ரோகிணி நீலேகனி
ரோகிணி நிலேகனி (Rohini Nilekani பிறப்பு 1960) என்பவர் ஒரு இந்திய எழுத்தாளர், கொடையாளி ஆவார். [1] இவர் தண்ணீர் மற்றும் நலவாழ்வு சிக்கல்களில் கவனம் செலுத்துவதற்காக 2001 இல் நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற அறக்கட்டளையான அர்க்கியம் அறகட்டளையின் நிறுவனர் ஆவார். [2] [3] துவக்கக் கல்வியில் கவனம் செலுத்தும் அக்சரா அறக்கட்டளையின் தலைவராகவும் இவர் உள்ளார். [4] இலாப நோக்கற்ற கல்வி தளமான இகேஸ்டெப் (EkStep) இன் இணை நிறுவனர் மற்றும் இயக்குநராக ரோகிணி பணியாற்றுகிறார். [5] [6] இவர் ரோகினி நிலேகனி ஃபிலாண்ட்ரோபீஸ் அமைப்பின் தலைவர் ஆவார். [7]
ரோகிணி நீலேகனி | |
---|---|
2013 சனவரியில் ரோகிணி நீலேகனி | |
பிறப்பு | 1960 |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | நோனி |
படித்த கல்வி நிறுவனங்கள் | எல்பின்ஸ்டன் கல்லூரி செயின்ட் சேவியர் கல்லூரி, மும்பை |
பணி | எழுத்தாளர், கொடையாளர் மற்றும் அர்க்கியம் அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் |
அமைப்பு(கள்) | இன்ஃபோசிஸ், அர்க்கியம் அறக்கட்டளை, அக்சரா அறக்கட்டளை, பிராத்தம் புக்ஸ், எக்ஸ்டெப், ரோகினி நிலேகனி பரோபகாரங்கள் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Stillborn (1998) |
தொலைக்காட்சி | Uncommon Ground (என்டிடிவி) |
வாழ்க்கைத் துணை | நந்தன் நிலெக்கணி |
வலைத்தளம் | |
Official website |
துவக்கக் கால வாழ்க்கை
தொகுரோகிணி இந்தியாவின் மும்பையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தார். இவரது தந்தை ஒரு பொறியாளர், தாயார் ஒரு இல்லத்தரசி. இவர் எல்பின்ஸ்டன் கல்லூரியில் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். [8]
தொழிலும் வேலையும்
தொகுதனது படிப்பை முடித்த பிறகு, ரோகிணி தற்போது செயல்பாட்டில் இல்லாத பம்பாய் இதழில் 1980 இல் செய்தியாளராக பணியாற்றத் தொடங்கினார். பின்னர் பெங்களூரில் சண்டே இதழில் பணியாற்றினார். [4]
1998 இல், அவர் தனது முதல் புதினமான ஸ்டில்போர்னை வெளியிட்டார். இது பெங்குயின் புக்ஸ் பதிப்பகம் மூலம் வெளியானது. ஸ்டில்போர்ன் ஒரு மருத்துவ பரபரப்பூட்டும் புதினமாகும். அது வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. [6] இவர் 2004 இல் இணைந்து நிறுவிய சிறுவர்களுக்கான புத்தகங்களை வெளியிடும் இலாப நோக்கற்ற வெளியீட்டு நிறுவனமான பிராந்தம் புக்ஸ் மூலம் தான் சிறுவர்களுக்காக எழுதிய சிருங்கேரி தொடர் என்ற குழந்தைகளுக்கான கதைகளை வெளியிட்டார் [6]
இவரது இரண்டாவது புத்தகம், அன்காமன் கிரவுண்ட் ஆகும். அதே பெயரில் 2008 ஆண்டு இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இவரின் கூற்றுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அபுனைவு நூல் இது ஆகும். அன்காமன் கிரவுண்ட் 2011 இல் பென்குயின் புக்சால் வெளியிடப்பட்டது. [9] [6] 2001 ஆம் ஆண்டில், ரோகிணி நிலேகனி தண்ணீர், நலவாழ்வு சிக்கல்களில் பணியாற்றும் ஒரு இலாப நோக்கற்ற அர்க்கியம் அறக்கட்டளையை நிறுவினார் இதற்கு இவர் தனிப்பட்ட முறையில் நிதியளித்து வருகிறார். [4]
நிலேகனி சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அசோகா அறக்கட்டளையின் (ATREE) அறங்காவலர் குழுவில் உள்ளார். [10] இவர் 2012 மே முதல் இந்திய (வணிகப்) போட்டி ஆணையத்தின் புகழ்பெற்ற நபர்கள் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார் [11] 2011 சூலையில், இவர் இந்தியாவின் பொதுத் தணிக்கையாளர் மற்றும் தணிக்கையாளர் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். [12] இவர் 2017 இல் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமியின் வெளிநாட்டு கௌரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டார். [13]
