விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு25
சென்னையில் விக்கி புகைப்பட போட்டி
தொகுWikipedia Takes Chennai பார்க்கவும். தமிழ் விக்கிக்குத் தேவையான படங்கள் குறித்தும் அங்கு தெரிவிக்கலாம்--ரவி 04:47, 17 ஜூலை 2009 (UTC)
கருத்து வேண்டல்
தொகுவேதிப்பொருள்களைக் குறிக்க வேதி வினைக்குழுப் பெயர்களாக ஆங்கிலத்தில் hydoxyl, benzyl, phenyl, alkyl, aryl என மிகப்பலவற்றில் -yl என்னும் ஈறு (முடியும் பகுதி) வருகின்றது. இதனை ஐதராக்சில், பென்சில், ஃவீனில், ஆல்க்கில், ஆரில் என்றோ ஐதராக்சைல், பென்சைல், ஃவீனைல், ஆல்க்கைல், ஆரைல் என்றோ ஒலிக்கலாம். Methyl, ethyl என்பனவற்றை மெத்தில் எத்தில் என்றும் ஒலிக்கக் கேட்டிருக்கின்றேன் மீத்தைல், ஈத்தைல் என்றும் ஒலிக்கக் கேட்டிருக்கின்றேன். மெர்ரியம் வெபுசிட்டர் அகராதி ஈற்றொலியை -இல் என்று குறிக்கின்றது. (பார்க்க) ஆகவே -இல் என்னும் ஒலிப்பை முதன்மைப்படுத்தலாமா? ஓரே சீராக இருப்பது நல்லது. பென்சைல் அசிட்டேட் என்றும் அது போல நான் ஆக்கிய கட்டுரைகளில் பென்சில் அசிட்டேட் (pecil அல்ல :) பெ'ன்சில்) என்பது போன்ற மாற்றங்களைச் செய்து விடுகின்றேன். இது போல இன்னும் மிகப்பல பெயர்கள் உள்ளனவாகையால், ஒரு 4-5 பேராவது கருத்து தெரிவித்தால் அதன் படி மாற்றுவேன். ஐதராக்சில் ? பென்சில்? , எத்தில்?, மெத்தில்? --செல்வா 13:18, 22 ஜூலை 2009 (UTC)
- நானும் இரண்டு முறைகளையும் கேட்டிருக்கிறேன். வெபுசிட்டரில் ஒலிப்புப் பரிந்துரை உள்ளதால் அம்முறையில் இல்லென முடிக்கும் முறையை பின்பற்றலாம். -- சுந்தர் \பேச்சு 15:11, 22 ஜூலை 2009 (UTC)
மாற்றலாம் . ஆனால் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்களா என நாம் எண்ண வேண்டும்.
எ. கா. எத்தனால் என்பதை எத்தனால் என்றும் அல்லது எதைல் ஆல்ககால் என்று தான் பள்ளியில் படித்துள்ளேன். பென்சைல் அசிடேட், பென்சைல் அசிடேட் என்று தான் படிப்பார்கள் (நான் படித்த போது) , மாறாக பென்சில் அசிடேட் என்னும் போது குழப்பம் வராதா?.
மேலும் ஆங்கில உச்சரிப்பில் பென்சைல் என்பதை , பென்சில் என்று சொன்னால் நாம் மாற்றுவதில் தவறு இல்லை. படிப்பவர்கள் பின்னாளில் வெளியில் வரும் போது, பிரச்னைகள் வராது.
