விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு35

கூகுள் கட்டுரைகளைத் திருத்த வேண்டும்

தொகு

கூகுள் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தலாம் என்பதில் அனைவருக்கும் பொதுக் கருத்து இருந்தாலும், திட்டத்தைத் தொடர்வதா நிறுத்துவதா என்ற இரு எதிர் நிலைகளுக்கு இடையே சிலரால் வாக்களிக்க முடியாமல் இருக்கிறது. எனவே, இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்டதாக முதலில் இருக்கும் கட்டுரைகளைச் சீர்திருத்தி விட்டு பிறகு புதிய கட்டுரைகளைச்சேர்க்கும் பணியைத் தொடரலாம் என்று பரிந்துரைக்கிறேன். இருக்கும் கட்டுரைகளைச் சீர்திருத்திப் பார்த்தால், அந்த அனுபவத்தில் வருங்காலக் கட்டுரைகளையும் நன்றாக எழுத முடியும்.

பின்வரும் தீர்மானத்துக்கு உங்கள் வாக்கை அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் தாங்கள் ஏற்கனவே மொழிபெயர்க்கத் தொடங்கியுள்ள கட்டுரைகளை மே 15 வரை சேர்க்கலாம். அதற்குப் பிறகு புதிய கட்டுரைகளைச் சேர்ப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மே 15 முதல் ஆகத்து 15 வரை (மூன்று மாத காலம்) கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் தமிழ் விக்கி சமூகத்துடன் இணைந்து ஏற்கனவே மொழிபெயர்த்த கட்டுரைகளைச் சீர்திருத்துவதில் ஈடுபட வேண்டும். இந்தச் செயற்பாட்டினை ஆய்வு செய்து அதற்கு அடுத்த கட்ட முடிவை எடுக்கலாம்.

ஆதரவு

தொகு

எதிர்ப்பு

தொகு
  • கூகிள் மொழி பெயர்ப்புகள் சரியாகத்தான் செல்கிறன. அவை விக்கி முறையினை சரியான கடைப் பிடிக்கிறன. சராசரி கட்டுரையை விட 40 அல்லது 50 மடங்கு அதிக தகவல் தருகின்றன. "பிழைகள்" என சிலர் எதிர்க்கின்றனர். செல்வா அவர்கள் 'எண்டாஸ்கோபி" என்ற கட்டுரையில் ஒரே ஒரு பிழைதான் கன்டுபிடித்தார் "இரணடாம் உலகப்போரின் இறுதியில் இந்த தொழில்நுட்பம் மேலும் மிகவும் அடக்கமானதாக மாறியது (எனக்குப் புரியாததால் ஆங்கில விக்கியில் என்ன எழுதியுள்ளது என்று பார்த்தேன்: The technology available at the end of the Second World War was still very modest). " இதைத் தவிற மற்ற மாற்றங்கள் இலக்கண அல்லது விக்கி முறை பிழைகளினால் ஏற்ப்பட்டது அல்ல.

அதனால் கூகிள் மொழி பெயர்ப்புகளை தடங்கல் இல்லாமல் செய்ய வேண்டும்.--217.169.51.254 09:09, 22 ஏப்ரல் 2010 (UTC) (IP முகவரியில் வந்து போடப்படும் வாக்கு செல்லாது என்பது நினைவிருக்கட்டும்)

நான் சுட்டியது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. நூற்றுக்கணக்கான குறைகள் உள்ளன (குறைகளைத் திருத்தவேண்டும் என்னும் நோக்கிலேயே இதனைக் கூறுகின்றேன்). விக்கி உள்ளிணைப்பு தருவதில்கூட ஒரு சிறிதும் அக்கறை காட்டாமல் எழுதுகின்றனர். எடுத்துக்காட்டாக (இதுவே எல்லா குறைகளின் பட்டியல் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்!!) [[மருத்துவ நடைமுறையான]], [[உணர்வற்ற நிலையைப்]]<nowiki>" என்று எழுதுகிறார்கள். இவை [[மருத்துவ நடைமுறை]]யான, [[உணர்வற்ற நிலை]]யைப் என்று இருக்க வேண்டும். இவ்வகையான நடவடிக்கைகளால் ஏராளமான நேரம் செல்வாகின்றது. இரண்டொரு முறை, ஒரு சில இடங்கள் என்றால் பொருட்படுத்தாமல் யாரும் செய்வர். ஆனால் அப்படியில்லையே இங்கு! கூகுள் நிறுவனத்துக்குமே கூட இவை அனைத்தும் மிக முக்கியம் அல்லவா? நாளை வணிக நோக்கில் செய்யும் பொழுதும் கூட இவை நற்பயன் அளிக்குமே. --செல்வா 15:53, 22 ஏப்ரல் 2010 (UTC)

நடுநிலை

தொகு
  • --Natkeeran 23:40, 22 ஏப்ரல் 2010 (UTC)
கூகிள் கட்டுரைகள் பல துறை சார் கட்டுரைகள். அவற்றின் தமிழாக்கம் இயல்பாக சிக்கலானது. இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். --Natkeeran 23:40, 22 ஏப்ரல் 2010 (UTC)
நற்கீரன், மொழிபெயர்ப்பின் தரம் என்பது ஒரு பகுதி பிரச்சினை தான். தங்களின் பழைய கட்டுரைகளைச் சீராக்க முனையாமை, படம்-வார்ப்புரு சேர்த்து கட்டுரைகளை முழுமையாக்க முனையாமை, விக்கி சமூகத்துடன் கூடிச் செயற்படாமை என்று பல பிரச்சினைகள் உள்ளன. இவர்களைக் கூகுள் மொழிபெயர்ப்பாளராகப் பார்க்கமால் தனியொரு பயனராகப் பார்த்தால் பல பிரச்சினைகளை இனங்காணலாம்--ரவி 06:08, 23 ஏப்ரல் 2010 (UTC)

கருத்து

தொகு

தயவு செய்து எதிர்ப்பு, நடுநிலை வாக்கு அளிப்பவர்கள் உங்கள் மாற்று அணுகுமுறையைப் பரிந்துரைக்கவும்--ரவி 06:31, 22 ஏப்ரல் 2010 (UTC)

அநாமதேயர்கள் வாக்கு அளிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும். இது ஏனைய விக்கிகளில் நடைமுறையில் உள்ளது.--Kanags \உரையாடுக 12:06, 22 ஏப்ரல் 2010 (UTC)
ஆம், அடையாளம் தெரியாதவர்கள் வாக்கு அளித்தாலும் கருத்தில் எடுக்கத் தேவை இல்லை. உண்மையில், பயனர் கணக்கு என்பதை விட பயனர் கணக்கு மூன்று மாதம் (அல்லது ஏதாவது ஒரு காலம்) முன்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் போன்ற விதிமுறைகளைச் சிந்திக்கலாம். இல்லாவிட்டால், ஒரே நாளில் பத்து புதுப் பயனர் கணக்குகள் உருவாக்கி வாக்களிக்கலாம். உண்மையில் இது எண்ணிக்கை அடிப்படை வாக்கெடுப்பு என்பதை விட கருத்தொற்றுமை, இணக்க முடிவுக்கான ஒரு முயற்சியே. எனவே, ஒருவர் எதிர்த்து வாக்களித்தாலும் அதில் நியாயமான காரணம் இருந்தால் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். போன வாக்கெடுப்பில் கருத்தொற்றுமை குறைவாக இருந்ததால், இடைப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பது போல. --ரவி 12:57, 22 ஏப்ரல் 2010 (UTC)


இனிமேல் எழுதப்படும் இத்தகைய கட்டுரைகள் இதுவரை சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளை விலக்கி எழுதப்படுதல் வேண்டும். விக்கியில் எவரும் எவ்வளவு பெரிய கட்டுரைகளையும் எத்தனை பிழைகளுடனும் எழுதுவது தவறில்லை. விக்கி நன்னம்பிக்கையுடனே செயல்படுகிறது. எனினும் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது தவறுகளைத் திருத்தாமலோ அல்லது திருத்தாதற்கான வலுவான காரணங்கள், சான்றுகோள்கள் தராமலோ தன்னிச்சையாக செயல்படுவது விக்கியின் கொள்கைகளுக்கு எதிரானாதாகவே இருக்கும். எனவே மொழியாக்கம் செய்யும் பயனர்கள் மற்ற விக்கி பயனர்களுடன் இசைந்தோ அல்லது தரப்படும் பின்னூட்டங்களை உள்வாங்கிக் கொண்டு செயல்பட்டால் அதுவே விக்கிக்கும் மொழியாக்கத் திட்டத்துக்கும் பயன்மிக்கதாக இருக்கும். அதற்கு இந்த கால இடைவெளி உதவும் என்று நம்புகிறேன்.--சிவக்குமார் \பேச்சு 11:05, 23 ஏப்ரல் 2010 (UTC)

  • கூகுள் மொழிபெயர்ப்பு வரவேற்புக்கு உகந்ததே. உருவாக்கியக் கட்டுரைகளை,தொடர்ந்து மேம்படுத்த வேண்டிய கடப்பாடும், கடமையையும் அம்மொழிபெயர்ப்பாளர் கைவிடுவது வருந்தத்தக்கதே. எத்தகைய விக்கியாக்கமும் செய்யப்படாமல் இணைப்பது, படிப்பவருக்கும் கலைப்பையே ஏற்படுத்துகிறது. எனவே, சிலவரைமுறைகளும், கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தவேண்டும் என்பதே என்கருத்தாகும். நன்றி. த* உழவன் 14:09, 27 ஏப்ரல் 2010 (UTC)


  • மென்பொருள் வழியான மொழிபெயர்ப்பு அயல்மொழிக் கட்டுரைகளை விரைவில் தமிழுக்குக் கொண்டுவர உதவும், கட்டுரைகளின் எண்ணிக்கையை வேகமாக உயர்த்தும் என்பதில் ஐயமில்லை. எனினும், பிழைகள் மலிந்த, புரிந்துகொள்ள முடியாத, நீளமான, சிக்கல் வாக்கியங்களில் அவை இருந்தால், அப்படிப்பட்ட இயந்திர மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைப் பார்க்கும் புதியவர்கள் பயந்துபோய் அதற்குப்பின் தமிழ் விக்கிப்பீடியாவின் பக்கமே எட்டிப்பார்க்காமல் போய்விடலாம். அப்படிப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, 'படிக்கமுடியாத' கட்டுரைகளின் விழுக்காடும் அதிகமாகி, விக்கிப்பீடியா என்றாலே பின்னங்கால் பிடறியில் பட விலகி விரைந்தோடும் புதியவர்களின் எண்ணிக்கையும் பெருகிவிடும்; மக்கள் தமிழ் படிக்க வேண்டும், பயனுள்ள கட்டுரைகளைத் தமிழில் நாடிப் படிக்கவேண்டும் என்ற நம் அனைவரின் எதிர்பார்ப்பும் உழைப்பும் விழலுக்கிறைத்த நீராகி விடும். அதனால், மென்பொருள் மொழிபெயர்ப்பு முடிந்ததும், அவற்றிலுள்ள பிழைகள், சிக்கலான வாக்கிய அமைப்புகள் முதல் பதிவேற்றத்துக்கு முன்பே மொழிபெயர்ப்பாளரால் சரிசெய்யப்படவேண்டும். அதற்குப்பின் விக்கிப்பிடியர்கள் சரிபார்க்கலாம். தமிழே தெரியாதவர்கள் இயந்திர மொழிபெயர்ப்புகளை நூற்றுக்கணக்கில் பதிவேற்றினால், அந்த வேகத்தில் சரிசெய்வதென்பது நம்மால் இயலாது என்பதோடு விக்கிப்பீடியாவுக்கு நாடி வருவோரையும் விரைந்தோட வழிசெய்துவிடும். Pazha.kandasamy 15:56, 27 ஏப்ரல் 2010 (UTC)
  • ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து கூகூள் மொழிபெயர்ப்புக் கருவி வழியாகக் கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மொழி பெயர்த்தவர்களே அந்தக் கட்டுரையிலுள்ள பிழைகளையும், குறைகளையும் திருத்த வேண்டும். தவறும் நிலையில் நிறுத்த வேண்டும். அல்லது அக்கட்டுரைகளை முழுமையாக நீக்கிவிட வேண்டும். கட்டுரையின் எண்ணிக்கையும், அளவும் கூடுதலாகும் என்ற ஒரே கருத்தில் செயல்படும் சிலர் தரம் கூடுதலாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தையே மறந்து (மறைத்து) விட்டார்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் புதிதாகப் பங்களிக்கும் சிலர் செய்யும் தவறுகளைத் திருத்தலாம். அப்படி திருத்தப்படும் பொழுது அந்தப் பயனர் அடுத்து பங்களிக்கும் போது அந்தத் தவறை மீண்டும் செய்யாமல் இருப்பார். மேலும் தெரியாமல் செய்யப்படும் பிழைகளை, குறைகளைத் திருத்தம் செய்யலாம். நாங்கள் இப்படித்தான் செய்வோம் இதை திருத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வது சரியான கருத்துமில்லை. அவர்கள் சொல்படி எல்லாம் செயல்பட தமிழ் விக்கிப்பீடியாவில் எந்தப் பயனர்களுமில்லை. பொதுவாக அவர்கள் மொழிபெயர்த்த கட்டுரைகளை அவர்களே திருத்த முடியாது என்று திருப்பித் திருப்பிச் சொல்வதிலிருந்தே அதில் அதிகப்படியான குறைகளோ அல்லது அதிகப்படியான வேலையோ இருக்கிறது என்பதை நாம் அறிய முடிகிறது. கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் அனைத்தையும் மொழி பெயர்ப்பாளர்கள் திருத்தம் செய்தால் நல்லது. அதைப் பயன்பாட்டில் வைக்கலாம். அல்லது, அந்தக் கட்டுரைகள் அனைத்தையும் கூகுள் மொழிபெயர்ப்பில் குறைபாடுடைய கட்டுரைகள் என்கிற தனிப் பகுப்பில் பிரித்து விட வேண்டும். மேலும் ஆலமரத்தடியில் கூகுள் மொழிபெயர்ப்பு குறித்து நடைபெற்ற விவாதங்கள் அனைத்தையும் ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்து கூகுள் தலைமை நிறுவனத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும். நகலை கூகுளின் இந்திய அலுவலகத்திற்கும், தமிழ் மொழி மாற்றப் பிரிவுக்கும் அனுப்பி வைக்கலாம்.--Theni.M.Subramani 17:14, 27 ஏப்ரல் 2010 (UTC)

சிவப்பு இணைப்பு

தொகு

இவை நிச்சயமாக அசிங்கமாகவும், வளர்ச்சியில்லாமலும் இருக்கின்றன. இவற்றை நீக்குவதற்கு வழிகள் அ) அந்த சொற்களை கட்டுரையில் இருந்து அகற்ற வேண்டும்; ஆ) இணைப்பு கொடுக்க வேண்டாம் இ) இணைப்பு கட்டுரையும் எழுதவேண்டும். அ வை செய்தால் கட்டுரையின் போக்கு தடைபடும், அர்த்தம் குன்றி விடும், தகவல்கள் மிகக் குறையும் ஆ வை செய்தால் அவைன் தவறுகள் தடுக்கப்படும் ஆனால் படிப்பவர் புது அறிவு ஆர்வத்தை தீர்க்க முடியாது, படிப்பவர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும், எழுதுபவர்க்ஹளுக்கும் எழுதும் கருத்து கிடைக்காமல் போய் விடும். இ யை பின்பற்றினால் நன்றாக இருக்கும், ஆனால் ஒரு கட்டுரையும் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாது ஏனெனில் ஒவ்வொரு கட்டுரையும் பல புது கட்டுரைக்கு அடிகோலிடும்.

