கவிஞன் உள்ளம் (நூல்)
கவிஞன் உள்ளம் என்பது துறையூர் சமீன்தார் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ந. சுப்புரெட்டியார் எழுதிய ஒரு கட்டுரைத் தொகுப்பு நூல். இதன் முதற் பதிப்பு 1949 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 2008-09 காலப் பகுதியில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட இவ்வாசிரியரின் நூல்களுள் இதுவும் ஒன்று. தமிழ் இலக்கியப் பாடல்களில் வரும் நிகழ்ச்சிகளைச் சிறிய கட்டுரைகளால் இந்நூல் விளக்குகிறது. இவ்வாறான 25 கட்டுரைகள் இந்நூலில் அடங்கி உள்ளன. பொதுவாக இலக்கியத்திலும், சிறப்பாகச் சங்க இலக்கியத்திலும் விருப்பத்தை ஊட்டி, அவ்விலக்கியங்களை மக்கள் படிக்கச் செய்வதே இந்நூல் ஆசிரியரின் நோக்கம்.[2] இந்நூல் எளிய நடையில் அமைந்துள்ளது.
நூலாசிரியர் | ந. சுப்புரெட்டியார்[1] |
---|---|
நாடு | துறையூர், தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
வகை | தமிழ் இலக்கியம் |
வெளியீட்டாளர் | கலைவளர்ச்சிப் பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | சனவரி, 1949 |
பக்கங்கள் | 157 (17+140) |
உள்ளடக்கம்
தொகுசங்கப் புலவர்கள் முதல், பாரதிதாசன் வரை எழுதிய பாடல்கள் இந்த நூலில் உள்ள கட்டுரைகளுக்குக் கருப்பொருளாக அமைந்துள்ளன. இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளையும், அவற்றில் எடுத்தாண்டுள்ள தமிழ் இலக்கியப் பாடல்கள், அவை இடம்பெற்ற நூல்கள் என்பவை பற்றிய தகவல்களையும் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.
வ.எண் | தலைப்பு | பக்கஎண் | குறிப்புகள் - விளக்கப்பட்டுள்ள, சங்ககாலப் பாடல்கள் |
1. | என்ன ஆச்சரியம்? | 01 | நற்றிணை - " பிரசங் கலந்த வெண்சுவைத் " (110) |
2. | பழங்கயிறு | 06 | நற்றிணை - " புறந்தாழ் பிருண்ட கூந்தற் " (284) |
3. | சிறைப்பட்ட உள்ளம் | 11 | நற்றிணை - " கழைபா டிரங்கப் பல்லியம் " (95) |
4. | ஊர் அடங்கிற்று! | 16 | அகநானூறு - " கொடுந்திமிற் பரதவர் " (76) |
5. | பெரிய ஆர்ப்பாட்டம் | 24 | அகநானூறு - " பகுவாய் வரா அல் " (36--மதுரை நக்கீரர்) |
6. | கல்யாணம் செய்துகொள் | 30 | அகநானூறு - " யாயே, கண்ணினும் " (12--கபிலர்) |
7. | நயமான பேச்சு | 38 | அகநானூறு - " கோழ்இலை வாழைக் கோண்மிகு " (2--கபிலர்) |
8. | சரியான சூடு | 44 | புறநானூறு - " இரவலர் புரவலை நீயும் அல்லை " (162) |
9. | கண்ணில் ஊமன் | 48 | புறநானூறு - " மாரி இரவில் மரங்கவிழ் பொழுதின் " (239--பெருஞ்சித்திரனார்) |
10. | கள்வன் மகன் | 52 | குறிஞ்சிக்கலி - " சுடர்தொடீஇ கேளாய், தெருவில்நா " (15) |
11. | கண்ணீர்க்கடல் | 60 | நெய்தற்கலி - "தாழ்பு, துறந்து தொடி நெகிழ்த்தான் " (28) |
12. | குறிப்பு மொழி | 64 | நெய்தற்கலி - " ஒண்சுடர் கல்சேர உலகுஊருந் தகையது " (4) |
