விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு97

Proposed optional changes to Terms of Use amendment தொகு

Hello all, in response to some community comments in the discussion on the amendment to the Terms of Use on undisclosed paid editing, we have prepared two optional changes. Please read about these optional changes on Meta wiki and share your comments. If you can (and this is a non english project), please translate this announcement. Thanks! Slaporte (WMF) 21:56, 13 மார்ச் 2014 (UTC)

கையெழுத்து தொகு

கையெழுத்து பற்றிய (எப்படி அமைய வேண்டும்) விளக்கம் இங்கு போதிய அளவில் இல்லை. ஆ.வி.யில் அது பற்றி போதிய அளவில் அறியலாம். குறிப்பாக, படங்கள் கையெழுத்தில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாய அறிவுறுத்தல். அங்கு உள்ளதை அப்படியே இங்கு பிரிதி செய்துள்ளேன்.

Images of any kind must not be used in signatures for the following reasons:

  • They are an unnecessary drain on server resources, and could cause server slowdown
  • A new image can be uploaded in place of the one you chose, making your signature a target for possible vandalism and denial-of-service attacks
  • They make pages more difficult to read and scan
  • They make it more difficult to copy text from a page
  • They are potentially distracting from the actual content
  • Images do not scale with the text, making the lines with images higher than those without them
  • They clutter up the "file links" list on the respective image's page every time one signs on a different talk page
  • Images in signatures give undue prominence to a given user's contribution

எனவே, தயவு செய்து கையெழுத்தில் படங்களைப் பயன்படுத்துபவர்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --AntonTalk 02:23, 14 மார்ச் 2014 (UTC)

கூகிள் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் நீக்க வேண்டுகோள் தொகு

கூகிள் மொழிபெயர்ப்பு திட்டத்தில் உருவாக்கப்பட்டு, குப்பையாக தேங்கியிருக்கும் கட்டுரைகள் நீக்க வேண்டும். இதற்கு பிறபயனர்களின் கருத்துகள் தேவை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:20, 17 மார்ச் 2014 (UTC)