நன்றி --Munaivar. MakizNan 17:32, 22 ஜூலை 2009 (UTC)
- மிகப் பெரும்பான்மையாக ஐதராக்சைல், பென்சைல், ஃவீனைல், ஆல்க்கைல், ஆரைல் என்றவாறு தான் ஒலிப்பதை நான் கேட்டிருக்கிறேன். இலங்கைப் பாட நூல்களில் அவ்வாறுதான் உள்ளன, தமிழ்நாடு பாடநூல்களிலும் அதுபோலவே இருக்கின்றன என்று நினைக்கிறேன். எனவே "இல்" என்ற முடிப்பிலும் "ஐல்" என்று முடிவதே நல்லது என்பது எனது கருத்து. மயூரநாதன் 19:12, 22 ஜூலை 2009 (UTC)
- மயூரநாதன், மகிழ்நன், நானும் அப்படி எண்ணியே முதலில் -ஐல் என்று சில கட்டுரைகள் எழுதினேன். ஆனால் இரு விதமாகவும் நான் கேட்டிருக்கின்றேன். அகரமுதலிகளில் சில -"இ"ல் என்று தந்து இருந்தார்கள். பிரித்தானிய ஒலிப்பு -ஐல் அல்லது -அயில் , அமெரிக்க ஒலிப்பு -"இ"ல். methyl என்பதற்கு ஆக்ஃசுபோர்டு அகராதி தரும் ஒலிப்புகள்:
- பிரித்தானிய ஒலிப்பு: /miːθʌɪl/, /mɛθʌɪl/, /mɛθ(ɪ)l/
- அமெரிக்க ஒலிப்பு: U.S. /mɛθ(ə)l/
- தமிழில் நெருக்கமான ஒலிப்புகள் முறையே: பிரித்தானிய ஒலிப்பு: மீத்தாய்ல், மெத்தாய்ல், மெத்"இ"ல்
- அமெரிக்க ஒலிப்பு: மெத்ல்
- பிரித்தானிய ஒலிப்பு: /miːθʌɪl/, /mɛθʌɪl/, /mɛθ(ɪ)l/
- இங்குள்ள பலரும் -ஐல் என்ற ஒலிப்பு சரியாக இருக்கும் என்றால் நாம் அப்படியே எழுதுவோம். தமிழில் இப்படித்தான் நாம் வாங்குகின்றோம் என்று கொள்வோம். தவறில்லை. ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி! வேறு யாரும் கருத்துகள் தெரிவிப்பது என்றாலும் அருள் கூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன்.--செல்வா 19:34, 22 ஜூலை 2009 (UTC)
- மயூரநாதன், மகிழ்நன், நானும் அப்படி எண்ணியே முதலில் -ஐல் என்று சில கட்டுரைகள் எழுதினேன். ஆனால் இரு விதமாகவும் நான் கேட்டிருக்கின்றேன். அகரமுதலிகளில் சில -"இ"ல் என்று தந்து இருந்தார்கள். பிரித்தானிய ஒலிப்பு -ஐல் அல்லது -அயில் , அமெரிக்க ஒலிப்பு -"இ"ல். methyl என்பதற்கு ஆக்ஃசுபோர்டு அகராதி தரும் ஒலிப்புகள்:
கலைக்களஞ்சியத்தில் சரியான வழக்குக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஆனால், ஆங்கிலம் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரியாக உச்சரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அதற்கு முறையான ஒப்புதலும் உண்டு. எனவே, தமிழ்நில வழக்கு மிக வலுவாக உள்ள ஒன்று என்றால், அதையே பின்பற்றலாம். மாணவர்களைக் குழப்பாமல் இருப்பதும் முக்கியம்--ரவி 03:38, 23 ஜூலை 2009 (UTC)
பாலூட்டிகள்
தொகுஇந்த வார்புருவையும் வார்ப்புரு:இந்திய_பாலூட்டிகள் இதன் பேச்சு பக்கத்தையும் பார்க்கவும்--கார்த்திக் 04:04, 27 ஜூலை 2009 (UTC)
மூன்று-நான்கு மாதங்களில் 20,000 கட்டுரைகளை எட்டக்கூடும்
தொகுஇன்னும் 3-4 மாதங்களில் (அக்டோபர்-நவம்பர் 2009 இறுதிக்குள்), 20,000 கட்டுரைகளை நாம் எட்டக்கூடும். இதுகாறும் தமிழ் விக்கியில் நாம் கட்டுரைகளின் சராசரி நீளம், கட்டுரைகளின் தரம் முதலியவற்றை தாழ்த்தாமல் கட்டுரைகளின் எண்ணிக்கைகளைக் கூட்டி வளர்த்துவந்துள்ளோம். என்றாலும், இன்னும் பன்மடங்கு கட்டுரைகளின் வளத்தையும் தரத்தையும், பரப்பையும் கூட்ட வேண்டும். பல நல்ல புதிய பங்களிப்பாளர்களும் இப்பொழுது சேர்ந்துள்ளார்கள். இருக்கும் கட்டுரைகளின் தரம் தேர்வதும் ஒரு முக்கியப் பணியாக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். 20,000 கட்டுரைகள் இருக்கும் பொழுது குறைந்தது ஒரு 100-200 கட்டுரைகளாவது சிறப்புக்கட்டுரைகளாகத் தேர்வு செய்யப் பெற்று வைப்பில் இருக்க வேண்டும் (இதில் பலருடைய கூட்டுழைப்பு வேண்டும்). தரத்தில் இரண்டாம் நிலையாக "மிக நல்ல" கட்டுரைகளாக இன்னும் ஒரு 200-300 கட்டுரைகளும், மேலும் 300-400 கட்டுரைகள் "நல்ல" கட்டுரைகளாகவும் இருக்க நாம் உழைக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட ஓராயிரம் கட்டுரைகள் ஓரளவுக்கு நல்ல அல்லது மிக நல்ல கட்டுரைகளாக இருக்க வேண்டும் என்னும் குறிக்கோளை முதல்கட்டமாகக் கொள்ளலாம். அதாவது ஏறத்தாழ 50 துறைகளில் ஒவ்வொரு துறையிலும் 20 நல்ல கட்டுரைகளாக மொத்தம் 1000 நல்ல கட்டுரைகள் இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும். இவற்றை அடையாளம் கண்டு, தேர்வு செய்து, வளர்முகமாக திறனாய்வு செய்து தரம் கணிக்க வேண்டுகிறேன். முதலில் தேர்வு செய்யப்பெறும் வாய்ப்பிருக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தின்{{தக}} என்னும் வார்ப்புருவை இட வேண்டுகிறேன். நாம் 50,000 கட்டுரைகள், 100,000 கட்டுரைகள் என்னும் நிலைகளை இன்னும் விரைந்து எட்ட வேண்டும். --செல்வா 01:00, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
உறுதியாக நாம் விரைவில் 20000 த்தை அடைவோம். எனது நண்பர்களிடம் விக்கி பற்றி அறிய தந்துள்ளேன். அவர்களின் பணி, நமது ஊரில் இணைய விரைவு பிரச்னை என அவர்களால் பங்களிக்க முடியவில்லை. என் நண்பர்கள் அறிவியல், வரலாறு மற்றும் குமுகவியலில் நன்கு புலமை பெற்றவர்கள். விரைவில் அவர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.
