வரேந்திரா
வரேந்திரா ( Varendra ), பரிந்த் என்றும் அறியப்படும் இது வடக்கு வங்காளத்தின் ஒரு பகுதியாகும். இப்போது பெரும்பாலும் வங்காளதேசத்திலும் ஒரு சிறிய பகுதி இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் உள்ளது.[1][2]
இது தற்போது வங்காளதேசத்தின் ரங்க்பூர் கோட்டம் மற்றும் ராஜசாகி கோட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியான புந்த்ரவர்தனா அல்லது புந்த்ரா இராச்சியத்தின் ஒரு பகுதியை உருவாக்கியது. வங்காளதேசத்தின் போக்ரா, ராஜசாகி, பாப்னா மற்றும் தினாஜ்பூர் மற்றும் இந்தியாவின் மேற்கு தினாஜ்பூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. கன்னிங்காமின் கூற்றுப்படி, வரேந்திராவின் எல்லை மேற்கில் கங்கை ஆறு மற்றும் மகாநந்தா, கிழக்கில் கரடோயா, தெற்கில் பத்மா நதி மற்றும் வடக்கே கூச் பெகர் சமஸ்தானம் மற்றும் தெராய் இடையேயான நிலம் என இருந்தது.
இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள்
தொகுரமேஷ் சந்திர மஜும்தாரின் கூற்றுப்படி, வரேந்திர-மண்டலம் என்ற சொல் ராமசரிதத்தில் வருகிறது. இது கங்கை மற்றும் கரடோயா ஆறுகளுக்கு இடையில் இருந்தது என அவர் எழுதுகிறார். "புந்த்ரவர்தனத்துடன் இது சேர்க்கப்பட்டிருந்தது என சிலிம்பூர், தர்பாண்டிகி மற்றும் மதைநகர் கல்வெட்டுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தபாகாட்-இ-நாசிரி கங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள லக்னாவதியின் பிரதேசத்தின் ஒரு பிரிவாக பரிந்த் குறிப்பிடுகிறது"[1]
வரலாறு
தொகுமௌரியப் பேரரசு காலத்தில் வங்காளத்தில் பிராமணர்கள் இருந்ததை வரலாற்று சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. சந்திரகுப்த மௌரியரின் ஆசானாகக் கருதப்படும் சைன ஆச்சார்யர் பத்திரபாகு, புந்த்ரவர்தனத்தின் ( அல்லது புந்த்ரா, கங்கைக்கு வடக்கே வங்காளத்தில் உள்ள பிரம்மபுத்திராவுக்கு மேற்கே, பின்னர் வரேந்திரா என்று அழைக்கப்பட்டது) பிராமண குடும்பத்தில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய சான்றுகள் புந்த்ரா அல்லது வரேந்திரா மற்றும் பாகீரதிக்கு மேற்கே உள்ள பகுதிகள் (பண்டைய காலத்தில் ராதை என்று அழைக்கப்படுகின்றன) பண்டைய காலங்களிலிருந்து பிராமணர்களின் இடங்களாக இருந்தன;
எச். சி. ராய்சௌதுரியின் கூற்றுப்படி , குப்த வம்சம் வரேந்திரி பகுதியில் இருந்து உருவானது. காலிம்பூர் செப்புத்தகடு கல்வெட்டின் படி, முதல் பால பேரரசர் கோபால வப்யதா என்ற வீரரின் மகன் ஆவார். வரேந்திரா (வடக்கு வங்காளம்) பாலர்களின் தந்தை நாடு ( ஜனகபு ) என்பதை ராமசரிதம் சான்றளிக்கிறது.
வரேந்திரா பகுதியில் இருந்து தோன்றிய பண்டைய பேரரசுகளும் ஆட்சியாளர்களும்
தொகுவரேந்திரா பகுதியில் இருந்து தோன்றிய இன்றைய பிரதமர்கள், குடியரசுத் தலைவர் மற்றும் முதலமைச்சர்கள்
தொகு- முகமது அலி போக்ரா
- ஜியாவுர் ரஹ்மான்
- உசைன் முஹம்மது எர்ஷாத்
- காலிதா சியா
குறிப்பிடத்தக்க வரேந்திர பிராமணர்கள்
தொகு- ராஜா கணேசன், வங்காளத்தின் ஒரு இந்து ஆட்சியாளர்
- ராணி பபானி, நாதோரின் இந்து ஜமீன்தார்
- கௌதம் சன்யால், இந்திய அரசு ஊழியர்
- சுரஜித் சந்திர லஹிரி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி
- நளினக்ஷா சன்யால், இந்திய அரசியல்வாதி, பொருளாதார நிபுணர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்.
- நாராயண் சன்யால், நவீன பெங்காலி இலக்கியத்தின் எழுத்தாளர் மற்றும் கட்டடப் பொறியியலாளர்.
- பகாரி சன்யால், இந்திய நடிகர் மற்றும் பாடகர்
- சசீந்திர நாத் சன்யால், இந்தியப் புரட்சியாளர் மற்றும் இந்துஸ்தான் குடியரசுக் கட்சியின் நிறுவனர்
- சஞ்சீவ் சன்யால், இந்திய பொருளாதார நிபுணர் மற்றும் எழுத்தாளர்.
- ஜெயா பச்சன் (முதலில் பாதுரி), இந்திய திரைப்பட நடிகை, அரசியல்வாதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்
- அமர்நாத் பாதுரி, இந்திய மூலக்கூறு என்சைமலாஜிஸ்ட் மற்றும் இரசாயன உயிரியலாளர்
- அபிஜித் பாதுரி, இந்திய எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் மேலாண்மை ஆலோசகர்
- நிரிசிங்க பிரசாத் பாதுரி, இந்திய வரலாற்றாசிரியர், எழுத்தாளர் மற்றும் இந்தியவியலாளர்
- சிசிர் பாதுரி, இந்திய மேடை நடிகர் மற்றும் நாடக நிறுவனர்
- சிவதாஸ் பாதுரி, இந்திய தொழில்முறை கால்பந்து வீரர்
- அனிர்பான் இலாகிரி, இந்திய தொழில்முறை கோல்ப் வீரர்
- பப்பி லஹரி, ஒரு இந்திய பாடகர், இசையமைப்பாளர்.
- ஜும்ப்பா லாஹிரி, அமெரிக்க எழுத்தாளர்
- மஹுவா மொய்த்ரா, இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்
- சாந்தனு மொய்த்ரா, இந்திய இசையமைப்பாளர், இசைக்கலைஞர் மற்றும் பியானோ கலைஞர்
- ரூபாங்கர் பாக்சி, வங்காள மொழி பாடகர்-பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகர்.
- ஜதீந்திரமோகன் பாக்சி, பெங்காலி கவிஞர் மற்றும் ஆசிரியர்.
- சுப்ரோடோ பாக்சி, இந்திய தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்
- தனிஷ்க் பாக்சி, இந்திய இசை தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் பாடகர்.
- பிமன் பாக்சி, இந்திய தேசிய அறிவியல் தலைவர் பேராசிரியர்
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Majumdar, R. C. (1971). History of Ancient Bengal. Calcutta: G. Bhardwaj & Co. p. 13. இணையக் கணினி நூலக மைய எண் 961157849.
- ↑ வார்ப்புரு:Cite Banglapedia