விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு41

பெங்களூர் சந்திப்புகள் தொகு

நேற்று (செப்டம்பர் 24, 2010) இரு முக்கிய சந்திப்புகள் நிகழ்ந்தன. பகலில் கூகுளுடன் சந்திப்பில் இரவியும் அராபத்தும் நேரில் கலந்து கொண்டனர், சோடாபாட்டில் தொலைபேசியில் கலந்து கொண்டார். நமது முன்வைப்புகளில் முதலாவதை ஏற்றுக் கொண்டதாக இரவியிடம் கேட்டறிந்தேன். கலந்து கொண்டவர்கள் திட்டப்பக்கத்தில் நிகழ்ச்சியைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.

 
சுந்தர், இரவி, அராபத், லாஜிக், பாலாஜி

மாலை நடந்த விக்கிப்பீடியா கூட்டத்தில் விக்கிமீடியாவின் பன்னாட்டு வளர்ச்சி அலுவலர் பாரி நியூசுடேடும், அறிவுரைஞர் அச்சல் பிரபலாவும், விக்கிமீடியா ஆட்சிக்குழு உறுப்பினர் பிசாகா தத்தாவும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இரவி, அராபத்துடன் நானும் கலந்து கொண்டேன். பயனர்:Logicwiki-யும் பயனர்:பாலாஜியும் வந்திருந்தனர். இக்கூட்டத்தில்,

  • மலையாள விக்கி நண்பர் சிசு' ஒருங்கிணைத்து மயூரநாதன், செல்வா, இரவியுடன் நானும் சிறிது பங்களித்து வெளிவந்த செய்திமடல் வெளியிடப்பட்டது.
  •  
    கலந்து கோண்டவர்கள் அனைவரும்
    ஒன்றரை ஆண்டுகளாகக் கட்டி வந்த விக்கிமீடியா இந்தியப் பிரிவு (Wikimedia India Chapter) உருவாவதற்கான முறைப்படியான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன் தொடக்க நாள் செயலராக நானும் கையெழுத்திட்டேன். இது விக்கிமீடியா பிரிவுகள் குழுவின் (Wikimedia Chapters Committee) ஒப்புதலைப் பெற்றுள்ளது. கருநாடக அரசு பதிவுத்துறையினரின் ஒப்புதல் வந்ததும் முறைப்படி இயங்கும்.
  •  
    விக்கிமீடியா இந்தியப்பிரிவின் செயற்குழுவினருடன், பாரி, அச்சல், பிசாகா
    விக்கிமீடியா அறக்கட்டளையின் நேரடி அலுவலகத்தின் பிரிவு ஒன்றை முதல் முறையாக அமெரிக்க ஒன்றியத்துக்கு வெளியே இந்தியாவில் தொடங்குவதாக பாரி அறிவித்தார். விக்கிமீடியாவின் தற்போதைய பார்வையில் தெற்காசியா முதன்மை பெறுவது உறுதியாகிறது.
  • விக்கி வளர்ச்சி பற்றிப் பின்னர் நடந்த குழு உரையாடலில் இரவியும் நானும் பல முக்கிய பரிந்துரைகளை முன்வைத்தோம். எடுத்துக்காட்டாக, http://strategy.wikimedia.org/wiki/Proposal:SEO_Market_and_Contributor_Funnel என்ற எனது முன்வைப்பைக் காணலாம்.
  • கூகுள் திட்டத்தைப் பற்றிய நெடிய விவாதத்திலும் நாங்கள் கலந்து கொண்டு நமது நிலைப்பாட்டை உறுதிபடவும், குழப்பத்துக்கு இடமில்லாமலும் விளங்கிக் கொள்ளச் செய்தோம். பாரியும் அதற்கு முதல் நாளன்று கூகுள் திட்டக்குழுவைச் சந்தித்திருந்ததால் நமது தரப்பைச் சொல்ல வேண்டியது மேலும் முகன்மை பெற்றது.
  • மொத்தத்தில் தமிழ் விக்கி ஒரு தலையான இடம் பெற்றிருந்தது.
  • தமிழ் விக்கியில் பறவை கட்டுரைக்கும் பேட்ஃசின் போலியொப்புரு கட்டுரைக்கும் உதவிய ஆங்கில விக்கியர் சியாமளுக்கு நன்றி தெரிவித்தோம்.
  • கூட்டத்துக்குப் பின், மேலே குறிப்பிட்டவர்களில் இரவி, நான், பாலாஜி, லாஜிக், "மூத்த தமிழ் விக்கியர்" பயனர்:Santhoshguru ஆகியோர் உணவு விடுதியில் சந்தித்துப் பேசினோம். பாலாஜியையும் லாஜிக்கையும் நம் தளத்துக்குக் கடத்தி வர வாய்ப்பாக அமைந்தது. ;) அதோடு தமிழ் விக்கிக்கு தேடுபொறி வழியாக இன்னும் பலரைக் கொண்டு வருவதற்கான SEO வழிமுறைகளைப் பற்றியும் உரையாடினோம். பாலாஜி தேடுபொறித்துறையில் பணிபுரிந்ததாலும் இரவி SEO பற்றி தொழில்முறை அறிவு பெற்றுள்ளதாலும் பயனுள்ளதாக இருந்தது.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bangalore Meetup 24Sep2010
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

கலந்து கொண்ட மற்றவர்களும் தகவல்களையும் படங்களையும் இணைக்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 03:47, 25 செப்டெம்பர் 2010 (UTC)

நிகழ்ச்சி தொடர்பான கீச்சுகள்: http://twitter.com/#search/%23WPMBL19 -- சுந்தர் \பேச்சு 03:50, 25 செப்டெம்பர் 2010 (UTC)
ஆங்கில விக்கியரை தமிழுக்கு கடத்தி வரும் பணி தொடங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. அதிகாலை நான்கு மணிக்கு லாஜிக் கட்டுரைகளை உருவாக்கிக் கொண்டிருந்ததை பார்த்ததும் நினைத்தேன் சந்திப்பில் ஏதோ நடந்திருக்கிறதென்று :-)--சோடாபாட்டில் 04:57, 25 செப்டெம்பர் 2010 (UTC)

மலர்ந்த, சிரித்த முகங்களைக் காணும்பொழுது உண்மையிலேயே மகிழ்ச்சி பொங்குகின்றது. பகிர்ந்தமைக்கு நன்றி.--செல்வா 02:50, 27 செப்டெம்பர் 2010 (UTC)

நாமளும் அங்க இருந்திருக்கலாம் போல இருக்கு. --Natkeeran 01:28, 29 செப்டெம்பர் 2010 (UTC)


செப்டம்பர் 24, 2010 கூகுள் சந்திப்பு தொகு

கூகுளுடன் நிகழ்ந்த சந்த்திப்பு, எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி இங்கே பதிவு செய்துள்ளேன்--சோடாபாட்டில் 04:50, 25 செப்டெம்பர் 2010 (UTC)