நமது கூட்டு உழைப்பால் 50000 என்ற மாய எண்ணை விரைவில் அடைவோம் என்கிற நம்பிக்கை ஒளி கீற்று தெரிகிறது .
நன்றி
-- மகிழ்நன் 03:08, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
- ஓ அப்படியா? மிக்க நன்றி! --செல்வா 03:26, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்
தொகுஇன்று ஆடிப்பெருக்கு. சிறுவயதில் இந்நாளில் வீட்டுக்குப் பின்னால் வைகை கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்துக் களித்திருக்கிறேன். வேளாண் பெருமக்களும் இந்நாளில் நம்பிக்கையுடன் நெல் விதைப்பர். இந்நன்னாளில் அனைவருக்கும் வளம் பெருகிட வாழ்த்துகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவிலும் கட்டுரைகள் பெருக வேண்டும். -- 03:30, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
சொல் பற்றிய உரையாடல்கள்
தொகுஇதுகாறும் பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள் என்னும் இப்பகுப்பில் சிறிதும் பெரிதுமாக 300 பக்கங்கள் உள்ளன. நாம் பலவாறு எண்ணி, சிந்தித்துக் கூட்டாக கருத்துரையாடி இக் களஞ்சியத்தை வளர்த்தெடுக்கின்றோம் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு. காலப்போக்கில் இப்பக்கங்கள் 1000 ஐக்கூட எட்டும். பயனுடைய ஆவணத்தொகுப்பாகவும் இவ் உரையாடல்கள் இருக்கக்கூடும். --செல்வா 21:04, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
- ஆம், செல்வா. நாம் எண்ணிப் பார்க்கும் முன்னரே (!) இத்தனை பயனுள்ள உரையாடல்கள் நடைபெற்றுள்ளன. இவை தரமான ஆவணங்களே. பெரும்பாலான விளக்கங்களைப் பதிந்த உங்களுக்கும் அவற்றை முறையாகப் பகுப்பிலிட்ட சிவாவுக்கும் நன்றி. -- சுந்தர் \பேச்சு 04:16, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
- இந்த உரையாடல் வழியாக பிறந்த சொற்களை விக்சனரில் பதிவு செய்தலும் மிகவும் முக்கியமானது.--கார்த்திக் 13:06, 4 ஆகஸ்ட் 2009 (UTC)
செய்திகளில் இது இடம் பெறுமா ?
