கிளிநொச்சி புதுமுறிப்புப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர். (புதினம்)
துணுக்காய் ஆலங்குளத்தில் படையினரின் முன்நகர்வு முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் 20 படையினர் கொல்லப்பட்டு 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். (புதினம்)
ஆகஸ்ட் 9: முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆசிரியர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். மூவர் காயமடைந்தனர். (புதினம்)
முல்லைத்தீவு மருத்துவமனையினுள் இலங்கைப் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒரு வயது குழந்தை கொல்லப்பட்டது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உட்பட 16 பேர் காயமடைந்தனர். (புதினம்)
ஆகஸ்ட் 7: முல்லைத்தீவு, மணலாறு பகுதியில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை மீது விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் உடல்கள் நான்கு மற்றும் படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. (புதினம்)
ஆகஸ்ட் 3: ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து சுட்டுக்கொல்லும் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (புதினம்)