  1.   எதிர்ப்பு. இவற்றை மேம்படுத்துவதற்கு ஒரு திட்டம் அறிவிக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 07:27, 17 மார்ச் 2014 (UTC)
  2. அவைகள் கட்டுரைகளை அல்ல. மின்குப்பைகள். அவைகளை இன்றளவும் கட்டுரைப்பகுதியில் பேணப்படுவது, பொருத்தமாக எனக்குப்படவில்லை. அவைகளை அப்படியே பேச்சுப்பக்கத்திற்கு மாற்றி விட்டு, படங்கள் போன்ற தேவையானவைகளை கட்டுரைப்பகுதியில் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் ஆழ்ந்த அனுபவம் உள்ள சுந்தரும், இரவியும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 07:49, 17 மார்ச் 2014 (UTC)
  3. அவற்றை ஓர் திட்டத்தின் மூலம் மேம்படுத்தல்/குறுக்குதல்/நீக்குதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுமார் 1000 கட்டுரைகள் உள்ளன என எண்ணுகிறேன்.
    1. இவற்றில் சிலவற்றிற்கு பிற கட்டுரைகளிலிருந்து உள்ளிணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றைத் தனியாக கவனிக்க வேண்டும்.
    2. சில பகுதியாக மேம்படுத்தப்பட்டுள்ளன; இந்த மேம்படுத்தலை முழுமையாக்க வேண்டும் அல்லது கட்டுரையை குறுக்க வேண்டும்.
    3. சில தமிழ் விக்கிக்கு மிகத் தேவையான தலைப்புகளிலும் கூகுள் கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றையும் தரமுயர்த்த தனித் திட்டம் வகுக்க வேண்டும்.
    4. முற்றிலும் மேம்படுத்த இயலாத, தமிழ் விக்கிக்கு உடனடியாக தேவையற்ற, பிற கட்டுரைகளுக்கு உள்ளிணைப்புக் கொடுக்கப்படாத கட்டுரைகளை இனம் கண்டு நீக்கலாம்.--மணியன் (பேச்சு) 08:42, 17 மார்ச் 2014 (UTC)
  4. மேம்படுத்த வாய்ப்பே இல்லாத கட்டுரைகளை நீக்கலாம். ஆனால் அத்தலைப்பில் ஐந்து ஆறு வரியில் குறுங்கட்டுரையாவது உருவாக்கி விட்டு நீக்கலாம் என்பது எனது கருத்து. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:53, 17 மார்ச் 2014 (UTC)
  5. மேம்படுத்தக் கூடியவற்றை சரிசெய்வதே உகந்தது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:44, 17 மார்ச் 2014 (UTC)
  6. பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் தள அறிவிப்பு தோற்றம் மூலம் கட்டுரைகளை மேம்படுத்த மீண்டும் வேண்டுகோள் விடுக்கலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 10:06, 17 மார்ச் 2014 (UTC)
  7. மேலே கூகிள் கட்டுரைகளை “மின்குப்பைகள்” என்று தகவலுழவன் கூறுவதோடு எனக்கு உடன்பாடு இல்லை. அதே நேரத்தில் அக்கட்டுரைகளை நல்ல தமிழில் மாற்றியமைப்பதும் கடினமான செயல் என்பதையும் உணர்கின்றேன். எனவே, அனைத்து கூகிள் கட்டுரைகளையும் ஒரே குட்டையில் உள்ளனவாகக் கொள்ளாமல், ஒவ்வொன்றையும் அதன் தராதரம் கணித்து முறையாக அணுக வேண்டும் என்று நினைக்கிறேன். சில கட்டுரைகளை முற்றிலுமாகச் சரிப்படுத்த இயலுமென்றால் அவ்வாறு சரிப்படுத்த வேண்டும். சில கட்டுரைகளைக் குறுங்கட்டுரை நிலைக்குச் சுருக்க வேண்டும். சிலவற்றைத் தேவையானால் நீக்க வேண்டும். என்றாலும், எந்தவொரு கட்டுரையையும் பயனர்கள் சொந்த விருப்பத்துக்கு ஏற்ப நீக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். முதலில் உரையாடல் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துவிட்டு, பிற பயனர்களின் கருத்துகளையும் அறிந்து செயல்படுவது விக்கி நற்பண்புகளுக்கு உகந்ததாக இருக்கும் என்று கருதுகிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 13:53, 17 மார்ச் 2014 (UTC)
  8. திட்டம் 2009ல் தொடங்கி 2014 வந்து விட்டது. இனிமேலும் இவற்றைச் சீர்திருத்த யாரும் பிறந்து வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. வேண்டுமானால், இவற்றைச் சீர்திருத்துவோருக்கு சென்னை சத்தியம் திரையரங்கு அருகில் உள்ள 10 ஏக்கர் தென்னந்தோப்பை எழுதி வைப்பதாக ஒரு பரிசுப் போட்டி அறிவித்துப் பார்க்கலாம் :) கட்டுரைகளை நீக்கக் கூடாது என்று இதற்கு முன்பும் பலரும் கூறி உள்ளோம். ஆனால், சோடாபாட்டில் போன்ற ஒரு சிலரைத் தவிர யாரும் பொறுப்பு கட்டுரைகளை மேம்படுத்த முனையவில்லை. இனியும் கட்டுரைகளை நீக்கக் கூடாது என்போர் தெளிவான கால எல்லையோடு கூடிய திட்டத்தை முன்வைத்து இக்கட்டுரைகளின் தரத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும். என்னுடைய பரிந்துரை: 2016 முடியும் வரை காலம் தரலாம். அதற்குப் பிறகும் முன்னேற்றம் இல்லை என்றால், ஒவ்வொரு கட்டுரையாக அலசி, தரமற்றவற்றைக் குறுங்கட்டுரை அளவுக்குச் சுருக்கி விட்டு எஞ்சிய உரையை பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்தலாம். பல கட்டுரைகளில் பகுதியளவிலேனும் முன்னேற்றுவதற்கான உழைப்பு செலுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக கண்மூடித்தனமாக நீக்குவது சரியாக இருக்காது.--இரவி (பேச்சு) 21:00, 17 மார்ச் 2014 (UTC)