தொகுதிரு கணேசன் தெரிவித்த செய்தி:
வவுனியா முகாமில் தமிழர்களோடு தங்கியிருந்த புலித்தலைவர்கள்
க.வே.பாலக்குமாரன், கரிகாலன், யோகரத்தினம் யோகி, புதுவை இரத்தினதுரை
ஆகியோரை இனம்கண்டு விசாரனைக்காக அழைத்துச் சென்ற சிங்கள போர்ப்படை
அவர்களை சித்தரவதை செய்து ரகசியமாக படுகொலை செய்திருக்கிறது. இச்செய்தியை
”சிறீலங்கா கார்டியன்” என்ற கொழும்பு இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
http://sakyabuddhan.blogspot.com/2009/08/blog-post.html
--செல்வா 13:38, 6 ஆகஸ்ட் 2009 (UTC)
- Need the direct link
Everything to be available online in Kannada
தொகுEverything to be available online in Kannada
--Natkeeran 00:23, 11 ஆகஸ்ட் 2009 (UTC)
- நல்ல தகவல் நற்கீரன், நன்றி. --செல்வா 14:23, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
கட்டுரையாக்க விரைவு: ஓராண்டில் 4000 கட்டுரைகள்
தொகுஆகத்து 2008 இல் 15,000 கட்டுரைகள் இருந்தன, ஆகத்து 13, 2009 இல் 19,000 ஐ எட்டியுள்ளோம். இந்த கட்டுரையாக்க விரைவு குறைவு என்றாலும், ஓரளவுக்கு நல்ல முன்னேற்றமே. பல கட்டுரைகள் நல்ல ஆழத்துடன் அழகாக பலர் எழுதி வருகின்றனர். குறைந்தது 4-5 நல்ல தகவல்களை நல்ல நடையில், படிப்பவருக்கும் பயன்படுமாறு எழுதுவதில் கண்ணோட்டம் செலுத்தி வளர்த்தெடுக்க வேண்டும். புதிதாக சேர்ந்து மிக நல்ல ஆக்கங்கள் செய்யும் பல பயனர்களை நெஞ்சார வாழ்த்துகிறேன். குறிப்பாக பயனர்கள் பரிதிமதி, மணியன், மகிழ்நன், ரியாத் அராவ'த் முதலியவர்களை மிகவும் பாராட்டுகிறேன். எக்கட்டுரையும் 2-3 கிலோ பை'ட்டுக்குக் குறைவாக இல்லாமல் இருப்பதுடன், அது படிப்பவருக்கு என்ன தகவல்களைத் தந்து உதவுகின்றது, எவ்வளவு நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது என்னும் கண்ணோட்டத்துடன் எழுத வேண்டுகிறேன். பங்களித்த அனைவருக்கும் பாராட்டுகள்! --செல்வா 14:33, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
- இதனையும் பார்க்க: விக்கிப்பீடியா:மைல்கற்கள் --செல்வா 14:37, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
- 19,000 கட்டுரை எண்ணிக்கை அளவைத் தாண்டியிருப்பதையிட்டு மகிழ்ச்சி. இதனை அடைவதில் உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். குறிப்பாகப் பல புதிய பயனர்கள் சிறப்பாகப் பங்களித்து வருவதைக் காணும்போது தமிழ் விக்கிப்பீடியா இன்னும் வேகமாக முன்னேறும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. விரைவிலேயே 25,000 கட்டுரை எண்ணிக்கையைத் தாண்டிவிடலாம் என்பது எனது எண்ணம். மயூரநாதன் 18:29, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
அன்பின் செல்வா,
வாழ்த்துகள். வாழ்த்துகளுக்கு நன்றி. என்னுடைய பணி, சில சிக்கல்களால் என்னால் சில நாட்களாக முழுமையாக பங்கேற்க முடியவில்லை. அடுத்த திங்கள் (மாதம்) முதல் வாரத்தில் இருந்து என் முழுமையான பங்களிப்பை செய்கிறேன்.
நன்றி மகிழ்நன் -- மகிழ்நன் 19:40, 13 ஆகஸ்ட் 2009 (UTC)
Project தமிழ் என்ன?
தொகுபல இடங்களில் Project என்பது ஒரு முக்கிய கருத்தாக்கம், செயற்பாடு. இதோடு இணைந்த சில சொற்கள்:
- திட்டம், திட்டமிடல் - Plan, Planning
- செயலாக்கம் - Process
- பணி - Task
- Program - பல Projects - Program management
- ஒருங்கியம்
- மேலும் பாக்க: சிக்கல் தீர்வு தலைப்புகள் பட்டியல்
project தமிழ் என்பது பற்றிய செல்வாவின்/பிறரின் கருத்துக்களை இங்கு பாக்கலாம்: பேச்சு:செயற்றிட்டம்
புறத்திட்டு, வகுத்திட்டம் எனக்கு நன்றாகப் படவில்லை. புறத்திட்டு என்பதன் உருவாக்க பின்புலம் அறியேன் ஆனால் அது external solid போன்று ஆங்கில வழியில் பொருள் தருகிறது. வகுத்திட்டம் வகுத்தல் வகுத்திட்டன் போன்வற்றோடு குழப்பலாம். வழக்கில் இல்லை.