நன்றி சோடாபாட்டில். -- சுந்தர் \பேச்சு 02:34, 27 செப்டெம்பர் 2010 (UTC)

செய்திமடல் தொகு

நேற்று பெங்களூருவில் வெளியிடப்பட்ட "Wikimedia India Community Newsletter" என்னும் செய்திமடலை http://commons.wikimedia.org/wiki/File:Wikimedia_India_Community_Newsletter_2010_September.pdf என்னும் இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். பயனர்கள் இதை ஆர்வமுள்ள நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் அனுப்பி விக்கித் திட்டங்களை அறிமுகப்படுத்தலாம். --மயூரநாதன் 11:49, 25 செப்டெம்பர் 2010 (UTC)

தமிழ் இணைய மாநாட்டு நிறைவு விழா சந்திப்பு தொகு

சென்னையில் இன்று மாலை, தமிழ் இணைய மாநாட்டு நிறைவு விழா சந்திப்பு ஒன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளுமாறு சுந்தர், பரிதிமதி, எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர் (கட்டுரைப் போட்டி ஏற்பாடுகள் தொடர்பான திட்டமிடலில் நேரடியாக கலந்து கொண்டவர்கள் என்ற முறையில்). சுந்தரும் பரிதிமதியும் வர முயல்வதாக கூறியுள்ளார்கள். நான் கலந்து கொள்ள இருக்கிறேன். (இது போன்ற தொடர்புகளைப் பேண, தமிழ் விக்கியில் இருந்து யாராவது ஒருவராவது மாற்றி மாற்றியாவது சென்று கலந்து கொள்வது நல்லது..). வாய்ப்பு கிடைத்தால், தற்போதைய தமிழ் விக்கி நிகழ்வுகள், விக்கிமீடியா நிறுவனத்தின் இந்திய வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைக்கிறோம்--இரவி 08:30, 28 செப்டெம்பர் 2010 (UTC)

என்னால் கலந்து கொள்ள இயலாது, இரவி. -- சுந்தர் \பேச்சு 08:39, 28 செப்டெம்பர் 2010 (UTC)

தமிழக அரசு தகவல் தொழில்நுட்பத் துறை ஏற்பாட்டில், நேற்று நடந்த சந்திப்பில் கலந்து கொண்டேன். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் நல்விளைவாக பலரும் விக்கி விழிப்புணர்வைக் குறிப்பிடும் அளவு விக்கிப்பீடியா பலரின் மனதில் பதிந்துள்ளதைக் காண முடிந்தது. போட்டிகளை தொடர்ந்து ஆண்டு தோறும் நடத்த இருப்பதாக ஒன்றுக்கு இரு முறை த.தொ. துறைச் செயலர் குறிப்பிட்டார். நடந்து முடிந்த போட்டிகள் போன நிதியாண்டுக் கணக்கிலேயே வரும் என்பதால் அடுத்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடனே கூட தொடக்கலாம் என்று தெரிவித்தார். போட்டிகளை இந்திய அளவில் கூட நடத்தலாம் என்று குறிப்பிட்டேன். எனினும், அரசு தமிழர் அளவில் நடத்துவதிலேயே ஈடுபாடு காட்டும் என்றும் தெளிவுபடுத்தினார். இந்த முறை போட்டிக்கு வந்த கட்டுரைகள் அடங்கிய இறுவட்டுத் தொகுப்பை ஆவணப்படுத்தல் காரணங்களுக்காக வேண்டினார்கள். விரைவில் கையளிப்பதாகச் சொல்லி உள்ளேன்.

தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் இணைந்து ஆசிரியர்களுக்குப் பயிற்சிப் பட்டறை ஒழுங்கு செய்தல், திருச்சி அண்ணா பல்கலையுடன் இணைந்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல் குறித்த வாய்ப்புகளையும் குறிப்பிட்ட கல்லூரி அலுவலர்களுடன் பேசி அறிந்து கொண்டேன்.

இந்திய மொழி விக்கிகளில் உள்ளடக்கத்தை உயர்த்த தானியங்கி மொழிபெயர்ப்பே வழி என்று மைக்ரோசாப்ட் ஆய்வாளர்கள் குறிப்பிட்டதாக முனைவர். அனந்தகிருட்டிணன் குறிப்பிட்டார். இது குறித்து அரசுகளுடன் புரிந்துணர்வு ஏற்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவது போலவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே கூகுள் நம்முடன் செய்து வரும் திட்டத்தை எடுத்துக்கூறினேன்.

பொதுவாக பலரும் விக்கியின் வளர்ச்சியில் ஈடுபாடு காட்டினாலும், அதற்குப் பின் உள்ள சமூகம், மனித உழைப்பால் உறுதிப்படுத்தப்படும் தரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. தளம் - < உள்ளடக்கம் என்ற அளவிலேயே கண்ணோட்டம் உள்ளது. எனவே, வாய்ப்புள்ள இடங்களில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும் அதே வேளை தமிழ் விக்கியின் தரம், சமூகத்தின் இறையாண்மை ஆகியவற்றை விட்டுக் கொடுக்காமலும் காக்க வேண்டும்--இரவி 11:23, 29 செப்டெம்பர் 2010 (UTC)

நன்றி இரவி! நீங்கள் கருத்துகளை மிக நன்றாக எடுத்துரைத்தும் பகிர்ந்து கொண்டும் உள்ளீர்கள்.--செல்வா 03:17, 30 செப்டெம்பர் 2010 (UTC)

வெக்டார் நிரல் தொகு

மீடியாவிக்கி:Vector.css கோப்பை உருவாக்கி யுள்ளேன். த. விக்கியில் வேலை செய்யாத சில வார்ப்புருக்களை வேலை செய்ய வைப்பதற்காக இந்த முயற்சி. இதனால் வெக்டார் தோலை உபயோகிப்பவர்ளுக்கு சில மாற்றங்கள் தெரியலாம். எங்காவது புதிய வழு உண்டாகியிருந்தால் மேலுள்ள .css கோப்பை தொகுத்து காலி செய்து விடுங்கள் (நான் சோதனை செய்த வரை எதுவும் பிழை இருப்பது போல தெரியவில்லை). புதிய .css கோப்பு வருவதற்கு உங்க cache ஐ காலி செய்ய வேண்டும். இதை கீழே உள்ளதைச் செய்ய வேண்டும்

உங்கள் உலவியின் இடைமாற்று அகற்றப்பட வேண்டும்: மொஸில்லா/சபாரி/கொன்குவெரர்: Shift+reload(அல்லது ctrl-Shift-r), இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: ctrl-f5,ஒப்பேரா: F5

இதை செய்து விட்டு ஏதேனும் வழு ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதித்துப் பார்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில் 14:57, 28 செப்டெம்பர் 2010 (UTC)