அதனால், அசிங்கமாக இருந்தாலும் சிவப்பு இணைப்புடன் வாழ்ந்து, ஆர்வமுள்ளவர்கள் அதன் மேல் புது கட்டுரைகள் எழுதுவர் என எதிர்பார்க்கலாம்--217.169.51.254 11:43, 22 ஏப்ரல் 2010 (UTC)

எப்படி இந்தியாவில் என்ற கட்டுரையையா? பல இடங்களில் சிவப்பு இணைப்பு தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை எழுதியவர்கள் சரிசெய்தால் நலம். இல்லையென்றால் 217.169.51.254 சரி செய்யலாம். யாரும் மறுப்பு சொல்லமாட்டார்கள். --குறும்பன் 15:25, 22 ஏப்ரல் 2010 (UTC)

'இந்தியா' 7 வருடங்களாக பலரால் செய்யப்படுவது, அது மொழி பெயர்ப்பு இல்லை

நான் சரியாக சொல்லவில்லை போலிருக்கிறது. எ.கா [[இந்தியா]] என்பதற்கு பதில் [[இந்தியாவில்]] என்று இணைப்பு கொடுக்கப்பட்டுருக்கிறது. இந்த மாதிரியான சிறு தவறுகளை அவர்கள் களையலாம் என்பதே என் கருத்து. இதை இயன்றால் மொழிபெயர்ப்பாளர்களிடம் சொல்லுங்கள். --குறும்பன் 17:31, 22 ஏப்ரல் 2010 (UTC)

கூகுளுடன் நடந்த உரையாடல்

தொகு

கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து, இன்று மாலை இந்திய நேரம் 5.20 முதல் 6.20 வரை ஒரு தொலைப்பேசி உரையாடல் நடந்தது. நானும் சுந்தரும் கலந்து கொண்டோம். கூகுள் சார்பில் அவர்கள் திட்ட மேலாளர், கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி பொறியாளர், தமிழ் மொழியிலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். உரையாடலின் சுருக்கம்:

  • கூகுள் கருவியில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளுக்கு மட்டுமே கூகுள் பதில் அளிக்க இயலும். மொழிபெயர்ப்புத் தரம், கட்டுரையின் முழுமைத் தன்மை குறித்த கேள்விகளுக்குப் பொறுப்பு ஏற்காது. இது குறித்த பிரச்சினைகளை மொழிபெயர்ப்பு செய்பவர்களுடன் உரையாடல் பக்கங்கள் மூலம் நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களை வழமையான பங்களிப்பாளர்கள் போலவே கருதிச் செயற்பட வேண்டும்.
  • இத்திட்டம் தொடர்வதற்கு மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒப்பந்தப் பணிகளைத் தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். மூன்று மாதம் புதிய கட்டுரைகள் சேர்க்காமல் நிறுத்தி வைத்தால், கூகுள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களை இரத்து செய்ய நேரிடும். இது இத்திட்டத்துக்கே முடிவாக அமையலாம்.

எனவே, இந்தச் சூழலில் என்னுடைய பரிந்துரை:

ஏற்கனவே உள்ள கட்டுரைகளைச் சீராக்கத் தொடங்குமாறு கூகுள் பங்களிப்பாளர்களுக்கு அவர்களது பேச்சுப் பக்கங்களில் அறிவுறுத்தலாம். அவர்களின் செயற்பாட்டைப் பொறுத்து மேற்கண்ட வாக்கெடுப்பின் முடிவை நடைமுறைப்படுத்தலாம்.

அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றி உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். --ரவி 13:24, 22 ஏப்ரல் 2010 (UTC)

செல்வா

தொகு
  • நான் கூகுள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்புத் திட்டத்தை மிகவும் பாராட்டுகிறேன். ஆனால் மொழிபெயர்ப்பாளர்கள் தரமான மொழிபெயர்ப்பைத் தராவிடில் அத்திட்டத்தின் பயன் என்னவென்று விளங்கவில்லை?! நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என்றால் நம்மில் சிலர் அவர்களுக்கு உதவக்கூடும். அல்லது மொழிபெயர்ப்பு பற்றிய கருத்துகளை நாம் முன்வைக்கும் பொழுது அதனை கருத்தில் கொண்டு இயங்கினாலும் பயன் இருக்கும். இரவி மேலே கூறியது போல, அவர்களை வழமையான பங்களிப்பாளர்கள் போலவே கருதிச் செயற்பட வேண்டும். என்று இருந்தால் பயன் விளையக்கூடும். மொழிபெயர்ப்பாளர்கள் தாங்கள் செய்யும் மொழிபெயர்ப்பைத் திருத்தி செப்பம் செய்தால் நாம் இதனைக் கட்டாயம் ஊக்கப்படுத்தலாம். இன்னோரு பரிந்துரை மொழிபெயர்ப்பின் தரத்தைக் கணிக்கலாம், ஆனால் அதற்கும் நிறைய நேரம் செலவாகும், எனவே இங்குள்ள பயனர்களின் கருத்துகளை உள்வாங்கி மொழிபெயர்ப்பாளர்கள் செப்பம் செய்தலே சிறந்த முடிவு. --செல்வா 14:46, 22 ஏப்ரல் 2010 (UTC)


பவுல்

தொகு

--George46 18:28, 22 ஏப்ரல் 2010 (UTC)

  • ரவியும் செல்வாவும் கூறுவதைக் கருத்தில் கொண்டு சிந்தித்தேன். கூகுளுக்கும் விக்கிக்கும் இடையே நல்லுறவும் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். இதனால் தமிழும் தமிழரும் பயனடைவர். ஆனால், "மூன்று மாதம் புதிய கட்டுரைகள் சேர்க்காமல் நிறுத்தி வைத்தால், கூகுள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களை இரத்து செய்ய நேரிடும். இது இத்திட்டத்துக்கே முடிவாக அமையலாம்" என்று ரவி சொல்வதைப் பார்த்தால் இந்த உறவு முறியும் ஆபத்து உள்ளது. மூன்று மாதத்திற்குப் பதில் இரண்டு அல்லது இரண்டரை என்றால் சரியாகுமா? அக்காலக் கட்டத்திற்குள் கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் திருத்தப் பணியை முடிப்பார்களா? இந்த ஆய்வுமுயற்சியில் ரவி, செல்வா, சுந்தர் ஈடுபட்டால் நலமாயிருக்கும். அதைத் தொடர்ந்து அடுத்த செயல்பாடு பற்றி சிந்திக்கலாம் என்று நினைக்கிறேன். --George46 18:28, 22 ஏப்ரல் 2010 (UTC)

Software needs critical improvements, Tamil Wiki is not a test space

தொகு

அவர்களின் மென்பொருளுக்கு பரிசோதனைத் தளமாகவே தமிழ் விக்கியைப் பயன்படுத்துகிறார்கள் என்பது புலனாகிறது. இவர்களைப் பகைக்கவும் முடியாது. இது ஒரு ஆதிக்கத்தின் வெளிப்பாடு, எமது இயலாமையின் சிக்கல். --Natkeeran 23:45, 22 ஏப்ரல் 2010 (UTC)

ஆம் நற்கீரன். சிவப்பு இணைப்புகள் சிக்கல் அடுத்த வெளியீட்டில் தீர்க்கப்பட்டுவிடும் என்று தெரிவித்தனர். மற்ற சிக்கல்களை நாம் பயன்படுத்திப் பார்த்து அறிய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 05:50, 23 ஏப்ரல் 2010 (UTC)
நற்கீரன், உங்களிடம் இருந்து இது போன்ற ஒரு கருத்தை எதிர்பார்க்கவில்லை. இங்கு என்ன ஆதிக்கம், என்ன இயலாமை? தொலைநோக்குப் பயன் கருதிச் சற்றுப் பொறுமையாகச் செயல்படுகிறோம். மற்றபடி, விக்கித் திட்டம் எப்படி செயல்படுகிறது என்பது விக்கி சமூகத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதே. --ரவி 06:11, 23 ஏப்ரல் 2010 (UTC)
ரவி, நற்கீரன் பெரிய நிறுவனங்களின் ஆதிக்கத்தைப் பற்றியே குறிப்பிட்டிருக்கிறார். இது ஓரளவுக்கு உண்மைதான். மொழிபெயர்ப்பின் தரத்துக்குத் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் கூறுவது நகைப்பிற்கு உரியது. மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களுக்குக் கீழ் தான் பணிபுரிகின்றனர். அவர்கள் தான் அவர்களுக்குப் பணம் கொடுக்கின்றனர். அவர்களைத் தவிர வேறு யார் அவர்களைக் கட்டுப்படுத்த முடியும். மொழிபெயர்ப்பாளர்கள் விக்கியில் பயனர்களாகப் பதிந்து கொண்டு பிற பயனர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்றாவது ஏதும் விதி முறைகளை வகுத்திருக்கிறார்களா? எனக்குத் தெரிந்து அதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மொழிபெயர்ப்பாளர்கள் எவரும் தமது உரையாடல் பக்கங்களைப் பார்ப்பதும் இல்லை. கட்டுரைகளில் உள்ள பிழைகளைத் திருத்த முயல்வதும் இல்லை. தரத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பணம் கொடுப்பவர்கள் எடுக்காவிட்டால் வேறெவரும் எடுக்க முடியாது. விக்கிப்பீடியர்கள் தரத்தைக் கண்காணிப்பதற்குரிய வழிகளுள், கலந்துரையாடுவது, அதில் பயன் விளையாவிட்டால் கட்டுரைகளை நீக்குவது, பயனர் கணக்குகளைத் தடை செய்வது என்பன அடங்கும். கலந்துரையாடல்கள் பல மாதங்களாக நடைபெற்றுத்தான் வருகின்றன. மொழிபெயர்ப்பாளர்கள் அதில் கலந்து கொள்வதும் இல்லை. குறைகளைத் திருத்த நடவடிக்கைகள் எடுப்பதும் இல்லை. அப்படியானால், நாம் அடுத்த நடவடிக்கைகளை எடுப்பதை கூகிள் நிறுவனத்தினர் ஏற்றுக்கொள்வார்களா? ரவி, சுந்தர், நீங்கள் உங்கள் வேலைகளையும் விட்டுவிட்டு அவர்களுடன் தொடர்பு கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க முயலுகிறீர்கள். இதற்காக விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவரும் உங்களுக்கு நன்றியுடையவர்கள். ஆனால், கூகிள் நிறுவனத்தினர் உண்மையான பிரச்சினைகளைத் தட்டிக் கழிப்பதன்மூலம் எல்லோருடைய நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.மயூரநாதன் 07:42, 23 ஏப்ரல் 2010 (UTC)
எந்த பயனரும் மற்றவர்களுடன் உரையாட வேன்டும் என்ற கட்டுப்பாடு விக்கியில் இல்லை. நீங்களே சொல்லுங்கள் விக்கியில் எதாவது ஒரு நியதி 'பயனர்கள் மற்றவர்களுடன் இந்த அளவு உரையாடியே தீர வேண்டும். இல்லாவிட்டால் அவரை தடுக்க வேண்டும்' என எங்கேயாவது இருக்கின்றதா? விக்கியில் அடிப்படை செயல் முறையே யாவரும் விக்கி பாணியில் எழுதலாம், மற்றவர்கள் தேவை என கருதினால் அதை திருத்தலாம் என்பதுதானே. அதற்க்கு மேல் உங்கள் விருப்பு வெறுப்புகளை மற்றவர்கள் மீது திணிக்க முடியாது. யாரும் உங்களுடன் பேச கடமைப்பட்டவர் அல்லர். நீங்களும் ஒரு பயனரைப் பார்த்து எனக்கு பதில் கூரித்தான் ஆக வேண்டும் என கட்டாயம் செய்ய முடியாது.--217.169.51.254 08:54, 23 ஏப்ரல் 2010 (UTC)
பெயர் வெளியிடாத பயனர் அவர்களே, நீங்கள் விடாப்பிடியாக எல்லாக் கருத்துக்களுக்கும் பதில் எழுதிக்கொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சி. ஆனால் நீங்கள் பதில் எழுதும்போது மற்றவர்கள் எழுதுவதை நன்றாகப் புரிந்துகொண்டு பதில் எழுதுவது நல்லது. பயனர்கள் மற்றவர்களுடன் கலந்துரையாடாவிட்டால் குற்றம் என்று எவரும் கூறவில்லை. ஆனால், கலந்துரையாடல் மூலம் கட்டுரைகளில் உள்ள குறைகளை நீக்கிக் கொள்ளலாம். இதனால் புதிய கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் பிழைகள் ஏற்பட வாய்ப்பில்லை. அவ்வாறு செய்யாமல் தொடர்ந்தும் பிழைகளாகவே விதைத்துக் கொண்டிருந்தால் கட்டுரைகளை நீக்குவதும், பயனர் கணக்குகளைத் தடைசெய்வதும் விக்கிப்பீடியாவின் வழமையான நடைமுறைகள் தான். பயனர்கள் பிழையில்லாமல் கட்டுரைகளை எழுதுவார்களானால் அவர்கள் மற்றவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாமலே எழுதலாம். அதனால் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. ஆனால், பிழைகள் மலிய எழுதிக்கொண்டு, யாருடனும் பேசமாட்டோம் என்பது ஏற்புடைய வழிமுறை அல்ல. அப்படியான கட்டுரைகளை மற்றப் பயனர்கள் திருத்தவேண்டும் என்பது கட்டாயம் அல்ல. திருத்தமுடியாத கட்டுரைகளை நீக்கிவிடுவதும் சரியான வழிமுறைதான். நீங்களும் கூகிள் மொழிபெயர்ப்பாளராக இருந்தால் தயவுசெய்து உங்கள் கட்டுரைகளில் உள்ள பிழைகளைத் திருத்துங்கள். அதை விட்டுவிட்டு மற்றவர்கள் திருத்தவேண்டும் என்று விதண்டாவாதம் செய்தாதீர்கள். பணம் பெற்றுக்கொண்டு வேலை செய்பவர்கள் தமது வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும். தமது பிழைகளை மற்றவர்கள் மீது சுமத்தக்கூடாது. தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைப் பேணுவதில் பயனர்கள் அனைவருக்கும் பங்குண்டு. எனவே ஒரு சிலர் தமது வருமானத்துக்காக விக்கிப்பீடியாவின் தரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்தால் அதைத் தடுப்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. மயூரநாதன் 12:57, 23 ஏப்ரல் 2010 (UTC)