பயனர்கள் மேலும் கருத்துக்களை கூறி, ஒரு முடிவு எடுத்தால் நன்று. --Natkeeran 16:02, 15 ஆகஸ்ட் 2009 (UTC)
- ஒரே சொல்லை பல இடங்களிலும் பயன்படுத்துவது சரியாக அமையாது. இது தமிழில் மட்டும் அல்ல, இடாய்ட்சு போன்ற மொழிகளிலும் காணலாம். எப்பொழுதுமே ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழியில் மாற்றி ஈடாக எழுதும்பொழுது, பெறும் மொழியின் சூழல்/மரபு/பொருள்கோண்மை அறிந்து பெயர்க்கவேண்டும் அல்லது மாற்றாக்கம் செய்ய வேண்டும். புராச்செக்ட்டு என்பதை பணித்திட்டம் என்று சில இடங்களில் கூறலாம். திட்டம், திட்டப்பணி, வகுபணி, வகுதிட்டம் என்றெல்லாமும் கூறலாம். பல இடங்களில் வெறும் பணி என்றே பொருத்தமாகக் கூறலாம். ஒரு புராச்செக்டில் வேலை செய்கிறேன் என்பது ஒரு குறிப்பிட்ட பணியில் முனைந்து உள்ளேன் என்று பொருள். பண்ணுவது பணி. திட்டமிட்டுப் பண்ணுவது திட்டப்பணி, வகுத்துப் பணி செய்வது வகுபணி. புராச்செக்ட் என்பது என்ன? ஒரு பணியின் உட்கூறுகளை தெளிவாக அறிந்து யார் எப்பொழுது என்னென்ன செய்து என்னென்னவற்றைப் பணியின் முடிவாகவோ, பணியின் இடைநிலைகளின் முடிவிலோ வழங்க வேண்டும் என்பதுதானே. இங்குள்ள சொற்களில் ஏதேனும் ஒன்றையோ சிலவற்றையோ இடத்துக்கு ஏற்றார்போல எடுத்தாளலாமே.--செல்வா 16:15, 15 ஆகஸ்ட் 2009 (UTC)
- Project - செய்திட்டம் .Project work - செய்திட்டப் பணி project explanation - செய்திட்ட விளக்கம். -- இராஜ்குமார்.
இவை பொருத்தமாக இருக்கும் என்று நினைகிறேன் . Project - ஒருங்கிய திட்டம் ( ஒருங்கு திட்டம் ) ( சில நேரங்களில் ஒருங்கியம் என்பது மட்டும் ). carefully planned என்ற பொருள் வரும்.இது மிகப்பொருத்தமாக உள்ளது . design , research, clear .
Project Work - ஒருங்கு திட்டப் பணி அல்லது ஒருங்கிய திட்டப்பணி .
சேது சமுத்திர project - சேது சமுத்திர ஒருங்கு திட்டம் .
International water supply project - உலகளாவிய நீர் விநியோக ஒருங்கு திட்டம் .
better project management - நல் ஒருங்கு திட்ட( ஒருங்கிய திட்ட)மேலாண்மை .
Software projects - மென்பொருள் ஒருங்கு திட்டங்கள் . -- இராஜ்குமார்.
resin பரிந்துரைகள்
தொகுresin - பிசின்
synthetic resin
vynelyster resin
synthesis
synthetic language
perseids
thermoplastic - வென்னெகிழி
fiber or glass reinforced plastic (GRP or FRP ) இதன் பொருள் நரம்பிழைகளால் வழுவூட்டிய நெகிழிகள்
fiber or glass reinforced plastic (GRP) - வன்னிழை நெகிழி அல்லது இழைக்கூட்டு நெகிழி .
reinforced plastic - வன்னெகிழி
Fiber cement siding
Fiber reinforced composite
Fiber pull-out
Fiber reinforced concrete
Fiber volume ratio
Fiberglass - கண்ணாடியிழை
Fiberglass sheet laminating
Fiberglass spray lay-up process
Fibre-reinforced plastic
Filament winding
fiber splice
continuous filament winding machine ( CFW Machine )
monomer - ஓருரு polymer - பன்னுரு bond - பிணைப்பு covalent bond - வன்பிணைப்பு
molding composite material injection molding compression molding
இவை களுக்கு பரிந்துரைகள் தேவை
- resin = பிசின்.
- fiber = நார், இழை, ஒளிநார் (இடத்துக்கு ஏற்றார்போல வரும்).
- fiber splice = ஒளிநார் பிணைப்பு
- fiber-reinforced plastic = இழைவலுவூட்டிய நெகிழி
- concrete = பைஞ்சுதை (சுதை என்றாலே சிமெண்ட் போன்ற காரைத் தரை உருவாக்கும் பொருள்)
- covalent bond = பகிரிணைப்பு (எதிர்மின்னிகள் அணுக்களிடையே பகிர்வு முறையில் இயங்கி பிணைப்பு ஏற்படுத்துவது.).ionic bond = மின்மவிணைப்பு.
- vinylester resin = வைனைல் (வீனைல்) எசுத்தர் பிசின்
- synthetic resin = செயற்கைப் பிசின்.
- synthetic language = சேர்க்கை மொழி
- molding = உருவார்ப்பு
- composite material = கலப்புருப் பொருள்
- injection molding = வெந்திணிப்பு உருவார்ப்பு
- compression molding = அமுக்க உருவார்ப்பு, அழுத்த உருவார்ப்பு
- synthesis = சேர்த்தாக்கம், சேர்-, சேர்ப்பு, செய்யுரு, செயற்கை, செய்சேர்க்கை, கூறுசேர் (இடத்தைப் பொருத்து, சூழலைப்பொருத்து தேர்வு செய்தல் வேண்டும். சிந்த்தெசிசு என்பது உருவாக்கல், சேர்ந்தாக்கல் அவ்வளவுதான்).
