன்னையவர்சரத் யாதவ்
பின்னவர்தினேஷ் சந்திர யாதவ்
தொகுதிமதேபுரா
பதவியில்
2004–2009
முன்னையவர்லாலு பிரசாத் யாதவ்
பின்னவர்சரத் யாதவ்
தொகுதிமதேபுரா
பதவியில்
1999–2004
முன்னையவர்ஜெய் கிருஷ்ணா மண்டல்
பின்னவர்உதய் சிங்
தொகுதிபூர்ணியா
பதவியில்
1991–1998
முன்னையவர்முகம்மது தசுலீமுத்தீன்
பின்னவர்ஜெய் கிருஷ்ணா மண்டல்
தொகுதிபூர்ணியா
மக்கள் அதிகாரம் கட்சித் தலைவர்
பதவியில்
9 மே 2015 – 20 மார்ச்சு 2024
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ராஜேஷ் ரஞ்சன்

24 திசம்பர் 1967 (1967-12-24) (அகவை 56)
குருதா, மதேபுரா மாவட்டம், பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு,
சுயேச்சை (அரசியல்)
(மக்களவை)
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்ரஞ்சீத் ரஞ்சன் (இதேகா)
பிள்ளைகள்
  • சர்தாக் இராஜன்
  • பிரகிரிதி ராஜன்
வாழிடம்(s)பூர்ணியா, பீகார், இந்தியா

இளமை

தொகு

பப்பு யாதவ் 24 திசம்பர் 1967 அன்று பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள குர்தா கர்வேலி கிராமத்தில் (குமார் காந்த் தொகுதி) ஒரு நில உரிமையாளர் குடும்பத்தில் பிறந்தார். சுபாலில் உள்ள ஆனந்த் பள்ளியில் படித்தார். மாதேபுராவில் உள்ள பி. என். மண்டல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பு மற்றும் இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பேரிடர் மேலாண்மை மற்றும் மனித உரிமைகள் பிரிவில் பட்டயப்படிப்பினையும் முடித்துள்ளார். ராஜேஷ் ரஞ்சன் என்பது இவரது அதிகாரப்பூர்வ பெயர். ஆனால் பப்பு என்ற செல்லப்பெயர் சிறுவயதில் இவரது தாத்தாவால் வைக்கப்பட்டு கூறப்பட்டது. இவர் ரஞ்சித் ரஞ்சனை மணந்தார். இவர் மாதேபுரா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது மகனின் பெயர் சர்தக் ரஞ்சன். இவரது மகன் இருபது-20 துடுப்பாட்ட வீரர் ஆவார்.[2][3]

பதவிகள்

தொகு
# முதல் வரை பதவி கட்சி
1. 1990 1991 சட்டமன்ற உறுப்பினர் (1 முறை) - சிங்கேஸ்வர் சட்டமன்றத் தொகுதி சுயேச்சை
2. 1991 1996 மக்களவை உறுப்பினர்(1வது முறை) - 10வது மக்களவை -பூர்ணியா மக்களவைத் தொகுதி (இடைத்தேர்தல்) சுயேச்சை
3. 1996 1998 மக்களவை உறுப்பினர் (2வது முறை) - 11வது மக்களவை -பூர்ணியா மக்களவைத் தொகுதி சமாஜ்வாதி கட்சி
4. 1999 2004 மக்களவை உறுப்பினர் (3வது முறை) - 13வது மக்களவை -பூர்ணியா மக்களவைத் தொகுதி சுயேச்சை
5. 2004 2009 மக்களவை உறுப்பினர் (4வது முறை) - 14வது மக்களவை -பூர்ணியா மக்களவைத் தொகுதி (இடைத்தேர்தல்) இராச்டிரிய ஜனதா தளம்
6. 2014 2019 மக்களவை உறுப்பினர் (5வது முறை) - 16வது மக்களவை -மதேபுரா மக்களவைத் தொகுதி இராச்டிரிய ஜனதா தளம்
7. 2024 2029 மக்களவை உறுப்பினர் (6வது முறை) - 18வது மக்களவை பூர்ணியா மக்களவைத் தொகுதி சுயேச்சை

சான்றுகள்

தொகு
  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=554[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  2. ankur.shukla. "मम्मी-पापा से बिल्कुल अलग है इस लड़के की कहानी, राजनीति नहीं क्रिकेट की दुनिया में करना चाहता है करिश्मा". Asianet News Network Pvt Ltd (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-09-20.
  3. Sarthak Ranjan
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பு_யாதவ்&oldid=4042287" இலிருந்து மீள்விக்கப்பட்டது