லிட்டில் இந்தியா, ஈப்போ

ஈப்போ மாநகரில் ஒரு முக்கியமான வணிகத் தளம்

லிட்டில் இந்தியா ஈப்போ, (ஆங்கிலம்: Little India, Ipoh; மலாய்: Little India, Ipoh; சீனம்: 小印度,怡保) என்பது மலேசியா, பேராக், ஈப்போ மாநகரில், மலேசிய இந்தியர்கள் கணிசமான அளவில் வணிகம் புரியும் இடங்களில் ஒன்றாகும்.

லிட்டில் இந்தியா
ஈப்போ
நகர்ப்பகுதி
Little India Ipoh
லிட்டில் இந்தியா, ஈப்போ is located in மலேசியா
லிட்டில் இந்தியா, ஈப்போ
ஆள்கூறுகள்: 4°21′36″N 101°24′00″E / 4.3600°N 101.400°E / 4.3600; 101.400
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாநகரம்ஈப்போ
அரசு
 • நகர முதல்வர்ருமாயிசி பகரின்
Rumaizi Baharin
நேர வலயம்மலேசிய நேரம்
மலேசிய அஞ்சல் குறியீடு
30xxx, 31xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+05
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்A

ஈப்போ மாநகரில் ஒரு முக்கியமான வணிகத் தளமாக இயங்கி வரும் ஈப்போ லிட்டில் இந்தியா, இந்தியர் தொடர்புடைய பல்வேறு விற்பனை மையங்களைக் கொண்டு உள்ளது. அத்துடன் இந்திய இனத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஓர் இடமாகவும்; இந்தியர்களுக்கான கலாசார மையமாகவும் திகழ்கிறது.

வரலாறு

தொகு

1900-ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் இருந்து குடியேறியவர்களுக்கும்; வணிகர்களுக்கும் ஒரு குடியேற்ற மையமாக விளங்கியது. அவர்கள் செழிப்பான வணிகங்களை உருவாக்கினர். அந்த வகையில் இந்தக் குடியேற்றப் பகுதி இந்தியர்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஒரு குட்டி இந்தியாகவாக மாற்றம் கண்டது.

அந்தக் காலக் கட்டத்தில், கிந்தா பள்ளத்தாக்கின் தொழில்துறைக்கு ஈய உற்பத்தி ஒரு முக்கிய ஆதாரமாக விளங்கியது. 19-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில், ஈப்போவில் வெள்ளீயம் பெரும் அளவில் தோண்டி எடுக்கப்பட்டது.[1]

வணிக வளர்ச்சி

தொகு

சீனாவில் இருந்து இலட்சக் கணக்கான சீனர்கள் ஈப்போவில் குடியேறினர். இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் வாணிகம் செய்ய வந்தனர். குஜராத்தியர்கள் கம்பளம், பட்டுத் துணிகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை வியாபாரம் செய்ய ஈப்போ லிட்டில் இந்தியாவிற்கு வந்தனர்.[2]

பர்மியர்கள் வைரம், மாணிக்கக் கற்களை விற்க வந்தனர். தாய்லாந்து மக்கள் பட்டுத் துணிகளை எடுத்து வந்தனர். அதன் காரணமாக மலேசியாவில் மிகவும் புகழ் பெற்ற நகரமாக ஈப்போ விளங்கியது. ஒரு கட்டத்தில் மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும்; ஆங்கிலேயர்களின் தலையாய நிர்வாகத் தலமாகவும் இருந்தது. [3]

பிரித்தானிய நிறுவனங்கள்

தொகு

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல பிரித்தானிய நிறுவனங்கள் ஈப்போவில் வியாபார மையங்களைத் தொடங்கின. அதனால் ஈப்போ நகரம் புகழ் பெறத் தொடங்கியது. இபெரும்பாலான நிறுவனங்கள் ஈப்போ லிட்டில் இந்தியாவிற்கு மிக அருகிலேயே தங்கள் தலைமையகங்களை அமைத்துக் கொண்டன.

1902-ஆம் ஆண்டு இந்தியாவின் 'சார்ட்டர்ட் வங்கி', 'ஆஸ்திரேலியா - சீனா' நிறுவனம்’ போன்ற பிரபலமான வங்கிகள் ஈப்போவில் தங்கள் அலுவலகங்களைத் தொடங்கின. இவை ஈப்போ லிட்டில் இந்தியா அமைந்துள்ள அதே சுல்தான் யூசோப் (Jalan Sultan Yussuf) சாலையில் தான் தங்களின் அலுவலகங்களை அமைத்தன.