- thermo-plastic = வெந்நெகிழி
- thermosetting plastic = வெந்நிறுத்த நெகிழி
--செல்வா 15:06, 16 ஆகஸ்ட் 2009 (UTC)
தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்
தொகுதமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்
“ | வால்மீகியின் பேரிதிகாசத்தை தமிழில் தந்து தாய் மொழிக்குப் பெரும்புகழ் தேடித்தந்தான் கம்பன். ஆனால் சாணக்கியனின் அர்த்த சாஸ்த்திரத்தையோ, ஆரியபட்டாவின் வான சாஸ்திரத்தையோ, அவன் கணிதவியலையோ தமிழுக்குக் கொண்டுவர யாருக்கும் தோன்றவில்லை. காவிரிப்பூம்படினத்தின் அதிஅற்புத அழகையும் துறைமுகத்தில் வந்து நிற்கும் விதவிதமான வடிவங்கள் கொண்ட கப்பல்களையும், துறைமுக அதிகாரிகள் சுங்கம் வசூலிக்கும் தோற்றத்தையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய பட்டினப்பாலை, அதன் மறுபக்கமான பெரும் மரக்கலங்களைப் படைத்த கரங்களின் திறமையையோ, அக்கலங்களைச் செலுத்திக் கடலை வென்ற தோள்களின் ஆற்றலையோ பற்றி விளக்கும் குறிப்புகள் ஏதும் இல்லை. இதே போல் மேற்கில் மாலத்தீவிலிருந்து, ஈழம் உட்பட, கிழக்கில் கடாரம் வரை தென்திசைக் கடல் எங்கும் புலிக்கொடி பறக்கச் செய்து புகழ் பெற்ற சோழப் பேரரசின் பெருமைமிக்க மன்னர்கள், அச்சரித்திரத்தின் வெற்றிக்கு அடிப்படையான கடற்படையின் ஆற்றல் பற்றியோ, அதன் தொழில் நுணுக்கத்தை விளக்கும் சுவடிகளையோ, செப்பேடுகளையோ, கல்வெட்டுகளையோ, அறிவியல் சார்ந்த எந்த ஒரு வரலாற்றுத் தடயங்களையோ தம் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லவில்லை என்பதும், அவற்றைக் கிடைக்கச் செய்வதில் அக்கறை கொள்ளவில்லை என்பதும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். | ” |
நமது இலக்கு
தொகுநமது இலக்கு 2009 அக்டோபெருக்குள் , 20000 கட்டுரைகள் . விரைந்து செயல் படுங்கள் .
பயனர் Wikitrans இன் மிக அருமையான நெடிய கட்டுரைகள்
தொகுபயனர் Wikitrans என்பவர் பல நெடிய கட்டுரைகளை இன்று அளித்துள்ளார். அவர் எழுதிய கட்டுரைகளில் சில மும்பை,அண்டம், GSM, வாலண்டைன் தினம், ரோஜா, எண் கணிதம், இரவீந்திரநாத் தாகூர், ஒலி மாசு, எரிமலை, இயற்கை பேரிடர்ப்பாடு. இவை ஒவ்வொன்றும் 100-200 கிலோ பை'ட் நீளமுடைய நெடுங்கட்டுரைகள். இவை ஆங்கில விக்கியில் இருந்து மொழி பெயர்த்தவை. அவருக்கு நம் எல்லோருடைய பெரும் பாராட்டுகள். இப்படி யாரும் இதற்கு முன்னர் செய்ததில்லை. அருள்கூர்ந்து அவர் எழுதிய கட்டுரைகளைப் பொறுமையாகப் படித்து, வேண்டிய திருத்தங்கள் செய்ய வேண்டுமாய் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன். --செல்வா 12:54, 19 ஆகஸ்ட் 2009 (UTC)
- சிலவற்றைப் பிரித்து இரண்டு மூன்று கட்டுரைகளாக ஆக்க இயலுமா என்றும் கருத வேண்டும். பல சிவப்பு இணைப்புகளுக்கு கட்டுரைகள் எழுதி வளம் கூட்ட வேண்டும். இவை பலவும் முதற்பக்கக் கட்டுரையாக உருவெடுக்கக் கூடியன.--செல்வா 12:56, 19 ஆகஸ்ட் 2009 (UTC)
- இவை கூகுளின் தானியங்கி மொழிபெயர்ப்பிகளின் உதவியால் செய்தவை, எனவே கவனமாக பொருள் பொருத்தம் முதலியவற்றைப் பார்க்க வேண்டுகிறேன்.--செல்வா 13:10, 19 ஆகஸ்ட் 2009 (UTC)
- அருமையான வேலை. விக்கிட்ரான்சுக்கு எனது பாராட்டுக்கள். இந்த முறையில் விரைவாகக் கட்டுரை எண்ணிக்கையைக் கூட்ட முடியுமா? எழுதப் பட்டிருக்கும் தலைப்புக்களிற் பல ஏற்கெனவே இருக்கின்றன. அவற்றைப் பழைய கட்டுரைகளுடன் இணைக்க வேண்டும். இருக்கும் கட்டுரைத் தலைப்புகளில் இன்னொரு கட்டுரை எழுதாமல் புதிய கட்டுரைகளாக எழுதினால் நல்லது.மயூரநாதன் 16:21, 19 ஆகஸ்ட் 2009 (UTC)