என்னுடைய முழுமையான கருத்துக்களுக்கு இப் பக்கத்தில் மேலேயுள்ள "கூகுள் கட்டுரைகள் நிறுத்த வேண்டும்" என்னும் தலைப்பின் கீழ் உள்ள எனது கருத்துக்களைப் பார்க்கவும். மயூரநாதன் 08:04, 23 ஏப்ரல் 2010 (UTC)

மயூரநாதனின் புரிதல் சரி. நாம் எமது உண்மையான நிலையையே கூறுகிறேன். மேலும் விபரிக்க இது இடமல்ல. --Natkeeran 00:08, 24 ஏப்ரல் 2010 (UTC)
நற்கீரன், நீங்கள் பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் பற்றித் தான் தெரிவித்தீர்கள் என்று அறிவேன். பல சூழல்களிலும் தமிழர் இத்தகைய ஆதிக்கத்துக்கு உள்ளாகியுள்ளது உண்மை. எனினும், விக்கியில் சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறி எதுவும் இல்லை என்பதையே சுட்டிக் காட்டினேன். நன்றி--ரவி 03:59, 24 ஏப்ரல் 2010 (UTC)

கார்த்திக்

தொகு

ஒரு நிறுவனத்தின் நலனுக்காக பல நபர்களின் பல வருட உழைப்பை கேள்விக்குறியாக்குவதை தொடர்ந்து போய்க்கொண்டு இருக்கிறோம். சரி தற்போதைக்கு அவர்கள் ஏற்கனைவே எழுதியுள்ள கட்டுரைகளை சீர்செய்து (எழுத்து பிழை, வாக்கிய அமைப்பு, சிகப்பு இணைப்பு, தேவையற்ற இணைப்புகள்) பின் புதிய கட்டுரை தொடங்குவதை அனுமதிக்கலாம். நம்முடைய பொறுமை எல்லை கடந்து போய்கொண்டு இருப்பதாக எனக்கு ஒரு உணர்வு. கூகிள் மொழிபெயர்பாளர்கள் மூலம் மொழி பெயர்ர்த்த கட்டுரைகள் பலவற்றை படித்த பின்பே நான் இத்தகைய முடிவிற்கு வந்தேன், மற்றபடி எனக்கு இத்திட்டத்தின் மீதும் வெறுப்பேதும் இல்லை. ஒரு கட்டுரையை எடுத்து அவர்கள் செம்மைப்டுத்து காட்டட்டும் அப்பொது தெரியும் இதில் உள்ள வேலை பளு எத்தகையது என்று. மேலும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாத (மறறும் விக்கி பணி ஏதும் செய்யாமல்) வெறுமனே வாதம் செய்பவர்களுக்கு பதில் அளிக்க எனக்கு விருப்பமில்லை.--கார்த்திக் 08:44, 23 ஏப்ரல் 2010 (UTC)

எந்த கட்டுரையிலும் தவறுகள் வர வாய்ப்புள்ளன. பல தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் பல தவறுகளை கன்டுபிடிக்கலாம். எ.கா. "சான் அன்றியாஸ் குறை" என்ற ஒரு பத்தி கட்டுரை. அதின் தலைப்பே தவறு. "சான் அன்றியாஸ் பிளவு" என்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் ஃபால்ட் என்பது இவ்விடத்தில் பிளவு ஆகும், குறை இல்லை. அதனால் சில தவறுகலைப் பார்த்தால் யாரும் உடனே திருத்தலாம். மேலும், ஒருவர் பேச்சில் ஈடுபடுவதில்லை என்றால், திருத்தங்களைப் பார்த்து கற்றுக்கொள்ளவில்லை என பொருளில்லை. --217.169.51.254 09:43, 23 ஏப்ரல் 2010 (UTC)--217.169.51.254 09:43, 23 ஏப்ரல் 2010 (UTC)
இந்தத் தவறை நீங்களே ஒரு விக்கிப் பயனராக இருந்து திருத்தி இருக்கலாம். பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. தவறு திருத்தப்பட்டுள்ளது. உங்கள் பங்களிப்புக்கு நன்றி.--Kanags \உரையாடுக 10:23, 23 ஏப்ரல் 2010 (UTC)

கூகுள் உரையாடல் - கூடுதல் விவரங்கள்

தொகு

வணக்கம்.

இத்திட்டத்தில் உள்ள முட்டுக்கட்டைகளைப் புரிந்து கொள்ள சற்று விரிவாக எழுத வேண்டி இருக்கிறது.

இத்திட்டம் ஆகத்து-செப்டம்பர் 2009 முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை, ஏறத்தாழ எட்டு மாதங்கள்.

இத்திட்டத்தைக் கூகுள் தான் செய்து வருகிறது என்று பெப்ரவரி 2010ல் தான் "கண்டுபிடித்தோம்". அதுவரை கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் எந்த விதமான பேச்சுப் பக்கக் கலந்துரையாடல், கூட்டு முயற்சியிலும் ஈடுபடவில்லை. வேறு சில இந்திய மொழி விக்கிப்பீடியா திட்டங்களிலும் இதுவே நிலை.

இதற்குப் பிறகு கூகுளுடன் நடந்த மடல் உரையாடல்களின் விளைவாக என்னென்ன கட்டுரைகளை எழுதலாம் என்று நம்மிடம் ஆலோசனை கேட்கத் தொடங்கினார்கள். நமக்கு வேண்டிய கட்டுரைகள் என்று நாம் கொடுத்த பட்டியல்களில் இருந்து ஏதும் மொழிபெயர்க்கத் தொடங்கி உள்ளதாகத் தெரியவில்லை. கூகுள் திட்ட ஒருங்கிணைப்பு குறித்த உரையாடல்களைக் காணலாம்.

மார்ச்சு 25, 2010ல் முதன்முதலாக கூகுள் திட்டப் பணியாளர்களுடன் தொலைப்பேசியில் உரையாடினோம். இது ஓரளவு சுமுகமான, நம்பிக்கை அளிக்கும் சந்திப்பாகவே இருந்தது. சிகப்பு இணைப்புப் பிரச்சினை போன்ற கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறித்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்கள். மொழிபெயர்ப்புத் தரம் குறித்த நமது கவலைகளையும் குறித்துக் கொண்டார்கள்.

மொழிபெயர்ப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை வழிகாட்டல்களையும் அனுப்பி வைத்தோம். இந்த சந்திப்பின் விளைவாக சாந்தகுமார் போன்ற கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் பேச்சுப் பக்க உரையாடல்களில் கலந்து கொண்டு நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்கள். எனினும் குறிப்பிட்ட பேச்சுப் பக்கக் கட்டுரையில் உள்ள பிழைகளில் சிலவற்றை மட்டும் களைந்தார்களே ஒழிய அதே போல பல நூறு பக்கங்களிலும் உள்ள பிழைகளைக் களைய முனையவில்லை.

இந்நிலையில், ஏற்கனவே இருக்கிற கட்டுரைகளைச் சீர்திருத்தி விட்டுப் பிறகு புதிய கட்டுரைகளைச் சேர்ப்பது தர மேலாண்மைக்கு உகந்ததாக இருக்கும் என்ற பொதுக் கருத்தின் அடிப்படையில் நேற்றைய தொலைப்பேசி உரையாடலில் கலந்து கொண்டோம்.

நாம் சந்திக்கும் பிரச்சினைகள் இரண்டு:

1. கட்டுரைகளைச் சீராக்கி விக்கியாக்கம் செய்யும் பணி

இதில் கூகுளின் நிலைப்பாடு என்னவென்றால், பயனர்கள் எப்படி கட்டுரை அளித்தாலும் அதனைச் சீர் செய்வது விக்கி சமூகத்தின் பணி அல்லவா என்கிறார்கள். ஒரே விதமான பிழைகளைத் திரும்பத் திரும்ப நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் சுட்டிக்காட்டுவதோ சரி செய்வதோ சாத்தியமற்றது என்று எடுத்துக் கூறினோம்.

2. மொழிபெயர்ப்புத் தரம்

கூகுளின் ஒரே ஒரு தமிழ் மொழியியலாளர் தவிர மற்ற அனைவரும் தமிழ் அறியாதவர்கள். கூகுளின் தமிழ் மொழியியலாளரும் மொழிபெயர்ப்புத் தரம் குறித்து நமது கவலையை ஏற்றுக் கொள்ளவில்லை. தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள் செய்வது சரியாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், விக்கி-கூகுள் இருவருக்கும் பொதுவான ஒருவரை நியமித்து மொழிபெயர்ப்புத் தரத்தை உறுதிப்படுத்தலாமா என்று கேட்டார்கள். விக்கியின் முடிவே இறுதியானது என்று அந்த ஆலோசனையை நிராகரித்தோம். விக்கிப்பீடியர் தர ஒப்புதல் தரும் கட்டுரைகளுக்கு மட்டும் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பணம் தரலாமா என்றார்கள். இது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதால் ஒப்புக்கொள்ளவில்லை.

கூகுளின் நோக்கம் இந்திய மொழிகளில் இணைய உள்ளடக்கத்தைக் கூட்டுவதே என்றார்கள். "அப்படி என்றால் ஏன் கூகுள் கருவி கொண்டு செய்ய வேண்டும், சும்மாவே செய்யலாமே?" என்று வினவிய போது, "கூகுள் கருவியால் மொழிபெயர்ப்பு செயல் திறன் 50% கூடும்" என்றார்கள். செயல் திறன் எப்படிக் கூடும் என்றால், "அது நிறுவன இரகசியம்" என்கிறார்கள் !! மொழிபெயர்ப்புக் குறைகளுக்கு கருவி பொறுப்பாகாது என்றும், அது குறித்த உரையாடல்களை மொழிபெயர்ப்பாளர்களுடனே மேற்கொள்ள வேண்டும் என்றார்கள்.

விக்கிப்பீடியாவோ ஒரு கூட்டு முயற்சித் திட்டமோ எப்படி இயங்குகிறது என்ற புரிதல் கூகுளுக்கு இல்லை. அப்படியே ஏதாவது அரைகுறையாகப் புரிந்தாலும், அதனைத் தங்களுக்குச் சாதகமாகவே சுட்டுகிறார்கள் (கட்டுரை அரை குறையாக இருந்தாலும் சமூகம் தானே திருத்த வேண்டும் என்பது போல..)

இதுவரை 1000+ தமிழ்க் கட்டுரைகள் இத்திட்டத்தில் எழுதி உள்ளதாகவும், இத்திட்டத்தை நிறுத்துவதால் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தான் இழப்பு என்பது போன்ற எகத்தாளமான தொனியும் இருந்தது..

உண்மையில் நேற்றைய சந்திப்பை அடுத்து நானும் சுந்தரும் முற்றிலும் நம்பிக்கை இழந்து விரக்தி நிலையிலேயே இருக்கிறோம். மீண்டும் அவர்களுடன் உரையாடிப் பார்ப்பதில் பொருள் இல்லை என்று நினைக்கிறோம். பொருள் இல்லை என்பதுடன் தேவையும் இல்லை. இப்படி ஒரு தொகுதியான பங்களிப்பாளர்களுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளருடன் பேசிக் கொண்டிருப்பது தவறான முற்காட்டாகும். இதையே சாக்காகச் சுட்டி நாளை யாகூவோ மைக்ரோசாப்டோ தங்கள் சோதனையை இங்கு மேற்கொள்ள மாட்டார்களா? இல்லை, சில தமிழர் குழுக்களோ அரசுகளோ இப்படி தன்னிச்சையாக செயல்பட்டால் எப்படி எதிர்கொள்வது?

