ராஸ் டைலர்

(ரோசு தெய்லர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லுடேரு ராஸ் புதோவா லோடெ டைலர் (Luteru Ross Poutoa Lote Taylor, பிறப்பு: மார்ச் 8, 1984) என்பவர் நியூசிலாந்து துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்காக அனைத்து வகையான பன்னாட்டுப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் ஜனவரி 2019இல் ஒருநாள் போட்டிகளில் தனது 20வது நூறைப் பெற்றதன் மூலம் எந்தவொரு போட்டி வகைகளிலும் 20 நூறுகள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் ஆனார்.[1]

ராஸ் டைலர்
2010இல் டைலர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லுடெரு ராஸ் பொவுடோவா லோட் டைலர்
பிறப்பு8 மார்ச்சு 1984 (1984-03-08) (அகவை 40)
லோவர் ஹட், வெலிங்டன், நியூசிலாந்து
பட்டப்பெயர்ராஸ்கோ
உயரம்1.83 m (6 அடி 0 அங்)
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை புறத்திருப்பம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 234)8 நவம்பர் 2007 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு29 நவம்பர் 2019 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 144)1 மார்ச் 2006 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப14 ஜூலை 2019 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்3
இ20ப அறிமுகம் (தொப்பி 22)22 டிசம்பர் 2006 எ. இலங்கை
கடைசி இ20ப10 நவம்பர் 2019 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2002/03–தற்போதுசென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா. இ20ப மு.த.
ஆட்டங்கள் 95 228 95 171
ஓட்டங்கள் 6,864 8,376 1,743 11,371
மட்டையாட்ட சராசரி 46.37 47.86 25.63 42.90
100கள்/50கள் 18/31 20/50 0/5 26/60
அதியுயர் ஓட்டம் 290 181* 63 290
வீசிய பந்துகள் 96 42 684
வீழ்த்தல்கள் 2 0 6
பந்துவீச்சு சராசரி 24.00 63.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/4 2/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
141/– 137/– 44/– 217/–
மூலம்: ESPNcricinfo, 29 நவம்பர் 2019

பன்னாட்டுப் போட்டிகள்

தொகு

மார்ச் 1, 2006 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். சமோவா பண்பாட்டைச் சேர்ந்த ஒருவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்காக விளையாடுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் முர்ஃபி சூ நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். இவரின் முதல் போட்டியில் 15 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]

டிசம்பர் 28, 2006 ஆம் ஆண்டில் நேப்பியர், நியூசிலாந்தில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இதில் 12 நான்குகளும், 6 ஆறுகளும் அடங்கும். ஆனால் இந்தப் போட்டியில் சனத் ஜயசூரியாவின் அதிரடி ஆட்டத்தினால் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன் இரண்டாவது ஆட்டத்தில் உடலின் நீர்க்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டார்.[3] 2006 -2007 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 84 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் இந்தப் போட்டியிலும் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது[4].

பெப்ரவரி 18, 2007 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது இரண்டாவது நூறினைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் 117 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு அதிராக அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[5] 2007 -2008 ஆம் ஆண்டுகளில் ஆமில்டன், நியூசிலாந்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் தனது முதல் நூறினை அடித்தார். மேலும் அந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.[6]

மே 2008 ஆம் ஆண்டில் ஓல்டு டிரஃபோர்டுவில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 154* ஓட்டங்கள் எடுத்தார். இதுதான் இவரின் அதிகபட்ச ஓடம் ஆகும். இதில் 5 ஆறுகளும், 17 நான்குகளும் அடங்கும்.[7] பின் மார்ச், 2009 ஆம் ஆண்டில் நேப்பியர், நியூசிலாந்தில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 204 பந்துகளில் 151 ஓட்டங்கள் எடுத்தார்.[8] பின் இந்திய அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் 107 ஓட்டங்கள் எடுத்து போட்டி சமனில் முடிய உதவினார்.[9]

சான்றுகள்

தொகு
  1. "Ross Taylor goes past Virat Kohli, Sachin Tendulkar in list of most successive fifties in ODI cricket". Times Now News. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
  2. "West Indies tour of New Zealand, 4th ODI: New Zealand v West Indies at Napier, Mar 1, 2006". பார்க்கப்பட்ட நாள் 1 March 2006.
  3. "Jayasuriya sizzles in Sri Lanka's win". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 December 2006.
  4. "Commonwealth Bank Series, 2nd Match: Australia v New Zealand at Hobart, Jan 14, 2007". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 January 2007.
  5. "Taylor stars as New Zealand chase down 337". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2007.
  6. "England tour of New Zealand, 1st Test: New Zealand v England at Hamilton, Mar 5-9, 2008". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 March 2008.
  7. "New Zealand tour of England and Scotland, 2nd Test: England v New Zealand at Manchester, May 23-26, 2008". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 May 2008.
  8. "India tour of New Zealand, 2nd Test: New Zealand v India at Napier, Mar 26-30, 2009". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 March 2009.
  9. "India tour of New Zealand, 3rd Test: New Zealand v India at Wellington, Apr 3-7, 2009". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 April 2009.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஸ்_டைலர்&oldid=3968842" இலிருந்து மீள்விக்கப்பட்டது