இவர் 2021 செப்டம்பரில் அர்க்கியம் அறக்கட்டளையின் தலைவர் பொற்றுப்பில் இருந்து ஓய்வு பெற்றார் [14] நிலேகனி தற்போது காலநிலை மாற்றம், பாலின சமத்துவம், நீதி, நிர்வாகம், விலங்குகள் நலன் ஆகியவற்றில் பணியாற்றும் 80 குடிசார் சமூக அமைப்புகளுக்கு ஆதரவாக இருக்கிறார். [15]
வெளியிடப்பட்ட புத்தகங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | வெளியீட்டு வீடு | சர்வதேச தர புத்தக எண் |
---|---|---|---|
1998 | Stillborn | பெங்குயின் இந்தியா | பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780670085620 |
2011 | Uncommon Ground | பெங்குயின் இந்தியா | பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788182638945 |
2020 | திThe Hungry Little Sky Monster | ஜாகர்நாட் புத்தகங்கள் | பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789353451349 |
2022 | Samaaj, Sarkaar, Bazaar: a citizen-first approach | நோஷன் பிரஸ் | பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9798887336947 |
கொடைகள்
தொகுநிலேகனி ஒரு கொடையாளியும் ஆவார். இவர் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளைக்கு (ATREE) ₹ 50 கோடியை அளிக்க ஒப்புக்கொண்டார். [16] 2013 திசம்பரில், ரோகிணியும் அவரது கணவர் நந்தன் நிலெக்கணியும், தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழுவுக்கு அதன் புது தில்லி வளாகத்தில் புதிய இந்திய மையத்தைக் கட்டுவதற்காக ₹ 50 கோடி நன்கொடையாக அளித்தனர். [17] 2013 ஆகத்தில், இவர் இன்ஃபோசிசில் 5.77 லட்சம் பங்குகளை விற்று சுமார் ₹ 164 கோடி பணத்தை இலாபநோக்கமற்ற பணிகளுக்கு செலவிட திரட்டினார். [18] 2010 மற்றும் 2014 இல் போர்ப்ஸ் இதழால் ஆசியாவின் பரோபகார நாயகர்களில் ஒருவராக இவரது பெயர் இடம்பெற்றது. [19] [20] காலநிலை மாற்றம், பாலின சமத்துவம், சுதந்திரமான ஊடகங்கள், நிர்வாகம், விலங்குகள் நலவாழ்வு ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 80 குடிசார் சமூக அமைப்புகளை இவர் ஆதரிக்கிறார். [15] 2022 மார்ச்சில் ஃபோர்ப்ஸ் இந்தியா லீடர்ஷிப் விருதுகளில் கிராஸ்ரூட் பிளாந்தொரபிஸ்ட் விருதைப் பெற்றார் [15] 2020-21 ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதநேயவாதி விருதை அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா (அசோசெம்) இடம் பெற்றுள்ளார். [21]
2022 அக்டோபரில், எடல்கிவ் ஹுருன் இந்தியா அமைப்பு நற் செயல்களுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை வெளியிடப்பட்டது. அதில் ஆண் மற்றும் பெண் கொடையாளிகளுக்கான தரவரிசை இடம்பெற்றுள்ளது. 2022 ஆம் நிதியாண்டில் ₹ 120 கோடி நன்கொடை அளித்ததன் மூலம் பெண் கொடையாளிகள் பட்டியலில் ரோகிணி நிலேகனி முதலிடம் பிடித்தார். இவரது நன்கொடைகள் முதன்மையாக கல்வி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவதாக உள்ளது. [22] 2022 நவம்பரில், கிரன் மசும்தார் ஷா மற்றும் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் ரோகிணி நிலேகனி இணைந்து பெங்களூர் அறிவியல் காட்சியகத்துக்கு (SGB) ₹ 51 கோடியை நன்கொடையாக வழங்கினர். [23]