கோபி சொன்னது போல் ஒவ்வொரு கட்டுரை வாரியாகவோ அல்லது வழமை போல் பயனர் - பயனர் ஊடாட்டம் மூலமாகவோ இதனை அணுகுவது தான் சரியாக இருக்கும்.

இந்த விசயம் குறித்து இந்திய விக்கிமீடியா ஆர்வலர்களும், உலகளாவிய விக்கிமீடியா நிறுவனமும் அறிந்தே இருக்கிறது. இது குறித்து முடிவெடுக்க வேண்டியது அந்தந்த உள்ளூர் விக்கிப்பீடியாக்களே என்பதே அனைவரின் ஆலோசனையுமாக இருக்கிறது.

நடுநிலையாகவும் வளர்முகமாகவும் கருத்து சொல்வது மிக எளிது. ஆனால், இது எவ்வளவு சிரமமான, தேவையற்ற பணி என்பதை ஒரு கட்டுரையையாவது உரை திருத்திப் பார்ப்பவர்கள் அறிவார்கள்.

தமிழ் விக்கியின் தொடக்கம் முதலே துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வரும் முறையில் பின்வரும் வழிமுறையைப் பரிந்துரைக்கிறேன்.

1. இருக்கிற எல்லா கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கும் வார்ப்புரு இடுவது. மயூரநாதன் அறிவுறுத்தியபடி இவ்வார்ப்புருவின் தீவிரத்தை, உள்ளடக்கத்தை மாற்றிக் கொள்ளலாம்.

2. இத்திட்டத்தில் பங்களிப்பவர்களின் பேச்சுப் பக்கங்களில் மூன்று கட்டமாக வேண்டுகோள்கள் (26 ஏப்ரல், 3 மே, 10 மே) விடுப்பது. இந்த விதமான வேண்டுகோள்களில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைத் தெளிவாக, நட்புணர்வுடன் அறிவுறுத்துவது. மேற்கண்ட வேண்டுகோள்களை ஏற்று பழைய கட்டுரைகளைத் திருத்த முனைபவர்களுக்குக் கூடுதல் காலம் அளிக்கலாம். இக்கூடுதல் காலத்திலும், புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்டு பழைய கட்டுரைகளைச் செப்பமிடச் சொல்லலாம்.

3. மேற்கண்ட வேண்டுகோள்களுக்கு எந்த வித பதிலும் அளிக்காமல் இருப்பவர்கள் புதிய கட்டுரைகள் எழுதுவதை மட்டும் தடை செய்யலாம். (இதை நுட்ப முறையில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை).

அறியாமல் பிழை விடும் தனிப்பட்ட பயனர்களை அரவணைத்துச் செயல்படுவது வேறு. குறைபாடுள்ள திட்டத்தைச் சீர் செய்யாமல் பிழைகளைப் பெருக்கிக் கொண்டே போவது வேறு.

எந்த ஒரு நிறுவனத்திலும் திட்டமிடல் காரணமாகவோ வடிவமைப்பு காரணமாகவோ உற்பத்தியில் பிழை வருகிறது என்றால் முதலில் உற்பத்தியை நிறுத்தி விட்டு பிழையைக் களைவதே வழக்கம். அவ்வப்போது, ஒவ்வொரு அடியிலும் தரத்தைக் கண்காணிக்காவிட்டால் பிறகு ஒட்டுமொத்தமாகச் சீர் செய்ய பெரிய அளவு வளங்களை வீணாக்க வேண்டி வரும். இது தர மேலாண்மையின் அடிப்படைப் பாடம். தொலைநோக்குப் பயன் கருதி, சில வேளைகளில் சில கடுமையான முடிவுகளை எடுக்கத் தான் வேண்டும்.

தாங்கள் விட்ட பிழையைத் திருத்துவதில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்றால் மேலும் மேலும் புதிய பிழைகளையாவது உருவாக்காமல் இருப்பது தான் அறம்.

பி.கு:

இம்மடலை எழுதி முடிக்கும் வேளையில் கூகுளிடம் இருந்து பின்வருமாறு மடல் வந்துள்ளது. எனினும், நான் மேலே எழுதியுள்ள வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். கூகுளிடம் பேசிக் கொண்டிருப்பதில் இருந்து நேரடியாகப் பயனர்-பயனர் ஊடாட்ட முறைக்குத் திரும்ப வேண்டும்:

  • Each translator will re-review his translated article at the time of publishing ensuring the translation is not literal, there are no punctuation or grammatical mistakes and its more localized.
  • At the time of publishing they will delete [[ ]] brackets for the bad internal links.
  • Each translator will watch for feedback from wikipedia and incorporate/respond to wikipedia for exisitng articles and adopt the agreed style for future translations (BTW this was already implemented after our previous meeting)
  • Of course as discussed in our previous meetings, all our translators have watch lists for their translated articles.

We have requested our translators to review all articles uploaded in April.

With respect to the internal links issue - as stated earlier, it is part of the bugs fix list for this quarter.--ரவி 12:45, 23 ஏப்ரல் 2010 (UTC)

எப்படிக் கட்டுரைகளை அளித்தாலும் அதைச் சீர் செய்வது விக்கிப்பீடியர்களின் பணி அல்ல. திருந்த முடிவதை நாம் திருத்தித் தான் வருகிறோம். அதுவும் பயனுள்ள கட்டுரைகளானால், நேரத்தைப் பாராது நானும் திருத்தியிருக்கிறேன். ஆனால் நமக்கு அதிகம் பயனில்லாத தலைப்புக்களில் பிழைகள் மலிந்த கட்டுரைகளை எல்லாம் விக்கிப்பீடியர்கள் திருத்தி அவர்களது நேரத்தைச் செலவு செய்யவேண்டும் என்பது தலைவிதி அல்ல. அவர்கள் பணம்கொடுத்துப் பிழையான கட்டுரைகளைப் பதிவேற்ற பிற பயனர்கள் இரண்டு மடங்கு நேரம் செலவு செய்து அவற்றைச் சரிசெய்யவேண்டும் எனக் கூகிள் ஏதிர்பார்க்க முடியாது. தரத்தைப் பேணுவதற்காக அவற்றை நீக்கி விடுவதும் சரியான வழிமுறைதான்.
1000 கட்டுரைகளாக இருக்கட்டும் அல்லது 100,000 ஆகக் கூட இருந்தாலும் பிழைகள் மலிந்த கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உதவாது. எனவே இந்த மாதிரியான மிரட்டல்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கூகிள் உதவி செய்துதான் தமிழ் விக்கிப்பீடியா வளரவேண்டும் என்றில்லை. உடனடியாக இல்லாவிட்டாலும் விரைவிலேயே தமிழ் மக்கள் தமிழ் விக்கிப்பீடியாவைத் தரமுள்ள கலைக்களஞ்சியமாக ஆக்கிக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதுவரை, அதைச் சீரழிக்க விடாது உறுதியாக நின்று நாம் பாதுகாக்கவேண்டும்.
மயூரநாதன் 13:22, 23 ஏப்ரல் 2010 (UTC)
கூகிள் சொல்வது சரியாகத்தான் உள்ளது, விக்கி முறைகளை பின்பற்றிதான் மொழியாக்கங்கள் செய்யப்பட்டுள்ளன, ஏனெனில் அவை ஆங்கில கட்டுரைகளை நேரடியாக மொழி பெயர்க்கிறன. சிவப்பு இணப்புகள் தொந்தரவுதான், அதை ஓரளவு, முடியுமளவு சரிகட்ட வேண்டும். சில இடங்களைத் தவிர மொழி பெயர்ப்பாளர்களின் திறனும், தரமும் நன்றாகத்தான் உள்ளன. தமிழ்விக்கி கூகுளுக்கு செவிசாய்த்து , உதவி செய்து இன்னும் ஆயிரக்கனக்கான கட்டுரைகளை வெளியிட வேண்டும். இல்லையேல் , இதர இந்திய மொழிகள் தமிழ் விக்கியை எங்கேயோ பின்னால் விட்டுச் சென்று விடும். இனையத் தமிழ் வளரவேண்டும் என்றால், தமிழ் விக்கி கூகிள் முயற்ச்சிகளுக்கு முட்டுக் கட்டை போடக் கூடாது.--217.169.51.254 14:09, 23 ஏப்ரல் 2010 (UTC)
பிற இந்திய மொழி விக்கிகள் தமிழைப் பின்னால் விட்டுச் சென்றுவிடும் என்பதற்காகத் தமிழ் விக்கிப்பீடியாவைக் குப்பைக் குவியல் ஆக்க முடியாது. அடையாளம் காட்டாத பயனரே, கூகிள் நிறுவனத்துக்கும், அதன் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மிண்டு கொடுக்கும் நீங்கள், விக்கிப்பீடியர்களுக்கு உபதேசம் பண்ணுவதைக் குறைத்துக்கொண்டு, கூகிள் நிறுவனமே குறிப்பிட்டிருப்பதுபோல், விக்கிப்பீடியர்களின் கருத்துக்களைக் கவனித்து கட்டுரைகளைப் பிழையின்றி எழுதுவதற்கும், எழுதிய கட்டுரைகளை மீண்டும் பார்த்துச் சரி செய்யவும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மயூரநாதன் 20:43, 23 ஏப்ரல் 2010 (UTC)


217.169.51.254 நண்பரே!

விக்கிப்பீடியா குறித்தும், தமிழ் விக்கிப்பீடியா குறித்தும் தாங்கள் முழுமையாகத் தெரிந்திருக்கிறீர்கள் என்பது தங்கள் செயல்பாட்டிலிருந்து தெரிகிறது. விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடி பகுதியில் வரும் அனைத்துக் கருத்துக்களுக்கும் கூகுள் நிறுவனத்தின் சார்பில்(?) பதிலளித்து வருகிறீர்கள். ஆனால் தங்களை அடையாளப்படுத்த மட்டும் முன்வரத் தயங்குகிறீர்கள். இணையத் தமிழ் வளர வேண்டும், இன்னும் பல கட்டுரைகள் வர வேண்டும் என்பதும்தான் எங்கள் விருப்பமும். ஆனால் கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் சொல்லப்படும் குறைகளை நீக்க முயற்சிக்கிறோம் என்கிற பதில் இல்லாமல் குறைகளை நியாயப்படுத்துவதாகவே பதிலளித்து வருகிறீர்கள். இது இணையத் தமிழை மட்டுமில்லை, கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டத்திற்கும் பின்னடைவையே ஏற்படுத்தும். கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை உற்று நோக்குங்கள்... சற்று சிந்தியுங்கள்... --Theni.M.Subramani 15:07, 23 ஏப்ரல் 2010 (UTC)

சொல்வதும் செய்வதும்

தொகு

கூகிள் நன்றாக சொல்கிறது. ஆனால் அதை ஓரளவாவது செய்கிறார்களா என்று மதிப்பிட வேண்டும். தலைப்பு தெரிவு பரிந்துரைத்தோம். அதைக் கணக்கில் எடுக்க வில்லை என்றே தெரிகிறது. தலைப்பைத் தமிழில் இட வேண்டும், தமிழ்க் கலைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும், இல்லாத வார்ப்புருக்கள், படக் குறிப்புகளை நீக்க வேண்டும், இணைப்புக்களைச் சரி செய்ய வேண்டும் எனக் கேட்டுப் பாக்கலாம். எவ்வளவு ஒத்துழைக்கிறார்கள் என்று பாப்பம். --Natkeeran 00:11, 24 ஏப்ரல் 2010 (UTC)

ரவியின் கருத்துக்களுடன் பெரிதும் உடன்படுகிறேன். இப்போதைக்கு அவர்கள் கடைசியாக அனுப்பியுள்ள மடலை ஒட்டி நன்னயம் கருதுவோம். இதுபோன்ற திட்டமிட்ட கட்டுரையாக்கத்துக்கான முறைமையை வகுக்க வேணடும். அதைத் தெளிவாக கடைப்பிடிப்போம். இதில் நுட்பம், கொள்கை தவிர செயல்பாட்டளவில் சில சிக்கல்கள் வந்துள்ளன. இப்போதைக்கு கடைசியாக சில கிழமைகள் பொறுமையாக வளர்முகமாக கண்காணித்துத் தேவையான உதவிகளைச் செய்வோம். பொனோபோ போன்ற சிறந்து மொழிபெயர்ப்புகளை எடுத்துக் காட்டுவோம். அத்துடன் முறை வகுக்கத் தொடங்கலாம்.
பணம் செலவழித்து முறையான மொழிபெயர்ப்பாளர்கள் விக்கி முறையுடன் இசைந்து ஒரு நூறு சிறப்புக் கட்டுரைகளை ஆங்கில விக்கியிலிருந்து மொழிபெயர்த்தால் நன்றாகத்தான் இருக்கும். அல்லது ஒரு ஆயிரம் கட்டுரைகளின் சுருக்கத்தை எழுதினாலும் நன்றாகத்தான் இருக்கும். அப்படியெல்லாம் வாய்ப்பு இருக்கும் என்று கருதியே தொடக்கத்தில் வங்காள விக்கியில் உள்ள எதிர்ப்பை அறிந்தும் நம் பயனர்களின் கருத்தைப் பெற்று கூகுளுடன் ஒத்துழைத்தோம். கடைசியாக சில கிழமைகள் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது. மென்பொருள் தொடர்பிலும் மொழிபெயர்ப்பு தொடர்பிலும் உள்ள குறைகளை ஒரே இடத்தில் பட்டியலிட்டு முன்னுரிமை வரிசையில் ஆவணப்படுத்துவோம். அதன்பின் மேல்நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கருதுகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:01, 24 ஏப்ரல் 2010 (UTC)

பங்களிப்பு இல்லா பயனர்களின் கருத்துகளைப் புறக்கணிக்கவும்

தொகு

அடையாளம் காட்டாமல் அறிவுரை சொல்லி அலைக்கழிக்கும் பயனருக்குப் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நேரம் வீணாவதுடன் நமது உரையாடல்கள் ஒரு குவியத்துக்கு வராமல் கவனம் சிதறுவதில் தான் முடியும். வழமையான விக்கிப் பணிகளில் கவனம் செலுத்துவோம். நன்றி--ரவி 15:32, 23 ஏப்ரல் 2010 (UTC)

பயனர் ரவி, உங்கள் சுட்டி ட்ரால் என்பவர் யார் என்றுதான் சொல்கிறது, உங்களுடன் ஒத்துக்கொள்ளாததை ட்ரால் என தள்ளுவது நல்ல மொழிப் பிரயோகத்திற்க்கு புறம்பாகும். நீங்கள் முதலில் அந்த சுட்டியை படியுங்கள். "Trolling is any deliberate and intentional attempt to disrupt the usability of Wikipedia for its editors, administrators, developers, and other peopl". முதலில் ட்ரால் என்ன பொருளறிந்து எழுதுங்கள். இந்த அடிப்படை ஆங்கில வார்த்தையை துஷ்பிரயோகம் செய்வது விக்கி நிர்வாகத்திற்க்கு உகந்ததல்ல--217.169.51.254 16:05, 23 ஏப்ரல் 2010 (UTC)
மேலும் யார் ட்ரால் என உங்கள் புரிதலுக்கு இதையும் கொடுக்கிறேன்

Ignorance is not trolling. Genuine dissent is not trolling. Biased editing, even if defended aggressively, is in itself not trolling. By themselves, misguided nominations, votes, and proposed policy are not trolling.

