லாகோனோபிலியா

எசுபார்த்தா மற்றும் எசுபார்த்தா பண்பாடு அல்லது அரசியலமைப்பின் மீதான காதல் அல்லது போற்றுதல்

லாகோனோபிலியா (Laconophilia) என்பது எசுபார்த்தா மற்றும் எசுபார்த்தா பண்பாடு அல்லது அரசியலமைப்பின் மீதான காதல் அல்லது போற்றுதல் ஆகும். எசுபார்த்தான்கள் வாழ்ந்த பெலோபொன்னெச்சியன் பகுதியான லாகோனியாவிலிருந்து இந்தச் சொல் உருவானது.

எசுபார்த்தன்களின் அபிமானிகள் பொதுவாக அவர்களின் வீரம், போரியல் வெற்றி, அவர்களின் " சுருங்கச் சொல்லும் " சிக்கனம் மற்றும் சுய கட்டுப்பாடு, அவர்களின் உயர்குடி மற்றும் நல்லொழுக்க வழிகள், அவர்களின் அரசியல் வாழ்க்கையின் நிலையான ஒழுங்கு, அவர்களின் அரசியலமைப்பு, அதன் முத்தரப்பினர் கலந்த அரசாங்கத்தை புகழ்ந்து பேசுகிறார்கள். பண்டைய லாகோனோபிலியா கிமு 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றத் தொடங்கியது, மேலும் பண்டைய கிரேக்கத்துக்கு ஒரு புதிய வினைச்சொல்லையும் வழங்கியது: λακωνίζειν (அதாவது: லாகோனியன் போல செயல்பட). எசுபார்த்தன் நகர அரசு குறித்த புகழ்ச்சியானது செவ்வியல் இலக்கியத்திற்குள் எப்போதும் நீடித்தது. மேலும் மறுமலர்ச்சி காலத்தின் போது மீண்டும் அது வெளிப்பட்டது.

பண்டைய லாகோனோபிலியா தொகு

ஏதென்சு தொகு

பண்டைய ஏதென்சில், பாரசீகப் போர்களுக்குப் பிறகு லாகோனிசம் சிந்தனை மற்றும் உணர்வின் நீரோட்டமாகத் தோன்றியது. மில்டியாட்சின் மகன் சிமோன் போன்ற சிலர், பாரசீகப் பேரரசுக்கு எதிராக ஏதென்சு எசுபார்த்தவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விரும்பினர். அப்போது எலட்கள் (ஸ்பார்டான்களின் பண்ணையடிமைகள்) கிளர்ச்சி செய்து இதோம் மலையை அரணாக கொண்டு பதுங்கினர். இதனால் சிமோன் ஏதெனியர்களை எசுபார்த்தாவிற்கு உதவ வீரர்களை அனுப்பும்படி வற்புறுத்தினார். அவ்வாறு உதவச் சென்ற ஏதெனியர்களை எசுபார்த்தன்கள் நன்றியுடன் திருப்பி அனுப்பினர். ஏனெனியன் ஜனநாயக கருத்துக்கள் எலட்கள் அல்லது பெரியீசிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற எண்ணமே இதற்கு காரணமாகும். [1]

சில ஏதெனியர்கள், குறிப்பாக வணிகத்தை விரும்பாதவர்கள், மூடிய சமுதாயத்தையும் சிலரின் ஆட்சியையும் விரும்பினர்.  எசுபார்த்தன் அரசியலமைப்பு தங்களின் அரசியலமைப்பை விட சிறந்தது என்று அவர்கள் நம்பினர். சிலர் எசுபார்த்தியேட்களைப் போல நீண்ட கூந்தலுடனும் ஏதென்சில் எசுபார்த்தன் பழக்கங்களைப் பின்பற்றும் அளவிற்குச் சென்றனர். [2] கிமு 5 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட பிளாட்டோவின் குடியரசு, எசுபார்த்தன் அல்லது கிரெட்டான் வகை அரசியல் ஆட்சி "பலருக்கு" பிடித்தமானது என்று சாக்ரடீஸ் கருத்து தெரிவித்ததுள்ளார் என்பதன் மூலம் இந்த கூற்றுக்கு நம்பகத்தன்மையை வழங்குகிறது. [3]

முப்பது சர்வாதிகாரிகள் என்று அழைக்கப்படும் தீவிர லாகோனிசிங் சிலவர் ஆட்சிக் குழு, கிமு 404 இல் ஏதென்சில் அதிகாரத்தைக் கைப்பற்றியது. மேலும் எசுபார்த்தன் இராணுவத்தின் உதவியுடன் பதினொரு மாதங்கள் ஆட்சியைத் தக்க வைத்திருந்தது. எவ்வாறாயினும், அவர்களின் ஆட்சி விரைவில் தூக்கி எறியப்பட்டு, சனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. [4]