13. | அறிவு வேட்கை | 72 | திருக்குறள் - " அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் " (1110) |
14. | மதிப்புரை | 78 | திருவள்ளுவமாலை - " தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட " (கபிலர்) |
15. | நிலையற்ற வாழ்க்கை | 83 | நாலடியார் - " வெறியயர் வெங்களத்து வேன்மகன் பாணி " (16) |
16. | உழவு காளைகள் | 88 | சீவக சிந்தாமணி - " மாமனும் மருகனும் போல அன்பின " திருத்தக்க தேவர் |
17. | இயற்கை அரங்கு | 93 | கம்பராமாயணம் - " தண்டலை மயில்க ளாடத் தாமரை " (நாட்டுப் படலம்) |
18. | தேரையின் தாலாட்டு | 97 | கம்பராமாயணம் - " சேலுண்ட வொண்கணாரிற் றிரிகின்ற " (நாட்டுப் படலம்) |
19. | ஓட்டைச் செவியர் | 101 | கம்பராமாயணம் - " சொல் ஒக்குங் கடிய வேகச் " (தாடகைவதைப் படலம், 71) |
20. | களை பறிக்கும் காட்சி | 110 | 1. " கண்ணெனக் குவளையும் கட்டல் " (சீவக சிந்தாமணி-51) 2. " பண்கள்வாய் மிழற்றும் இன்சொற் " (கம்பராமாயணம்) 3. " கடைசியர் முகமும் " (திருவிளையாடல் - திருநாட்டுச் சிறப்பு 23) 4. " சைவலங் களைகுவான் " (காஞ்சிப் புராணம்-திருநாட்டுப்படலம் 84) |
21. | ஆனந்த வெள்ளம் | 117 | திருக்கோவையார் - " ஆனந்த வெள்ளத்து அழுந்துமோர் " (307) |
22. | உயிர்ப் படகு | 122 | திருவாசகம் - " தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் " (திருச்சதகம் 27) |
23. | செவியுணவு | 127 | நளவெண்பா - " வண்ணக் குவளை மலர்வவ்வி வண்டெடுத்த " |
24. | சரியான தண்டனை! | 131 | காஞ்சிப் புராணம் - " காமனை முனிந்து நெடுஞ்சடை " (திருநகரப்படலம் 109) |
25. | செந்தமிழ்த்தீனி | 137 | குடும்பவிளக்கு - " கட்டுக்குள் அடங்கா தாடிக் " (பாரதிதாசன்) |
மேற்கோள்
தொகு- ↑ ந. சுப்புரெட்டியாரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் மின்னூல் வடிவம் உள்ள தமிழ்இணையக் கல்விக்கழகத்தின் நூலகப்பிரிவு
- ↑ சுப்பு ரெட்டியார், ந., கவிஞன் உள்ளம், கலைவளர்ச்சிப் பதிப்பகம், துறையூர், 1949. பக். 15.
உயவுத்துணை
தொகு- தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்த, நாட்டுடைமை நூற்பட்டியலில் உள்ள சுப்புரெட்டியாரின் நூல்கள் - தமிழ் இணையக் கல்விக் கழக இணையதளப்பக்கம்
இவற்றையும் காணவும்
தொகுஇதர இணைய இணைப்புகள்
தொகு- நீலகிரி மாவட்ட நடுவ நூலகம் இணையமயமாக்கப் பட்ட புத்தக தேடல்(OPAC) பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இலவசப் பதிவிறக்கத் தொடுப்பு - http://www.tamilvu.org/library/nationalized/pdf/20-subbureddiyar/430-KavinjarVullam.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- பொதுஉரிமத்துடன், இலவசமாக இந்நூலினை பதிவிறக்கம் செய்யக்கூடிய பொதுவக இணையத்தள பக்கம்