அடையாளம் காட்டாமல் இருப்பது, பங்களிப்பின் அளவு போன்றவை ட்ராலில் அடங்கா. ஒரு பக்கம் பெரிய, பெரிய 250K கட்டுரை எழுதுபவர்களையை சரியான ஆதாரமில்லாமல் விமர்சிக்கின்றீர்கள் ,வெளியே தள்ளப் பார்க்கின்றீர்கள். . அதுதான் பங்களிப்பார்களை பேணுவதா??--217.169.51.254 16:26, 23 ஏப்ரல் 2010 (UTC)

அடையாளம் காட்டாத பயனரே, உங்களுக்கு எப்படித்தான் விளங்க வைப்பது? 250K கட்டுரை எழுதினால் மட்டும் போதாது. அது தரமுள்ளதாக இருக்கவேண்டும். 250K கட்டுரையில் 2500 பிழைகள் இருந்தால் அதை விக்கியில் வைத்திருக்க முடியாது. இவற்றையெல்லாம் சரியாக்குவதற்கு தற்போது தமிழ் விக்கியில் போதிய வளங்கள் கிடையாது. ஏராளமான ஆள்பலம் கொண்ட ஆங்கில விக்கிப்பீடியாவிலேயே இவ்வாறான கட்டுரைகளை விட்டுவைக்க மாட்டார்கள். தரத்தைப் பேணுவதற்கு தற்சமயம் ஒரேயொரு வழிதான் எனக்குத் தெரிகிறது. அது, பிழை மலிந்த கட்டுரைகளை முற்றாக நீக்கிவிடுவது. மொழி பெயர்ப்பாளர்களோ அல்லது விதண்டாவாதம் செய்யும் அடையாளம் காட்டாத பயனரோ குறிப்பிட்ட காலத்துக்குள் திருத்த விரும்பினால் திருத்தலாம். அல்லது முன் குறிப்பிட்ட கட்டுரைகளை நீக்குவதைத் தவிரச் சரியான வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. திரும்பத்திரும்ப விதண்டாவாதத்தில் ஈடுபடாமல், முடியுமானால் பிழைமலிந்த கட்டுரைகளைத் திருத்தத் தொடங்குமாறு அடையாளம் காட்டாத பயனரைக் கேட்டுக் கொள்கிறேன். மயூரநாதன் 20:10, 23 ஏப்ரல் 2010 (UTC)

கூகுள் மொழிபெயர்ப்பின்றி விக்கி செயல்படட்டும்!

தொகு

--George46 19:25, 23 ஏப்ரல் 2010 (UTC)

விக்கியும் கூகுளும் இவ்வளவு நீண்ட காலமாக, இத்துணை விரிவாக கருத்துப் பரிமாறி வந்ததை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். கூகுள் நிறுவனத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என விக்கி செயல்படத் தேவையில்லை. விக்கியின் வளர்ச்சிக்குக் கூகுள் ஒத்துழைப்பு துணையாகலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால், இற்றைய நிலையில் தோழமையோடு கூடிய ஒத்துழைப்பு நல்க கூகுள் முன்வந்ததுபோல் தெரியவில்லை.

எனவே, மேலே ரவி பரிந்துரைத்ததை உடனடியாகச் செயலாக்குவது நல்லது என நினைக்கிறேன். அவர் கூறியது:

1. இருக்கிற எல்லா கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கும் வார்ப்புரு இடுவது. மயூரநாதன் அறிவுறுத்தியபடி இவ்வார்ப்புருவின் தீவிரத்தை, உள்ளடக்கத்தை மாற்றிக் கொள்ளலாம்.

2. இத்திட்டத்தில் பங்களிப்பவர்களின் பேச்சுப் பக்கங்களில் மூன்று கட்டமாக வேண்டுகோள்கள் (26 ஏப்ரல், 3 மே, 10 மே) விடுப்பது. இந்த விதமான வேண்டுகோள்களில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைத் தெளிவாக, நட்புணர்வுடன் அறிவுறுத்துவது. மேற்கண்ட வேண்டுகோள்களை ஏற்று பழைய கட்டுரைகளைத் திருத்த முனைபவர்களுக்குக் கூடுதல் காலம் அளிக்கலாம். இக்கூடுதல் காலத்திலும், புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திக் கொண்டு பழைய கட்டுரைகளைச் செப்பமிடச் சொல்லலாம்.

3. மேற்கண்ட வேண்டுகோள்களுக்கு எந்த வித பதிலும் அளிக்காமல் இருப்பவர்கள் புதிய கட்டுரைகள் எழுதுவதை மட்டும் தடை செய்யலாம். (இதை நுட்ப முறையில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை).

இதற்கு மேல் கூகுள் ஒத்துழைக்க முன்வந்தால் நல்ல விக்கியர்களாக "வருக" என்று சொல்லி வரவேற்போம்!

திருத்தப்பட்ட கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்

தொகு

ஏற்கனவே திருத்தப்பட்ட அல்லது விக்கித் தரத்தில் உள்ள கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் இருந்து வார்ப்புருக்களை எடுத்து விடலாமா? அண்மையில் எழுதப்பட்டுள்ள 2012, மத்திய வாரிய நடுநிலைக் கல்வி போன்ற கட்டுரைகள் சிறந்த தரத்தில் அமைந்துள்ளன.--Kanags \உரையாடுக 00:18, 24 ஏப்ரல் 2010 (UTC)

ஆமாம். இக்கட்டுரை நன்றாக உள்ளது. இவ்வாறான கட்டுரைகளில் இருந்து வார்ப்புருக்களை நீக்கிவிடலாம் என்றுதான் நினைக்கிறேன். மயூரநாதன் 02:33, 24 ஏப்ரல் 2010 (UTC)
சில கட்டுரைகள் சற்று மாறுபட்ட தரத்தில் உள்ளன. எனினும், இவற்றிலும் சிகப்பு இணைப்புகள், படங்கள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் உள்ளன. எனவே, ஒரு குறிப்புக்காக அனைத்துக் கட்டுரைகளிலும் வார்ப்புரு இருக்கட்டும். பிறகு, மொத்தமாக ஆய்வு செய்து தேவைப்படும் கட்டுரைகளில் வார்ப்புருவை நீக்கலாம்--ரவி 03:43, 24 ஏப்ரல் 2010 (UTC)
வார்ப்புரு அனைத்துக் கட்டுரைகளிலும் இப்போதைக்கு இருப்பது நல்லது என்றே எனக்குத் தோன்றுகிறது. மேலும் ஒரு கருத்து: கட்டுரைகளில் உள்ளிணைப்புகளை (உ+ம்: [[இந்தியாவில்]] --> [[இந்தியா]]வில் போன்றவை) சீர்ப்படுத்துவது மொழிபெயர்ப்புக் கருவியில் பெரிய வேலையே இல்லை போலத்தான் தெரிகிறது. 2012 கட்டுரையைப் பாருங்கள். அக்கட்டுரையில் சிவப்பு இணைப்புகள் காணப்பட்டாலும், அவை அனைத்தும் விக்கி விதிமுறைக்கு அமைய எழுதப்பட்டுள்ளதைக் கவனியுங்கள். எனவே ஏனைய மொழிபெயர்ப்புக் கட்டுரைகளில் உள்ள சிவப்பு இணைப்புத் தவறுகள் மொழிபெயர்ப்பாளர்களின் சோம்பேறிப் போக்கைக் காட்டுகிறதே ஒழிய மொழிபெயர்ப்புக் கருவியில் எவ்விதத் தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.--Kanags \உரையாடுக 06:26, 24 ஏப்ரல் 2010 (UTC)

சரி, சிறீதரன். எல்லா கட்டுரைகளிலும் வார்ப்புரு இருப்பது பிறகு ஒட்டுமொத்தமாகத் தர அளவீடு செய்ய உதவும். நல்ல கட்டுரைகளில் வார்ப்புருவை நீக்கி விட்டால் எல்லா கூகுள் கட்டுரைகளும் மோசமான தரம் போல் தோற்றம் வந்துவிடும். உண்மையிலேயே நல்ல முறையில் மொழிபெயர்க்கும் பயனர்களுக்கு இது நியாயம் இல்லை. இத்திட்டத்தின் தொடக்கம் முதலே ஒருங்கிணைப்பு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விக்கியின் தன்மை, தேவை அறியாமல் வழமையான பணி போல் மொழிபெயர்ப்பாளர்கள் பணியாற்றி இருக்கலாம். கூகுள் செய்த சொதப்பலுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் முழுப் பொறுப்பு ஆக மாட்டார்கள். நமது பின்னூட்டத்தை அடுத்து, சரியாக இணைப்பு கொடுக்கும் முறையை அறிந்து திருத்திக் கொண்டிருக்கலாம். எனவே, சோம்பல் போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டாமே? இனிமேல் அவர்களையும் வழமையான பயனர் போல் எண்ணிச் செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இயன்ற அளவு நட்புணர்வுடன் செயல்படுவோம். ஏதாவது மாற்றம் வர வேண்டுமானால், மொழிபெயர்ப்பாளர்கள் மனது வைத்தால் தான் முடியும். எனவே, அவர்களைச் சோர்வடையச் செய்யும் கருத்துகளைத் தெரிவிக்காமல் இருப்போம். இத்திட்டத்தில் கூடிய தரமும் ஒருங்கிணைப்பும் அமையும் என்று எதிர்பார்ப்போம்--ரவி 10:01, 24 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி ரவி, அந்தச் சொற்களைப் பாவித்திருக்கக் கூடாது தான். யாரையாவது அது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 12:29, 24 ஏப்ரல் 2010 (UTC)

உயிரியல் போன்ற விக்கித்திட்டத்துக்கும் தரக் கணக்கீடு எடுக்கும் நமது முந்தைய திட்டத்தைப் போல கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளின் தரத்தை மதிப்பிட்டு ஒரு அட்டவணையில் தரலாம். அவர்களுக்கும் அது பயன் தரும். இங்கு இந்த அட்டவணைப்படுத்துவதற்கான மென்பொருளும் தரப்பட்டுள்ளது. பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 14:47, 24 ஏப்ரல் 2010 (UTC)

ஆம், சுந்தர். இத்தகைய முறையான மதிப்பீடு மிகவும் தேவை. இதனைச் செயற்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிவியுங்கள். இப்போது இடுகிற வார்ப்புருவும் அதனால் வரும் பகுப்பும் உதவுமா?--ரவி 15:56, 24 ஏப்ரல் 2010 (UTC)
அது முதல் கட்டம். இரண்டாம் கட்டமாக நாம் பகுப்பிலுள்ள ஒவ்வொரு கட்டுரைக்கும் சென்று மதிப்பீடு=1/2/3/4/5 என்பது போல ஒரு தகவலை அவ்வார்ப்புருவில் சேர்க்கலாம். ஏற்கனவே பேச்சுப் பக்கத்தில் இடத்தக்க இத்தகைய வார்ப்புரு ஒன்று உள்ளதால் அதையும் பயன்படுத்தலாம். அதன் பின் அட்டவணைப் படுத்தலை தன்னியக்கமாக எளிதில் செய்து விடலாம். -- சுந்தர் \பேச்சு 16:08, 24 ஏப்ரல் 2010 (UTC)

Issues with google translation in Tamil Wikipedia

தொகு

Please expand the following page: விக்கிப்பீடியா:Issues with google translation in Tamil Wikipedia. It is best to add particular articles as examples to each mentioned problem. --Natkeeran 00:37, 24 ஏப்ரல் 2010 (UTC)

கட்டுரை எண்ணிக்கை

தொகு

இப்போதைய கட்டுரை எண்ணிக்கை 22,222. :) -- சுந்தர் \பேச்சு 15:46, 25 ஏப்ரல் 2010 (UTC)