உலோக இசை - அண்மைய ஆங்கிலத் தலைப்பு கட்டுரைகளுக்குப்/பகுப்புகளுக்குப் பரிந்துரைகள் தொகு

  • முன்னேறும் உலோக இசை - progressive metal music
  • உலோக இசை - metal music
  • கடின உலோக இசை - heavy metal music
  • செவ்விய உலோக இசை - classic metal
  • மாற்று உலோக இசை - alternative metal
  • கொதிக் உலோக இசை - gothic music
  • சாவு/அழிவு உலோக இசை - death/doom metal music

--Natkeeran 23:16, 28 செப்டெம்பர் 2010 (UTC)

எல்லா இசை பெயர் சொற்களை மொழிபெயர்ப்பது அவசியமா?. ஏனென்றால் இம்மாதிரி வகைப் பெயர்கள் பல இடங்களில் அர்த்தமின்றி வைக்கப்படுகின்றன. ஜாஸ், ரெக்கே, ராக், புளூஸ், ரிதம் அண்ட் புளூஸ் எல்லாம் அப்படியே தானே பயன் படுத்தி வருகிறோம். மெட்டலை மட்டும் ஏன் “உலோக”மாக்க வேண்டும்?. நான் மெட்டலை மட்டும் சொல்கிறேன், வகையறாக்களுக்கு அர்த்ததுடன் பெயர்கள் உண்டானதால் அவற்றை தமிழாக்க வேண்டும். மெட்டலையும், ஹெவி மெட்டலையும் மட்டும் அப்படியே விட்டு விடலாம்.--சோடாபாட்டில் 03:44, 29 செப்டெம்பர் 2010 (UTC)
posing too many restrictions might hamper the quantity and then, the quality, too. many potential members might get knocked off during the very first few days of their contributions. think again...
you can't just translate everything. try translating the term metal heads. sounds absurd, doesn't it?
try to go ahead and look beyond tamil and english wiki. try visiting the french, spanish, german, breton, welsh and other wikis as well.
the main problem with you guys is, you base all your doings on the english wiki. do try and go beyond that... −முன்நிற்கும் கருத்து Le diable (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஒவ்வொரு விக்கிக்கும் தனித்துவ மரபுகள் உண்டு. ஆங்கில விக்கியை பின் பற்றுகிறோம் என்று யார் சொன்னார்?. நான் அங்கு தான் ஆரம்பித்தேன். அங்கும் இங்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பல் ஒற்றுமைகள் உள்ளன. எங்கு நல்ல வழக்கங்கள் இருந்தாலும் அதை இங்கு பின்பற்றுகிறோம். short stub creation is bad for every wiki. All small wikis that have attempted rapid short stub creation and sacrificed quantity for quality have suffered for that . i believe we have tried to work with you from the very beginning. Have we not constantly talked to you and tried to improve your additions?. I see you have learnt to add cats, create redirects and interwiki links. So what exactly do you feel are "too many restrictions?"
நீங்கள் சொல்லும் மொழிபெயர்ப்பு ஒரு மாதிரியுள்ளதென்பது சில விஷயங்களுக்கு பொருந்தும் சில விஷயங்களுக்கு பொருந்தாது. “metal head" எனக்கு ஆங்கிலத்திலேயே absurd ஆகத் தான் தெரிகிறது. முடிந்த வரை தமிழில் மொழிபெயர்த்து எழுதுவதே த. விக்கியின் கொள்கையாக உள்ளது. we have successfully translated articles from fields like quantum mechanics to tennis rules. why should metal music be any different. we discuss this openly, if we can arrive at an apt translation we do it, if not we borrow the original term. From your contributions, i guess you are multilingual. Don't you think some terms will appear absurd no matter even if you don't translate them?--சோடாபாட்டில் 15:47, 29 செப்டெம்பர் 2010 (UTC)
லே டையாபில், இந்த இடத்தில் மெட்டல் என்பதை உலோகம் என மொழிபெயர்ப்பது சரியல்ல என்றால் அதைத் தயங்காமல் சொல்ல்லாம். ஆனால், எப்போதுமே ஆங்கில விக்கியைப் பின்பற்றுகிறோம் எசுப்பானிய, செருமன், பிரெஞ்சு விக்கிகளைப் போய் பாருங்கள் என்பதெல்லாம் தேவையில்லாத, அடிப்படையற்றத் துணிபு. You're just being presumptuous there. -- சுந்தர் \பேச்சு 15:55, 29 செப்டெம்பர் 2010 (UTC)
வணக்கம் லே டையாபில். பிற மொழிகளில் தலைப்பிடுவது இல்லை என்பது அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் ஒரு அடிப்படை விதி. இதில் சில விதிவிலக்குகள் உண்டு. heavy metal music என்பதை தமிழில் எப்படி மொழி பெயர்க்கலாம் என்பது ஒரு கேள்வி. alternative, classical, Symphonic ஆகிய துணைச் சொற்களும் வருகின்றன. அனைத்தையும் ஆங்கிலத்தில் தருவது பொருத்தமானது அல்லது. சில வேளைகளில் சோட்போட்டில் கருத்தை ஏற்கலாம். பகுப்புக்களை உருவாக்கும் போது அவதானம் தேவை. ஒரு உறுப்பைக் கொண்ட பல பகுப்புக்களை உருவாக்குவது பயனர்களை குளப்பும். பகுப்பு வளரக் கூடியதா, தற்போதைய நிலை என்ன, பொருத்தமான பெயருடையதா போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு பகுப்புக்களை உருவாக்க வேண்டும். புதுப் பயனர்களோடு அணுகுவதை நாம் சற்றுக் கவனமாகவே செய்கிறோம். எனினும் சில வேளைகளில் விசமத்தனாகவும் நிறையத் தொகுப்புகள் செய்யப்படுவதுண்டு. எனவே ஒரு சமநிலை பேண வேண்டி உள்ளது. ஆங்கில விக்கியை பல வேளைகளில் பின்பற்றுகிறோம் என்பது ஓரளவு உண்மையே. பெரும்பான்மையான எமக்கு ஆங்கிலப் புலமை மட்டும் உள்ளது இதற்கு காரணமாக உள்ளது. உங்களது கருத்துக்களை இங்கே முழுமையாக வையுங்கள். உரையாடி இணக்க முடிவு எட்டலாம். நன்றி. --Natkeeran 00:47, 30 செப்டெம்பர் 2010 (UTC)

