எண்ணங்கள்

தொகு
  1. கவிஞன் உள்ளம் என்ற தலைப்பைப் பற்றி முதல் பத்தியில் குறிப்பிட வேண்டும். எவ்வகை நூல், யார் எழுதியது, எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது போன்ற அடிப்படைத் தகவல்கள் வேண்டும். நூலைப் பற்றி சிறப்பாகக் கொள்ளக்கூடிய ஒரு தகவல் இருந்தால் அதனையும் முதல் பந்தியில் தரலாம். அறிமுகத்தில் தற்போதுள்ளது விமரிசனம். அது இங்கு தேவைப்படாது. நீக்கலாம். வேறு யாராவது இந்நூலைப் பற்றி விமரிசித்திருந்தால் விமரிசனம் என்ற உபதலைப்பில் மேற்கோளுடன் சுருக்கமாகத் தரலாம்.--Kanags \உரையாடுக 06:13, 2 நவம்பர் 2013 (UTC)Reply
  2. விக்கிநடையில் இல்லாத அறிமுகப்பகுதியை நீக்கியுள்ளேன். இந்நூல் குறித்த மேலதிக விவரங்களை அறிந்தவர்கள் (விக்கிநடைக்குட்பட்டு) சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 06:29, 2 நவம்பர் 2013 (UTC)Reply
  3. தகவல் உழவன், பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ளவும்
    • தலைப்பு கவிஞன் உள்ளம் (நூல்) என்று இருப்பது நல்லது.
    • அறிமுகப் பகுதிக்குத் தலைப்பு இடவேண்டாம்.
    • அறிமுகப் பகுதியில் தலைப்புக் குறிக்கும் விடயம், அதன் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் அடங்கலாகக் கட்டுரையின் விடயத்தைச் சுருக்கமாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும்.
    • அறிமுகப் பகுதியில் முதல் வசனத்தில் (பொதுவாக முதல் சொல்) தலைப்பு தடித்த எழுத்துக்களில் தரப்படுவது வழக்கம்.
    • கட்டுரையில் வசனங்கள் வருணனைகளாக அமைவது கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தம் இல்லாத நடை. (எகா: "தமிழ் இலக்கியப் பூங்காவில் ஏராளமான நறுமலர்கள் இருக்கின்றன; தமிழ் இளைஞர்கள் யாவரும் தும்பிகளாக ஆக வேண்டும் என்பதே ....):---மயூரநாதன் (பேச்சு) 07:56, 2 நவம்பர் 2013 (UTC)Reply
    அறிமுகப் பகுதியிலும், உள்ளடக்கப் பகுதியிலும் விரிவாக்கங்களைச் செய்திருக்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 08:46, 2 நவம்பர் 2013 (UTC)Reply
    சிறந்த முறையில் எழுதியிருக்கிறீர்கள் மயூரநாதன். இவ்வடிவமைப்பை நூல்கள் பற்றி எழுதுபவர்கள் கவனித்துக் கொள்வது நல்லது.--Kanags \உரையாடுக 09:19, 2 நவம்பர் 2013 (UTC)Reply
    அனைவருக்கும் மிக்க நன்றி. நூற்பட்டியின்அனைத்து நூல்களுக்கும் (நூல்) என்ற பின்னொட்டு தரலாமல்லவா?--≈ உழவன் ( கூறுக ) 09:39, 2 நவம்பர் 2013 (UTC)Reply
    இதுவரை வந்த அனைவரின் கருத்துப்படி, இக்கட்டுரையும், பட்டியலும் ந. சுப்புரெட்டியாரின் நூற்பட்டியல் மாற்றப்பட்டுள்ளது. ஒருமுறை காணவும்.--≈ உழவன் ( கூறுக ) 05:41, 3 நவம்பர் 2013 (UTC)Reply
    உள்ளடக்கத்தை பட வடிவிலும் கொடுத்துள்ளேன். ஏனெனில், முதற்கட்டமாக படத்தையும், அதற்கு அடுத்து உள்ளடக்க விவரத்தையும் எழுத எண்ணுகிறேன். ஒவ்வொரு நூலினையும் படித்தே பின்பு, உள்ளடக்க அட்டவணை உருவாக்க காலம் அதிகமாகும் என்பதால், உள்ளடக்க படத்தை இணைக்க முதலில் இணைக்கிறேன். இதனால் பொதுவகத்திலும், தமிழ்கோப்புகள் அதிகமாகும்.--≈ உழவன் ( கூறுக ) 02:25, 15 நவம்பர் 2013 (UTC)Reply
    பட்டியலில் (நூல்) என்ற ஒட்டு இல்லாமல் இருக்க [[கவிஞன் உள்ளம் (நூல்)|கவிஞன் உள்ளம்]] என எழுதலாம். அதன் மீது சொடுக்கும்போது அது "கவிஞன் உள்ளம் (நூல்)" என்னும் கட்டுரைக்குப் போகும். ஆனால் பட்டியலில் "கவிஞன் உள்ளம்" என்று இருக்கும். பட்டியலின் முதல் மூன்று வரிகளை மாற்றியிருக்கிறேன் பார்க்கவும். ---மயூரநாதன் (பேச்சு) 10:37, 15 நவம்பர் 2013 (UTC)Reply
    கவனித்தேன். அதுபோலவே அனைத்திலும் மாற்றி விடுகிறேன். --≈ உழவன் ( கூறுக ) 12:19, 15 நவம்பர் 2013 (UTC)Reply