  9. எனக்கு வாகையர் பட்டத்துடன் சென்னை சத்தியம் திரையரங்கு அருகில் உள்ள 10 ஏக்கர் தென்னந்தோப்பும் வேண்டும் :) கூகுள் கட்டுரைகளை உரைதிருத்த ஆர்வமாக உள்ளேன். ஆனால் கட்டுரைப்போட்டி நடந்துகொண்டிருப்பதால் தற்போது உரைதிருத்த முடியாதுள்ளது. முடிந்த பின்னர் விரிவாக்கக் காத்திருக்கின்றேன். கட்டுரைப் போட்டியில் gap விட்டா ஆப்பு ஆயிடும்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:57, 18 மார்ச் 2014 (UTC)
  10. அப்படிஎன்றால் பள்ளி மாணவர்கள் சேர்ந்து அதில் உதவலாம்!... ஆர் ஆர் வர்ரிங்க?? :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:19, 18 மார்ச் 2014 (UTC)
  11. ஸ்ரீகர்சன், உங்களுடைய ஆர்வத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி, இக்கட்டுரைகளை மேம்படுத்துவது குறித்த நடைமுறைச் சிக்கல்கள் பற்றி கூறுவது என் கடமையாகிறது. 2006-ம் ஆண்டு மொழிபெயர்கப்பட்ட கட்டுரைகளில் சுமார் 2000 கட்டுரைகள் தற்போது குப்பைகளாக உள்ளன. குப்பைகள் என்று சொல்லுவதற்கான முதல் காரணம் அவை இயந்திர மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஆகும். கூகிள் மொழிபெயர்ப்பு கட்டுரை உருவாக்கியதின் நோக்கம், தமிழ் விக்கிப்பீடியாவின் அவசியமாக இருக்க வேண்டிய கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்து இயந்திர மொழிபெயர்ப்பின் மூலமாக உருவாக்கப்பட்டவை, அப்படியே மேம்படுத்துவதற்கும் அதிக காலம் தேவைப்படுகிறது. தற்போது இத்தலைப்பில் ஏற்கனவே கட்டுரைகள் இருப்பதால் புதியதாக தொடங்க நினைப்பவர்கள் தயங்குகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில், இந்த 2000 கட்டுரைகளை தவிர்த்து பல்லாயிரம் உயர்தரமான கட்டுரைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் மேம்படுத்தலாம், ஒருவேளை கட்டுரைகள் நீக்கப்பட்டால் புதியதாக எழுதுபவர்கள் நன்முறையில் சிரமமின்றி எழுதலாம். இரவி சொல்வது போல 2016 வரை பொறுத்திருக்க முடியாது ;) வேண்டுமானால் இன்னும் 6 மாதம் அவகாசம் தருகிறேன். :D --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:29, 19 மார்ச் 2014 (UTC)
  12. கூகிள் மொழிபெயர்ப்பாக்கக் கட்டுரைகள் அனைத்தையும் ஒரேயடியாக நீக்குவது தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது.
    1. அனைத்துமே மின்குப்பைகள் என்று கொள்ள முடியாது. பல கட்டுரைகள் அவசியமானவையாகவும், தகவல் செறிந்தவையாகவும் இருக்கின்றன. ஆனால் பிழைகள் அதிகம் இருப்பதனாலும், மிக நீண்ட கட்டுரைகளாக இருப்பதனாலும், மேம்படுத்த ஆர்வம் இருப்பினும், அவற்றை மேம்படுத்துமளவிற்கு எவருக்கும் பொறுமையும், நேரமும் இல்லாமல் இருக்கின்றதென்பதே உண்மை. எனவே அவசியமான அந்தக் கட்டுரைகளை முற்றாக நீக்குவது சரியல்ல.
    2. அவற்றில் சில கட்டுரைகளில் நான் முதல் பத்தியை மட்டும் மேம்படுத்தியிருக்கின்றேன். வேறு சிலவற்றில் காணக் கிடைக்கும் திருத்தங்களைச் செய்திருக்கின்றேன். வேறு கட்டுரைக்கான உள்ளிணைப்பை இணைக்கும்போது, இப்படியான ஒரு கட்டுரையைப் பார்க்க நேர்கையில் அவ்வாறு செய்திருக்கின்றேன். இவ்வாறு வேறும் பலர் செதிருக்கின்றார்கள் என்பதனையும் அறிவேன். எனவே கட்டுரைகளை முற்றாக நீக்கினால் நமது உழைப்பும் சேர்ந்தே வீணாகும் என்பதனையும் சிந்திக்க வேண்டும். வேண்டுமானால் முக்கியமான, அவசியமான தகவல்களை முதல் பத்தியில் இணைத்து ஒரு குறுங்கட்டுரையாக ஆக்கிவிட்டு, மிகுதியை நீக்கி விடலாம். அதாவது கட்டுரையை முற்றாக நீக்காமல், முக்கியமான சில தகவல்கள் சேர்க்கப்பட்ட பின்னர், மிகுதியாக இருக்கும் பகுதியை நீக்கிவிடலாம்.