First, I want to thank user Le diable for sharing his thoughts. I think he is trying to say that perhaps, for a new user, it may be easier to create short articles. And too much criticism about it and requiring him/her to write a longer piece may deter him or her. It is possible I've not understood Le diable's comment correctly. In any case, some of his viewpoints of looking at various other wikis is a good idea (and perhps Le diable is not aware that some of us actually do and hence his comment about English Wiki is perhaps not necessary). In any case the topics Le diable had started are ALL very interesting to me and I wish I could expand each and every one of them. I did expand just few and even then only a tiny bit. Thanks to Le diable for starting off these topics. I would request Le diable to continue his good work and if possible I would request him to add just one or two more sentences. The reason is, just a line is not sufficiently useful and I hope he appreciates this point. Also, if it would be possible, I would ask Le diable to provide, in his user-page, a little background to his interests and knowldege. I'm writing this in English since I'm not sure of his background. --செல்வா 01:26, 30 செப்டெம்பர் 2010 (UTC)

ராக் இசை [1] என்ற பெயரில் நாம் விக்கிப்பக்கம் உருவாக்கியுள்ளோம். மெட்டல் இசை என்றே சொல்லலாம்; கன மெட்டல், மாற்று மெட்டல் என்பன சரியாகத் தெரிகின்றன; நிற்க. இத்தலைப்புகள் வெகு சிலரையே கவரும். எனினும், வெகுசனப் புழக்கத்தில் இவை வரும்போது (?!) வெகுசனமே அதற்கொரு எளிமையான சொல்லை உருவாக்கி விடும். --பரிதிமதி 03:22, 30 செப்டெம்பர் 2010 (UTC)

விடுபதிகை பிரச்சனை தொகு

கொஞ்ச நாளாக அடிக்கடி லாகவுட் ஆகுகிறது. எனக்கு மட்டுமென்று நினைத்தேன். அண்மைய மாற்றங்களில் பார்த்தால் வேறு பலருக்கும் இது நடப்பது போலத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன் முகுந்த் இதே கேள்வியை எழுப்பியிருந்தார். இதைப்பற்றி யாருக்காவது ஏதாவது தெரியுமா?--சோடாபாட்டில் 09:00, 29 செப்டெம்பர் 2010 (UTC)

எனக்கு அப்படி ஒன்றும் நிகழ்வதில்லை. விரும்பாவிட்டாலும் லாகின்னிலேயே வருகிறது:)--Kanags \உரையாடுக 08:00, 30 செப்டெம்பர் 2010 (UTC)
எனக்கும் இப்படி ஏதும் நிகழ்வதில்லையே! --செல்வா 16:38, 2 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

ஒரே ஒரு முறை நான் விடுபதிகை சிக்கலை சந்தித்தேன். --குறும்பன் 17:56, 2 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

சண்டை (battle) என்பதற்கான சொற்கள் தொகு

பல கட்டுரைகளின் தலைப்புகளில் சண்டை என்னும் சொல் ஆளப்படுகின்றது. battle என்பதற்குத் தமிழில் குறைந்தது 26 சொற்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றையும் விளக்கவும் முடியும். செருகளம், பொருகளம் (> போர்; பொருதல் என்றால் மோதுதல் சண்டையிடுதல்), அடுகளம் (அடுதல், அடல் என்றால் கொல்லுதல், அழித்தல்) என்னும் சொற்கள் போல் போருக்கு, அங்கம், அடலை, அழுவம், ஆடல், ஆர்ப்பு, இகல், உறழ்வு, குறும்பு, சினவல், செயிர், செரு, ஞாட்பு, திறல், தெவ்வினை, தும்பை, நிகர், நிகர்ப்பு, படை, பாழி, புடை, போர், முரண், முனை, மொய், விறப்பு, வெவ்வினை என 26 சொற்களாவது தேறும். இவையன்றி அமர், சமர் என்னும் சொற்களும் உண்டு. செருகளம், பொருகளம் அடுகளம் போல் அமர்க்களம் என்னும் சொல்லும் அறிந்ததே. சண்டை என்னும் சொல் போர் என்னும் பொருள் தரலாம் எனினும், சிறு கைகலப்புகளுக்கோ, தனிமனித பிணக்குகளுக்கோ பெரும்பாலும் பயன்படுகின்றது. போர் என்பது war என்பதற்கு மட்டும அல்ல. மோதுதலுக்கு, பொருதலுக்குப் பொதுவாகவும் பயன்படும் சொல். தமிழில் போர் என்பது battle, war ஆகிய இரண்டுக்குமான சொல். ஆங்கிலத்தில் shore, bank என்பனவற்றை கடற்கரைக்கும் ஆற்றங்கரைக்கும் முறையே பயன்படுத்துகிறார்கள், ஆனால் தமிழில் கரை என்பது இரண்டுக்கும் பொது. ஆங்கிலத்தில் இருக்கும் பகுப்புகள் தமிழிலும் இருக்க வேண்டும் என்பதல்ல, அதேபோல் தமிழில் உள்ள பகுப்பு ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கலாகாது. மேலே உள்ள 26 சொற்களில் சிலவற்றை விளக்கி அதனைப் பயன்படுத்துவது தமிழில் கருத்து வளர்ச்சிக்குப் பயன்ன்படும் என்பது என் கருத்து.--செல்வா 16:38, 2 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

battle ஐ சண்டையென்று எழுதும் பழக்கம் தமிழகத்தில் கொஞ்ச காலமாகவே இருந்து வருகிறது (கல்கியின் சிவகாமியின் சபதத்தில் -1944ல் வெளிவந்தது - இதைக் கையாண்டுள்ளார்). இரண்டாம் உலக் போர் காலத்திலிருந்து தமிழில் war reporting செய்தவர்கள் இது வரை “சண்டை” என்றே பயன்படுத்தி வந்துள்ளார்கள். கண்டிப்பாக battle க்கும் war க்கும் வேறு வேறு சொற்கள் வேண்டும். இவ்வளவு சொற்கள் நம்மிடம் உள்ள போது ஒரே சொல்லை இரு இடங்களில் அதுவும் படிப்பவரைக் குழப்பக்கூடிய விதத்தில் உள்ளவற்றை பயன்படுத்துவது நல்ல மொழிபெயர்ப்பாகாது. சண்டை என்பது வேறு அர்த்தம் வருவது போல் உள்ளதென்றால் மாற்றலாம். ஆனால் போர் என்ற சொல்லை battle, war இரண்டுக்கும் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் இது பெரிது, இது சிறிது என்று விளக்க வைத்து குழப்பம் விளையும்படி ஆக்கக்கூடாது. ஏற்கனவே இரண்டையும் பிரித்து வழங்கும் மரபு உள்ள போது, நாம் அதை ஒரே வார்த்தையாக்கக் கூடாது.--சோடாபாட்டில் 16:57, 2 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
ஏன் வெவேறு சொற்கள் வேண்டுமென்று சொல்கிறேன்றால், ராணுவ வரலாற்றில் இன்னும் பல இம்சைகள் உள்ளன - skirmish, probe/recon, raid, battle, campaign, war என்று பல அடுக்குளை எந்த நிகழ்வுகளுக்கு பயன்படுத்தலாம் என்று ஒரு மாதிரி தரப்படுத்தி விட்டார்கள். நாம் இவை அனைத்துக்கும் போர் என்னும் சொல்லை interchangeable ஆக பயன்படுத்தி வருகிறோம். நம்மிடம் ஏராளமாக சொற்கள் உள்ள போது, எதற்கு போரை விடாது பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்?
இன்னொரு சந்தேகம். யுத்தம் என்பது தமிழ் சொல்லா? அல்லது சமசுகிரத இரவலா? (யுத்/யோதா என்று இந்தியில் படித்த நினைவு).--சோடாபாட்டில் 17:36, 2 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

