வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜூன் 2008
- ஜூன் 29:
- கிளிநொச்சி, பூநகரியில் இலங்கைப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். (புதினம்)
- முல்லைத்தீவு, துணுக்காயில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் கொல்லப்பட்டார்.(புதினம்)
- ஜூன் 28:
- கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் அதிகாலை முதல் முற்பகல் வரை பாரிய தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு 100-க்கும் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். (புதினம்)
- ஜனதா விமுக்தி பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி அமைத்துள்ள தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் சந்ஹிப்பூ ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. (புதினம்)
- ஜூன் 27:
- மட்டக்களப்பு, வாழைச்சேனையில் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் ஒருவரின் உடல் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்டது. (புதினம்)
- யாழ், பருத்தித்துறையில் இலங்கைப் படையினரின் வாகனத் தொடரணியைக் குறிவைத்து நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் படுகாயமடைந்தார். (புதினம்)
- ஜூன் 22:
- வவுனியா பாலமோட்டையில் இலங்கைப் படையினரின் மும்முனை நகர்வு முறியடிக்கப்பட்டதில் 18 படையினர் கொல்லப்பட்டு 31 பேர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலையடுத்து இலங்கைப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டு 10-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (புதினம்)
- ஜூன் 21:
- கொழும்பு, தெகிவளையில் தமிழ் இளைஞர் ஒருவர் வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்டார். (புதினம்)
- மன்னாரில் கடந்த 2 நாட்களில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உடலங்களாக மீட்கப்பட்டனர். (புதினம்)
- ஜூன் 20: இந்தியாவின் வெளியுறவு அமைச்சகச் செயலாளர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அடங்கிய உயர்மட்டக் குழு முன்னறிவிக்கப்படாத அவசர பயணத்தினை மேற்கொண்டு கொழும்பு வந்தது. (சண்டேடைம்ஸ்)
- ஜூன் 16: வவுனியாவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உட்பட 12 இலங்கை காவல்துறையினர் கொல்லப்பட்டு 40 பேர் காயமடைந்தனர். (ஏஎஃப்பி)
- ஜூன் 15: முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஜூன் 13:
- கனடாவில் இயங்கும் உலகத் தமிழர் இயக்கம் அந்நாட்டு அரசினால் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. (தமிழ்நெட்)
- யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை வாகனத்தை வழிமறித்து நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு ஒருவர் படுகாயமடைந்தார். (புதினம்)
- ஜூன் 11:
- வவுனியா மாவட்டம், குஞ்சுக்குளம் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறிகடிக்கப்பட்டதில் 19 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 23-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- மன்னார், எருக்கலம்பிட்டி இலங்கைக் கடற்படையினரின் கூட்டுப் படைத்தளம் கடற்புலிகளின் சிறப்பு அணியினரால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டதாகவும், 10 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்), (டெய்லி மிரர்)
- ஜூன் 8:
- முல்லைத்தீவு, மணலாறுப் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் நான்கு முனைகளில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளைத் தாம் முறியடித்து 20-க்கும் அதிகமான படையினரைக் கொன்றதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- ஜூன் 6:
- மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காயினர். தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மாணவர்களை இலங்கை காவல்துறையினர் கைது செய்தனர். (புதினம்), (டெய்லி மிரர்)
- கண்டியில் பேருந்துக்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவவில் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டு 47 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஜூன் 4: கொழும்பு, தெகிவளையில் தொடருந்துப் பாதை அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 18 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஜூன் 2:
- முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 6 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடியில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த எருவில்பற்று பிரதேச சபை உப தலைவர் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். (புதினம்)