    3. ஓரிரு கூகிள் கட்டுரைகளை முழுமையான மேம்படுத்திய பின்னர் கூகிள் மொழிபெயர்ப்பாக்கக் கட்டுரைக்கான வார்ப்புருவை நீக்கியதாக நினைவு. கூகிள் கட்டுரைகளை குறுங்கட்டுரையாக்கிவிட்டு, மிகுதியை நீக்கிவிடலாம் என்றால், அதனைச் செய்வது இன்னும் இலகுவாக இருக்குமென நினைக்கின்றேன். ஆனால் இதுபற்றி பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டு மற்றவர் கருத்தறிந்த பின்னர் நீக்குவது நல்லது. எந்த ஒரு கூகிள் கட்டுரையையும் நீக்க முன்னர், குறிப்பிட்ட தலைப்பில் ஒரு குறுங்கட்டுரையாவது உருவாக்கிவிட்டு, பின்னர் பழைய கட்டுரையை நீக்கலாம். "அழிப்பது இலகு. ஆக்குவதுதான் கடினம்" என்பதை நினைவில் கொண்டோம் என்றால் நல்லது. நானே சில கட்டுரைகளைப் பார்த்தபோது, பல தடவைகள் இந்தக் கூகிள் கட்டுரையை நீக்கிவிட்டு, புதிதாக நாமே ஒரு கட்டுரையை எழுதி விடலாமா என்று எண்ணியதுண்டு. ஆனால், அத்தனை தகவல் செறிவுடன் கட்டுரை ஒன்றை உருவாக்க வேண்டுமாயின் அதற்கு அதிக நேரமும், உழைப்பும் தேவை என்பதனை மறுக்க முடியாது.
    4. //தற்போது இத்தலைப்பில் ஏற்கனவே கட்டுரைகள் இருப்பதால் புதியதாகத் தொடங்க நினைப்பவர்கள் தயங்குகின்றனர்.////ஒருவேளை கட்டுரைகள் நீக்கப்பட்டால் புதியதாக எழுதுபவர்கள் நன்முறையில் சிரமமின்றி எழுதலாம்.// அப்படிப் புதிதாக எழுத நினைப்பவர்கள், மேலே சிலர் கூறியிருப்பதுபோல், குறிப்பிட்ட கட்டுரையை சிறிதளவாவது மேம்படுத்தி குறுங்கட்டுரையாக்கி விட்டு, மிகுதியாக இருப்பவற்றை நீக்கிய பின்னர் கூகிள் மொழிபெயர்ப்பாக்கக் கட்டுரைக்கான வார்ப்புருவை நீக்கலாம். அல்லது அதே தலைப்பில் புதிய ஒரு கட்டுரையை ஆக்கிவிட்டு (ஒரு பரீட்சார்த்தப் பக்கத்தை உருவாக்கிவிட்டு) பின்னர் இந்தக் கட்டுரையை நீக்கி, தாம் தொடங்கிய பக்கத்தை கட்டுரையாக்கிக் கொள்ளலாம். எப்படியிருப்பினும், ஒரு கட்டுரையை நீக்குவதற்கு முன்னர், அதற்கான ஒரு கட்டுரையை உருவாக்கி விட்டு நீக்குவதே சிறந்தது. கூகிள் மொழியாக்கக் கட்டுரைகளுக்கான தலைப்பில் புதிய கட்டுரை ஆக்க விரும்புகின்றவர்களுக்கு இதற்கான வழிகாட்டலை, ஒவ்வொரு கட்டுரையின் ஆரம்பத்திலும், ஒரு வார்ப்புரு மூலம் தந்து விடலாம். மேலும் ஒரு கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தைப் பார்த்து, அது கூகிள் மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பை மட்டும்தான் கொண்டதா, ஏனைய பயனர்களின் பங்களிப்பையும் கொண்டதா என்பதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி வேறு பயனர்களின் பங்களிப்பும் இருப்பின், அவை புதிய சிறந்த தகவல்களைக் கொண்டிருக்கவோ, அல்லது சிறந்த திருத்தங்களைக் கொண்டிருக்கவோ கூடும். எனவே கட்டுரை நீக்கத்திற்குப் பதிலாக புதிய கட்டுரை ஆக்கத்தின் பின்னர், கட்டுரை இணைப்பை மேற்கொள்ளலாம்.
    5. முற்றாக மேம்படுத்த முடியாத கட்டுரையாகவும், அவசியமற்ற கட்டுரையாகவும் கருதப்படுமாயின், பேச்சுப் பக்கத்தில் இதுபற்றிக் கூறி, ஏனையோரின் கருத்தறிந்த பின்னர் நீக்கலாம். அப்படி நீக்கப்பட வேண்டிய கட்டுரைகளுக்கென ஒரு பகுப்பை ஏற்படுத்தினால், இந்தத் திட்டத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பார்த்து கருத்துக்கூற உதவும்.
    6. //வேண்டுமானால் இன்னும் 6 மாதம் அவகாசம் தருகிறேன்//. இப்படிக் கால அவகாசம் வைத்துச் செய்வது கடினம் என்றே நினைக்கின்றேன். விக்கிப்பீடியாவில் பங்களிப்புச் செய்ய எவ்வளவு ஆர்வம் இருப்பினும், நேரம் கிடைப்பதைப் பொறுத்துத்தான் எவராலும் வேலை செய்ய முடியும். இத்தனை கட்டுரைகளையும் ஒரே தடவையில் பார்த்து, அனைத்தையும் உடனடியாகச் சரிசெய்வது முடியுமா என்பது தெரியாது. எனவே இதனைச் சிறிது சிறிதாகவே செய்யலாம் என்பது எனது கருத்து. இப்படியான தன்னார்வப் பணிகளில் திட்டம் போடுவது, கால எல்லை வகுப்பது எல்லாம் சுலபம், ஆனால் அதனை நடை முறைப்படுத்துவதுதான் கடினம் என்பதனை அனைவருமே அறிந்துள்ளோம் என நினைக்கின்றேன். காரணம் இதற்கான நேரத்தை ஒவ்வொருவரும் தேடி ஒதுக்க வேண்டிய நிலையில்தான் உள்ளோம். இந்தக் கால எல்லைக்குள் செய்யாவிட்டால், நீக்கி விடுவேன் என்று கூறுவது முறையல்ல.
    7. அவசரப்பட்டு அனைத்துக் கட்டுரைகளையும் நீக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எனது இறுதியான கருத்து. (இது தொடர்பில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படுமாயின், அது தொடர்பாக ஏற்படுத்தப்படும் புதிய பக்கங்களுக்கான இணைப்பை தயவு செய்து ஆலமரத்தடியில் தாருங்கள். ஏனெனில் நேரமின்மை காரணமாக அண்மைய மாற்றங்கள் அனைத்தையும் பார்வையிட முடியாமல் இருக்கும் என்னைப் போன்றவர்கள் இது தொடர்பில் அறிந்து கொள்ளவும், இத் திட்டத்தில் தமது பங்களிப்பை வழங்கவும் உதவும்.) நன்றி.--கலை (பேச்சு) 13:03, 22 மார்ச் 2014 (UTC)