Won the Battle but Lost the War . battle என்பதற்கு சமர் என்பதையும் war என்பதற்கு போர் என்பதையும் பயன்படுத்தலாம். யுத்தம் என்பது தமிழ் சொல் அல்ல. செல்வா எங்கு எந்த சொல்லை பயன்படுத்துவது தகும் என விரிவாக சொன்னால் நாம் பயன்படுத்த வசதியாக இருக்கும். --குறும்பன் 17:53, 2 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

சண்டை என்னும் சொல் பொருந்தும் எனில் வைத்துக்கொள்வோம்.ஆனால் ஏனோ எனக்கு சிறுபிணக்குகள் போன்ற பொருளே தூக்கலாகத் தெரிகின்றது. 26 சொற்களில் சிலவற்றைப் பரிந்துரைக்கலாம். பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் பொருள் வலுவூன்றும். செற்றல், அடல், செருகளம், பொருதல், பொருகளம் என்பன போன்ற மேற்குறித்த சொற்கள் இலக்கியபற்பல இடங்களில் நன்கு பயன்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் ஆங்கிலத்தில் சொல்வழங்கும் பாங்குபோல் தமிழ்ச்சூழலில் (மிக அண்மைக்காலச் சூழலில்) இல்லாமல் இருப்பதால் நாம் பல வழிகளிலும் வளர்ச்சியை ஒதுக்குகிறோம். பெல்சியம் அடலை (Battle of Belgium)என்று எழுதலாம். உள்ளே அடலை என்பது படைகள் பொருதுதல் (மோதுதல்), அடல் = கொல் என்னும் குறிப்புகளைத் தக்கவாறு தரலாம். அடுகளம், பொருகளம், செருகளம் முதலான சொற்களையும் தக்க இடங்களில் பயன்படுத்தலாம். இவற்றை எண்ணிப்பார்க்கவே இடுகின்றேன். இயலும் இடங்களில் செயற்படுத்துவோம். (யுத்தம், சமர், சண்டை யாவுமே சமசுக்கிருதம்தான்) --செல்வா 18:02, 2 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
குறும்பன், எங்கு எந்தச்சொல்லைப் பயன்படுத்தலாம் என்று எழுதுக்கிறேன் (பரிந்துரைதான்). சோடாபாட்டில் சொன்ன skirmish, probe/recon, raid, battle, campaign, war போன்றவற்றுக்கும் நிறைய சொற்கள் உள்ளன. பொதுவாக சின்ன சண்டை முதல் பலவகையான பெரும்போர்கள் வரை பலவற்றுக்கும் சொற்கள் உள்ளன. சிறுசண்டைகளை அடிதடி, அடிபிடி, மடிபிடி, கோளாறு (= Quarrel, tumult, scuffle), சள்ளுபுள்ளு (Quarrel) என்பர். சிறு சண்டைகளுக்கு சிலுகு, சிலுகிடுதல் என்பர். இதற்கான பிறசொற்கள் , புரளி (Quarrel, wrangle, broil), பூசல். ஒரு நாட்டின் மீது அல்லது ஒரு பகுதியின் மீது படையெடுத்தல் (invade) என்பது அந்நாட்டை அல்லது அப்பகுதியைப் பிடிப்பதற்காகச் செல்வது. இதே படையெடுத்தல் என்பதை தளமெடுத்தல் (ivade) என்றும் கூறுவர். மேலே சொன்ன 26 சொற்களையும் எங்குப் பயன்படுத்தலாம் என்று பின்னர் எழுதுகிறேன்.--செல்வா 00:58, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா என்பதை வழிமாற்ற வேண்டாம் தொகு

தமிழ் விக்கிப்பீடியா உள் இணைப்பு தற்போது வழிமாற்றப்பட்ட முதற் பக்கத்க்கு போகிறது. அதை வழிமாற்றாமல், ஒரு கட்டுரையாக ஆக்க வேண்டும். --Natkeeran 19:19, 2 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

ஆம், விரைந்து செய்ய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 05:13, 3 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியா (மொழிவாரி விக்கிப்பீடியாக்கள்) என்ற கட்டுரை உள்ளது. அதற்கு வழிமாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக 06:54, 3 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

மடற்குழு தொகு

தமிழ் விக்கித் திட்டங்கள் தொடர்பான அறிக்கைகளுக்கும், வெளியாட்களுடனான கலந்துரையாடல்களுக்கும், சில வேளைகளில் நமக்கிடையேயான உரையாடல்களுக்கும் https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l என்ற மடற்குழுவைப் பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 05:09, 3 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி. பயனுடையதாக இருக்கும் என்று நம்புகிறேன்.--செல்வா 01:04, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

எழுத்துப்பிழை திருத்தப்பட வேண்டும் தொகு

கட்டுரையின் ஒவ்வொரு பக்கத்திலும் மேற்பகுதியில் இடம் பெற்றுள்ள ‘’தொகு’’ எனும் இடத்திற்கு உலாவியைக் கொண்டு செல்லும் பொழுது பார்வைக்கு ஒரு பெட்டிச் செய்தி கிடைக்கிறது. இந்த பெட்டிச் செய்தியில் ”நீங்கள் இப்பக்கத்தை தொக்குக்க முடியும். “முன்தோற்றம் காட்டு” பொத்தானைப் பயன்படுத்திய பின்ன உங்கள் மாற்றங்களைச் சேமிக்கவும்.[alt-e]" என்று உள்ளது. இந்தச் செய்தியிலுள்ள ’’’தொக்குக்க’’’ என்பது ’’’தொகுக்க’’’ என்றும், ’’’பின்ன’’’ என்பது ’’’பின்னர்’’’ என்றும் சரி செய்யப்பட வேண்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி. 05:42, 3 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி சுப்பிரமணி. திருத்தி விட்டேன். திருத்தப்பட்ட செய்தி இங்குள்ளது. இந்த மாற்றம் த. விக்கியில் தெரிவதற்கு ஓரிரு நாட்கள் வரை ஆகலாம். மீடியாவிக்கி மாற்றங்களை உடனுக்குடன் அவர்கள் வெளியிடுவதில்லை. சேர்த்து வைத்து வெளியிடுகிறார்கள். அடுத்த வெளியீட்டின் போது. இந்த மாற்றம் இங்கு தெரியும். நீங்களும் translate wiki யில் கணக்கு தொடங்கி விட்டால் நீங்களே மாற்றி விடலாம். (நான் ஒரு வாரமாக அங்கே தட்டுத் தடுமாறி சுற்றிக் கொண்டிருக்கிறேன் :-)). திருச்சி பெரியண்ணனும் செல்வாவும் அங்கே தற்சமயம் முனைப்பாக தமிழாக்கப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவர்களைக் கேட்டுக் கொள்ளலாம். --சோடாபாட்டில் 05:57, 3 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
நானும் translatewiki-ல் துழாவித்துழாவிக் களைத்து விட்டேன். இப்போதுதான் புரிகிறது, நான் தேடத்தொடங்கும் முன் சோடாபாட்டில் பிழையைத் திருத்தியுள்ளார் என்று. :) இந்தப் பிழையைச் சுட்டியமைக்கு நன்றி சுப்பிரமணி. மீடியாவிக்கிச் செய்திகளில் உள்ள பிழைகள் பல்லாயிரம் கட்டுரைகளில் தென்படுவதில் கூடுதல் கவனம் தேவை. -- சுந்தர் \பேச்சு 06:17, 3 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