காரைக்குடி தமிழர்கள்

தொகு

இந்தக் காலக் கட்டத்தில் தமிழ்நாட்டுக் காரைக்குடியில் இருந்து தமிழர்கள் பலர் ஈப்போவிற்கு வந்தனர். சீனர்களின் ஈய வாணிகத்திற்குப் பல வகைகளில் பண உதவிகள் செய்தனர். அதன் மூலம் அவர்கள் வட்டி வசூல் செய்தனர்.[4]

பின் நாளில் இவர்கள் தான் நகரத்தார்கள் அல்லது செட்டியார்கள் (Nattukkotai Chettiar) என்று அழைக்கப்பட்டனர். உள்நாட்டு வங்கிகளுக்குப் பண உதவி செய்யும் அளவிற்கு இவர்கள் செல்வாக்குப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லகாட் சாலை

தொகு

ஈப்போ லிட்டில் இந்தியா சாலைக்கு அருகில் உள்ள லகாட் சாலை (Jalan Lahat), இன்றும் ஒரு முக்கியச் சாலையாக விளங்கி வருகிறது. தவிர, செட்டித் தெரு எனும் பெயரில் ஒரு சாலை, ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தில் உள்ளது. அந்தச் சாலையின் இப்போதைய பெயர் ஜாலான் சுல்தான் யூசோப் (Jalan Sultan Yussuf). மூன்று வங்கிகளையும் அமைத்து இருக்கிறார்கள்.[5]

 • செட்டிநாடு வங்கி - Bank of Chettinad (1943)
 • மதுரை வங்கி - Bank of Madurai (1943)
 • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - Indian Overseas Bank (1943)

லகாட் சாலையில் நகரத்தார்கள் 1907-ஆம் ஆண்டில் ஓர் ஆலயத்தைக் கட்டினார்கள். அதன் பெயர் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம் (Sri Thandayuthabani Alayam). இதனைச் செட்டியார் ஆலயம் (Chettiar Temple) என்றும் அழைப்பதும் உண்டும்.[6]

எம். எஸ். மெய்யப்பச் செட்டியார்கள்

தொகு

1940-ஆம் ஆண்டுகளில் ஈப்போ லிட்டில் இந்தியாவில் எம்.எஸ்.எம்.எம். எனும் பெயரில் ஒரு வங்கி செயல் பட்டு வந்தது. அதை எம். எஸ். மெய்யப்பச் செட்டியார்கள் (M. S. Meyyappan Chettiars) என்று அழைக்கப்படும் சகோதரர்கள் நடத்தி வந்தனர். அந்த வங்கியின் தலைமையகம் அப்போது காரைக்குடியில் இருந்தது.

ஈப்போ லிட்டில் இந்தியாவின் பிரதான சாலைக்கு ஈப்போ செட்டித் தெரு எனும் அடைமொழிப் பெயரும் உள்ளது. தமிழகத்தின் காரைக்குடி பகுதியில் உள்ள மாளிகைகளைப் போன்ற பல வீட்டு மனைகள் இன்றும் உள்ளன.

13 மே இனக்கலவரம்

தொகு

அந்த வீட்டு மனைகள் செட்டியார்களின் கடந்த கால வரலாற்றுச் சுவடுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இருப்பினும் இந்தக் கட்டடங்களில் பலவற்றைச் சீனர்கள் விலை கொடுத்து வாங்கி விட்டனர். வரிசை வரிசையாக இருந்த காரைக்குடி மனைகள் இப்போது சீனர்களின் வியாபார வணிகத் தளங்களாக மாற்றம் கண்டுள்ளன.

1969-ஆம் ஆண்டு மலேசியாவில் ஓர் இனக் கலவரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காரைக்குடித் தமிழர்கள் பலர், ஈப்போ லிட்டில் இந்தியாவில் இருந்த அவர்களின் வீடுகளை விற்று விட்டுத் தமிழகம் திரும்பினர். சீனர்கள் மிகக் குறைந்த விலையில் அந்த வீடுகளை வாங்கிக் கொண்டனர்.[7][8]

காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. Ipoh cities into the turn of 19th century to developed the booming tin-mining industry propelled the sleepy town into the height of its glory peaked in the 1950s.
 2. Tan, Peter (2015-02-21). "The city that tin built". BorneoPost Online | Borneo, Malaysia, Sarawak Daily News. பார்க்கப்பட்ட நாள் 2017-08-21.
 3. hermes (2016-03-22). "Sleepy Ipoh awakens" (in en). The Straits Times. http://www.straitstimes.com/asia/se-asia/sleepy-ipoh-awakens. 
 4. Mah, By Kenny (29 November 2013). "Ipoh heritage trail: Most of the early migrants were Chettiars from South India who acted as moneylenders to the Chinese tin miners, many who couldn't get loans from the colonial banks."". Malay Mail (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 November 2022.
 5. "Three banks established by Chettiars include the now defunct Bank of Chettinad and Bank of Madurai (est. 1943), and the still thriving Indian Overseas Bank. (ICICI Bank absorbed Bank of Madurai in a rescue in (Bank of Madurai had acquired Chettinad Mercantile Bank (est. 1933) and Illanji Bank (est. 1904) in the 1960s.)". docplayer.net. பார்க்கப்பட்ட நாள் 6 November 2022.
 6. net, powered by iosc dot. "Also known as Chettiar Temple, the Sri Thandayuthabani Alayam at Jalan Lahat is well known to Hindu devotees in Ipoh and in Perak. It is well patronised, especially during the Vaikasi Visagam festival which falls during the Tamil month of Vaikasi (usually in May)". IpohEcho.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 November 2022.
 7. http://ipohtourism.mbi.gov.my/?tour=little-india-ipoh[தொடர்பிழந்த இணைப்பு]
 8. "Brightening up Our Little India". 31 May 2010. Archived from the original on 6 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிட்டில்_இந்தியா,_ஈப்போ&oldid=3670145" இலிருந்து மீள்விக்கப்பட்டது