ஆம் அருமையான ஓர் எண்ணிக்க்கை! நாம் எப்பொழுது 11,111 இல் இருந்தோம் ? அடுத்து 33,333 ஐ எப்பொழுது அடைவோம்? விரைவில் என நம்புகின்றேன். இன்னொரு நற்செய்தி. தமிழ் விக்கிப்பீடியாவின் மொத்த பை'ட் அளவு, உலக மொழிகள் வரிசையில் இப்பொழுது 25 ஆவது நிலையில் உள்ளது! இது உண்மையிலேயே மகிழ்ச்சியும் ஊட்டமும் தரும் செய்தி. நாம் முதல் 10-12 மொழிகளில் ஒன்றாக எல்லா தர அளவீடுகளிலும் முன்னேறும் வாய்ப்பு உள்ளது. விக்சனரியிலும் நாம் முதல் 5 மொழிகளில் ஒன்றாக வளர்ச்சியுறுவது கட்டாயம் இயலும். தமிழ் விக்சனரியில் இப்பொழுது நாம் எண்ணிக்கையில் 15 ஆவதாகவும், பை'ட் அளவில் 11 ஆவதாகவும் இருக்கின்றோம். தரம் தாழாமல் நாம் முன்னேற, விடாது உழைத்தல் வேண்டும். --செல்வா 05:21, 26 ஏப்ரல் 2010 (UTC)
கூகிள் மொழிபெயர்ப்பு கட்டுரைகளினால் இது ஓரளவு ஏற்ப்பட்டது என்பதை மறக்காதீர்கள்--217.169.51.254 09:30, 26 ஏப்ரல் 2010 (UTC)
மறக்கவில்லை அன்பரே, ~4 விழுக்காடு. ஆனால், கட்டுரை எண்ணிக்கையைக் கொண்டாடினாலும் அதை மட்டும் கருத்தில் கொண்டு நாம் இயங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். -- சுந்தர் \பேச்சு 09:56, 26 ஏப்ரல் 2010 (UTC)
ஆம், செல்வா, கட்டாயம் செய்வோம். -- சுந்தர் \பேச்சு 09:56, 26 ஏப்ரல் 2010 (UTC)

Tamil Language Learning Gets Boost In Singapore

தொகு

Tamil Language Learning Gets Boost In Singapore −முன்நிற்கும் கருத்து 70.50.247.117 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பயனர் 70.50.247.117 அவர்களே, மிக்க நன்றி!--செல்வா 05:32, 26 ஏப்ரல் 2010 (UTC)

பெயர் அறிவிக்காத பயனர் 217.169.51.254 தரும் இடையூறுகள்

தொகு

மேலே சுட்டப்பட்ட பயனர் வேண்டுமென்றே இடையூறு தரும் முகமாகவே பல இடங்களில் பலவும் எழுதுகின்றார் என்பதாகவே நான் உணருகின்றேன். கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கு இடும் அறிவிப்புப் பட்டியின் கருத்தையும் தேவையையும் அவர் உணரவில்லை. கூகுள் மொழிபெயர்ப்பை நான் மிகவும் வரவேற்றாலும், மொழிபெயர்ப்பாளர்களைப் பாராட்டினாலும், அம் மொழிபெயர்ப்புகளில் உள்ள குறைகளைக் களைய முற்படுவதில் உள்ள இடையூறுகளை இந்தப் பெயர்-அறிவிக்காத பயனர் சரிவர உணராமல் வேண்டுமென்றே ஒவ்வொரு கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலும் கூகுள் மொழிபெயர்ப்பு என்னும் அறிவிப்புப் பட்டி இடுவதை தவறு என்று கருத்துப் பதிவித்து வருகின்றார். அவர் ஒரு பயனர் கணக்கைத் தொடங்கினால் அவருடன் இது பற்றி உரையாடி எடுத்துக்காட்டவாவது இயலும். பெயர் அறிவிக்காத பயனராக இருந்தாலும் கட்டாயம் அவர் கருத்துகளைக் கூறவும் வளர்முகமாகப் பங்களிக்கவும் உரிமைகள் இருக்க வேண்டும் என்று நாம் நம்புகின்றேன். ஆனால் இப்படி வேண்டுமென்றே இடையூறு செய்வதாக இருந்தால் அதற்கு ஏதேனும் தடுப்பு வழிகள் இருக்க வேண்டும். கணக்கைத் தடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை, ஆனால் அவர் இடையூறு செய்வதைத் தடுக்க வழி இருக்க வேண்டும். பேச்சு:இந்தியாவில் வறுமை என்னும் பக்கத்தில் என் கருத்தைப் பதிவு செய்துள்ளேன். --செல்வா 15:17, 26 ஏப்ரல் 2010 (UTC)

இடையூறு என்றால் "தடங்கல்; முட்டுக்கட்டை". மாற்று கருத்து தெரிவிப்பது இடையூறு இல்லை. மாற்று கருத்து உங்கள் எழுத்துகளுக்கு முட்டுக்கட்டை என்றால், அது சர்வாதிகாரத் தன்மையைதான் காட்டுகிறது--217.169.51.254 15:25, 26 ஏப்ரல் 2010 (UTC)
"பெயர் அறிவிக்காத பயனராக இருந்தாலும் கட்டாயம் அவர் கருத்துகளைக் கூறவும் வளர்முகமாகப் பங்களிக்கவும் உரிமைகள் இருக்க வேண்டும் என்று நாம் நம்புகின்றேன்." - இது உங்கள் பிரத்யேக நம்பிக்கை மட்டும் அல்ல, விக்கிபீடியாவே இவ்வடிப்படையில் தான் நடக்கின்றது. பார்க்க http://en.wikipedia.org/wiki/Help:About "Wikipedia is written collaboratively by largely anonymous Internet volunteers who write without pay. Anyone with Internet access can write and make changes to Wikipedia articles (except in certain cases where editing is restricted to prevent disruption and/or vandalism). Users can contribute anonymously, under a pseudonym, or with their real identity," --217.169.51.254 15:31, 26 ஏப்ரல் 2010 (UTC)
  • அடையாளம் காட்டாத அல்லது தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத பயனர் 217.169.51.254 தனது செயலை நியாயப்படுத்தும் விதமாகவே செயல்பட்டு வருவது வருத்தமளிப்பதாகத்தான் இருக்கிறது. அவர் இப்படி செயல்படும் நேரத்தில் சற்று கூடுதலாக கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளிலுள்ள குறைகளை அல்லது பிழைகளைத் திருத்தம் செய்வதில் அக்கறை காட்டினால் கருத்து வேறுபாடுகள் குறையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பும் சிறப்பாக இருக்கும். தங்களை அடையாளம் காட்டாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாட்டில் சிறிது ஒத்துழைப்பளிக்கலாமே... --Theni.M.Subramani 15:39, 26 ஏப்ரல் 2010 (UTC)
அதே நேரத்தில் "பயனர் 217.169.51.254 தனது செயலை நியாயப்படுத்தும் விதமாகவே செயல்பட்டு வருவது" என நீங்கள் சொல்வதும் சரிதான். மாற்றுகருத்துகளை 'விதண்டாவாதம்', 'இடையூறு' என தள்ளினால், அதை நிச்சயம் ஏன் சரி என சொல்ல வேண்டும். என் கருத்துகளின் நேர்மையை சொல்வதில் நீங்கள் வருத்தம் அடைக் கூடாது.--217.169.51.254 15:52, 26 ஏப்ரல் 2010 (UTC)

பயனர் 217.169.51.254 அவர்களே ஏன் கூகுள் மொழிபெயர்ப்பு கருவி துணை கொண்டு எழுதப்படும் கட்டுரைகளில் இருந்து அவ்வார்ப்புருவை நீக்க கூடாது என இரவி தெரிவித்துள்ளார். //Internet volunteers who write without pay.// - இது சரியா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் கூகுள்காரங்க காசு கொடுப்பதாகதான் கேள்வி. பெயர் இல்லாமல் கருத்து சொல்வதில் தவறில்லை. நீங்கள் ஏன் கணக்கு ஒன்றை தொடங்கக்கூடாது? நீங்க நல்லா இருக்குன்னு சொன்ன பல கட்டுரைகளில் பெரிய தவறுகள் உள்ளன, அதை காசு வாங்கிகிட்டு தமிழ் இணைய சேவை புரிகிறவர்கள் சரி செய்வாங்கன்னு எதிர்பார்க்கலாம் தானே? --குறும்பன் 16:22, 26 ஏப்ரல் 2010 (UTC)

"volunteers who write without pay does NOT mean "Volunteers who should write without pay"--217.169.51.254 10:12, 27 ஏப்ரல் 2010 (UTC)
பயனர் 217.169.51.254 அவர்களே தங்களின் செயல்பாட்டில் நியாயமிருக்கிறது என்று கருதினால் நேரடியாகவே தமிழ் விக்கிப்பீடியாவின் பயனராக ஆலமரத்தடியில் கருத்துத் தெரிவிக்கலாம். மறைந்திருந்து செயல்படுவது உங்கள் கருத்துக்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும் சரியாகத் தெரியப் போவதில்லை. எனவே தாங்கள் முதலில் இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வாருங்கள். ஆரோக்கியமான கருத்து விவாதத்தில் பங்கு கொள்ளுங்கள். --Theni.M.Subramani 02:57, 27 ஏப்ரல் 2010 (UTC)
நான் இங்கு தேர்தல் மீடிங்கிற்க்கு வரவில்லை; அதனால் ஒரு அடையாளத்தில் வந்தாலும் வராவிட்டாலும் மற்ற பயனர்கள் இங்கு எழுதுவதை அதன் தரத்தில், பொது விக்கி ரூல்கள் மேலும் நோக்குவார்கள் என எதிர்பார்க்கப் படுகின்றது. அதனால்தான் விக்கி நியதிகளுக்கு அடையாள்ம் பொருட்டல்ல. விவாத ஆரோகியம் அடையாளத்தை பொருத்ததல்ல.--217.169.51.254 10:20, 27 ஏப்ரல் 2010 (UTC)
அடையாளம் காட்டாத 217.169.51.254 அன்பரே. இவ்வளவு பேசுறீங்களே. ஒரு கூகுள் கட்டுரையை உரை திருத்தி காட்டுகள், உங்களை தலை வணங்குகிறேன். எனக்கு உங்கள் மீதும், கூகுள் மீது யாதொரு வெறுப்பும் இல்லை. இங்கு (அடையாளத்துடன்) இருக்கும் எல்லோருடைய விருப்பமும் தமிழ் விக்கியை மேம்படுத்துவது மட்டும் தான்! தவியை தமிழ் நாட்டின் பள்ளி சிறுவர்கள் முதல் அமெரிக்க பல்கலையில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் வரை பலதரபட்டவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் முதன் முதலில் தவியை பார்க்கிறப்போது ஒரு கூகுள் கட்டுரையை படித்தால் அவருக்கு தவியை பற்றி என்ன வகையான எண்ணம் வரும் என்று யோசித்து பாருங்கள். அவர் மீண்டும் இந்த தளத்தை பார்ப்பார் என்று நினைப்பீர்களா? இங்கு உரையாடு அனைவருக்கும் தவியின் தரத்தை மேல் கொண்டுவருவதில்தான் குறிக்கோள்; எண்ணிக்கைகள் அல்ல! ஆம் கூகுள் மொழி பெயர்ப்பை அனுமதித்தோம் (பல்வேறு இந்திய விக்கி திட்டங்கள் இதை அனுமதிக்கவில்லை என்பதை நினைவில் கொள்க!) கட்டுரைகளின் எண்ணிக்கையை உயர்த்த அல்ல, தரமான கட்டுரைகளை கூகுள் மொழி பெயர்ப்பு கொடுக்கும் என்று எண்ணி. இங்கு எப்போதும் கட்டுரைகளின் அளவு முக்கியம் இல்லை, நான்கு வரி கட்டுரையாக இருந்தாலும் அதில் உள்ள விடயத்திற்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தயவுகூர்ந்து தவிக்கு வளர்முகமாக பங்களிக்க வேண்டுகிறேன். அன்புடன்--கார்த்திக் 05:43, 27 ஏப்ரல் 2010 (UTC)

Solar Dynamics Observatory என்பதை தமிழில் எப்படி பெயரிடுவது? --குறும்பன் 01:56, 27 ஏப்ரல் 2010 (UTC)

சூரிய சக்திகள் ஆய்வுக்கூடம் என்பது சரியாக இருக்குமா? --Theni.M.Subramani 03:02, 27 ஏப்ரல் 2010 (UTC)
சூரிய இயக்காற்றல் வானாய்வகம் --114.143.122.89 03:27, 27 ஏப்ரல் 2010 (UTC)
கதிரவனியக்க நோக்ககம். ஞாயிற்றியக்க நோக்ககம். நோக்ககம் என்றோ கூர்நோக்கி என்றோ கூறலாம். இங்கே ஞாயிற்றின் புற இயக்கத்தையும் அது நில உலகில் எவ்வகையான விளைவுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது என்பதனையறிய ஞாயிற்றை உற்று நோக்கும் கருவியையோ கருவியடுக்கையோ குறிக்கும். வானில் இருந்து இயங்கும் நோக்கியாகையால் ஞாயிற்றியக்க வானோக்ககம் என்றும் சொல்லலாம்.--செல்வா 19:44, 27 ஏப்ரல் 2010 (UTC)
இப்பகுதியை வெட்டி விக்கிப்பீடியா:பொதுவான மொழிபெயர்ப்பு கலந்துரையாடல்கள் என்னும் பக்கத்தில் இட்டுள்ளேன். கருத்துகளை அங்கே அலசலாம்.--செல்வா 20:05, 27 ஏப்ரல் 2010 (UTC)