கிமு 371 இல், லியூக்ட்ரா சமரில் எசுபார்த்தன்கள் தோற்கடிக்கப்பட்டனர். அந்த தோல்வியின் விளைவாக, எசுபார்த்தாவின் கூட்டாளிகள் கிளர்ச்சி செய்தனர் மேலும் மெசேனியாவின் எலட்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர், எசுபார்த்தன் பொருளாதாரமானது தொழில்முறை வீரர்களை ஆதரிக்கும் திறன் குறைந்ததாக ஆனது. மேலும் சமமான குடிமக்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன. இதன் விளைவாக, எசுபார்த்தாவின் நற்பெயர், இராணுவ வெற்றியாகவோ அல்லது உள்நாட்டு விவகாரங்களில் வழிகாட்டியாகவோ, கணிசமாகக் குறைந்தது.[சான்று தேவை]

மெய்யிலளார்கள் தொகு

 
எசுபார்த்தாவின் லைகர்கசு நகரின் அரசியலமைப்பெ உருவாகி புகழ்பெற்றவர்

இருப்பினும், லாகோனோபில்ஸ் மெய்யிலாளர்கள் மத்தியில் இருந்தது. சாக்ரடீசைப் பின்பற்றிய சில இளைஞர்கள் லாகோனோபில்சாக இருந்தனர். சாக்ரடீஸ் ஸ்பார்டா மற்றும் கிரீட்டின் சட்டங்களைப் புகழ்ந்ததாக சித்தரிக்கப்படுகிறார். [5] சாக்ரடீசின் தோழரான கிரிடியாஸ், எசுபார்த்தவால் ஆதரிக்கப்பட்ட முப்பது சர்வாதிகாரிகளின் சிலவர் ஆட்சியைக் கொண்டுவர உதவினார். சாக்ரடீசின் மற்றொரு சீடரான செனபோன், ஏதென்சுக்கு எதிராக எசுபார்த்தன்களுக்காகப் போராடினார். பிளேட்டோவும், அவரது எழுத்துக்களில், சனநாயக ஆட்சியை விட எசுபார்த்தன் வகை ஆட்சியை விரும்புவதாகத் தெரிகிறது. [6] அரிஸ்டாட்டில் கிரீட் மற்றும் எசுபார்த்தவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள் நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களை உருவாக்குவதற்கு மிகவும் பொருத்தமானவை என்று கருதினார். இருப்பினும் அவர் கிரெட்டான்கள் மற்றும் எசுபார்த்தன்களை திறமையற்றவர்கள் என்றும் ஊழல்வாதிகள் என்றும், போர் கலாச்சாரத்தை உருவாக்கினார் என்றும் விமர்சித்தார். [7]

எனவே, கிரேக்க மெய்யியலானது எசுபார்த்தன் சட்டங்களைப் போற்றும் பாரம்பரியத்தைப் பெற்றுள்ளது. நான்காம் அஜிஸ் மற்றும் மூன்றாம் கிளியோமினெஸ் ஆகியோர் எசுபார்த்தவில் "மூதாதையர் அரசியலமைப்பை மீட்டெடுக்க" முயற்சித்தபோது மட்டுமே இது வலுப்படுத்தப்பட்டது. ஆனால் இது அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த எந்த மனிதனும் அனுபவித்திருக்கவில்லை. இந்த முயற்சி லைகர்கசின் அரசு அமைப்புகளின் சரிவுடன் முடிந்தது. மேலும் நபிஸ் லாகோனியாவில் ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவினார்.[சான்று தேவை] [8]

பிந்தைய நூற்றாண்டுகளில், கிரேக்க தத்துவவாதிகள், குறிப்பாக பிளாட்டோனிஸ்டுகள், எசுபார்த்தவை ஒரு சிறந்த அரசாகவும், வலிமையானதாகவும், துணிச்சலானதாகவும், வர்த்தகம் மற்றும் பணத்தின் ஊழல்களிலிருந்து விடுபட்ட ஒன்றாகவும் அடிக்கடி விவரித்தார்கள்.[சான்று தேவை] இந்த விளக்கங்கள், புளூடார்ச்சின் பல விவரங்களிலிருந்து முழுமையாக வேறுபடுகின்றன. [9]

குறிப்புகள் தொகு

  1. Thucydides, History of the Peloponnesian War I.102; De Ste. Croix (1972) 76; Plutarch Cimon 16.1ff.
  2. Aristophanes, Birds 1281; Plato Comicus Fragmenta 132 (PCG); Epilycus Fragmenta 4 (PCG).
  3. Republic VIII, 544c.
  4. See the article on the Thirty Tyrants for references.
  5. Schofield (2006) 38-39; Dawson (1992) 58-59, 61, 74, 103-104; Cartledge The Socratics Sparta (1999); Plato, Crito 52e.
  6. See his dialogue the Laws.
  7. Aristotle Nicomachean Ethics 1102a7-11.
  8. For (some) references, see the article on Agis IV.
  9. See for example: Plutarch Lycurgus; Plutarch Instituta Laconica GreekEnglishEnglish.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாகோனோபிலியா&oldid=3513118" இலிருந்து மீள்விக்கப்பட்டது