25,000 கட்டுரைகள் தொகு

வெகு விரைவில் நாம் 25,000 கட்டுரைகளை எட்ட இருக்கிறோம். இதுகுறித்து முறைப்படியான அறிவிப்பு ஒன்றை தமிழ்விக்கி வலைப்பதிவிலும் கீச்சு ஓடையிலும் வெளியிடலாமே? வத்சன் கீச்சு ஓடையின் கடவுச்சொல்லை வைத்துள்ளார். Cotweet-ஐப் பயன்படுத்தினால் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செய்தி வெளியிடலாம். மலையாள விக்கி நண்பர்கள் அடிக்கடி இத்தகைய செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். -- சுந்தர் \பேச்சு 14:41, 5 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

இது இன்னுமொரு மைல்கல்தான். வெறும் எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், பல்வகைத் தர அளவீடுகளிலும் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதாகவே எண்ணுகிறேன். எனினும் போதுமான அளவு கட்டுரைகளின் தரநிலைகளை நாம் அடையாளப்படுத்தவில்லை. 25ஆயி கட்டுரைகளில் எத்தனை முதல்தரமாக (5 நாள்மீன்/விண்மீன்), எத்தனை மிகநல்லகட்டுரையாக (4 நாள்மீன்/விண்மீன்), எத்தனை நல்ல கட்டுரையாக (3 நாள்மீன்/விண்மீன்) உள்ளன என்று அறிந்தால் நன்றாக இருக்கும். இவ்வகையான நல்ல கட்டுரைகள் எந்தெந்த பகுப்புகளில் (இயற்பியல், வேதியல், உயிரியல், நாடுகள்...) உள்ளன என்றும் அறியத் தேவை உள்ளது. 25 ஆயிரத்தில் 5 ஆயிரம் கட்டுரைகள் 3 நாள்மீன்/விண்மீன் தரத்துக்கு மேலுள்ளனவா? என்பதான கேள்விகள் உள்ளதுள் எழுகின்றன. பயனுடைய ஒரு கலைக்களஞ்சியமாக த.வி உருவாகிவருகின்றது என்பதில் எனக்கு ஓர் ஐயமும் இல்லை. பயனர்கள் யாவரின் கூட்டு வெற்றி இது. வாழ்க! மேலும் வளர்வோம் (பல கோணங்களில்)! --செல்வா 16:00, 5 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
ஆம், செல்வா. இத்தகைய மதிப்பீடு இன்றியமையாதது. மிகுதியாக உயிரியல் கட்டுரைகளே எழுதிவிட்டுக் கடைசியாக டாலர் ஏலம் கட்டுரையில் இணைப்புகள் தர முனைந்தபோது பொருளியலில் பல அடிப்படையான தலைப்புகளில் கட்டுரைகளே இல்லை என்பதையும், பொருளியலைப் பற்றிய கட்டுரையே மெச்சத் தகுந்ததாக இல்லை என்றும் அறிந்து கவலையுற்றேன். கலாநிதிக்குப்பின் அத்துறையில் கூடுதல் ஆர்வமுடைய துறை ஆர்வலர்களை நாம் ஈர்க்கவில்லை என்று புலனாகிறது. இது போல ஒரு சில துறைகள் நலிவடைந்து இருப்பது நல்லதல்ல. -- சுந்தர் \பேச்சு 16:27, 5 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
ஆம் சுந்தர் பொருளியல் கோட்பாடுகள் பற்றி நிறைய எழுத வேண்டியுள்ளது. அக்டோபர் 6, 2010 ஆகிய இன்று 25,000 கட்டுரைகள் இலக்கை எட்டிவிடுவோம் என்று நினைக்கின்றேன். --செல்வா 04:56, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
 
25,000 கட்டுரைகள் எட்டிய நாள் அக்டோபர் 6, 2010 வாழ்த்துகள்--செல்வா 05:42, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

25,000 மைல்கல் கட்டுரை அயோனியன் கடல் என்று நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:31, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

திருத்தம் செய்ய வேண்டும் தொகு

  • பயனர் புகுபதிகை செய்தவுடன் அனைத்துப் பக்கங்களின் மேல் பகுதியில் தோன்றும் Take me back, New features, பயனர் பெயர்,என் பேச்சு, என் விருப்பத்தேர்வுகள், என் கவனிப்புப் பட்டியல், என் பங்களிப்புக்கள், விடுபதிகை ஆகியவற்றில் அனைத்துத் தலைப்புகளிலும் உலாவியைக் கொண்டு செல்லும் பொழுது “உங்கள்...” என சுட்டுவதாக செய்தி கிடைக்கிறது. ஆனால், என் விருப்பத்தேர்வுகள் மட்டும் அப்படியே ”என் விருப்பத் தேர்வுகள்” எனக் காட்டுகிறது. இங்கும் ”உங்கள் விருப்பத் தேர்வுகள்” என்று சுட்டுவதாக இருந்தால்தானே சரியாக இருக்கும். --தேனி.எம்.சுப்பிரமணி. 01:26, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி சுப்பிரமணி செய்து விட்டேன். ஒரிரு நாட்களில் இங்கு வந்து விடும்.--சோடாபாட்டில் 03:25, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

உதவி தொகு

நேற்றிலிருந்து என்னால் புதிய பக்கங்களை உருவாக்கவோ பழைய பக்ககங்‌களைத் தொகுக்கவோ இயலவி‌ல்லை. தொகு இணைப்பை அழுத்தினால் index.php என்று பதிவிறக்கம் ஆகிறதே தவிர தொகுத்தல் பக்கம் வரவில்லை. நான் மொசீலா மற்றும் எபிக் உலாவிகளைப் பயன்படுத்துகிறேன். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 07:04, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

