வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் செப்டெம்பர் 2008
(வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் செப்டம்பர் 2008 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- செப்டம்பர் 29:
- திருகோணமலை, கந்தளாயில் இலங்கை படையினரும் ஊர்காவல் படையினரும் சேர்ந்து அமைத்திருந்த காவலரண் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் நான்கு படையினர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- கொழும்பு, புறக்கோட்டையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார். ஆறு வாகனங்கள் சேதமடைந்தன. (புதினம்)
- செப்டம்பர் 28: மட்டக்களப்பு திகிலிவட்டைப் பகுதியில் இலங்கை இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து அமைத்திருந்த சிறு முகாம் ஒன்றின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- செப்டம்பர் 27: கிளிநொச்சி நகர் இரத்தினபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கைக்குழந்தையுடன் மூன்று சிறார்கள் உட்பட எட்டு பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்நெட்)
- செப்டம்பர் 18: வவுனியா வடக்கு புளியங்குளம் புதூர் பகுதியில் பயணிகள் பேருந்து மீது இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டு மூவர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- செப்டம்பர் 17: வன்னிவிளாங்குளம்-புதூர்-மன்னகுளம் பகுதிகளை நோக்கிய படையினரின் நடவடிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் 13 படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- செப்டம்பர் 16:
- வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து ஐநா நிவாரணப் பணியாளர்கள் அனைவரும் வெளியேறி வவுனியா வந்து சேர்ந்தனர். (டைம்ஸ் ஒன்லைன்)
- கொழும்பில் பேருந்து ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் நால்வர் காயமடைந்தனர். (டைம்ஸ் ஒன்லைன்)
- செப்டம்பர் 15:
- கிளிநொச்சி தென்மேற்குப் பகுதியில் உள்ள அக்கராயன் பகுதியை நோக்கி முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்ட படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 22-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- வவுனியா வடமேற்கு பாலமோட்டை-குஞ்சுக்குளம்-வன்னிவிளாங்குளம் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிரான தாக்குதலில் 15 படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- செப்டம்பர் 13:
- அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் கொல்லப்பட்டு நால்வர் படுகாயமடைதனர். (புதினம்)
- மட்டக்களப்பு, திமிலத்தீவு, மற்றும் மண்டூரில் காவல்துறையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய இரு வேறு தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டு நால்வர் காயமடைந்தனர். (புதினம்), (டைம்ஸ் ஒன்லைன்)
- செப்டம்பர் 11: அம்பாறைக்கும் மொனறாகலைக்கும் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் ஏழு கிராமவாசிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். (டைம்ஸ் ஒன்லைன்)
- செப்டம்பர் 9:
- வவுனியா சிறப்புப் படைத்தலைமையகத் தாக்குதல்: வவுனியாவில் இலங்கை படைத்தலைமையகத்தின் மீது கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். வான்புலிகளின் மூன்று வானூர்திகளும் தளத்தின் மீது தாக்குதல் நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். புலிகளின் ஒரு வானூர்தியைத் தாம் சுட்டு வீழ்த்தியதாக அரசு அறிவித்தது. (புதினம்) (டைம்ஸ் ஒன்லைன்)
- ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 155 படையினர் கொல்லப்பட்டு 983 பேர் காயமடைந்ததாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். (டைம்ஸ் ஒன்லைன்)
- செப்டம்பர் 8:
- புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணிபுரியும் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களையும் உடனடியாக வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. (புதினம்)
- கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் பத்து பொதுமக்கள் காயமடைந்தனர். (புதினம்)
- செப்டம்பர் 2: முல்லைத்தீவு, வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட இருமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத்தாக்குதலில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, 50-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் படையினரின் பத்து உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (புதினம்), (மாலைமலர்)
- செப்டம்பர் 1:
- வவுனியா, நாச்சிக்குடாப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 45-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு, 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்ததாகவும் 7 உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- அம்பாறை - அம்பாந்தோட்டை எல்லைப்பகுதியான உகந்தையில் இலங்கை அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டு காயமடைந்தனர். (புதினம்)