லூசி தூமையன்
லூசி தோமையன் ( Lucy Thoumaian ) அல்லது ரோசியர் தெ விஸ்மே (1890-1940) ஆர்மீனியாவைச் சேர்ந்த பெண்கள் உரிமைகள் ஆர்வலரும், அமைதி ஆர்வலரும் ஆவார். ஆர்மீனியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர், அனாதையான ஆர்மேனியர்களுக்காக சிக்வெல்லில் ஒரு பள்ளியை உருவாக்க உதவினார். 1915 இல் டென் ஹாக்கில் நடந்த சர்வதேச பெண்கள் மாநாட்டில் பெண்கள் கலந்துகொள்வதற்கு முன்பு அமைதிக்கான அறிக்கையை வெளியிட்டார். பின்னர், உலக நாடுகள் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
லூசி தூமையன் | |
---|---|
பிறப்பு | 1890 சுவிட்சர்லாந்து |
இறப்பு | 1940 அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
தேசியம் | ஆர்மீனியர் |
அறியப்படுவது | அமைதி, பெண்கள் உரிமை |
வாழ்க்கைத் துணை | பேராசிரியர் தூமையன் |
வாழ்க்கை
தொகுதூமையன் சுவிட்சர்லாந்தில் ரோசியர் த விஸ்மே என்ற பெயரில் பிறந்தார். [1]
இவரும் இவரது கணவர் ரெவரெண்ட் பேராசிரியர் கராபெட் தூமையனும் ஆர்மீனியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் பிரிட்டனுக்கு நாடுகடத்தப்பட்டனர். அங்கு, 1906 இல் ஆர்மேனியர்களுக்காக சிக்வெல்லில் உள்ள ஓக்ரஸ்ட்டில் [2] ஒரு அனாதை இல்லம் மற்றும் பள்ளியை ஏற்பாடு செய்தனர் [1]
இனவெறிக்கு எதிரான ஆரம்ப முயற்சியாக 1911 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் நான்கு நாட்கள் நடந்த முதல் உலகளாவிய மாநாட்டில் கலந்து கொண்டார். உதுமானியப் பேரரசிலிருந்து நாடுகடத்தப்பட்ட போதிலும், துருக்கிய பிரதிநிதிகளிடம் இவர் ஒன்றாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.[3]
1914 ஆம் ஆண்டில், அமைதிக்கான ஒரு அறிக்கையை வெளியிட்டார். போருக்கு காரணமான தகராறு தீர்க்கப்படும் வரை பெண்கள் வாராந்திர சந்திப்புகளை நடத்த வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார். [4]
1915 இல், தூமையன் டென் ஹாக் நகருக்குச் சென்றார். அங்கு நடந்த மாநாட்டில் ஆர்மீனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ஆர்மீனிய இனப்படுகொலை ஆரம்பமாகியது. இவர் 25 ஏப்ரல் 1915 அன்று மாநாட்டிற்கு வந்தார். இந்நாளில் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை ஒட்டோமான் இராணுவத்தினர் இஸ்தான்புல் நகரில் கைது செய்தனர். அதன் பின்னர் இராணுவத்தினர் ஆர்மீனியப் பொதுமக்களை அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றி பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு (தற்போதைய சிரியா) நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு உணவோ, நீரோ வழங்கப்படவில்லை. வயது, மற்றும் பாலின வேறுபாடின்றிப் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே. [5] [6].
மாநாட்டிற்குப் பிறகு, நவம்பர் வரை நெதர்லாந்தில் தங்கியிருந்தார். போர் முடிவடைந்த பின்னர், உலக நாடுகள் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஆர்மீனியாவில் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக தொடர்ந்து பணியாற்றினார். [7] [8]
இறப்பு
தொகுதூமையன் 1940 இல் அமெரிக்காவில் இறந்தார் [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "1. Lucy Thoumaian 1890 – 1940" (PDF). WILPF - Women's International League for Peace and Freedom. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Chigwell: Schools | British History Online". www.british-history.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
- ↑ Documenting First Wave Feminisms: Volume 1: Transnational Collaborations and Crosscurrents.
- ↑ Jill Liddington (1989). The Road to Greenham Common: Feminism and Anti-militarism in Britain Since 1820. Syracuse University Press. pp. 91–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8156-2539-1.
- ↑ Shirakian, Arshavir (1976). Կտակն էր Նահատակներուն [Gdagn er Nahadagnerin]. translated by Shirakian, Sonia. Boston: Hairenik Press. இணையக் கணினி நூலக மைய எண் 4836363.
- ↑ Britannica, Istanbul பரணிடப்பட்டது 2007-12-18 at the வந்தவழி இயந்திரம்:When the Republic of Turkey was founded in 1923, the capital was moved to Ankara, and Constantinople was officially renamed Istanbul in 1930.
- ↑ "1. Lucy Thoumaian 1890 – 1940" (PDF). WILPF - Women's International League for Peace and Freedom. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)"1. Lucy Thoumaian 1890 – 1940" பரணிடப்பட்டது 2019-04-05 at the வந்தவழி இயந்திரம் (PDF). WILPF - Women's International League for Peace and Freedom. Retrieved 24 November 2017. - ↑ Archives, The National. "The Discovery Service". discovery.nationalarchives.gov.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.