இரண்டு வேலைகள் செய்து பாருங்கள் 1) உங்கள் உலாவியின் cache ஐ சுத்தமாக எடுத்து விடுங்கள் (உலாவி வழியாகவே, அல்லது முடிந்தால், os file/folder களையே நீக்குவது நலம் 2) இண்டெர்நெட் எக்ஸ்புளோரலும் இதே போல் நடக்கிறதா என்று சோதனை செய்து பாருங்கள்--சோடாபாட்டில் 07:12, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
இரண்டு வேலைகளையும் செய்து விட்டேன். சரியாகவில்லை. --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 07:29, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
கார்த்திகேயன், இது கட்டுரைவெளியில் மட்டும்தான் நிகழ்கிறதா? ஏனெனில் இங்கு ஆலமரத்தடியில் உங்களால் தொகுக்க முடிகிறதே. உங்கள் விருப்பத்தேர்வுகளில் வேறு இடைமுகத்தோலைத் தெரிவு செய்து பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 07:32, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
ஆலமரத்தடியிலும் +_ குறியீட்டை அழுத்தியோ அல்லது உட்தலைப்பில் உள்ள தொகு இணைப்பை அழுத்தியோ தான் தொகுக்க முடிகிறது. முதன்மைத் தொகு இணைப்பு பிரச்சனை செய்கிறது. இடைமுகத்தோலை மாற்றியும் சரியாகவில்லை. --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 07:42, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

புகுபதிகை செய்யாது ஐ.பியாக தொகுக்க முடிகிறதா (பிரச்சனை உங்கள் பயனர் கணக்கிலா, மென்பொருளிலா என்பதை உறுதி செய்ய)--சோடாபாட்டில் 07:52, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

விடுபதிகை செய்தால் தொகுக்க முடிகிறது--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 08:21, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

அப்படியெனில் சிறப்பு:Preferences/reset செய்து பாருங்கள். (எச்சரிக்கை: உங்கள் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் முன்னிருந்த நிலைக்குப் போய்விடும்.) -- சுந்தர் \பேச்சு 08:34, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி சுந்தர். பிரச்சினை தீர்ந்தது. ஆனால் சோடாபாட்டில் சொன்னது போல என்னுடைய பயனர் கணக்கில் தான் பிரச்சனை எனத் தெரிகிறது. அது என்னவாக இருக்கும்.--பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 08:58, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
ஏதேனும் புதுக்கருவியை முடுக்கியிருக்கலாம். ஆல்லது நீங்கள் தெரிவு செய்திருந்த தோலுக்கான CSS-நிரல் அண்மையில் மாற்றப்பட்டிருக்கலாம். -- சுந்தர் \பேச்சு 09:08, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

Fundraising 2010: Beat Jimmy Challenge தொகு

First, congrats on 25,000 articles!!

The Fundraising Committee is issuing all interested community members a challenge: we want you to beat Jimmy. The appeal from Jimmy Wales and the corresponding banner have been tested head-to-head with other successful banners, and the results are clear: it's our best performing message... by a lot. This year we have a lofty fundraising goal; we need all of our banners to bring in donations like the Jimmy Appeal, but no one wants to keep the Jimmy banner up for two months. We want to run donor quotes, and other wonderful ideas, but we have to have banners that work as well as or better than the Jimmy appeal.

We've just released the highlights from a donor focus group, and the results of our donor survey. With one month to the launch of the fundraiser, the messages we test must be driven by data from our tests and surveys - we can no longer rely on instinct alone.

We've redesigned our fundraising meta pages with the Jimmy challenge; check out the survey results and propose/discuss banners that reflect these findings. Add the banners you think will 'beat Jimmy' here to be tested Tuesday October 12 against Jimmy. -Dgultekin 00:06, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

தேவையற்ற மாற்றம் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பக்க வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு பக்கத்தின் மேலிருந்த அப்பக்கம் தொடர்பான சில தலைப்புகளும் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தேவையற்றது என்றே கருதுகிறேன். முன்பு அனைத்துத் தலைப்புகளும் பார்வைக்குக் கிடைக்கும். தற்போது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. இதற்கு தலைப்புகளின் தேவையற்ற விரிவாக்கமே காரணம். உதாரணமாக, வரலாறு என்பது வரலாற்றைக் காட்டவும் என்றும், மூலம் என்பது மூலத்தைக் காட்டவும் என்றும் மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற நீண்ட தலைப்புகளை மாற்றி, சிறு தலைப்புகளாக வைத்து, அந்த இடத்தில் உலாவியைக் கொண்டு செல்லும் பொழுது விளக்கம் தரும் செய்தியைப் பெட்டிச் செய்தியாக அளிக்க வேண்டும். பக்க வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது (?) எனினும் இந்தத் தலைப்பு மாற்றம் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வரும் புதுப் பயனர்களுக்கு ஏமாற்றம் தரும். தேவையற்ற மாற்றம், தேவையான மாற்றமாக்கப்படுமா?--தேனி.எம்.சுப்பிரமணி. 01:19, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நீங்கள் எதைச் சுட்டுகிறீங்கள் என்று விளங்கவில்லை. --Natkeeran 01:46, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
  • ஒவ்வொரு கட்டுரையின் மேல் பகுதியிலும் இடம் பெற்றுள்ள கட்டுரை, உரையாடல், வாசிக்கவும், தொகு, வரலாற்றைக் காட்டவும், நகர்த்தவும் என்றும் உள்ள கட்டுரைக்கான வழிகாட்டல் தலைப்புகளைத்தான் நான் குறிப்பிட்டேன். இதில் வாசிக்கவும் என்பது வாசிக்க எனவும்,வரலாற்றைக் காட்டவும் என்பது வரலாறு எனவும், நகர்த்தவும் என்பதும் நகர்த்து எனவும் இருந்தாலே நன்றாக இருக்கும். இதுபோல் முதற் பக்கத்தில் இடம் பெற்றுள்ள மூலத்தைக் காட்டவும் என்பது மூலம் என்றிருந்தாலே நன்றாக இருக்கும். இந்தத் தலைப்புகளில் நீட்சி தேவையில்லை என்பதே எனது கருத்து. --தேனி.எம்.சுப்பிரமணி. 02:20, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
உங்கள் கருத்துடன் முற்றிலும் ஒத்துப் போகிறேன். சுருக்கமாக இருப்பதே அழகாக இருக்கும். பொருள் வேறுபாடு பெரிதாக இருக்காது. இது புதிய வடிவமைப்பில்லேயே அப்படி உள்ளது. பழைய வடிவமைப்பில் பழையபடியே உள்ளது. --Natkeeran 02:22, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
எனக்கும் ஒப்புதல் தான். தலைப்பு நீளமாக இருந்தால், நெட்புக் போன்று சின்னத்திரை கருவிகளில் சில தலைப்புகள் dropdown list க்குப் போய் விடுகின்றன. ஆனால், இத்தலைப்புகள் புதிய பயனர்களுக்கு புரிகின்றவா என்பதைக் கொண்டு மற்றும் மாற்ற வேண்டுமென்பது என் கருத்து (நமக்கு எப்படியென்றாலும் தெரியும், புதிதாக வருபவர்களுக்கு புரிகிறதா என்பது தெரியவில்லை)..--சோடாபாட்டில் 04:27, 7 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

