வயலார் ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழை மாவட்ட ஊராட்சி
(வயலார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


வயலார் (Vayalar) என்பது இந்தியாவில் உள்ள கேரளா மாநிலத்தில் சேர்த்தலை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.

வயலார் വയലാര്‍
—  ஊராட்சி  —
வயலார் വയലാര്‍
இருப்பிடம்: வயலார் വയലാര്‍

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 9°43′21″N 76°20′15″E / 9.722500°N 76.337500°E / 9.722500; 76.337500
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் ஆலப்புழை
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி ஆலப்புழை
சட்டமன்றத் தொகுதி அரூர்
சட்டமன்ற உறுப்பினர்

வே. சம்பத்குமார் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

22,384 (1991)

1,550/km2 (4,014/sq mi)

பாலின விகிதம் 1047 /
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

14.44 கிமீ2 (6 சதுர மைல்)

3 மீட்டர்கள் (9.8 அடி)

குறியீடுகள்

விவரம்

தொகு

வயலார் தெற்கு கேரள நகரமான, சேர்த்தளாவில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது.

பள்ளிகள்

தொகு

வயலாரில் 2 கீழ்நிலைப் பள்ளிகளும், ஒரு உயர்நிலைப் பள்ளியும் உள்ளன. இவை அரசுப் பள்ளிகள். உயர்நிலைப் பள்ளிக்கு மலையாளக் கவிஞர் வயலார் ராமவர்மா பெயரிடப்பட்டது. வயலார் வடக்கு கீழ் தொடக்கப் பள்ளி, எட்டுபுரக்கல் சாலையில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியாகும். பலர் கல்விக்காக சேர்த்தலா நகரத்திலும், அருகிலுள்ள பட்டணக்காடு பகுதியிலும் உள்ள பள்ளிகளை நம்பியிருக்கிறார்கள்.

கோவில்கள்

தொகு

இந்த இடத்தில் முக்கிய சமயம் இந்து சமயம், அதைத் தொடர்ந்து இசுலாம், கிறிஸ்தவம் ஆகியவை உள்ளன. கேரளாதித்தியபுரம் சிறீகிருஷ்ண சுவாமி கோயிலும், நாகம்குளங்கரா சிவன் கோயிலும் பிரசித்தி பெற்றவை. இது தவிர ஏராளமான சிறிய கோவில்கள் மற்றும் ஒரு சில பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன. இங்கு அனைத்து சமயத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

பொருளாதாரம்

தொகு

இங்குள்ள மக்களின் முக்கிய வாழ்வாதாரம் கயிறு தயாரித்தல், மீன் பிடித்தல், இறால் வளர்ப்பு ஆகியவை ஆகும். அதிக எண்ணிக்கையிலான மக்கள் திறண்மிகு அல்லது திறணற்ற தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். இவர்கள் தென்னை நார்த் தொழில், கட்டுமானத் தொழில், கடல் உணவுத் தொழில் மற்றும் அருகிலுள்ள சேர்தலா மற்றும் கொச்சி நகரம் பல்வேறு வணிகங்களில் வேலைவாய்ப்பைக் கொண்டுள்ளனர்.

கம்யூனிஸ்ட் நினைவகம்

தொகு
 
கம்யூனிஸ்ட் நினைவகம்
 
கவிஞர் வயலார் ராமவர்மா
 
நாகம் குளங்கரா கோவில்
 
இராம வர்மா ஸ்மிருதி மண்டபம்

வயலாரின் முக்கிய அடையாளமாக "இரத்த சாட்சி மண்டபம்" உள்ளது. இது 1946 இல் திருவிதாங்கூர் சர். சி.பி. ராமசாமி ஐயர் ஆட்சிக்கு எதிராகப் போராடி இறந்த நூற்றுக்கணக்கானவர்களின் நினைவாக அமைக்கபட்டது. இந்தக் கிளர்ச்சியை இந்தியப் பொதுவுடைமைக் கட்சி ஏற்பாடு செய்தது. டி. வி. தாமஸ், எம். என். கோவிந்தன் நாயர், குந்திரிச்சேரியில் குமார பணிக்கர் (வயலார் ஸ்டாலின்), குந்திரிசேரில் சி. வேலாயுதன் (வயலார் மூப்பன்) போன்ற பலர் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி தண்டனைகளைப் பெற்றனர். வயலார் கிளர்ச்சியின் போதும் அதற்குப் பின்னரும் குந்திரிசேரில் குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் மர ஈட்டிகளைத் தவிர வேறு எந்த ஆயுத்ததையும் கொண்டவர்களாக இருக்கவில்லை. அவர்கள் பழைய திருவிதாங்கூர் மாநிலத்தின் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரால் பிடிக்கபட்டனர். இந்த நிகழ்வு மலையாள நாட்காட்டி படி துலாம் 10 ஆம் தேதி நடந்தது. இன்றளவும் 'துலாம் பாத்து' (துலாம் 10ம் தேதி) வெகு விமரிசையாக அனுசரிக்கப்படுகிறது.

நிர்வாகம்

தொகு

இது (சேர்த்தலை) சட்டமன்றத் தொகுதியின் கீழ் வரும் ஊராட்சி.

குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு
 
இரக்த சாட்சி மண்டபம்

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vayalar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயலார்_ஊராட்சி&oldid=3691797" இலிருந்து மீள்விக்கப்பட்டது