வடகிழக்கு இந்தியாவில் மனித உரிமை பிரச்சனைகள்

வடகிழக்கு இந்தியாவில் மனித உரிமை பிரச்சனைகள் (Human rights issues in Northeast India) என்பவை பத்திரிக்கைகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களால் பரவலாக அறிவிக்கப்பட்டுள்ளன. [1] [2] வடகிழக்கு இந்தியா என்பது அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா, மற்றும் வட மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் ( டார்ஜிலிங், ஜல்பைகுரி மற்றும் கோச் பீகார் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவின் கிழக்குப் பகுதியைக் குறிக்கிறது.

பின்னணி

தொகு

இப்பகுதியில் தொடர்ச்சியான பிரிவினைவாத போராட்டம் 1940 களின் பிற்பகுதியிலிருந்து தொடர்ந்து நடைபெருகிறது, இது தெற்காசியாவில் மிக நீண்ட பிரிவினைவாதப் போராட்டமாக இருந்தது. பல்வேறு இனக்குழுக்கள் மற்றும் மாநிலங்கள் உட்பட பல கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன, அவர்களில் சிலர் இந்தியாவில் இருந்து முழு சுதந்திரத்தை விரும்புகிறார்கள், மற்றவர்கள் மாநிலங்களை மறுசீரமைக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள்.[3]

வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து, நாகாலாந்து மற்றும் அசாம், மேகாலயா மற்றும் அசாம், மற்றும் மிசோரம் மற்றும் அசாம் ஆகியவற்றுக்கு இடையேயான நிலப்பரப்பு மோதல்கள் உள்ளன. இவை பெரும்பாலும் வரலாற்று எல்லை மோதல்கள் மற்றும் வேறுபட்ட இன, பழங்குடி அல்லது கலாச்சார உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பகுதிகளில் பரவலாக தாக்கும் நடவடிக்கைகள், மற்றும் பிராந்திய இயக்கங்களும் நடைபெற்று வருகின்றன. ஆயுத மற்றும் துணை ராணுவப் படைகளின் இராணுவ நடவடிக்கை மற்றும் அரசியல் நடவடிக்கை ஆகியவை இந்த கிளர்ச்சிகளின் தீவிரம் ஏற்ற இறக்கத்திற்கும் மிசோராமில் கிளர்ச்சியைத் தீர்ப்பதற்கும் வழிவகுத்தன.

ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958. பாலியல் வல்லுறவு ஏற்படக் காரணமாக அமைந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியது.[4]

தெற்காசிய மனித உரிமைகள் ஆவண மையம், படைகளின் எண்ணிக்கையே பிரச்சினையின் ஒரு பகுதி என்று வாதிடுகிறது. [5]

இந்த சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து மணிப்பூரில் பொதுமக்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய வன்முறை சம்பவங்கள் குறித்து பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. [6] பாதுகாப்பு படையினரின் வழக்குத்தடுப்பு தற்காலிகச் சட்டம் தங்களை மிகவும் கொடூரமான முறையில் செயல்பட தூண்டுகிறது என்று குடியிருப்பாளர்கள் நம்புவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. [7]

உதாரணங்கள்

தொகு

அசோமின் கோக்ரஜார் மாவட்டத்தில் போடோ பழங்குடியினர் மற்றும் முஸ்லீம் குடியேற்றவாசிகளுக்கு இடையே 20 ஜூலை 2012 அன்று வன்முறை ஏற்பட்டது, அந்த வன்முறையில் ஜூலை மாதத்தில் குறைந்தபட்சமாக 45 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 300,000 பேர் இடம்பெயர்ந்தனர். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் படி, சண்டை கடுமையான ஊரடங்கு உத்தரவுக்கு வழிவகுத்தது, ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு காவல் துறையினர் "கண்டதும் சுட உத்தரவிட்டனர்" உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு பல காவல்துறையினர் துப்பாக்கிச் சூடுகள் நடத்தினர். [8]

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்

தொகு

கிராமங்கள் அல்லது நகரங்களின் ஆண்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே இருக்கவும் , பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். அவ்வாறான சூழ்நிலைகளில் தீவிரவாத தாக்குதல்களின் போது பெண்கள் பெரும்பாலும் பாலியல் வன்கலவிக்கு ஆளானார்கள். மேலும், பெரும்பாலான பாலியல் வன்கலவிகள் சமூக அவமதிப்பு மற்றும் பின்னடைவு பயம் காரணமாக பதிவு செய்யப்படவில்லை. [9]

அசாம் காவல்துறை 2006 மற்றும் 2011 க்கு இடையில் 7000 க்கும் மேற்பட்ட பாலியல் வன்கலவிப் புகார்களையும், 11,553 கடத்தல்கள் பற்றிய புகார்களையும் பதிவு செய்துள்ளது. [10]

சான்றுகள்

தொகு
  1. Confessing Christ in the Naga Context: Towards a Liberating Ecclesiology.
  2. Racism Against Indigenous Peoples.
  3. Binalakshmi Nepram. Gender Based Violence in Conflict Zones : Case Study of India's Northeast (PDF) (Report). Centre for Equity and Inclusion. p. 2. பார்க்கப்பட்ட நாள் 21 June 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Crisis in Kashmir" பரணிடப்பட்டது 2011-01-11 at the வந்தவழி இயந்திரம் Council on Foreign Relations
  5. India: Repeal Armed Forces Special Powers Act; 50th Anniversary of Law Allowing Shoot-to-Kill, Other Serious Abuses. Human Rights Watch
  6. Institute for Defense Studies and Analysis, 'Manipur and Armed Forces (Special Powers) Act 1958' "the alleged rape and killing of Manjab Manorama", "security forces have destroyed homes", "arrests without warrants", "widespread violations of humane rights", "The cases of Naga boys of Oinam village being tortured before their mothers by Assam rifles Jawans in July 1987; the killing of Amine Devi and her child of Bishnupur district on April 5, 1996 by a CRPF party; the abduction, torture and killing of 15-year-old Sanamacha of Angtha village by an Assam Rifles party on 12th February 1998; the shooting dead of 10 civilians by an Assam Rifles party in November 2000 are some of the glaring examples that are still fresh in the mind of Manipuris."
  7. Institute for Defense Studies and Analysis, 'Manipur and Armed Forces (Special Powers) Act 1958' பரணிடப்பட்டது 12 சூலை 2007 at the வந்தவழி இயந்திரம்
  8. Human Rights Watch, India: Rescind "Shoot at Sight" Orders in Assam, 27 July 2012
  9. Nonibala Devi Yengkhom; Meihoubam Rakesh (4 October 2002). "Fear of rape: The experience of women in Northeast India". Article 2 (Asian Human Rights Commission) 1 (5). பன்னாட்டுத் தர தொடர் எண்:1811-7023. http://alrc.asia/article2/2002/10/fear-of-rape-the-experience-of-women-in-northeast-india/. பார்த்த நாள்: 21 June 2012. 
  10. "Over 7,000 complaints of rape in Assam since 2006". 26 March 2012. http://ibnlive.in.com/generalnewsfeed/news/over-7000-complaints-of-rape-in-assam-since-2006/979530.html. [தொடர்பிழந்த இணைப்பு]