- ஆம் சிறீதரன் கனகு, முன்பும் இரண்டு மூன்று கட்டுரைகள் பார்த்த நினைவு. நீங்கள் விரிவாக விக்கியாக்கம் செய்தீர்கள். நானும் இந்த கூகுள்-மொழிப்பெயர்ப்பு மென்கலக்கருவியைப் பயன்படுத்திப் பார்த்தேன். மிகவும் எளிதாகத்தான் உள்ளது, ஆனால் முதலில் சற்று கூடுதலாக உழைக்க வேண்டும் போல் தெரிகிறது. கூட்டாக பலர் ஒரே கட்டுரையை உருவாக்க இயலும். இதில் பல நன்மைகளும் விளையக்கூடும். அடிக்கடி வரக்கூடிய சில தரமான கலைச்சொற்களை தாமாக மொழிபெயர்க்க வைக்கலாம். மொழி பெயர்ப்பை எளிதாக்கக்கூடியது. ஆமாம் மயூரநாதன், முதல் கட்டமாக பல கட்டுரைகளை சற்று விரைவாக அல்லது சற்று குறைந்த உழைப்புடன் ஆக்க இயலும். பிறகு நன்றாக படித்து, செம்மைப்படுத்திவிடலாம், மேலும் தகவல்களைச் சேர்த்து வளம் கூட்டலாம். பயனர் விக்கிட்டிரான்சு என்பவர் (ஒருவரா, ஒரு குழுவா??) அவருடைய பட்டறிவைப் பகிர்ந்துகொள்ளலாம். --செல்வா 19:25, 19 ஆகஸ்ட் 2009 (UTC)
பொருளடக்கம்
தொகுஉதவி தேவை..... பொருளடக்கம் எனும் மேற்காணும் அட்டவணையை கட்டுரையில் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?--Ragunathan 08:57, 23 ஆகஸ்ட் 2009 (UTC)
- நீங்கள் == எனும் syntax பயன்படுத்தி உபதலைப்புகளை உருவாக்கும்போது மூன்று உபதலைப்புகளை மேலிடும்போது தானாகவே பொருளடக்கம் உருவாக்கப்படுகிறது. நீங்கள் ஏதும் செய்ய வேண்டுவதில்லை. பார்க்க: உபதலைப்புகள்
--மணியன் 09:11, 23 ஆகஸ்ட் 2009 (UTC)
சுந்தரின் விக்கிமேனியா பங்களிப்புக்கு வாழ்த்துகள்
தொகுஅருமை அண்ணன் சுந்தர் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக விக்கிமேனியா 2009 மாநாட்டில் கலந்து கொள்ள அருச்சென்டினா சென்று சேர்ந்துள்ளார். அன்னாரின் பங்களிப்பு சிறந்த முறையில் அமைந்து திரும்பிட, கோவை வட்ட தமிழ் விக்கிப்பீடியா சார்ப்பில் வாழ்த்துகிறோம் :) --ரவி 10:11, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
ரவியின் கருத்தை கோவை வட்ட சக உறுப்பினராகிய நான் வழிமொழிகிறேன். :) --சிவக்குமார் \பேச்சு 15:48, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
- மாநாட்டில் சுந்தரின் பங்கு வெற்றியாக அமைய வாழ்த்துக்கள். இது, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் புதிய உந்துதலைக் கொடுக்கும் என்பது எனது நம்பிக்கை.மயூரநாதன் 12:46, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
- ரவியின் கருத்தை கோவை வட்ட சக உறுப்பினராகிய நான் வழிமொழிகிறேன். :) --Ragunathan 15:51, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
- வாழ்த்துகளுக்கு நன்றி! என் கட்டுரை வாசிப்பு முடிந்தது. மூன்று வாசிப்புகள் வெவ்வேறு அறைகளில் நடந்து கொண்டிருந்த போதும் நல்ல வரவேற்பு இருந்ததாகவே உணர்ந்தேன். மற்ற ஆய்வுரைகளின் போதும் நம் தளத்தைப் பற்றிய மேம்பட்ட புரிதலைத் தர முயன்றேன். மாநாட்டுக்கு வந்த எவரும் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய ஏதாவது ஒரு தகவலைப் பெற்று விட்டே சென்றிருப்பர் எனக் கருதுகிறேன். :-) -- சுந்தர் \பேச்சு 19:20, 27 ஆகஸ்ட் 2009 (UTC)
- ரவியின் கருத்தை கோவை வட்ட சக உறுப்பினராகிய நான் வழிமொழிகிறேன். :) --Ragunathan 15:51, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
- வாழ்த்துக்கள் சுந்தர். படங்கள இந்த முறையும் எடுக்காம விட்டிருதாயிங்கோ....--Natkeeran 00:37, 28 ஆகஸ்ட் 2009 (UTC)
மாநாடு தொடர்பில் பல செய்திகளை இட வேண்டியுள்ளது. படங்களையும் பதிவேற்ற வேண்டும். வரும் சனிக்கிழமை பதிகிறேன். -- சுந்தர் \பேச்சு 15:51, 2 செப்டெம்பர் 2009 (UTC)
ஏன்? எதற்கு?