2010 ஆம் ஆண்டுக்கான நோபலியர் சுருக்க வரலாறுகளை விரைவாக எழுதியதற்குப் பாராட்டுகள் தொகு

சிறீதரன் கனகு, பரிதிமதி, சோடாபாட்டில் மூவரும் உடனுக்குடன் 2010 ஆம் ஆண்டுக்கான நோபலியர்களின் சுருக்க வரலாறுகளை எழுதியதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்பான கருத்துகளைப் பற்றிய கட்டுரைகளையும் எழுத வேண்டும். செய்வோம்.--செல்வா 15:03, 8 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நோய்களை வகைப்படுத்தல் தொகு

நாம் நோய்களை பொதுவான நோய்கள் என்ற பகுப்புக்குள் இட்டு வருகிறோம். அந்தப் பகுப்பு பெரிதாகி வளருகிறது. இதை ஒரு நல்ல முறைப்படி வகைப்படுத்தல் அவசியமாகும். எ.கா நோய்களுக்கும் தொடர்புடைய நலச் சிக்கல்களுக்குமான சர்வதேச புள்ளிவிய வகைப்பாடு. இதை மருத்துவம், உயிரியல் துறையினர் கவனத்தில் எடுக்க வேண்டும். நன்றி. --Natkeeran 15:58, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

  • நன்றி நக்கீரன், நானும் அவதானித்தேன், இதனைப் பல வழிகளில் செய்யலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் நன்றாக வகைப்படுத்தி உள்ளனர், அது போலவே நாமும் இங்கு செய்தல் நன்று, எ.கா : Myocardial infarction இங்கு வலது புறத்தில் உள்ள அட்டவணையிலேயே நோய்களுக்கும் தொடர்புடைய நலச் சிக்கல்களுக்குமான சர்வதேச புள்ளிவிய வகைப்பாடு (ICD 10, 9) இடப்பட்டுள்ளது. அதனது வெளி இணைப்பு 'உலக சுகாதார திணைக்களத்தின்' ICD பக்கத்திற்கு இணைக்கப்பட்டுள்ளது. எனது கருத்துப்படி ஒவ்வொரு தொகுதிகளும், (சுவாசத்தொகுதி, நரம்புத்தொகுதி, குருதிச்சுற்றோட்டத் தொகுதி) அவற்றின் துணைப்பகுப்புகளும் அவசியம் தேவை. சில பகுப்புகளை நான் உருவாக்குகிறேன், ஏதேனும் பிழைகள் இருந்தால் அருள் கூர்ந்து திருத்தியமைக்க உதவவும். மேலே நான் கூறியது போன்ற அட்டவணைக்கு வார்ப்புரு ஒன்றும் தயாரித்தல் நன்று. --சி. செந்தி 19:53, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி செந்தில். தொகுதிகளுக்கும் பகுப்பு உருவாக்குவது நன்றே. நிச்சியமாக உதவு முடியும். --Natkeeran 20:14, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
வார்ப்புரு இதுவே: வார்ப்புரு:தகவற்சட்டம் நோய், இதைத் தமிழிப்படுத்த வேண்டும். --Natkeeran 20:19, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப்பீடியாவில் Diseases_and_disorders என்னும் பகுப்பில் 45 துணைப்பகுப்புகளும் ஏறத்தாழ 3,200 கட்டுரைகளும் இருப்பதாகக் காட்டுகின்றது. இதனை முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு செய்யலாம். இடாய்ச்சு மொழியில் ஏறத்தாழ 2,000 கட்டுரைகள் உள்ளன (30 துணைப்பகுப்புகளும் அவற்றின் உட்பகுப்புகளும் உள்ளன). பிராசியத்தில் ஏறத்தாழ 400 கட்டுரைகள் 21 துணைப்பகுப்புகளில் உள்ளன. உருசிய மொழியில் 45 துணைப்பகுப்புகளில் ஏறத்தாழ 2,000 கட்டுரைகள் உள்ளன. செந்திக்கு உருசிய மொழி நன்கு தெரியுமாதலால், இம்மொழி விக்கிகளில் உள்ளவன்ற்றை முற்காட்டுகளாகக் கொள்ளலாம். --செல்வா 23:25, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

Transliteration tool தொகு

மலையாள விக்கியில் உள்ளது போல transliteration கருவிப்பட்டை நாமும் இணைப்பது வேண்டாவென்று முடிவெடுத்துள்ளோமா? விக்கிப்பீடியா:தமிழ் எழுத்துப்பெயர்ப்பு பொத்தான் இப்பக்கத்தில் புதிதாக எதுவும் சேர்க்கப்படவில்லை. நான் முயன்று பார்க்கவா?--சோடாபாட்டில் 10:16, 11 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

  • நண்பர் சோடாபாட்டில் நல்லது எதுவோ அதைச் செய்வதில் தங்களுக்குத் தயக்கம் ஏன்? அதன் மூலம் புதிய பயனர்கள் தங்கள் கட்டுரைகளை இணைக்க உதவிகரமாக இருக்குமென்று நினைக்கிறேன்.தாராளமாக இணையுங்கள். --தேனி.எம்.சுப்பிரமணி. 18:08, 11 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
இல்லை சுப்பிரமணி Tamil99 vs phonetic transliteration இல் வேண்டாமென்று முடிவு செய்திருக்கிறோமா என்றொரு சந்தேகம். பழைய ஆர்கைவுகளில் ஒன்றும் காணோம். எதற்கும் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாமே என்று கேட்டேன்.--சோடாபாட்டில் 18:16, 11 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
சேருங்கள், முயன்று பார்த்தோம், நுட்பச் சிக்கல்களால் நிறைவேற்றப் படவில்லை. --Natkeeran 18:17, 11 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

நானும் முயன்றேன். http://en.wikipedia.org/wiki/User:Mahir78/t99Map.js , http://en.wikipedia.org/wiki/User:Mahir78/monobook.js ஆகியவைகளைப் பார்க்கவும். jquery உபயோகித்தால் எளிதாக உருவாக்கிவிடலாம் என்று நினைக்கிறேன். உங்களோடு சேர்ந்து செய்கிறேன். -- மாஹிர் 18:26, 15 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]