  13. //2006-ம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளில் சுமார் 2000 கட்டுரைகள் தற்போது குப்பைகளாக உள்ளன. குப்பைகள் என்று சொல்லுவதற்கான முதல் காரணம் அவை இயந்திர மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் ஆகும்.// தினேஷ்குமார், முதலில் கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள். இவை 2009 ஆம் ஆண்டளவிலேயே எழுதப்பட்டன. இவை முழுக்க முழுக்க இயந்திர மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் அல்ல. ஒரு கட்டுரையின் 80-90 வீதமான பகுதி மனித உழைப்பால் உருவானது. விக்கிப்பீடியா பயனர்கள் அல்லாதோரால் இவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாலேயே இவை குப்பைகள் போன்று தோன்றுகின்றன. ஆனாலும் இவற்றில் பெரும்பான்மையானவை மனம் வைத்தால் திருத்தக்கூடியவையே. இவற்றைத் திருத்துவதற்கு இரவியின் அல்லது தினேசின் காலக்கெடு ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. உங்களால் முடியாதென்ற ஒரே காரணத்தால் நீக்கச் சொல்லுவது நியாயமில்லை.--Kanags \உரையாடுக 12:49, 22 மார்ச் 2014 (UTC)
  14. ஆம். அவை முற்று முழுதான இயந்திர மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் அல்ல. தவிரவும், அவற்றில் சிலவற்றை, மொழிபெயர்ப்புச் செய்தவர்களில் சிலரே, முன்னின்று திருத்தங்களையும் செய்திருக்கின்றார்கள். அத்துடன் விக்கிப் பயனர்களும் பல கட்டுரைகளில் திருத்தங்களைச் செய்திருக்கின்றார்கள். எனவே நீக்கப்பட முன்னர் ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனியாகப் பார்க்கப்பட வேண்டும். மேலும் இதற்குக் காலக்கெடு என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.--கலை (பேச்சு) 13:15, 22 மார்ச் 2014 (UTC)
  15. கூகிள் மூலம் மொழிபெயர்ப்புச் செய்த எல்லாக் கட்டுரைகளையும் நான் பார்க்கவில்லை. ஆனாலும் பல கட்டுரைகள் உரிய தரத்தில் இல்லை என்பது சரிதான். கட்டுரைகள் மிக நீளமாக இருப்பதனாலும், ஆங்கிலக் கட்டுரைகளோடு ஒத்துப் பார்த்துப் பிழைதிருத்தவேண்டி இருப்பதனாலும் இவற்றைத் திருத்துவதில் ஆர்வக் குறைவு இருப்பது எதிர் பார்க்கக்கூடியதே. எனவே இங்கு ஏற்கெனவே பல பயனர்கள் எடுத்துக்காட்டி இருப்பது போல் ஒரு திட்டத்தின் அடிப்படையில் தான் இவற்றைச் சரிசெய்ய முடியும். அதுவும் ஏறத்தாழ 1000 கட்டுரைகளை 6 மாதம் ஒரு வருடம் என்று கெடு வைத்துத் திருத்துவது சாத்தியமானது அல்ல. பகுதி பகுதியாகக் கட்டுரைகளைத் தெரிவு செய்து கட்டுரையின் தன்மையையும் முக்கியத்துவத்தையும் பொறுத்து முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியை மட்டுமோ திருத்திக்கொள்ள முடியும். ஆர்வமுள்ள பயனர்கள் ஒரு மாதத்துக்கு ஒரு கட்டுரையைப் பொறுப்பு எடுத்துத் திருத்த முயலலாம். நானும் சில கட்டுரைகளை இவ்வாறு பொறுப்பு எடுத்துச் செய்ய முடியும். ---மயூரநாதன் (பேச்சு) 18:22, 23 மார்ச் 2014 (UTC)
  16. தமிழ் விக்கிப்பீடியாவில் காலக்கெடு கொடுத்து ஒரு கட்டுரையை நீக்குவது வழமையே. தனியொரு கட்டுரைக்கே ஒரு மாதம் காலக்கெடு தரும் போது ஏறத்தாழ 1000 (2000 அன்று) கூகுள் கட்டுரைகளுக்கு உரிய நேரம் தரப்பட வேண்டும். ஒரு கட்டுரைக்கு ஒரு நாள் என்றால் 1000 கட்டுரைகளுக்கு 1000 நாட்கள். தோராயமாக மூன்று ஆண்டுகள். எனவே தான், 2016 இறுதி வரை காலம் கோரினேன். ஏனென்றால், உண்மையிலேயே யாராவது பொறுப்பெடுத்து செய்ய முன்வந்தால் கூட அதற்குரிய நியாயமான காலம் வேண்டும். மூன்று ஆண்டுகளும் கூட போதாது என்றால் ஐந்து ஆண்டுகள் தரலாம். ஆனால், ஒரு முறையான திட்டமும், அதில் இணைந்து பொறுப்பெடுத்துக் கொள்ளும் பயனர்களும் வேண்டும். மயூரநாதன் சொல்வது போல் 30 பயனர்கள் மாதம் ஒரு கட்டுரை அல்லது 15 பயனர்கள் மாதம் 2 கட்டுரை என்று பொறுப்பெடுத்தால் கூட மூன்று ஆண்டுகளில் இப்பணியை முடிக்கலாம். ஆனால், கால எல்லையும் கூடாது, யாரும் பொறுப்பெடுக்கவும் முடியாது என்றால் இந்தத் துப்புரவுப் பணி முடிவதற்கு எந்த உறுதியும் இல்லை. நன்றி.--இரவி (பேச்சு) 03:44, 24 மார்ச் 2014 (UTC)
  17. காலக்கெடு விதிப்பதால், நமது எல்லைகளை அடைய முடியாதென்றே எண்ணுகிறேன். கூகுள் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை, ஈடுபாடு உள்ளோர், இப்பொழுதே மாற்ற என்ன செய்யணும்? எடுத்துக்காட்டாக, கண் அழுத்த நோய் w:Glaucoma என்பதை நான் மேம்படுத்தும்போது, பின்வரும் வழிமுறைகளை கையாளலாமா?
