லாம்புங்
லம்புங் மாகாணம் (Lampung), இந்தோனேசியா நாட்டின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் சுமாத்திரா தீவின் கிழக்கு கோடியில் அமைந்துள்ளது. லம்புங் நகரம் இதன் தலைநகரம் ஆகும். இது 33,575.41 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்; 2010ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 76,08,405 மக்கள் தொகையும் கொண்டது. [7] 9,007,848 at the 2020 census,[8] 2023 கணக்கெடுபின் தற்காலிக மதிப்பீட்டின்படி இதன் மக்கள் தொகை 93,13,990 ஆக உயர்ந்துள்ளது.[1]
லம்புங் மாகாணம் | |
---|---|
மாகாணம் | |
லும்புங் மாகாணம் | |
இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் கிழக்கில் லாம்புங் மாகாணத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°27′S 105°16′E / 5.450°S 105.267°E | |
தலைநகரம் | பந்தர் லாம்புங் |
நிறுவிய ஆண்டு | 18 மார்ச்1964 |
அரசு | |
• நிர்வாகம் | லாம்புங் மாகாண அரசு |
• ஆளுநர் | அரினால் ஜுனைதி |
• துணை ஆளுநர் | காலிப்பணியிடம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 33,575.41 km2 (12,963.54 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 26வது |
உயர் புள்ளி (பெசகி மலை) | 2,262 m (7,421 ft) |
மக்கள்தொகை (2023 நடுவில் மதிப்பீடு)[1] | |
• மொத்தம் | 93,13,990 |
• தரவரிசை | 8வது |
• அடர்த்தி | 280/km2 (720/sq mi) |
இனம் | லாம்புங் மக்கள் |
மக்கள் தொகை பரம்பல் | |
• இனக்குழுக்கள்[2][3] | பட்டியல் |
• சமயங்கள் (2022)[4] | பட்டியல் |
• மொழிகள் | இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி) லாம்புங் மொழி மற்றும் அபூங் மொழி (பிரதேச மொழி) ஜாவா மொழி, கெமரிங், சுந்தானிய மொழி, பாலி மொழி |
நேர வலயம் | ஒசநே+7 (இந்தோனேசியாவின் மேற்கு நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 34xxx-35xxx |
ஐஎசுஓ 3166 குறியீடு | ID-LA |
வாகனப் பதிவு | BE |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (மதிப்பீடு) | 2022[5] |
- மொத்தம் | இந்தோனேசிய ரூபாய் 414.1 டிரில்லியன் |
- தனி நபர் வருமானம் | இந்தோனேசிய ரூபாய் 45.1 மில்லியன் |
- வளர்ச்சி | 4.28%[6] |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.711 |
இணையதளம் | lampungprov |
மக்கள் தொகை பரம்பல்
தொகுலம்புங் மாகாணத்தில் ஜாவானிய மக்கள் 64.17%, லம்புங் மக்கள் 13.56%, சுந்தானிய மக்கள் 11.88%, மலாய் மக்கள் 5.64%, பாலி மக்கள் 1.38% மற்றும் பிறர் 3.37% ஆகவுள்ளனர். இசுலாம் 95.48%, புராட்டஸ்டண்டுகள் 1.51% இந்து சமயம்1.4% கத்தோலிக்கம் 0.91%, பௌத்தம் 0.32%, கன்பூசியம் 0.01% மற்றும் பிற சமயங்களைப் பின்பற்றுப்வர் 0.27% ஆகவுள்ளனர். இந்தோனேசிய மொழி (அலுவல் மொழி), லாம்புங் மொழி மற்றும் அபூங் மொழி (பிரதேச மொழி), ஜாவா மொழி, கெமரிங், சுந்தானிய மொழி மற்றும் பாலி மொழிகாள் பேசப்படுகிறது.