2023 ஏப்ரலில், ரோகிணி நிலேகனி ஃபிலாண்ட்ரோபிஸ் அறக்கட்டளை மூலம், பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்திற்கு ( நிம்மான்ஸ் ) ₹ 100 கோடி நன்கொடையாக வழங்கினார். [24] [7]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுரோகிணி நந்தன் நிலெக்கணியை மணந்தார். 1977 இல் தனது கல்லூரியில் நடந்த வினாடி வினா போட்டியில் அவரை சந்தித்தார். இந்த தம்பதிக்கு சான்கவி, நிகார் என இரு பிள்ளைகள் உள்ளனர். [25] இவரது மகள் சான்கவி நிலேகனி, தாய்வழி நலவாழ்வுத் துறையில் பணியாற்றும் ஆஸ்திரிகா அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். [26]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kallury, Kruttika (24 January 2011). "The fountain heads". இந்தியா டுடே. https://www.indiatoday.in/magazine/supplement/story/20110124-the-fountain-heads-745514-2011-01-13.
- ↑ "Woman of 2013 - Rohini Nilekani: One of India's best-known philanthropists". தி எகனாமிக் டைம்ஸ். 5 January 2014. https://economictimes.indiatimes.com/woman-of-2013-rohini-nilekani-ranks-9th-for-being-among-indias-best-known-philanthropists/articleshow/28406049.cms?from=mdr.
- ↑ "ET Women's Forum: Kiran Nadar, Rohini Nilekani, Dipali Goenka battled sexism, prejudice to stay on top". தி எகனாமிக் டைம்ஸ். 11 February 2019. https://economictimes.indiatimes.com/magazines/panache/et-womens-forum-kiran-nadar-rohini-nilekani-dipali-goenka-battled-sexism-prejudice-to-stay-on-top/articleshow/67936180.cms.
- ↑ 4.0 4.1 4.2 Belle, Nithin (11 December 2011). "Hosting dialogues between unlike groups of people". Khaleej Times. https://www.khaleejtimes.com/world/hosting-dialogues-between-unlike-groups-of-people.
- ↑ Goyal, Malini (12 July 2015). "Nandan & Rohini Nilekani's 'world of good': How they are working on community-minded projects like EkStep". தி எகனாமிக் டைம்ஸ். https://economictimes.indiatimes.com/small-biz/startups/nandan-rohini-nilekanis-world-of-good-how-they-are-working-on-community-minded-projects-like-ekstep/articleshow/48034515.cms.
- ↑ 6.0 6.1 6.2 6.3 "Balancing Act: How Rohini Nilekani juggled motherhood and career pressures". CNBC TV18. 28 September 2019. https://www.cnbctv18.com/entrepreneurship/balancing-act-how-rohini-nilekani-juggled-motherhood-and-career-pressures-4356511.htm.
- ↑ 7.0 7.1 Kumar, Chethan (April 2, 2023). "Mental health needs more funding: Rohini Nilekani". https://timesofindia.indiatimes.com/city/bengaluru/mental-health-needs-more-funding-rohini-nilekani/articleshow/99180705.cms.
- ↑ Banerjee, Soumyadipta. "'I carry the spirit of Mumbai in myself'". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ். https://www.dnaindia.com/lifestyle/report-i-carry-the-spirit-of-mumbai-in-myself-1362299.
- ↑ "Rohini Nilekani's book launched". 14 October 2011. https://www.deccanherald.com/content/197766/rohini-nilekanis-book-launched.html.
- ↑ "Boards". atree.org. Archived from the original on 11 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 25 April 2020.
- ↑ "Competition panel sets up eminent persons advisory group". 8 May 2012. https://www.thehindubusinessline.com/economy/competition-panel-sets-up-eminent-persons-advisory-group/article23064567.ece.
- ↑ "New audit advisory board for CAG". 23 July 2011. https://www.thehindu.com/news/national/new-audit-advisory-board-for-cag/article2285896.ece.