ஆலமரத்தடி உரையாடல்கள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, பொதுவான விசயங்களை மட்டும் ஆலமரத்தடியில் உரையாடலாமே? எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம், விக்கிப்பீடியா:பொதுவான மொழிபெயர்ப்பு கலந்துரையாடல்கள் , அந்தந்த பெயர்வெளிகளின் பேச்சுப் பக்கங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அனைத்தையும் இங்கு உரையாடினால் அடிக்கடி ஆலமரத்தடி உள்ளடக்கத்தைப் பரணில் ஏற்ற வேண்டி இருக்கிறது. இதனால் முந்தைய உரையாடல்களுக்கான இணைப்புகளும் அறுந்து போகின்றன.--ரவி 06:03, 27 ஏப்ரல் 2010 (UTC)


ஒத்தாசைப் பக்கத்தில் உதவி கேட்டுப் பதில் கொடுக்கப்படும். பல இடங்களில் கலந்துரையாடுவது நிர்வகிக்க கடினம். அண்மையில் தான் இந்தளவு உரையாடல் நடக்கிறது. பொதுவாக அளவாகத்தான் நடக்கும். --Natkeeran 06:20, 27 ஏப்ரல் 2010 (UTC)

கூகுள் மொழிபெயர்ப்பாளர்களுடன் உரையாடல் - ஏப்ரல் 29

தொகு

கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டத்தில் கூடுதல் புரிந்துணர்வு ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக, மொழிபெயர்ப்பாளர்களுடன் நேரடியாக கலந்துரையாடக் கோரி இருந்தோம். இது தொடர்பாக இன்று மாலை இந்திய நேரம் 4.30 முதல் 5.40 வரை கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டக் குழுவினருடன் தொலைப்பேசி உரையாடல் நடந்தது. பணி நேரம் என்பதால் சுந்தரால் கலந்து கொள்ள இயலாமல் போனது. இந்த உரையாடலில் கூகுள் மொழிபெயர்ப்பத் திட்ட மேலாளர்கள், பொறியாளர்கள் (இந்த முறை தமிழ் தெரிந்த ஒரு பொறியாளரும் கலந்து கொண்டார்), கூகுள் தமிழ் மொழியியலாளர், மூன்று மொழிபெயர்ப்பு நிறுவனங்களைச் சேர்ந்த சார்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விக்கிப்பீடியா:Issues with google translation in Tamil Wikipedia பக்கத்தை முன்வைத்து உரையாடினோம்.

விக்கிப் பிரச்சினைகள்

தொகு
  • சிகப்பு இணைப்புப் படிமங்கள்: ஆங்கில விக்கியில் உள்ள சில படிமங்கள் அங்கு மட்டுமே பயன்படுத்தத் தக்க காப்புரிமையில் உள்ளதாகவும் அவற்றை இங்கு தமிழ் விக்கியில் பதிவேற்றலாமா என்றும் தயக்கமாக உள்ளதாகவும் தெரிவித்தார்கள். இது பற்றி நாம் என்ன நிலைப்பாடு எடுக்கலாம்? விக்கிமீடியா காமன்சில் உள்ள படிமங்களை மட்டும் நாம் வைத்துக் கொள்வது படிம மேலாண்மைக்கு உகந்தது. அப்படி எனில், ஆங்கில விக்கியில் உள்ள சிகப்பு இணைப்புப் படிமங்களையும் அவற்றோடு இணைந்த விவரிப்புகளையும் நீக்கச் சொல்லலாமா?
  • சிகப்பு இணைப்பு வார்ப்புருக்கள்: கட்டுரையின் இறுதியில் உலாவல் வசதிக்காக உள்ள வார்ப்புருக்கள் முக்கியம் இல்லை என்பதையும், அதே வேளை கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள தகவல் பெட்டிகள், கட்டுரையின் உள்ளே வரும் சில வார்ப்புருக்கள் முக்கியம் என்பதையும் சுட்டிக் காட்டினேன். தமிழ் விக்கியில் ஒரு வார்ப்புரு இல்லாதபோது அதைத் தானியக்கமாக ஆங்கில விக்கியில் இருந்து படியெடுத்து இங்கு இடுவது ஒரு தீர்வாக இருக்குமா? ஆனால், தேவையில்லாத, ஏற்கனவே உள்ள சில வார்ப்புருக்களையும் இவ்வாறு உருவாக்கிவிடக்கூடும். சில வார்ப்புருக்கள், ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போவதால், சில வேளை அவற்றை தானியக்கமாக உருவாக்குவதும் சிரமம் என்று எடுத்துரைத்தார்கள். சுந்தர் முதலியோர் நுட்ப அடிப்படையில் இதற்கான தங்கள் பரிந்துரைகளை முன்வைக்கலாம். வார்ப்புரு ஆக்கம் போன்றவற்றில் மொழிபெயர்ப்பாளர்கள் பொறுப்பு எடுத்து செய்ய விரும்பினாலும் விக்கி நடைமுறைகளில் தேர்ச்சியின்மை காரணமாக ஏதும் தவறு செய்து விடுவோமோ என்று தயங்குகிறார்கள். தவறு செய்வது குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் தேவைப்படும் இடங்களில் பேச்சுப் பக்கங்களில் வேண்டுமாறும் தெரிவித்து உள்ளேன். எனினும், வார்ப்புரு உருவாக்கம் போன்ற பணிகளில் நாமும் சற்று கை கொடுப்பது உதவும்.
  • பக்க அமைப்புக் குளறுபடி: வரியின் முதலில் தேவைற்ற வெற்றிடம் வருவது, அட்டவணைகள் அமைப்பில் சில குளறுபடிகள் வருவதை உணர்ந்திருக்கிறார்கள். இதற்கான நுட்பத் தீர்வு வரும் காலாண்டில் செயற்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்கள்.
  • சிகப்பு இணைப்புகள்: சிகப்பு இணைப்பு பற்றி நாம் தந்த எடுத்துக்காட்டைக் கண்ட பிறகு, அது பிரச்சினை தான் என்பதை உணர்ந்து கொண்டுள்ளார்கள். தேவையற்ற சிகப்பு இணைப்புகளை நீக்குவதற்கான நுட்பத் தீர்வு வரும் காலாண்டில் செயற்படுத்தப்படலாம். அது வரை மொழிபெயர்ப்பாளர்கள் கைப்படவே தேவையற்ற இணைப்புகளை நீக்குவது என்ற புரிந்துணர்வு உள்ளது. ஏற்கனவே சில கட்டுரைகளில், இத்தகைய சிகப்பு இணைப்பு நீக்கப் பணிகளைத் தொடங்கி உள்ளார்கள்.

மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள்

தொகு

வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்குமாறு தாங்கள் சொல்லவே இல்லை எனவும், தமிழ் மொழியின் இயல்புக்கு ஏற்ப மொழிபெயர்க்குமாறே அறிவுறுத்தியுள்ளதாகவும் கூகுளின் தமிழ் மொழியியலாளர் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தினார்.

ஆனால், மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் வழமையான பணிகளில் செய்வது போல், மூல மொழி உரையில் இருந்து பெரிதும் பிசகாமல் இயன்ற அளவு ஒத்துப் போகுமாறு மொழிபெயர்க்க முயல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆங்கில விக்கி உரையே மாற்றத்துக்கு உட்பட்டது தான் எனவும், இந்த அளவு பிசகாமல் மொழிபெயர்க்கத் தேவை இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன். தகவல் பிழை, கருத்துப் பிழை இன்றி தமிழ் நடைக்கு ஏற்ப சுருக்கியோ மாற்றியோ எழுதுவது சரி என்றும் எடுத்துரைத்தேன்.

இந்தக் காரணத்துக்கும் அப்பாற்பட்ட மோசமான மொழிபெயர்ப்புகள் தனிப்பட்ட மொழிபெயர்ப்பாளரின் திறமை / கவனக் குறைவாகவே இருக்க வேண்டும். எனவே, ஒருவர் கட்டுரையைப் பதிவேற்றும் முன் அதே நிறுவனத்தில் உள்ள இன்னொருவர் சரி பார்ப்பதும், கட்டுரையைப் பதிவேற்றிய பிறகு தாங்களே ஒரு முறை படித்துப் பார்த்துப் பிழை திருத்துவதும் விரும்பத்தக்கது என்பதை எடுத்துக் கூறினேன்.

பல கட்டுரைகளிலும் உள்ள பொதுவான பிழைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக் கூறினேன்.

கலைக்களஞ்சிய நடையில் எழுதுவது புதிய அனுபவமாக இருப்பதாக குறிப்பிட்டார்கள். தமிழ் விக்கியின் நடை பற்றி அவர்களுக்கு எண்ணற்ற சந்தேகங்கள் இருக்கின்றன. சில இடங்களில் அறிவுறுத்தல்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்கள். நடை தொடர்பாக ஏதாவது ஐயம் வரும்போது உடனடியாக அதற்கான விடையைக் கேட்டு அறிந்து கொள்ளுமாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். விக்கி வழமைப் படி மூன்று, நான்கு நாட்கள் காத்திருந்து உரையாடிச் செயற்படுவது தங்கள் பணியிட இலக்குகளுக்கு உகந்ததாக இல்லை என்றும் குறிப்பிட்டார்கள். எனினும், அவர்களின் அடிப்படையான கேள்விகளுக்கு ஒத்தாசைப் பக்கத்தில் விரைந்து பதில் அளிக்க முடியும் என்று உறுதி அளித்துள்ளேன்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர், புதிய கட்டுரைகள் எழுத 60% நேரமும் பழைய கட்டுரைகளைச் சீர்திருத்த 40% நேரமும் ஒதுக்கிச் செயற்பட முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். ஏப்ரல், மார்ச்சில் எழுதிய கட்டுரைகளை மே மாத இறுதிக்குள் சீர் செய்வதாகவும், அதே போல அடுத்தடுத்த மாதங்களில் இலக்கு வைத்துத் திருத்துவதாகவும் தெரிவித்தார்.

விக்கி குறித்த நேரடிப் பயற்சி ஒன்றை அளிக்குமாறு உரையாடலில் கலந்து கொண்ட அனைத்து நிறுவனத்தினரும் உள்ளார்கள். சென்னை, பெங்களூரில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்.

இத்திட்டத்தைப் பொறுத்த வரை, கூகுள் கருவி நுட்பம், மொழிபெயர்ப்புத் தரத்தில் உள்ள பிரச்சினையோடு தொடர்பாடல் இடைவெளியும் பெரிய பிரச்சினையாக இருந்தது. முந்தைய உரையாடலைக் காட்டிலும் இந்த உரையாடல் சுமுகமாக இருந்தது. இத்தகைய ஒரு பயிற்சி, மொழிபெயர்ப்பாளர்களுடனான உரையாடல் முன்பே நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வரும் நாட்களில் நிகழும் மாற்றங்களைப் பொறுத்து அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்கலாம். --ரவி 18:16, 29 ஏப்ரல் 2010 (UTC)

கருத்துக்கள்

தொகு

மிக்க நன்றி ரவி. நல்ல செய்தியாகவே தெரிகிறது. கட்டுரைத் தெரிவு பற்றி என்ன கூறினார்கள். நாம் பரிந்துரைத்தை அவர்கள் பார்த்தாவது இருக்கிறார்களா? நேரடிப் பயிற்சி குடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். --Natkeeran 23:07, 29 ஏப்ரல் 2010 (UTC)

இரவி, உங்கள் மிகச்சிறந்த உதவிக்கும், ஒத்துழைக்க முன்வரும் கூகுளுக்கும் அவர்களின் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மிக்க நன்றி. வார்ப்புருக்களைத் தானியங்கியாய் மாற்ற வேண்டாம். வார்ப்புருவை நாம் மொழி பெயர்த்துக்கொள்ளலாம், ஆனால் உள்ளிடும் மதிப்புகளை அவர்கள் தமிழில் தருதல் நல்லது. மொழி பெயர்க்கும் பொழுது, நெடிய ஆங்கில சொற்றொடர்களை(வாக்கியங்களை), தக்க முறையில் பிரித்துத் தமிழில் 2-3 தொடர்களாக எழுதுவது நல்லது. முதல் 3-4 பத்திகள் மிகவும் முக்கியம். கூடுதாலான அக்கறை எடுத்துக்கொண்டு, தமிழில் படிப்போருக்கு அறிமுகப்படுத்தும் கருத்து எளிதாகவும் இயல்பாகவும் உள்வாங்கும் தன்மையதாக உள்ளதா என தாங்களாக எண்ணிப்பார்த்தல் நல்லது. முற்ரிலும் ஆங்கில விக்கியைச் சார்ந்து இல்லாமல், தமிழில் நல்ல ஓர் தொடக்கமாக இருக்குமா என எண்ணிப்பார்க்க வேண்டும். மெய்யெழுத்தில் தொடங்கி எழுதலாகாது போன்ற இலக்கண முறைகளையும் கைக்கொள்ளப் பரிந்துரைக்க வேண்டும். இயன்றவாறெல்லாம் அவர்களுக்குக் கைகொடுக்க நாமும் அணியமாக இருக்க வேண்டும். --செல்வா 00:22, 30 ஏப்ரல் 2010 (UTC)

