விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2022
ஒவ்வொரு வாரமும் காட்சிப்படுத்தப்பட்டவுடன் காட்சிப்படுத்தப்பட்ட தகவல்கள் இங்கு சேர்க்கப்படும்.
- தாவர உண்ணியான தும்பிப்பன்றி (படம்) பாலூட்டிகள், பன்றியைப் போன்று குட்டையாகவும், நீண்டும் காணப்படும். இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தும்பிக்கைப் போன்று காணப்படும்.
- முதல் கன்னடப் பேசும் படத்தை இயக்கியவர் ஒய். வி. ராவ் ஆவார்.
- அஸ்வகோசர் என்பவர் இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத கவிஞரும், தருக்கவாதியும் ஆவார்.
- போர்க்கள கற்பலகை என்பது பண்டைய எகிப்தின் (கிமு 3,200 - கிமு 3,100) போர்களக் காட்சியைக் கொண்ட முதல் கற்பலகையாகும்.
- கிறிஸ்டினா கோக் (படம்) விண்வெளியில் நீண்டகாலம் இருந்த பெண் சாதனையாளர் ஆவார்.
- கிமு 479 பொடிடேயா நிலநடுக்கம் என்பது மனித வரலாற்றில் பதிவான மிகப் பழமையான ஆழிப்பேரலை ஆகும்.
- பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.
- தமிழின் முதல் சூழலியல் திரைப்படம் 1982 இல் வெளியான ஏழாவது மனிதன் ஆகும்.
- கழுகு எடுத்துச் சென்ற ஆமை எசுக்கிலசு தலையில் விழுந்ததால், அவர் இறந்தார் என நம்பப்படுகிறார்.