புவியியல்
தொகுசுமாத்திரா தீவில் அமைந்த லம்புங் மாகாணத்தின் கிழக்கில் ஜாவா கடலும், தென்கிழக்கில் ஜாவா நீரிணையும் உள்ளது. லம்புங் மாகாணத்தில் அமைந்த மலைகள்:
- பெசாகி மலை, மேற்கு லும்புங் (2,262 m [7,421 அடி])
- செமிங் மலை, சுகௌ, மேற்கு லும்புங் (1,881 m [6,171 அடி])
- தெபாக் மலை, சும்பெர்ஜெயா, மேற்கு லும்புங் (2,115 m [6,939 அடி])
- ரிங்டிங்கன் மலை, (1,506 m [4,941 அடி])
- பெசாவரன் மலை (1,662 m [5,453 அடி])
- பெதுங் மலை, பந்தர் லும்புங் (1,240 m [4,070 அடி])
- ராஜாபாசா மலை, தெற்கு லும்புங் (1,261 m [4,137 அடி])
- தங்கமஸ் மலை (2,156 m [7,073 அடி])
லம்புங் மாகாணத்தில் பாயும் ஆறுகள்:
- செகம்புங் ஆறு, நீளம் 265 km (165 mi), CA 4,795.52 km2 (1,851.56 sq mi)
- செமகா ஆறு, நீளம் 90 km (56 mi), CA 985 km2 (380 sq mi)
- செபுதித் ஆறு, நீளம் 190 km (120 mi), CA 7,149.26 km2 (2,760.34 sq mi)
- ஜெப்ரா ஆறு, நீளம் 50 km (31 mi), CA 1,285 km2 (496 sq mi)
- துலாங் பகவாங் ஆறு, நீளம் 136 km (85 mi), CA 1,285 km2 (496 sq mi)
மாகாண நிர்வாகம்
தொகுலம்புங் மாகாணம் 13 பகுதிகளாகவும், 2 நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் பின்வருமாறு:
குறியீட்டெண் | நகரம் அல்லது பகுதியின் பெயர் |
பரப்பளவு சகிமீ2 |
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டு 2010 |
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2020 |
மக்கள் தொகை மதிப்பீடு 2023 |
தலைமையிடம் | HDI 2018 மதிப்பீடுகள் |
---|---|---|---|---|---|---|---|
18.71 | பந்தர் லம்புங் நகரம் | 183.72 | 881,801 | 1,166,066 | 1,202,070 | பந்தர் லம்புங் | 0.766 (High) |
18.72 | மெட்ரோ நகரம் | 73.21 | 145,471 | 168,676 | 173,870 | மெட்ரோ | 0.762 (High) |
18.02 | நடு லும்புங் பகுதி | 4,548.93 | 1,170,717 | 1,460,045 | 1,508,330 | குனுங் சுகிக் | 0.697 (Medium) |
18.07 | கிழக்கு லம்புங் பகுதி | 3,868.43 | 951,639 | 1,110,340 | 1,142,580 | சுகதனா | 0.690 (Medium) |
18.11 | மிசுஜீ பகுதி | 2,200.51 | 187,407 | 227,518 | 237,940 | மிசுஜீ | 0.628 (Medium) |
18.03 | வடக்கு லும்புங் பகுதி | 2,656.39 | 584,277 | 633,099 | 653,850 | கோடாபூமி | 0.671 (Medium) |
18.09 | பெசாவரன் பகுதி | 1,279.60 | 398,848 | 477,468 | 494,280 | கெடோங் தடான் | 0.649 (Medium) |
18.10 | பிரிங்சேவு பகுதி | 614.97 | 365,369 | 405,466 | 419,590 | பிரிங்சேவு | 0.694 (Medium) |
18.01 | தெற்கு லம்புங் பகுதி | 2,218.84 | 912,490 | 1,064,301 | 1,105,000 | கலியாந்தல் | 0.678 (Medium) |
18.06 | தங்கமாஸ் பகுதி | 2,901.98 | 536,613 | 640,275 | 662,540 | கோட்டா அகுங் | 0.656 (Medium) |
18.05 | துலாங் பவாங் பகுதி | 3,107,47 | 397,906 | 430,021 | 445,170 | மெங்கலா | 0.677 (Medium) |
18.08 | கனன் ஆறுப் பகுதி | 3,531.10 | 406,123 | 473,575 | 491,110 | லம்பான்கான் உம்பு | 0.666 (Medium) |
18.04 | மேற்கு லம்புங் பகுதி | 2,116.01 | 277,296 | 302,139 | 312,430 | லிவா | 0.667 (Medium) |
18.13 | பெசிசிர் பாரத் பகுதி | 2,993.80 | 141,741 | 162,697 | 172,320 | குரி | 0.629 (Medium) |
18.12 | மேற்கு துலாங் பவாங் பகுதி | 1,281.45 | 250,707 | 286,162 | 295,480 | பனராகன் ஜெயா | 0.653 (Medium) |
Tமொத்தம் | 33,575.41 | 7,608,405 | 9,007,848 | 9,313,990 | பந்தர் லம்புங் நகரம் | 0.690 (Medium) |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Lampung Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.18)
- ↑ "Kewarganegaraan, Suku Bangsa, Agama, dan Bahasa Sehari-hari Penduduk Indonesia" (pdf). www.bps.go.id. pp. 36–41. பார்க்கப்பட்ட நாள் 22 September 2021.
- ↑ Ananta, Aris (2015). Demography of Indonesia's Ethnicity. Evi Nurvidya Arifin, M. Sairi Hasbullah, Nur Budi Handayani, Agus Pramono. SG: Institute of Southeast Asian Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4519-88-5. இணையக் கணினி நூலக மைய எண் 1011165696.
- ↑ "ArcGIS Web Application".
- ↑ Badan Pusat Statistik (2023). "Produk Domestik Regional Bruto (Milyar Rupiah), 2020–2022" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pusat Statistik.
- ↑ Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pembangunan Nasional.
- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2021.
மேலும் படிக்க
தொகு- Elmhirst, R. (2001). Resource Struggles and the Politics of Place in North Lampung, Indonesia. Singapore Journal of Tropical Geography. 22(3):284–307.
- Pain, Marc (ed). (1989). Transmigration and spontaneous migrations in Indonesia: Propinsi Lampung. Bondy, France: ORSTOM.
- Totton, Mary-Louise (2009) Wearing Wealth and Styling Identity: Tapis from Lampung, South Sumatra, Indonesia. Hood Museum of Art, Dartmouth College.
வெளி இணைப்புகள்
தொகு- Early Indonesian textiles from three island cultures: Sumba, Toraja, Lampung, an exhibition catalog from The Metropolitan Museum of Art Libraries (fully available online as PDF), which contains material on Lampung