தொகு- ஒரு பங்களிப்பு அல்லது கட்டுரை ஏன், எதற்காக நீக்கப்படுகிறது?--Ragunathan 14:51, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
- கட்டுரையின் உள்ளடக்கம் தமிழ் விக்கியின் கொள்கைகளுக்கு ஏற்பில்லாததாக இருக்குமாயின் அக்கட்டுரை(அ) பங்களிப்பு நீக்கப்படும். எடுத்துக்காட்டுகள் - ஆங்கிலத் தலைப்பு, ஆங்கில உள்ளடக்கம், காப்புரிமை பெற்ற உள்ளடக்கங்களைச் சேர்த்தல், விசமத்தனமாக தொகுப்புகள், முதலியன. மேலும் அறிய விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும் பக்கத்தினைப் பார்க்கவும் --சிவக்குமார் \பேச்சு 15:52, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
- நன்றி திரு. சிவகுமார் -:)--Ragunathan 15:56, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
விளம்பரம், விக்சனரி அல்லது பிற விக்கித் திட்டங்களுக்குப் பொருந்தி வரும் பக்கங்கள், சோதனை முயற்சிகள், பொருளற்ற உள்ளடக்கங்கள், கலைக்களஞ்சியத்துக்குப் பொருந்தா வலைப்பதிவு போன்ற கட்டுரைகள், பேச்சுப் பக்கங்களில் விடப்படும் கட்டுரைக்குத் தொடர்பில்லா கருத்துகள், பிழையான பெயர் வெளியில் உள்ள கட்டுரைகள், தேவையில்லாத வழிமாற்றுகள், இரு வேறு பக்கங்களை இணைப்பதற்காக, ஆசிரியர் வேண்டுகோளுக்கு இணங்க, போதிய உள்ளடக்கம் இல்லாமை, ஏற்கனவே அதே தலைப்பு தொடர்பாக முதன்மை கட்டுரை இருத்தல், கட்டுரையை விக்கியாக்கித் திருத்துவதை விட புதிதாக எழுதுவது இலகு போன்ற காரணங்களுக்காகவும் ஒரு பக்கம் நீக்கப்படலாம்--ரவி 17:15, 5 செப்டெம்பர் 2009 (UTC)
நம் சாதனையை பதிவு செய்ய வேண்டாமா?
தொகுமலையாள விக்கி 2009 சூலை மாதம் 10000 கட்டுரைகளை தாண்டியது என்றும் அதை அம்மொழி பத்திரிகைகள் வெகுவாக புகழ்ந்து எழுதியதால் அதன் வளர்ச்சி அதிகரித்தது என்றும் இங்கே[[1]] படித்தேன். நாம் 20 ஆயிரத்தை நெருங்கி விட்டோம். ஆனால் இங்கே[[2]] ஓராண்டாக புதுப்பிக்கவில்லை. மேலும் தமிழ் அச்சு ஊடகங்கள் நம் மீது கவனம் செலுத்தி செய்தி வெளியிட வைக்க வேண்டும். அப்போது இன்னும் நிறைய பேர் பங்களிப்பார்கள். நான் ஒரு புதிய பயனர். மு.இளங்கோவன் [[3]] அவர்கள் எழுதிய கட்டுரையை தினமணியில் படித்த பிறகே இது பற்றி ஒரு தெளிவு கிடைத்து மிக்க ஆர்வத்துடன் கட்டுரை எழுதுகிறேன். அதனால் நமது சாதனையை மேற்கண்ட பக்கத்தில் புதுபிக்க வேண்டுகிறேன். மேலும் தமிழ் நாளிதழ்களில் செய்தி வெளியாகும்படி அல்லது தமிழ் வார இதழ்களில் (ஏற்கெனவே சிலவற்றில் வந்துள்ளன) வரும்படி முயற்சி செய்தல் வேண்டும். --Ragunathan 10:39, 25 ஆகஸ்ட் 2009 (UTC)
- ஆங்கில விக்கியில் உள்ள en:Tamil Wikipedia கட்டுரை இற்றைப்படுத்தப்பட வேண்டும்.--Kanags \பேச்சு 10:52, 25 ஆகஸ்ட் 2009 (UTC)