    • முதலில் அங்குள்ள தரவுகளை அப்படியே பேச்சுப்பக்கத்திற்கு மாற்ற விரும்புகிறேன். ஏனெனில், பேச்சுப்பக்கத்தில் சேமித்தப் பின்பு, அதனை திறந்து வைத்துக் கொண்டு, கட்டுரை பக்கத்தினை உருவாக்குவது எளிது.
    • படங்கள் அனைத்தும் (==ஊடகங்கள்== ---> <gallery> ) கட்டுரைப்பகுதிக்கு மாற்ற வேண்டும். பிறகு கட்டுரை விரிவாகும் போது, அதற்குரிய விரிவாக்கம் எழுதப்பட்டால், உரிய படம் அப்பத்தியுடன் இணைக்கப்படும்.
    • பிற உட்பிரிவுகளும் (மேற்கோள், வெளியிணைப்பு, பகுப்பு போன்றவை) அவ்விதமே பேணப்படும்.
    • இப்படி செய்தால், கட்டுரையின் மேம்பாடு தெளிவாகத் தெரியும். குறுங்கட்டுரையாக (5000பைட்டுகள்?) மாற்றிய பின்பு, அடுத்த கட்டுரைக்கு செல்ல விரும்புகிறேன். பின்னரே, பிறர் அக்கட்டுரையினை விரிவாக்க முயலவேண்டும்.
    • ஒருவரே கட்டுரை முழுவதையும் மாற்ற வேண்டிய நிலை, மனச்சோர்வையே ஏற்படுத்தும். 'ஒருவர் கட்டுரையை மேம்படுத்தி வருகிறார்' என்ற அறிவிப்பு இருந்தால், அடுத்தவர் அதனைக் கண்டு, அவர் அந்த வார்ப்புருவை நீக்கிய பின்பு, தனது பங்களிப்பைத் தொடரலாம். இவ்வகையில் மயூரனாதன் கூறியது போல, பலர் ஒரு கட்டுரையை முழுமையாக மேம்படுத்தலாம்
    நான் இந்த அணுகுமுறையில், கூகுள் கட்டுரையை மேம்படுத்த எனது முயற்சிகளைத் தொடங்கலாமா?--≈ உழவன் ( கூறுக ) 04:17, 24 மார்ச் 2014 (UTC)
    1. தகவலுழவன், கண் அழுத்த நோய் கட்டுரை தற்போது முழுமையாகவே உள்ளது. அதன் சிவப்பு இணைப்புகள், மற்றும் சில கலைச்சொற்களைத் திருத்த வேண்டும். ஆங்கிலச் சொற்கள் பல மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே தமிழ்ப் பெயர்ப்பில் எழுதப்பட்டுள்ளன. இவையும் கவனிக்கப்பட வேண்டும். தமிழ்ச் சொற்கள் தெரியாதவிடத்து ஆங்கில, இலத்தீன் சொற்களை அடைப்புக் குறிக்குள் தரலாம். இதனை நீங்கள் 5000 பைட்டு அளவுக்குக் குறைத்தால், இக்கட்டுரை ஒரு போதும் விரிவு பெறாது என்றே நான் நம்புகிறேன். ஆனாலும் நீங்கள் மேம்படுத்தத் தொடங்கலாம். பேச்சுப் பகுதிக்கு நகர்த்தாமல், பகுதி பகுதியாக மேம்படுத்துவதே நல்லது. பலரும் பங்களிக்க இலகுவாக இருக்கும். இரவி, ஓரிரு வரிக் குறுங்கட்டுரையையும், மிக விரிவான கூகுள் கட்டுரையையும் ஒரே தரத்தில் பார்க்கக்கூடாது.--Kanags \உரையாடுக 07:22, 24 மார்ச் 2014 (UTC)
    2. வழிகாட்டியமைக்கு நன்றி. கனகு! எக்கட்டுரையையும் அளவில் குறைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. ஆனால், நீங்கள் கூறியது போல, சிற்சில மாற்றங்கள்(10-20%) தேவைப்படும் கட்டுரைகளை தனியாக ஒரு பகுப்பிட்டால் அவற்றினை முதலில் மாற்ற பலரும் முன்வருவர். கண்ணழுத்த நோய் கட்டுரையை இவ்வாரத்தில் விரவாக்குவேன். ஒரு நேரத்தில் ஒருவர் ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்தலே சிறந்த நடைமுறை. கட்டுரைகள் பல இருக்கும் போது, இந்த நடைமுறையே நல்ல பலனைத் தரும். விரிவாக்கலுக்குப் பிறகு சந்திக்கிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 08:44, 24 மார்ச் 2014 (UTC)
  18. இங்கு பவுலின் கருத்தோடு உடன்படுகிறேன். 1,159 கட்டுரைகள் கூகுள் மொழிபெயர்ப்பு கட்டுரைகளில் இருப்பதாகக் காட்டுகிறது. வேறு ஏதும் உண்டா உறுதிப்படுத்தவும். நான் பின்வரும் எளிமைப்படுத்தல்களை வைக்கிறேன்.
    1. முதலில் 1159 என்ற எண்ணை மறந்துவிடவும். :P
    2. கட்டுரைகளை வகை பிரியுங்கள்.
      1. இருப்பதிலேயே பைட்டுகள் குறைந்த கட்டுரைகள்
      2. பல முதன்மைக் கட்டுரைகளில் இருந்து வெட்டி ஒட்டக்கூடிய தொகுப்புக்கட்டுரைகள். எடுத்துக்காட்டுக்கு சூரிய மண்டலம் கட்டுரையில் 9 கோள்கள், குறுங்கோள்கள், மற்றவைக்கு தனிக்கட்டுரை இருக்கும். முதன்மைக்கட்டுரைகளை வெட்டி ஒட்டினால் 99% வேலை முடிந்தது. நான் பேரண்டம் கட்டுரையில் காட்சிக்குட்பட்ட பேரண்டம் உள்ளடகத்தில் பழையதை அழித்து காட்சிக்குட்பட்ட பேரண்டம் முதன்மைக்கட்டுரையில் உள்ள முதல் பத்தியை ஒட்டி இதையே செய்தேன்.
      3. எல்லாப் பயனர்கள் பங்களிக்கக் கூடிய கட்டுரைகள். எ.கா. திரைப்படக்கட்டுரைகள்
      4. அதிக அளவு தமிழ் கலைச்சொற்கள் அறிவு தேவைப்படும் கட்டுரைகள்.
      5. மேலுள்ளவற்றில் கடினமானதை முதலில் விட்டு விட்டு இலகுவாய் இருப்பதை குறிவைத்து நீரை உள்ளே பாய்ச்சினால் மற்றக் குப்பைகள் தானாக குப்பைக் கிடங்கில் இருந்து வெளிவந்துவிடும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:59, 13 ஏப்ரல் 2014 (UTC)