நகல்-ஆலமரத்தடி தொழினுட்பம் உரையாடல் கருத்து ஆலோசனை

தொகு
  • ஒரு மின்னூலின் குறிப்பிட்ட பக்கத்தை மட்டும் காட்டுவது எப்படி? ஆலோசனை என்ற தலைப்பில் ஆலமரத்தடி (தொழினுட்பம்) பகுதியில் நடந்த மின்னூலின் படங்களுக்கான(pdf-->jpg)உரையாடலின் நகல், இந்த திட்டமாதிரி கட்டுரையில் இடப்படுகிறது.

அனைத்து மின்நூல்களிலும் பொருளடக்கம் உள்ளது. இதனை மட்டும் ஒரு விக்கியில் காட்டுவது எப்படி? எடுத்துக்காட்டாக, கீழ்கண்ட உரலியில் தெரியும், ஒரு பக்கத்தினை மட்டும் காட்டுவது? https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/page11-1666px-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf.jpg -- உழவன் (உரை) 01:43, 30 மே 2016 (UTC)Reply

ஒரு படிமத்தை பயன்படுத்துவது போலவே பயன்படுத்தலாம். எ.கா. [[File:வீர_காவியம்.pdf|page=11|200px|right]] என பயன்படுத்தலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 14:41, 30 மே 2016 (UTC)Reply
மிகவும் மகிழ்ந்தேன். ஒரு மின்னூலின் குறிப்பிட்ட பக்கத்தை மட்டும் தனியே பிரித்தெடுக்க, பைத்தான் நிரலொன்றை மிகுந்த முயற்சிக்கு பிறகு எழுதினேன். இதனால் 4000 கோப்புகளைப் பிரித்தெடுத்து, பதிவேற்றத் திட்டமிட்டிருந்தேன். அது தேவையில்லை என்பதை,தங்களது வழிகாட்டல் உணர்த்தியது. விரைவில், நாட்டுடைமை நூல்களை, கவிஞன் உள்ளம் (நூல்) போல அமைக்க, அடித்தளமிடுவேன். கற்றலின் கேட்டல் நன்று என்ற முதுமொழியை மேலும் பற்றினேன். வணக்கம்.-- உழவன் (உரை) 04:07, 31 மே 2016 (UTC)Reply

-- உழவன் (உரை)

தகவற்பெட்டியில் படமிடுதல்

தொகு
Return to "கவிஞன் உள்ளம் (நூல்)" page.