இராயக்கோட்டை
இராயக்கோட்டை (Rayakottai) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும். [3][4] இது இராயக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது. இந்த ஊரில் புகழ்பெற்ற இராயக்கோட்டை தக்காளி சந்தை உள்ளது. இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இராயக்கோட்டை | |||
ஆள்கூறு | 12°30′49″N 78°01′56″E / 12.513584°N 78.0321573°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கிருட்டிணகிரி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், கெலமங்கலத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவிலும் தெற்கே மாரண்டஹள்ளி 18கி.மீ தூரத்திலும் உள்ளது. இந்த ஊரில் உள்ள துர்வாச மலையில் இதே பெயரில் அழைக்கப்படும் ஒரு மலைக் கோட்டை உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 2043. வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 8593 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 4311 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 4282 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 66.5 % ஆகும்.[5] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
போக்குவரத்து
தொகுஇந்த ஊருக்கு சேலம் பெங்களூரு தடத்தில் இராயக்கோட்டை தொடர்வண்டி நிலையம் என்ற பெயரிலான தொடர்வண்டி நிலையம் உள்ளது.
மேற்கோள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-30. பார்க்கப்பட்ட நாள் 2013-01-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2013-01-14.
- ↑ "Rayakotta Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.