ஆலமரத்தடி மேற்பகுதி தொகு

ஆலமரத்தடி மேற்பகுதி சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை) என்ற ஒரு பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுகிறது. இதனை பொதுவாக கொள்கை உரையாடல்களுக்கான ஒரு பக்கமாக வைத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட கட்டுரைப் பக்கத்தில் பொதுவான கொள்கை உரையாடல்களை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. எ.கா அக் கட்டுரையை எழுதியவர் தனிப்பட்டு எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. பிற பயனர்கள் கவனிக்காமல் போக வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்தப் பொதுக் கொள்கைப் பக்கம் பயன்படும் என்று கருதுகிறேன்.

--Natkeeran (பேச்சு) 03:39, 18 மார்ச் 2014 (UTC)

ஆலமரம் தழைத்தோங்குகிறது ;) மிகுதியான கிளைகள் எந்தப் பக்கத்தில் பதிவது, எந்தப் பக்கத்தில் தேடுவது என்ற குழப்பத்தை உண்டாக்கலாம். நாம் குறிப்பிடுவது கொள்கை குறித்ததா, தொழினுட்பம் குறித்ததா எனப் பாகுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் பயனரைக் குழப்பலாம். வாழ்த்துக் கூறுவது மட்டும்தான் ஆலமரத்தடியில் மிஞ்சும் போலிருக்கிறது :)--மணியன் (பேச்சு) 04:29, 18 மார்ச் 2014 (UTC)
ஆலமரத்தடியில் அரட்டைகள் மிகுந்து விட்டன. ஆகையால், இவ்வாறு உப பக்கங்கள் இருப்பது நல்லதே. ஆலமரத்தடியில் கொள்கை குறித்து உரையாடினாலும், முடிவில் அவற்றை கொள்கைப் பக்கத்துக்கு இடம் மாற்றலாம்.--Kanags \உரையாடுக 07:03, 18 மார்ச் 2014 (UTC)--Kanags \உரையாடுக 07:03, 18 மார்ச் 2014 (UTC)
  விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:37, 19 மார்ச் 2014 (UTC)
  விருப்பம்--L.Shriheeran பேச்சு 11:36, 19 மார்ச் 2014 (UTC)
  விருப்பம்--Mohamed ijazz (பேச்சு) 16:44, 19 மார்ச் 2014 (UTC)
  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:53, 19 மார்ச் 2014 (UTC)

கொள்களை உரையாடல்களுக்கு என்று தனியாக ஒரு ஆலமரத்தடிப் பகுதி உருவாக்குவது தேவையற்றது. வழக்கமாக ஆலமரத்தடியில் தொடங்கும் உரையாடல்களை உரிய பக்கங்களுக்கு மடை மாற்றுவது தானே முறை? அந்தந்த பக்கங்களில் நடக்கும் உரையாடல்களுக்கு இங்கிருந்து இணைப்பு மட்டும் கொடுத்தால் போதுமானது. தமிழ் விக்கிப்பீடியா வளர வளர பல்வேறு கொள்கைகள் உருவாகும். இவற்றை எல்லாம் ஒரே பக்கத்தில் குவிக்கத் தேவை இல்லை. நூற்றுக் கணக்கான தொகுப்புகள் வரும் போது, அவை எந்தப் பக்கத்தில் இருக்கின்றன என்று தேடுவது, என்றும் முறியாத இணைப்புகள் தருவது ஆகியன சிரமமாகும். இப்போது உள்ள பல கொள்கைகளை அவை தொடர்பான பகுப்புகள், தனிப்பக்கங்களில் தேடினாலே கிடைத்து விடும். --இரவி (பேச்சு) 03:38, 24 மார்ச் 2014 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று தொகு

விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று என்பதன் முக்கிய கூறுகளை பயனர்கள் நினைவிற் கொள்ளவும். சில பயனர் பக்கங்களில் இது குறித்த அறிவித்தல்களை வழங்கியுள்ளேன். அதில் ஒன்றான ஒரு படக் கோவை அன்று என்பதையும் நினைவிற் கொள்ளவும். சில பயனர் தங்கள் ஒளிப் படங்களின் சேமிப்பிடமாக விக்கிப்பீடியாவினைப் பயன் படுத்துவதனைக் காணக்கூடியதாகவுள்ளது. இது பற்றி கொள்கை பின்வருமாறு உள்ளது:

  • கட்டுரைக்கு பொருத்தமான, கட்டுரையை எளிதில் விளங்கிக் கொள்ள உதவும் படங்களை மட்டும் கட்டுரைகளில் இணையுங்கள். அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் படங்களை இணைக்க வேண்டாம். உங்கள் புகைப்படங்களை உங்கள் பயனர் பக்கங்களில் பதிக்கலாம் என்றாலும், அவை ஒன்று அல்லது இரண்டு படங்களாக இருக்கட்டும்.(த.வி)
  • Please upload only files that are used (or will be used) in encyclopedia articles or project pages; anything else will be deleted. If you have extra relevant images, consider uploading them to the Wikimedia Commons, where they can be linked from Wikipedia. (ஆ.வி)

மேலும், நடைபெற்ற சம்பவங்களினால் சுப்பிரமணியில் பேச்சுப்பக்கத்தில் கருத்திடுவதையோ அல்லது படங்களை நீக்குவதையும் தவிர்த்து, இங்கு இவரின் படத்தொகுப்பு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவர் ஒளிப் படங்களின் சேமிப்பிடமாக விக்கிப்பீடியாவினை பயன்படுத்தியுள்ளார். பார்க்க: நிழற்படங்கள் மற்றும் பயனர் பக்கம். --AntonTalk 04:16, 25 மார்ச் 2014 (UTC)

 Y ஆயிற்று . கட்டுரையுடன் இணைக்கப்படாத பயனரின் தனிப்பட்ட சேகரிப்புப் படிமங்கள் நீக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கட்டுரைகளில் இணைக்க விரும்பும் பட்சத்தில் மீண்டும் அவற்றை விக்கிமீடியா பொதுவகத்திலேயே பதிவேற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். --இரவி (பேச்சு) 07:37, 30 மார்ச் 2014 (UTC)
ஆங்கில விக்கியில் படங்கள் ஏற்றுவது தொடர்பாக பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது எப்பொழுது தமிழ் விக்கிகு வரும். wizard இங்கும் வந்தால் உதவும்.
விக்கிமீடியா பொதுவகத்திலேயே பதிவேற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம்." அவசியம் இல்லை. --Natkeeran (பேச்சு) 15:02, 30 மார்ச் 2014 (UTC)

//:: ஆங்கில விக்கியில் படங்கள் ஏற்றுவது தொடர்பாக பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அது எப்பொழுது தமிழ் விக்கிகு வரும். wizard இங்கும் வந்தால் உதவும். //

நற்கீரன், ஆலமரத்தடியின் நுட்பக் கிளையில் இதனைப் பதிந்து வைத்தால் நுட்ப ஆர்வலர்கள் கவனிக்கக் கூடும்.

அனைவரும் பயன்படுத்தக்கூடிய படிமங்களை பொதுவகத்தில் ஏற்றினால் அனைத்து விக்கிப்பீடியாக்களும் பயன் பெறலாம். படிமங்களைக் கவனித்து, கொள்கைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்வதில் பொதுவகத்தில் தனிப்பட்ட தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். எனவே, நியாய பயன்பாட்டுப் படிமங்களை மட்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்றுவது நன்று. அவையும் கூட அரிதான படங்களாக இருத்தல் நன்று. https://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias பார்த்தால் பல முன்னணி விக்கிப்பீடியாக்களில் கூட 100க்கும் குறைவான படங்களையே சேர்த்து வைத்துள்ளார்கள். மற்றனைத்தும் பொதுவகத்துக்கு நகர்த்தப்படுகிறது. பொதுவக நடைமுறைகள் புரிநு கொள்ள முடியாத புதிய பயனர்களுக்கு மட்டும் இங்கு வழி காட்டி விட்டு காலப்போக்கில் அவர்களுக்கும் பொதுவகத்தைப் பயன்படுத்த கற்றுத் தர வேண்டும். நன்றி.--இரவி (பேச்சு) 11:42, 2 ஏப்ரல் 2014 (UTC)

Changes to the default site typography coming soon தொகு

This week, the typography on Wikimedia sites will be updated for all readers and editors who use the default "Vector" skin. This change will involve new serif fonts for some headings, small tweaks to body content fonts, text size, text color, and spacing between elements. The schedule is:

  • April 1st: non-Wikipedia projects will see this change live
  • April 3rd: Wikipedias will see this change live

This change is very similar to the "Typography Update" Beta Feature that has been available on Wikimedia projects since November 2013. After several rounds of testing and with feedback from the community, this Beta Feature will be disabled and successful aspects enabled in the default site appearance. Users who are logged in may still choose to use another skin, or alter their personal CSS, if they prefer a different appearance. Local common CSS styles will also apply as normal, for issues with local styles and scripts that impact all users.

For more information:

-- Steven Walling (Product Manager) on behalf of the Wikimedia Foundation's User Experience Design team