விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2018
புதிய மாதத்தைச் சேர்க்கப் போகிறீர்களா? இதனைப் படிக்கவும்! | ||
சிறப்புப் படம் பகுதியானது தற்போது லுவா நிரல்வரி உதவியால் முதற்பக்கத்தில் தானாகவே இற்றைப்படுத்தப்படுகிறது (being updated). எனவே, மீடியாவிக்கியில் கொடாநிலையான (default) மாதங்களின் பெயர்களே அந்நிரலுக்கு அளபுருக்களாகத் (parameters) தரப்படும். எனவே தயவுசெய்து மாதங்களை இவ்வாறு பயன்படுத்தவும்.
|
- ஆகத்து 5, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
நீல் ஆம்ஸ்ட்றோங் (1930–2012) நிலாவில் நடந்த முதலாவது மனிதர் என்ற சாதனையுடனும், எட்வின் ஆல்ட்ரினுடன் இரண்டரை மணி நேரம் விண்கலத்திற்கு வெளியே இருந்த சாதனையுடனும் அப்பல்லோ 11 விண்கலத்தில் இருந்த போது எடுக்கப்பட்ட படம். அமெரிக்க விண்ணோடியான ஆம்ஸ்ட்ரோங் அமெரிக்க வான்படையிலும், மனித விண்வெளிப்பறப்பு திட்டங்களிலும் பணியாற்றியவர். நாசாவில் 1962 இல் இணைந்தார். 1966 இல் ஜெமினி 8 விண்கலத்தில் புவியின் சுற்றுவட்டத் திட்டத்தில் பங்கேற்றார். 1969 சூலையில், அப்பல்லோ 11 இவரது இரண்டாவதும், கடைசியுமான விண்வெளிப் பறப்பாகும். |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஆகத்து 19, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
தெய்வீகச் சங்கு என அழைக்கப்படும் வெண் சங்கு (Turbinella pyrum) ஒன்றின் ஐந்து காட்சிகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இவை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணப்படும் சங்கு எனவும் அழைக்கப்படும் கடல் நத்தை இனத்தைச் சேர்ந்தவை. இவை இசைக்கருவியாக இந்து, மற்றும் பௌத்த கோயில் வழிபாட்டின் போது பயன்படுகிறது. வைணவக் கடவுளான விஷ்ணுவின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது. திபெத்தியப் பௌத்தத்தில் இது எட்டு வழிபாட்டு சின்னங்களில் ஒன்றாகாகப் பயன்படுத்தப்படுகிறது. படம்: எச். செல் |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 2, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
வானவில் கிளி ஆஸ்திரலேசியாவில் காணப்படும் ஒரு வகைக் கிளியினம் ஆகும். 25 முதல் 30 செமீ நீள நடுத்தர அளவுப் பறவை. இவை பொழில், கடற்கரையோரப் புதர், மரக்காடு ஆகிய பகுதிகளை வாழ்விடங்களாகக் கொண்டுள்ளன. வடக்கு குயின்சுலாந்து முதல் தெற்கு ஆத்திரேலியா, தாசுமேனியா ஆகிய இடங்களில் பொதுவாகக் காணப்படுகின்றன. பழங்கள், மகரந்தம், மலர்த்தேன் போன்றவையே இவற்றின் முக்கிய உணவாகும். இதன் துணையினம் மொலுக்கானுசு இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படம்: Fir0002 |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 16, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
ஓநாய் சிலந்தி என்பது லைக்கோசிடே குடும்பத்தைச் சார்ந்த சிலந்தி வகையாகும். இவை வலிமையான, சுறுசுறுப்பான வேட்டையாடும் திறனுடன், சிறந்த கண் கூர்மையையும் கொண்டவை. பெரும்பாலும் தனிமையில் வாழ்தலையும், தனியாக வேட்டையாடுவதையுமே விரும்புகின்றன. வலைகள் பின்னுவதில்லை. தங்கள் முட்டைகளை தங்கள் உடம்பிலுள்ள பைகளில் வைத்துக்கொள்ளும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும், அவற்றை சில நாட்களுக்கு தன்னுடனே வைத்து அடைகாக்கின்றன. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 24, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
பிரித்தானிய இலங்கையின் 1929-ஆம் ஆண்டு ஐந்து ரூபாய் நாணயத்தாள். இலண்டனில் இலங்கை அரசுக்காக தோமசு டி லா ரூ என்ற நிறுவனம் இதனை அச்சடித்தது. இத்தாளில் நாணயங்களுக்கான ஆணையாளர் பிரான்சிசு கிரயெம் டிரெல் (பின்னாளில் பதில் இலங்கை ஆளுநர்), இலங்கை கணக்காய்வாளர்-நாயகம் டபிள்யூ. டபிள்யூ. வூட்சு ஆகியோரின் கையொப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ரூபாய்த் தாள்கள் இலங்கையில் 1885 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. வங்கித்தாள்: இலங்கை அரசு (படம்: அமெரிக்க வரலாற்று தேசிய அருங்காட்சியகம்) |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 30, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
மைசூர் அரண்மனை மைசூர் இராச்சிய ஆட்சியாளர்களின் அதிகாரபூர்வ உறைவிடமாகவும், உடையார் அரச குலத்தினரின் இருப்பிடமாகவும் இருந்து வந்தது. தென்னிந்தியாவில் 1399 இல் நிறுவப்பட்ட மைசூர் அரசு விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக ஆளப்பட்டு 16-ஆம் நூற்றாண்டில் விடுதலை பெற்றது. தற்போதுள்ள அரண்மனை ஏறத்தாழ 4 மில்லியன் டாலர்கள் செலவில் 1897 இல் புதிதாகக் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1912-இல் முடிக்கப்பட்டது. படம்: முகமது கரிம் |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- அக்டோபர் 20, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
புனித பசில் பேராலயம் உருசியத் தலைநகர் மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும். கசான், அசுத்திரகான் நகரங்களைக் கைப்பற்றப்பட்டதன் நினைவாக இக்கோவில் உருசியப் பேரரசர் நான்காம் இவானின் ஆணைப்படி 1555 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1561 இல் முடிக்கப்பட்டது. 1600 இல் பேரரசர் இவான் நினைவு மணிக்கூண்டுக் கோபுரம் கட்டப்படும் வரை இக்கட்டடமே மாஸ்கோவின் உயர்ந்த கட்டடமாக இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஒரு நடுவில் உள்ள தேவாலயத்தைச் சுற்றிவர எட்டுக் கோவில்கள் கட்டப்பட்டன. பத்தாவது கோவில் 1588 இல் வசீலி என்ற புனிதரின் சமாதி மீது கட்டப்பட்டது. 1930களில் போல்செவிக்குகள் இக்கோவிலை இடிக்கத் திட்டமிட்டபோதும், பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. 1991 முதல் அரச வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் இடையிடையே தேவாலய வழிபாடுகளும் நடைபெறுகின்றன. படம்: அ. சாவின் |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு