விக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கமை
தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை குறிப்பிடுதன்மை கொண்டவற்றாக எவற்றைக் கொள்ளலாம். (தனிப்பட்ட முறையில் துறை சார்ந்த வல்லுனர்களைக் கேட்பது விக்கிப்பீடியாவின் தரத்தைக் கூட்டும்.:))
- புவியியல் (கிராமங்களைப் பற்றியும் கட்டுரைகள் தேவையா)?
- நபர்கள் (சிறு எழுத்தாளர்கள், கவிஞர்கள்,...)
- ஊடகம் (படித்த எல்லா நூல்களையோ, கேட்ட நிகழ்வுகளையோ, கோப்புகளையோ சேர்க்க முடியாது)
குறிப்பிடத்தக்கவை என்று எவற்றைக் கொள்வது?? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:06, 29 மார்ச் 2013 (UTC)
- கலைக்களஞ்சிய குறிப்பிடுதன்மை, தமிழ் சமூகத்தின் ஆவணப்படுத்தல் தேவை ஆகிய இரண்டையும் கருத்தில் கொள்வது நன்று. இந்த நோக்கில் சிற்றூர்களையும் ஆவணப்படுத்தலாம். எந்த அளவுக்கு சிறிய ஊர்களை ஏற்றுக் கொள்ளலாம் என்றால் ஒரு உயர்நிலைப்பள்ளி / ஊராட்சித் தலைவர் இருக்கும் ஊர்கள் ஆவணப்படுத்தக்கூடிய அளவு மக்கள் தொகை உள்ளவையாகவே இருக்கும். திரைப்படங்கள், நூல்கள் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் வரலாற்று நோக்கில் ஆவணப்படுத்தப்படுவது வழமை. பெரும்பாலும் மாற்றுக் கருத்துகள் எழுதுவது நபர்களைக் குறித்து தான். இது ஒவ்வொரு கட்டுரையாக தீர்மானிக்கப்பட வேண்டும். அல்லது, துறை சார்ந்து சில வழிகாட்டல்களை ஏற்படுத்த வேண்டும்.--இரவி (பேச்சு) 14:21, 29 மார்ச் 2013 (UTC)
- இரண்டாவதை மறந்தே விட்டேன். நூல், நூலாசிரியர் போன்றவற்றிற்கு பிரபல இதழ்களில் இரண்டொரு முறை வெளிவந்தோரையும் சேர்க்கலாமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:40, 29 மார்ச் 2013 (UTC)
உள்ளடக்கம் தொடர்பாக - "பரவலான கட்டுரைகள் கிடைக்கப்பெற்றால் "
தொகு"ஒர் கட்டுரைப்பொருள் அதனுடன் தொடர்பற்ற நம்பகமான மூலங்களில் பரவலான கட்டுரைகள் கிடைக்கப்பெற்றால் அதனைக் குறித்து தனியான கட்டுரை ஆக்கலாம் என்று கொள்ளலாம்." என்பது மிகவும் இறுக்கமான வரையறை. பல கட்டுரைப்பொருள்கள், குறிப்பாக விழிம்புநிலை மக்கள், மூன்றாம் உலக நாட்டு விடயங்களுக்கு "பரவலான கட்டுரைகள்" கிடைக்கப்பெறாது. எ.கா கூத்துக்கள், நாட்டுப்புறக் கலைகள், சமய வழிபாடுகள், சடங்குகள், பழங்குடிமக்கள் தொடர்பானவை. மேலும், பல கட்டுரைகள், பொதுத் தகவலாக (Common Knowledge) ஆக அறியப்படுவை, ஆனால் அவற்றுக்கு "பரவலான கட்டுரைகள்" கிடைக்கப்பெறாது. ஆகவே, இதை நெகழ்வுபடுத்த வேண்டுகிறேன். --Natkeeran (பேச்சு) 17:05, 24 மார்ச் 2014 (UTC)
நூல்கள் தொடர்பாக
தொகுகட்டுரைகள் தொடங்கக்கூடிய அளவுக்குக் குறிப்பிடத்தக்கவையான நூல்களை வரையறுக்கும் ஆங்கிலக் கொள்கையைத் திட்டப் பக்கத்தில் இட்டிருக்கிறேன். குறிப்பிடத்தக்கவை அல்லாத நூல்கள் பற்றிய கட்டுரைகள் பெருமளவில் காணப்படுவது கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமானதல்ல. நன்றி. கோபி (பேச்சு) 02:47, 9 ஏப்ரல் 2014 (UTC)
- விருப்பம் போல கொள்கைப் பக்கங்களை மாற்ற முடியாது. இது தொடர்பாக உரையாடல் நடைபெறுவது அறிவீர்கள். பார்க்க: பகுப்பு பேச்சு:நூல்கள் பின்னர் எதற்கு இந்த தன்னிச்சையான இடைச்செருக்கல். --Natkeeran (பேச்சு) 13:30, 10 ஏப்ரல் 2014 (UTC)
குறித்த மாற்றத்தினைச் செய்தபோது பகுப்பு பேச்சு:நூல்கள் பக்கத்தில் உரையாடல் நடைபெறுவதனை நான் அறிந்திருக்கவில்லை. கோபி (பேச்சு) 19:05, 15 ஏப்ரல் 2014 (UTC)
துடுப்பாட்டார்கள் குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு
தொகுமுக்கிய கொள்கை மாற்றம் என்பதாலும், ஆயிரக்கணக்கான பக்கங்களை பாதிக்கும் என்பதாலும் பரந்த வாக்கெடுப்புக்குப் பின்பு சேர்ப்பது பொருத்தம்: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு --Natkeeran (பேச்சு) 14:21, 16 மே 2014 (UTC)
குறிப்பிடத்தக்கமையை முன்வைத்த துப்புரவுப் பணி தொடர்பான கேள்விகள்
தொகு- ஒரு கட்டுரையின் குறிப்பிடத்தக்கமையை நிறுவ எவ்வளவு காலம் தரலாம்?
- ஒரு மாதத்தில் எத்தனை கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமையை நிறுவக் கோரி வார்ப்புரு இடலாம்?
- குறித்த காலத்துக்குப் பிறகும் குறிப்பிடத்தக்கமை நிறுவப்படாத கட்டுரைகளை என்ன செய்வது?
மேற்கண்ட கேள்விகள் தொடர்பான இணக்க முடிவிலான வழிகாட்டலைத் தந்தால் துப்புரவுப் பணியை மேற்கொள்ள உதவியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 11:38, 16 சூன் 2014 (UTC)
இரவி பரிந்துரைகள்
தொகு- 90 நாட்கள் (பல நூலகங்களுக்கு நேரடியாக சென்று தேட வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு)
- 60 (ஒரு நாளைக்கு இரண்டு கட்டுரைகள் அல்லது 20 முனைப்பான பயனர்களுக்கு மாதம் 3 கட்டுரைகள் என்ற கணக்கில்)
- நீக்கலாம் (ஏனெனில், எத்தனை கட்டுரைகளை ஒன்றிணைத்தாலும் எவ்வளவு பெரிய கட்டுரை என்றாலும் குறிப்பிடத்தக்கமை அற்ற தகவல் குறிப்பிடத்தக்கமை அற்றதே)
--இரவி (பேச்சு) 05:44, 21 சூன் 2014 (UTC)
தினேஷ்குமார் கருத்துகள்
தொகு- குறிப்பிடத்தக்கமையை நிறுவ 10-20 நாட்கள் கொடுக்கலாம், இதுவே அதிகம். ஆங்கில விக்கியில் இருநாட்களுக்குள் அழித்துவிடுவார்கள். //பல நூலகங்களுக்கு நேரடியாக சென்று தேட வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு// கட்டுரை அழிக்கப்பட்டாலும் மீண்டும் தகுந்த குறிப்பிடத்தக்கமையை வலியுறுத்தி ஒரே நாளில் முழுகட்டுரையும் உருவாக்கிட முடியும். இவ்வாறு குறைவான நாட்கள் தருவதால் குறிப்பிடத்தக்கமையற்ற கட்டுரைகள் குறைய அதிக வாய்ப்புள்ளது.
- கட்டுரைகளில் வார்ப்புரு இடுவதற்கு கணக்குத் தேவையில்லை. ஆயிரம் குறிப்பிடத்தகைமையற்ற கட்டுரையில் 2-3 கட்டுரைக்கு மட்டும் வார்ப்புரு இடுவது தேவையற்றது. இத்தகைய அளவு தேவையற்றது. ஒருவர் குறிப்பிடத்தகைமையற்ற 2-3 மூன்று கட்டுரை உருவாக்கினால் 1 நாள் புதிய கட்டுரை எழுதுவதை தடை செய்யலாம்!
- குறிப்பிடத்தக்கமை நிறுவப்படாத கருத்துகளை உடனடியாக நீக்கலாம் என்ற இரவியின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:06, 31 மார்ச் 2015 (UTC)
- தினேசு, ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் உள்ளனர். எனவே, அங்கு ஒரு சில நாட்கள் அவகாசம் போதும். நம்முடைய பங்களிப்பாளர் வளத்தை வைத்து நோக்கும் போது, ஒரு துறைக்கு ஓரிருவர் ஆர்வம் காட்டினாலே பெரிது. அவ்வாறு ஆர்வம் காட்டுபவருக்கு உண்மையிலேயே போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். ஒரே மாதத்தில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்கு வார்ப்புரு இட்டால் அவர் முழுநேரமாக முயன்றால் கூட ஆதாரம் சேர்ப்பது கடினம். எப்படி அழித்த கட்டுரைகளை மீண்டும் புதிதாக உருவாக்கலாமோ, அதே போல் அழிக்க வேண்டிய கட்டுரைகளைச் சற்று பொறுத்திருந்தும் அழிக்கலாம். மூன்று மாத காலம் போதுமானது என்று கருதுகிறேன். இவ்வாறான உரையாடல்கள் தொடங்கிய பிறகு, புதிதாக குறிப்பிடத்தக்கமை இல்லாமல் கட்டுரைகள் வருவது குறைந்திருப்பதையும் காணலாம். எனவே, இப்போதைய முக்கிய தேவை பழைய கட்டுரைகளை மேம்படுத்த உரிய அவகாசம் தருவதே.--இரவி (பேச்சு) 10:50, 31 மார்ச் 2015 (UTC)
- ஆதாரம் பொறுமையாகவே சேர்க்கட்டும், ஆயினும் குறிப்பிடத்தக்கமை குறித்து விரைந்து விளக்கவே வேண்டுகிறேன். குறிப்பிடத்தக்கமை என்பது மிக மிக அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. வெறும் இரண்டு கட்டுரைகள் மட்டுமே ஒரு பயனரால் குறிப்பிடத்தக்கமையுடன் எழுத முடியுமானால் அதுவே போதும். //சற்று பொறுத்திருந்தும் அழிக்கலாம்// ஏற்கனவே அழிக்கப்பட வேண்டிய கட்டுரைகள் அதிகம் இரவி :( குறிப்பிடத்தக்கமை இல்லாத கட்டுரைகள் குறைவது மகிழ்ச்சியே ஆனால் குறிப்பிடத்தக்கமை இல்லாத கட்டுரை இல்லாமல் செய்ய வேண்டும். அவகாசம் தேவைப்பட்டால் பிறரின் உதவியை நாடுவதில் தவறில்லை. ஆயிரக்கணக்கான விக்கி பங்களிப்பாளர்கள் தமிழில் இல்லாமல் இருக்கலாம ஆனால் இங்கிருப்பவர்கள் முழு முயற்சி செய்தால் தமிழ் விக்கியில் உள்ள அனைத்து பிணக்குகளையும் 20 நாட்களுக்குள் தீர்க்க முடியும். குறிப்பிடத்தக்கமை சான்றுகள்/ ஆதாரம் குறித்து ஏதேனும் உதவி தேவைப்படுமாயின் என்னுடைய பேச்சுப்பக்கத்தில் வேண்டுகோள் கொடுக்கலாம். 24 நேரத்தில் அவர்களுக்கான் உதவியை நான் செய்கிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:13, 31 மார்ச் 2015 (UTC)
- ஒருவர் குறிப்பிடத்தக்கவர் என்று சுட்டுவதற்கும் ஆதாரம் வேண்டும் அல்லவா? எடுத்துக்காட்டுக்கு, ஆதாரங்கள் அணுகப்படக்கூடிய இடத்தில் இல்லை என்று இங்கு சுட்டப்படுவதைக் காண்க. மற்றபடி, மற்றவர் கருத்துகளும் வரட்டும். அதற்கு ஏற்ப இணக்க முடிவெடுப்போம்.--இரவி (பேச்சு) 12:12, 31 மார்ச் 2015 (UTC)
- அவருக்கு இப்பொழுது என் உதவி தேவை. நாளைக்குள் முடிந்தவரையிலும் ஆதாரங்களை இணைக்கிறேன் இரவி. கடந்த பத்தாண்டுகளில் நான் அறிந்த உண்மையென்னவெனில் இணையத்தில் ஒரு முறை பதிந்தால் அவற்றை அழிக்கவே முடியாதென்பதே :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:59, 31 மார்ச் 2015 (UTC)
- ஒருவர் குறிப்பிடத்தக்கவர் என்று சுட்டுவதற்கும் ஆதாரம் வேண்டும் அல்லவா? எடுத்துக்காட்டுக்கு, ஆதாரங்கள் அணுகப்படக்கூடிய இடத்தில் இல்லை என்று இங்கு சுட்டப்படுவதைக் காண்க. மற்றபடி, மற்றவர் கருத்துகளும் வரட்டும். அதற்கு ஏற்ப இணக்க முடிவெடுப்போம்.--இரவி (பேச்சு) 12:12, 31 மார்ச் 2015 (UTC)
- இந்த விவாதங்களுடன் குறிப்பிடத்தக்கமையை துறை சார்ந்து வரையரை செய்ய வேண்டும். எல்லா துறைகளுக்கும் குறிப்பிடத் தக்கமை அளவினை ஒன்று போல கொண்டு செல்லுதல் சரியாக அமையாது. தமிழ் நாட்டில் அதிகமாக திரை துறை சார்ந்த அறிவு பொது மக்களிடம் இருக்கிறது. இரு படங்களில் நடித்த அறிமுக நடிகரைப் பற்றி கூட எண்ணற்ற செய்திகளை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஊடகங்களும் செய்திகள் வெளியிடுகின்றன. அதுவே மறவன்புலவு க. சச்சிதானந்தன் கட்டுரைக்கு ஆதாரங்கள் தேடுவது சிரமாக இருந்தது. பிரபல பத்திரிக்கை செய்திகள் கிடைக்கவில்லை. இதனை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். பெருஞ் சமயங்களுக்கு கிடைக்கும் தரவுகளைப் போல நாட்டாரியல் தெய்வங்களுக்கு கிடைப்பது சிரமம். இவ்வாறு பல்வேறு துறைகளையும் கவனத்தில் கொண்டு குறிப்பிடத்தக்கமை வரையரை செய்யப்படுதல் சிறந்தது. தமிழ் விக்கியின் தரத்திற்காக குறிப்பிடத்தக்கமையை நிரூபனம் செய்யாத கட்டுரைகள் அழித்தல் வரவேற்க தக்கதே. அழித்த பிறகும் மீட்டெடுக்க இயலும் என்பதும், புதியதாக எழுதுதலும் சாத்தியம் என்பதும் விக்கியில் இருக்கும் நன்மைகள். இருப்பினும் துறைசார்ந்த ஆர்வளர்களின் பங்களிப்பு குறைவாக உள்ள கட்டுரைகளை நீக்குவதற்கு சற்று அதிக காலம் ஒதுக்க வேண்டுகிறேன். மிகவும் அறிதாக எழுதப்படுகின்ற மருத்துவம், உயிரியல் தொடர்பான கட்டுரைகளை இதற்கு முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இவற்றுக்கான ஆதாரங்களை என்னைப் போன்ற பயனர்கள் தேடிக் கண்டுபிடித்து அளிப்பது கடினம். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:46, 31 மார்ச் 2015 (UTC)
- சகோதரன் ஜெகதீஸ்வரன், பார்க்க - பகுப்பு:குறிப்பிடத்தக்கமை உரையாடல்கள். இவ்வாறான துறை சார் உரையாடல்களில் எந்த இணக்க முடிவையும் எட்ட முடியவில்லை என்று தான் பொதுவான எதிர்பார்ப்புகளை இங்கு உரையாடிக் கொண்டிருக்கிறோம். --இரவி (பேச்சு) 18:01, 31 மார்ச் 2015 (UTC)
நாட்டுடைமை நூல்கள்
தொகு- நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் குறிப்பிடத்தக்கமை வகையில் சேராது. அனைத்துக்கும், குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 20:38, 31 சனவரி 2017 (UTC)
(எனது பேச்சுப்பக்கத்தில் தொடங்கியதின் நகலை இங்கிட்டு, பலரும் தொடர்ந்து கலந்து கொள்ள ஏதுவாக்குகிறேன்)
- @Kanags:அனைத்து நூல்களும் தமிழக அரசால், உயரியது எனத் தேர்ந்தெடுக்கப் பட்டது. இப்படியிருக்க, குறிப்பிடத்தக்கமை வகையானது இல்லை என்பது எப்படி சரி?--த♥உழவன் (உரை) 01:33, 1 பெப்ரவரி 2017 (UTC)
- குறிப்பிடத்தக்கமை, நாட்டுடைமை என்பன வெவ்வேறானவை. நாட்டுடைமை எப்படி குறிப்பிடத்தக்கமையாகும்? --AntanO 04:20, 1 பெப்ரவரி 2017 (UTC)
- எனது புரிதலின்படி, நாட்டுடைமை அறிவிக்கப்படும் போது அந்த ஆசிரியர் எழுதிய குறிப்பிட்ட "உயரிய" நூல்கள் மட்டும் நாட்டுடைமை ஆக்கப்படுவதில்லை. அவர் எழுதிய அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன. இதனால், விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவதற்கு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் என்பது ஒரு வரையறையாக இருக்கக் கூடாது. பொதுவான குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 06:41, 1 பெப்ரவரி 2017 (UTC)
- ஒரு நாட்டுடைமை ஆசிரியரின், தமிழ் அல்லாத நூல்களுக்குச் செய்யப் போவதில்லை.
- (எ.கா)
- // நாட்டுடைமை எப்படி குறிப்பிடத்தக்கமையாகும்? -// //அந்த ஆசிரியர் எழுதிய குறிப்பிட்ட "உயரிய" நூல்கள் மட்டும் நாட்டுடைமை ஆக்கப்படுவதில்லை. //
உயர்ந்தது / தாழ்ந்தது என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்? நமது நோக்கம் அதுவல்ல என்றே எண்ணுகிறேன். ஏறத்தாழ 4000 நூல்களில், 2000நூல்கள் பொதுவகத்தில் உள்ளன. ஒரே வரியில், மதிப்பிடுவது சரியாக எனக்குப்படவில்லை. நாட்டுடைமை என்ற நிலையை அடைய, ஒரு அரசு பல தரநிலைகளை வைத்துள்ளது. இந்நிலையில், தமிழ் விக்கியின் தரநிலை என்ன? தரமிடும் பங்களிப்பை, நான் விக்கிப்பீடியாவில் செய்ய விரும்பவில்லை. அனைத்து எழுத்தாக்கமும், உயர்வானவையே. எழுத்தாக்கத்தின் பரிணாமா வளர்ச்சிக்கு சுவடுகளாக நூல்கள் திகழ்கின்றன. இப்படி ஆளுக்கு நாள் ஆள் கருத்துக்கள் வேறுபடலாம். இந்த இயல்பு நிலையில், பெறப்பட்ட 91 ஆசிரியர்களின் நூல்களில், எவற்றிற்க்கு மட்டும் கட்டுரைகள் உருவாக்கலாம்? இதுவே எனது தேவை. பிற முன்னேற்பாடுகளை நண்பர்களின் துணையுடன் செய்துள்ளேன், அவற்றை இங்கே ஓரளவு காணலாம். அத்துடன், இதற்குமுன் நாட்டுடைமை நூல் பற்றிய கட்டுரைகளில் கலந்து கொண்டவர்களின் கருத்தினையும் கேட்கலாம். காண்க : கவிஞர் உள்ளம் --த♥உழவன் (உரை) 09:42, 1 பெப்ரவரி 2017 (UTC)
- எந்த நூல் என்றாலும் கட்டுரை எழுதலாம். ஆனால் அந்நூல் குறிப்பிடத்தக்கதாக இருக்க வேண்டும். வெறுமனே பொருளடக்கத்தையும், நூலைப் பற்றிய அடிப்படைத் தகவல்களையும் மட்டுமே கொண்டதாக உங்கள் தானியங்கிக் கட்டுரைகள் இருந்தால், அவ்வாறான கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது. அந்நூலைப் பற்றிய குறிப்பிடத்தக்கமை ஆதாரங்களுடன் எழுதப்பட வேண்டும். பொதுவாக நூல்களைப் பற்றிய தானியங்கிக் கட்டுரைகள் எழுதுவதற்கு எனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன்.--Kanags \உரையாடுக 00:45, 2 பெப்ரவரி 2017 (UTC)
- ஒரு மாதிரி நூலாக கவிஞன் உள்ளம் (நூல்) திகழ்கிறது. ஆனால், அடிநிலை பணிகளைத் தானியங்கி கொண்டுதான் செய்வது எளிது, பெயர், பக்கங்கள், நூலின் அளவு, பதிப்பகம், நூலாசிரியரின் பிற நூல்கள், பொருளடக்கம், ...உங்களின் எதிர்ப்பு என்பதை மறுப்பு என எடுத்துக் கொள்கிறேன். ஒரு தானியங்கிக்கான மாதிரி நூலை அமைத்தால், அந்த வழிகாட்டல், நூல் குறித்த தானியங்கி பணிக்கு உதவும். க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 என்பதில் மாற்றங்களை செய்து தரக்கோருகிறேன். அதாவது அதில் தேவையற்றதை நீக்கி அளியுங்கள்--த♥உழவன் (உரை) 01:49, 2 பெப்ரவரி 2017 (UTC)
- குறித்த க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 கட்டுரையில், அறிமுகப் பகுதியைத் தவிர ஏனைய பகுதிகள் குறித்த நூலோடு தொடர்புள்ள தகவல்களைக் கொண்டதாகத் தெரியவில்லை. அப்பகுதிகளில் உள்ள தகவல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டனவும், விக்கிமூலத்தில் பதிவேற்றப்பட்டனவுமான எல்லா நூல்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுத் தகவல்கள் என்பதுடன், அவ்வாறான தகவல்கள் விக்கிப்பீடியாக் கட்டுரைகளுக்குப் பொருத்தமானவையாகவும் தெரியவில்லை. நூல்களைப் பற்றிக் கட்டுரைகளை எழுதும்போது பெயர், நூலாசிரியர், பதிப்பகம், வெளியீட்டாண்டு, பக்கங்கள் போன்ற அடிப்படைத் தகவல்களுக்கும் அப்பால் நூலின் தன்மைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தக்கூடிய தகவல்கள் இருப்பது அவசியம். அந்நூலை அறிந்து கொள்ளாமல் அதைப்பற்றிக் கட்டுரை எழுதுவது முறையாக இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. தன்னியக்கமாகக் கட்டுரைகளை உருவாக்கும்போது, நூலைப்பற்றி அறியாமலேயே கட்டுரைகள் உருவாக்கப்படுவதுடன், தனித்துவமான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் போய்விடுகின்றன. இப்பிரச்சினை நூல்கள் பற்றிய கட்டுரைகளுக்கு மட்டுமே என்று சொல்லவரவில்லை. எல்லாத் தானியங்கிக் கட்டுரைகளிலும் இது ஒரு பிரச்சினைதான். கூடியவரை தானியங்கிக் கட்டுரைகளைத் தவிர்ப்பது நல்லது. --- மயூரநாதன் (பேச்சு) 10:13, 2 பெப்ரவரி 2017 (UTC
விக்கிப்பீடியா ஒரு தரவுத்தளம் அன்று. ஆங்கில விக்கிப்பீடியாவில் வெண்முரசு நூலுக்கான கட்டுரை தொடர்பான நீக்கல் உரையாடலையும் கவனிக்கலாம். --இரவி (பேச்சு) 12:07, 2 பெப்ரவரி 2017 (UTC)
- @Mayooranathan:இதில் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பொதுவான குறிப்புகளை பலவற்றை நீக்கி, சிலவற்றை மாற்றியுள்ளேன். நூலின் தனித்துவத்தைப் பேணி, ஒவ்வொரு கட்டுரையையும் செறிவாக்குவேன். தானியக்கமாக கட்டுரைகளை ஏற்றி விட்டு, அப்படியே விட்டு விடுவது எனது நோக்கமல்ல.அடிநிலைப் பணிகளை மட்டுமே தானியங்கி மூலம் ஆவணமாக்குவேன். தானியக்க நிகழ்வுகள், இங்கு ஏற்கனவே நடந்தவையே ஆகும். 91 ஆசிரியருக்கும், 91 வடிவம் தேவைப்படுகிறது. அவ்வப்போது, உங்களுக்குத் தெரிவிப்பேன். வழிகாட்டலை நல்குங்கள். எடுத்துகாட்டாக, கவிஞன் உள்ளம் (நூல்) வைத்து, அந்த ஆசிரியரின் நூல்களை ஒவ்வொன்றாக காட்டுகிறேன்.
- @Ravidreams: இப்பொழுதும் பேணப்பட்டுள்ள, வெண்முரசினைக் கண்டேன். // தரவு தளமல்ல //, வார்ப்புரு இடல் போன்றவை, என்றுமே விக்கியை வளர்க்காது. பல்லாயிர கணக்கான கட்டுரைகள், தரவு தள நிலையில் தான் உள்ளன. ஒட்டு மொத்த எண்ணிக்கை அதிகமாகிறது என்பதால் அவற்றை ஏற்றே உள்ளோம். வார்ப்புரு இடலை, ஒரு அடையாளப் பணியாகவே எண்ணுகிறேன். அதோடு மட்டும் ஒரு மூத்த பங்களிப்பாளர் தனது பங்களிப்பை நிறுத்திக் கொள்ளும் போது, புதிய முயற்சியில் ஈடுபடுபவரின் மனநிலையை எண்ணுக. கட்டுரை வளத்தை அதிகரிக்கும் நமது நோக்கும் நீர்த்து, மதிப்பிடும் போக்கே அதிகமாகிறது. ஏதாவது தமிழுக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களுக்கு, அனைத்துமே புதிதுதான். அவர்களை பழக்குவதற்கான செயற்பாடுகளே தேவை. இல்லையெனில், துப்புரவு செய்ய வேண்டிய முறைகள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கும். அதில் மூத்தோரது திறன் வீணாகும். பலவித துப்புரவு தேவையான கட்டுரைகள் அதிகமாகிக் கொண்டே இருப்பது வேதனை அளிக்கிறது. இவைகளைப் பற்றி, இங்கு உரையாடுவது பொருத்தமாகாது. ஒரு பங்களிப்பாரின் தேவைகளை, கட்டுரைச் செறிவுக்கான வழிகாட்டுதல்களே உதவும். புதிய முயற்சி எப்பொழுதுமே, யார் செய்தாலும், முழுமையற்றே இருக்கும். அதை பிறர் வழிநடத்தி கவிஞன் உள்ளம் (நூல்) போல, வளர்த்துதலை நான் ஆதரிக்கிறேன்.
- @Kanags: கட்டுரையை மாற்றியுள்ளேன். இந்த குறிப்பிட்ட வார்ப்புருவை நீக்க, இம்மாற்றங்கள் போதுமென்றே எண்ணுகிறேன். வேறு ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில், அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து வழிநடத்துமாறு கோருகிறேன்..
கட்டுரைப் பக்கம் நீக்கப்பட்டு விட்டமையாலும், குறிப்பிடத்தக்கமை தொடர்பான உரையாடல் என்பதாலும், பேச்சுப் பக்கம் இங்கே நகர்த்தப்பட்டது.
இக்கட்டுரையில்
- நான்கு வரிகள் உள்ளன. இது ஒரு கட்டுரைக்கு மூன்று வரிகள் போதும் என்ற தேவையை நிறைவு செய்கிறது.
- தமிழ்ச் சூழலில் ஒரு தள்ளுவண்டிக் கடை நடத்துவது ஒரு பெரும் போராட்டம். இதனைக்கருத்தில் கொண்டு இத்தகைய தொழில் செய்வோரை ஊக்குவிக்கும் வண்ணம், வரலாற்றை ஆவணப்படுத்தும் வண்ணம் இக்கட்டுரை இங்கு இடம்பெற வேண்டும்.
- கட்டுரைக்கு உரிய பகுப்பு இடப்பட்டுள்ளது.
- பிறந்த தேதி, முகவரி விவரங்கள் தரப்பட்டுள்ளன.
எனினும், போதிய ஆதாரம் இல்லை, குறிப்பிடத்தக்கமை இல்லை என்று இக்கட்டுரையை நீக்கக் கோருவீர்கள் எனில்
- வாழும் நபர்கள்
- தொழில்முனைவர்கள்
- தொழில்நிறுவனங்கள்
ஆகியவற்றுக்கான குறிப்பிடத்தக்கமை கொள்கையை உருவாக்குங்கள்.
இதே போல் ஆதாரம் இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் அனைத்துக் குறுங்கட்டுரைகளையும் நீக்குங்கள்.
கோவைக்கு வந்தால் இந்தத் தள்ளுவண்டிக் கடைக்காரரின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
அது வரை தொடர்ந்து இது போல் பல கட்டுரைகள் வரும் :) --இரவி (பேச்சு) 08:22, 14 ஏப்ரல் 2014 (UTC)
- ஐயா...தயவு செய்து நிறுத்தவும், முடியல....சரவணன் பெரியசாமி 08:27, 14 ஏப்ரல் 2014 (UTC)