- ↑ "Accomplished Scholars Elected New Members of American Academy of Arts and Sciences". India West. 19 April 2017 இம் மூலத்தில் இருந்து 19 ஏப்ரல் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170419164141/https://indiawest.com/news/global_indian/accomplished-scholars-elected-new-members-of-american-academy-of-arts/article_8522878a-23d0-11e7-b3d8-6fcb1b996d10.html.
- ↑ "Arghyam announces Rohini Nilekani's retirement; Sunita Nadhamuni to succeed from Oct 1". தி எகனாமிக் டைம்ஸ். 28 June 2021. https://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/arghyam-announces-rohini-nilekanis-retirement-sunita-nadhamuni-to-succeed-from-oct-1/articleshow/83917073.cms.
- ↑ 15.0 15.1 15.2 "Indian philanthropists need to become bolder, lead with trust, look for new areas to fund: Rohini Nilekani". 25 March 2022. https://www.forbesindia.com/article/leadership-awards-2022/indian-philanthropists-need-to-become-bolder-lead-with-trust-look-for-new-areas-to-fund-rohini-nilekani/74711/1.
- ↑ "Rohini Nilekani pledges ₹50 cr. to ATREE". 2021-04-12. https://www.thehindu.com/news/national/karnataka/rohini-nilekani-pledges-50-cr-to-atree/article34303385.ece.
- ↑ "Nilekani couple gifts Rs 50 cr to NCAER". 18 December 2013. https://www.thehindubusinessline.com/economy/nilekani-couple-gifts-rs-50-cr-to-ncaer/article23159437.ece.
- ↑ "Rohini Nilekani sells Infosys shares, raises '163 cr for charity". மின்ட். 3 August 2013. https://www.livemint.com/Companies/pw0q425FMdowbGwqFRvv6H/Rohini-Nilekani-sells-Infosys-shares-raises-163-cr-for-cha.html.
- ↑ "Asia's Heroes Of Philanthropy". 8 March 2010. https://www.forbes.com/2010/03/08/asia-heroes-charity-personal-finance-philanthropy-india.html#250894da42b8.
- ↑ "4 Indians make it to the Forbes Asia philanthropy list". 27 June 2014. https://www.rediff.com/business/slide-show/slide-show-1-four-indians-make-it-to-the-forbes-asia-philanthropy-list/20140627.htm.
- ↑ "ASSOCHAM's 10th Responsible Organisation Excellence Awards 2020-21". ASSOCHAM. 16 Mar 2022. https://www.youtube.com/watch?v=TU5bKrioghk.
- ↑ "Rohini Nilekani is India's most generous woman with an annual donation of Rs 120 crore". GQ (Indian edition). https://www.gqindia.com/get-smart/content/rohini-nilekani-is-indias-most-generous-woman-with-an-annual-donation-of-rs-120-crore-kiran-mazumdar-shaw-donated-rs-7-crore-check-out-the-other-top-women-philanthropists-in-india.
- ↑ "Bengaluru: Kiran Mazumdar-Shaw, Kris Gopalakrishnan and Rohini Nilekani donate Rs 51 crore to Science Gallery". https://timesofindia.indiatimes.com/city/bengaluru/bengaluru-kiran-mazumdar-shaw-kris-gopalakrishnan-and-rohini-nilekani-donate-rs-51-crore-to-science-gallery/articleshow/95496104.cms.
- ↑ "Rohini Nilekani's trust grants Rs 100 crore to Nimhans to boost research in 5 mental ailments". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/cities/bangalore/rohini-nilekanis-trust-grants-nimhans-research-mental-ailments-8530339/.
- ↑ "How Nilekani's children reacted to half their inheritance being donated". தி எகனாமிக் டைம்ஸ். 23 November 2017. https://economictimes.indiatimes.com/news/company/corporate-trends/how-nilekanis-children-reacted-to-half-their-inheritance-being-donated/articleshow/61763934.cms?from=mdr.
- ↑ "Accidental healthcare entrepreneur Janhavi Nilekani wants to transform childbirth experience". தி எகனாமிக் டைம்ஸ். July 17, 2022. http://economictimes.indiatimes.com/tech/technology/accidental-healthcare-entrepreneur-janhavi-nilekani-wants-to-transform-childbirth-experience/articleshow/92930355.cms?from=mdr.