  • ரவி நடத்திய உரையாடல் சுமுகமாக நடந்தது குறித்து பெருமகிழ்ச்சி! நல்ல, தரமான இடுகைகள் விக்கிக்கு வேண்டும் என்னும் புரிந்துணர்வு ஏற்பட்டதும், அக்குறிக்கோளை அடைய ஒத்துழைப்பு நல்க முன்வந்ததும் மிக்க நன்று. சிவப்பு இணைப்புப் படிமங்கள், வார்ப்புருக்கள், பக்கம் ஆக்கல், தகவல் பெட்டி போன்ற நுட்பங்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் அவற்றையெல்லாம் சரிப்படுத்த கூகுள் மொழிபெயர்ப்பாளர்களும் பிறரும் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவிக்கிறார்கள். இப்புரிந்துணர்வுக்கு வழிகோலிய ரவி பாராட்டுக்குரியவர்! --George46 03:27, 30 ஏப்ரல் 2010 (UTC)
கூகுளுடன் இணக்கமான உரையாடல் நடந்ததுள்ளது வரவேற்புக்குரியது. நிச்சயமாக மொழிபெயர்ப்பாளர்களுடனான நேரடி இடைமுகம் மற்றும் விக்கிபயிற்சி நல்லப் பயனைத்தரும்.படிமங்களை தரவேற்றுவதிலும் சிவப்பு உள்ளிணைப்புகளை நீக்குவதிலும் சிலர் ஈடுபட்டுள்ளதைக் காணமுடிகிறது.
  • ஆங்கிலவிக்கிப் படிமங்கள் தமிழ் விக்கியில் இட அங்குள்ள விவரணக் குறிப்பை இங்கும் இட்டாலே போதுமானது.ஒருவேளை அங்கேயே அவை நீக்கப்பட வேண்டியவையாக உள்ளனவோ ? அவற்றை தரவேற்ற இயலாத நேரத்தில் அப்படிமங்களையும் விவரணங்களையும் நீக்குதல் பொது அறிவு.
  • வார்ப்புருக்கள் பலதரப்பட்டவை. சில உலாவல் வசதிக்காக, தொடர்புடைய பக்கங்களுக்கு இணைப்பு வழங்குவதாக உள்ளன. இவை எளிதாக மொழிமாற்றம் செய்யப்படக் கூடியவை. சில கடின நிரலிகளை அடிப்படையாகக் கொண்டவை..இவற்றைத் தவிர்க்கலாம். தகவல்பெட்டிகள் சிலவற்றிற்கு தமிழில் ஏற்கெனவே தமிழ்ப்பெயரில் வார்ப்புருக்கள் உள்ளன.அவற்றை மீண்டும் உருவாக்கக்கூடாது. ஆகவே வார்ப்புரு விதயத்தில் மட்டும் அவர்கள் ஒத்தாசைப் பக்கத்தில் அல்லது கூகுள் மொழிபெயர்பாளர் இடைமுகம் என்ற புதிய பக்கத்தில் உதவி கோரலாம். இந்தப் பக்கத்திற்கு முன்னுரிமை அளித்து நாமும் நமது எதிர்வினைகளை அவர்கள் எதிர்பார்க்கும் நேர இடைவெளியில் கொடுக்க முயலலாம்.
  • சிகப்பு உள்ளிணைப்புகள்: இவற்றை அவர்கள் தானியக்கமாக நீக்கக்கூடாது. நாம் சுட்டியபடி பெயர்சொல் மட்டும் இருக்குமாறு உள்ளிணைப்புகள் தரவேண்டும்.
  • விக்கி கலைக்களஞ்சிய நடை:நம்முடன் உரையாடல் பக்கங்களில் எதிர்வினையாற்றினால் நாளடைவில் நல்லத்தரம் ஏற்படும் என்று நினைக்கிறேன். ஆகவே உரையாடல் முதன்மையானது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
இந்த ஒருங்கிணைப்பை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்லும் இரவி போன்றோருக்கு பாராட்டுக்கள் !!
--மணியன் 06:47, 30 ஏப்ரல் 2010 (UTC)
மிக மகிழ்ச்சியாய் உள்ளது, இரவி. புரிந்துணர்வு சிக்கல்தான் அடிப்படை என்பது நமது முந்தைய உரையாடலில் தென்பட்டது. இப்போது அது மாறி வருவது மிக நல்ல முன்னேற்றம். கடந்த சில நாட்களாக சில கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் விக்கிக்கு வெளியே அவ்வப்போது தொடர்பு கொண்டு மொழிபெயர்ப்பு உதவிகளைக் கேட்கத் தொடங்கியுள்ளனர். இப்போதைக்கு அவர்களது ஆர்வத்தை ஊக்குவிக்கும் எண்ணத்தில் அவ்வழிகளிலேயே பதிலளித்துக் கொண்டிருக்கிறேன். விக்சனரிக்கான குழுமத்திலும் மடல் வழியாக ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளேன். அவர்களுக்கான தெளிவாக வழிகாட்டல் பக்கங்களை உருவாக்கினால் புதுப் பயனர்கள் எவருக்கும் பயன்படும். அத்துடன், இன்னும் சில பயிற்சிச் சந்திப்புகளையும் தொலைபேசி உரையாடல்களையும் ஏற்பாடு செய்யலாம். வழமையான விக்கி பங்களிப்பாளர்களின் பட்டறிவு அவர்களுக்குப் பயன் தரும், கூடவே புரிந்துணர்வும் வளரும். நமக்கும் புதுப்பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள் புலனாகும். -- சுந்தர் \பேச்சு 08:20, 30 ஏப்ரல் 2010 (UTC)
இத்தகைய முன்னேற்றம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நேர்முக உரையாடல்கள் கூகுள் மொழி பெயர்ப்பாளர்களின் பங்களிப்பை சிறப்பானதாக ஆக்கலாம். ரவி ஸ்கைப்பு வழி உரையாடல்கள் ஏதேனும் நடந்தால் அதில் நானும் பங்கேற்கிறேன். மகிழ்ச்சி.--கார்த்திக் 17:42, 30 ஏப்ரல் 2010 (UTC)

நற்கீரன், கட்டுரைத் தெரிவைப் பொறுத்தவரை ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது. அவர்கள் எழுத நினைக்கும் கட்டுரைகளின் பட்டியலைப் பெற்றுத் தேவையில்லாத கட்டுரைத் தலைப்புகளைக் கழித்துத் தருகிறோம். நமக்கு வேண்டிய கட்டுரைகள் என்று சில கட்டுரைகளைச் சுட்டினோம். அவற்றை எழுதத் தொடங்கியதாகத் தெரியவில்லை. இதை வலியுறுத்த வேண்டும்.

மணியன், கூகுள் கட்டுரைகளைப் பதிவேற்றும் முன் சிகப்பு உள்ளிணைப்புகளைத் தானியக்கமாக நீக்குவது சாத்தியமே. ஒரு இணைப்புக்குரிய பக்கம் ஏற்கனவே தமிழ் விக்கியில் இருந்தால் மட்டும் இணைப்பு தரச் செய்யலாம்.

செல்வா, பவுல், மணியன், உங்கள் ஊக்க மொழிகளுக்கு நன்றி. சுந்தரால் அன்றைய உரையாடலில் கலந்து கொள்ள முடியவில்லையே தவிர, முந்தைய உரையாடல்களின் மூலமும் மின்மடல்கள் மூலமும் உரிய புரிந்துணர்வை ஏற்படுத்தி வருகிறார். தொழில்நுட்ப, விக்கி நுட்ப ஆலோசனைக்குச் சுந்தரை விட்டால் ஆள் இல்லை :)

கார்த்தி, இதுவரையான உரையாடல்கள் அனைத்தும் தொலைப்பேசி மூலமாகவே நடந்தன. ஒன்று கூகுள் நம்மை அழைக்கும் அல்லது நாம் ஒரு இலவச தொலைப்பேசி எண்ணை அழைக்க வேண்டும். எனவே, வெளிநாட்டில் இருந்து அழைப்பது ஒத்து வருமா தெரியவில்லை. எனினும், அடுத்தடுத்த உரையாடல்களில் கலந்து கொள்ள நம்மில் எவருக்கும் ஆர்வம் இருந்தால் தெரிவியுங்கள்.

சென்னையில் ஒரு பயிற்சிப் பட்டறை நடத்துவது தொடர்பாக மொழிபெயர்ப்பு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் தொடர்பில் உள்ளார்கள். நாள், நேரம் உறுதியானவுடன் இங்கு தெரிவிக்கிறேன். ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் உதவிப் பக்கங்கள், வழிகாட்டல் பக்கங்களைத் தொகுத்து pdf வடிவில் தருவது நன்மை பயக்கும் என்று நினைக்கிறேன். இதற்கான முயற்சியைத் தொடங்க வேண்டும்.

இது வரை உள்ள பொதுக்கருத்தைத் தொகுத்துச் சொல்கிறேன். தவறு இருந்தால் திருத்துங்கள்:

  • வார்ப்புருக்களைத் தானியக்கமாக உருவாக்க வேண்டாம். வார்ப்புரு உருவாக்கத்தில் நாம் உதவலாம். கூகுள் கருவி மூலம் வார்ப்புருவுக்குத் தேவைப்படும் தகவல்களை மட்டும் மொழிபெயர்த்துத் தந்தால் போதும்.
  • காப்புரிமை ஐயத்துக்குரிய படிமங்களைத் தவிர்த்து மற்ற படிமங்களைப் பதிவேற்ற கூகுள் மொழிபெயர்ப்பாளர்கள் முனைய வேண்டும். இதற்குத் தேவைப்படும் உதவி, பயிற்சியை நாம் வழங்குவோம். --ரவி 05:21, 1 மே 2010 (UTC)[பதிலளி]

Toolserver---நுட்பப் பணி

தொகு
(உரையாடல் இழையிலிருந்து சற்றே விலகிய கருத்து) ரவி, நுட்ப விசயங்களில் தெரன்சும், உமாபதியும் முன்னர் கைகொடுத்து வந்தனர். இனி வரும் நாட்களில் மாணவர்களின் வருகை மிகுந்தால் மேலும் பலர் வந்து நாம் இன்னும் பல சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள உதவுவார்கள் என நம்புகிறேன். Toolserver முதலியவற்றில் நம் பங்களிப்பாளர்கள் ஈடுபட வேண்டும். சுந்தரை விட்டால் ஆளே இல்லை என்று இருப்பது நல்லதல்ல. :) -- சுந்தர் \பேச்சு 05:32, 1 மே 2010 (UTC)[பதிலளி]
  • சுந்தர் அவர்களுக்கு வணக்கம்.
  • Toolserver---ல் என்ன செய்ய வேண்டும் என்பதனையும், சிறிது வழிகாட்டல் உதவியும் கிடைத்தால் முயன்று பார்ப்பேன் என்பதனைத் தெரியபடுத்திக்கொள்கிறேன்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:11, 1 மே 2010 (UTC)[பதிலளி]
பெரியண்ணன், நீங்கள் நுட்பம் தொடர்பில் ஆர்வம் காட்டுவதும் உதவ முன்வந்த தும் கண்டு மகிழ்ச்சி. அண்மையில் பழ.கந்தசாமியும், த*உழவனும் கூட சில நுட்பச் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். (அருள் கூர்ந்து என்னை சுந்தர் எனப் பெயர் சொல்லி மட்டும் அழைக்க வேண்டுகிறேன். அவர்கள் போன்ற மதிப்புரைகள் நமக்குள் தேவையில்லை. :-) )
Toolserver அணுக்கம் பெறுவதற்கு முன்னால் வழு பதியும் முறை, மீடியாவிக்கி மொழிபெயர்ப்பு, இற்றைப்படுத்துதல், பைவிக்கிப்பீடியா தானியங்கிக் கட்டமைப்பு, விக்கி தானுலவி போன்றவற்றுள் சிலவற்றில் அறிமுகம் பெறுதல் நன்று. இதில் உங்களுக்கு ஆர்வமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். விக்கியிடை இணைப்புகளை ஏற்படுத்தும் சுந்தர்பாட்டை என்னால் கடந்த சில திங்கள்களில் இயக்க முடியவில்லை. அது போன்று தேங்கியுள்ள பணிகளை நீங்களும் வாய்ப்புள்ள மற்ற பயனர்களும் ஏற்று நடத்தினால் மிக நன்று. -- சுந்தர் \பேச்சு 09:51, 2 மே 2010 (UTC)[பதிலளி]
  • வணக்கம் சுந்தர்.
  • "விக்கியிடை இணைப்புகளை ஏற்படுத்தும் சுந்தர்பாட்டை என்னால் கடந்த சில திங்கள்களில் இயக்க முடியவில்லை. அது போன்று தேங்கியுள்ள பணிகளை நீங்களும் வாய்ப்புள்ள மற்ற பயனர்களும் ஏற்று நடத்தினால் மிக நன்று." ---என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
  • தாங்கள் தொடங்கிய 'சுந்தர்பாட்டை' (Sundarbot)பற்றிய முழு விவரங்களையும், அதன் பயன்பாடு (நான் தெரிந்து கொண்டது --- இது விக்கிகளுக்கு இடையில் தொடர்பை---இணைப்பை ஏற்படுத்தும் தானியங்கி), செயல் முறை, இருக்குமிடம் ஆகிய மேல் விவரங்களை எனக்கு தெரிவித்தால், அதனை இயக்க முயலுவேன். நன்றி. வணக்கம்.--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 22:59, 2 மே 2010 (UTC)--திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 09:54, 3 மே 2010 (UTC)[பதிலளி]
நல்லது பெரியண்ணன். விரைவில் இது பற்றி பதிகிறேன். -- சுந்தர் \பேச்சு 10:07, 3 மே 2010 (UTC)[பதிலளி]

ஆமா சுந்தர். தெரன்சு, உமாபதி, Ganeshk போல பலரும் முன்பு போல் மீண்டும் தீவிரமாக நுட்பப் பணிகளில் இறங்கினால் நன்றாக இருக்கும். மலையாள விக்கிப்பீடியர்களின் நுட்ப உழைப்பைப் பார்க்கையில் பொறாமையாக உள்ளது. அனைத்துத் துறை உழைப்பிலும் வேறு ஆளே இல்லை என்பது நல்லது இல்லை. ஆனால், பலவற்றிலும் நாம் அந்நிலையிலேயே உள்ளோம் என்பது கவலைக்குரிய உண்மை. --ரவி 06:10, 1 மே 2010 (UTC)[பதிலளி]