விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள்

சென்னையில் நடைபெற்ற பத்தாண்டுக் கொண்டாட்டம் நிகழ்ச்சி குறித்து, நிகழ்வுக்கு வந்திருந்த சிலர் இந்நிகழ்ச்சி சிறப்பு என்று பெருமைப்பட்டுக் கொண்டனர். ஆனால், நிகழ்ச்சி நடத்தப்பட்ட விதமே சரியில்லை என்று சிலர் குறைபட்டுக் கொண்டனர். சிலர் நிகழ்ச்சி குறித்து வெளியில் சொல்ல முடியாமல் தயங்கிக் கொண்டுமிருந்தனர். இவர்களது எண்ணங்களை வெளிக்காட்ட, அவர்களது கருத்துகளைப் பதிவேற்றம் செய்திடத் தேவையான தனிப்பக்கம் அமைத்துக் கொடுத்த சோடாபாட்டிலுக்கு நன்றி. நானும் என் கருத்துக்களை இன்னும் ஓரிரு நாட்களில் பதிவேற்றம் செய்கிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:05, 30 செப்டம்பர் 2013 (UTC)

தனிப்பக்கம் அமைக்க வேண்டுமென்று செய்யவில்லை சுப்பிரமணி :-) . பொதுவெளியில் இருந்தது. இதனை நீக்கிவிடுவீர்கள் என்று தெரியும் என்பது போன்று சேகரன் எழுதியிருந்தார். முதலில் நீக்கத் தான் நினைத்தேன். தணிக்கை என்று விமர்சனம் எழலாம் என்று நினைத்து பின் தனியாகத் திட்டப் பக்கத்துக்கு நகர்த்தி விட்டேன். மற்றபடி அவர் கூறியிருப்பதில் பெரும்பாலானவை குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் நிலைப்பாடு இல்லை. இத்திட்டத்தில் முதலில் இருந்தே சிறிதும் நான் பங்கேற்கவில்லை, உதவி செய்யவில்லை, திட்டத்தைப் பற்றி அறிந்திருக்கவுமில்லை (சென்னையில் இருந்தும், ஏதாவது வேலை செய்யவேண்டிய நிலை ஏற்படும் போல் தெரிந்தால் நழுவி ஓடி ஒளிந்து கொண்டிருந்தேன் :-)) . என்ன நடக்கிறது என்று அவ்வப்போது சிறிது எட்டிப்பார்த்ததோடு வேறு எதுவும் நான் செய்யவில்லை. தனிப்பட்ட அளவில் ஞாயிரன்று நடந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. --சோடாபாட்டில்உரையாடுக 17:30, 30 செப்டம்பர் 2013 (UTC)
தொடர் பயணம், குடும்ப வேலைகள், தொழிற்பணிகள் இருப்பதால் இங்கு வரும் விமரிசனங்களுக்கு என்னால் உடனடியாகப் பதில் அளிக்க இயலாது. மற்றபடி, அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:45, 30 செப்டம்பர் 2013 (UTC)
இதற்கான பக்கத்தைத் தொடங்கி வைத்ததற்கு நன்றி, சோடாபாட்டில். விமர்சனங்கள் என்பதைக் காட்டிலும் கருத்துகள் என்றிருந்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். நிறைகுறைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்கும் இடம்தானே? -- சுந்தர் \பேச்சு 07:01, 1 அக்டோபர் 2013 (UTC)Reply
கருத்துகள் என்று மாற்றுவது ஏற்றதாகப் படுகிறது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:35, 1 அக்டோபர் 2013 (UTC)Reply
Y ஆயிற்று அவ்வாறே மாற்றி விட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:40, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

சுய விமர்சனம்

தொகு

சோடாபாட்டிலின் சுயவிமர்சனத்திற்கு ஒரு பாராட்டு! ஒவ்வொருவருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. கட்டுரைகளில் மட்டும் பிழைகள், தகவல்களை யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம், விக்கியின் நிகழ்வில் குறை என்றால் இரவிக்கு மட்டும் பொறுப்பு என்பதை ஏற்கமுடியாது. இரவி குறைந்த பட்சம் நிருவாக அனுக்கத்தில் உள்ளவர்களையாவது கலந்து கூட்டு முடிவு எடுத்து வேலைகளை தனிப் பொறுப்புக்கு விட்டுவிட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருந்தால் நலமே! சுந்தர் கூறியது போன்று "நிறைகுறைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்கும்" இடமாக அதே வேலையில் தனது பங்களிப்பு என்ன? என்பதையும் (சோடாபாட்டில் மாதிரி) பதிவு செய்ய அன்போடு வேண்டுகிறேன்.--யோகிசிவம் (பேச்சு) 09:24, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

//இரவி குறைந்த பட்சம் நிருவாக அனுக்கத்தில் உள்ளவர்களையாவது கலந்து கூட்டு முடிவு எடுத்து//
என்னைப் பொறுத்த வரை: இரவி பலமுறை என்னிடம், கருத்துகள் பெற முயற்சி எடுத்தார். நல்கை, விக்கிமீடியா இந்தியப்பிரிவுடன் இணைந்து செயல்பாடு, அரங்குக்கான ஏற்பாடு, ஒளிப்பட ஏற்பாடு, பரப்புரை, ஊடகவியலாளர் சந்திப்பு போன்ற அனைத்துக்கும் கலந்துரையாடி முடிவு செய்யவே முயன்றார்.--சோடாபாட்டில்உரையாடுக 09:44, 1 அக்டோபர் 2013 (UTC)Reply
//கூட்டு முடிவு எடுத்து வேலைகளை தனிப் பொறுப்புக்கு விட்டு//

பயனர்களிடம் சில வேலைகளை கூடல் நாள் மேடை நிகழ்வு, எனைய பணிகளை தானே முன்வந்து செய்திருக்கலாம், இரவி அவர்களிடம் எனக்கு நெறுக்கம் இல்லை, இருப்பினும் ஓரிருமுறை இரவியை அனுகிய போது உள்மனம் என்னை தடுக்கவே அமைதியானேன். கருத்துக்கள் (சுய விமர்சனங்கள்) முன்னெடுத்துச் செல்வதாக அமையவேண்டும். அதாவது பூனை தன் குட்டியை கவ்வி எடுத்துச் செல்வது போல் ( எலியை பிடிப்பது போலல்லாமல்) நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 10:01, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

சில கருத்துகளை விரும்புகிறேன்...

தொகு
  • புருனோ சொல்லும் 'improvements' என்பதற்கும் 'flaws' என்பதற்கும் உள்ள வேறுபாடு.
  • முதல்வா அவர்களின் கருத்துகள், மனதில் நம்பிக்கை விதைகளை இடுகின்றன.

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:59, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

  • இரவி தெரிவித்த கருத்தாகிய, ஒரு திருமணத்தின் வெற்றி என்பது மணமகனும் மணமகளும் இறுதி வரை மனமொத்து வாழ்வது தான். பந்தியில் பாயாசம் கிடைக்கவில்லை, பாயாசத்துக்கு அப்பளம் கிடைக்கவில்லை, மாமன் மச்சானுக்கு மாலை போடவில்லை என்பது எல்லாம் ஒரு குறை இல்லை எனும் உண்மை!
  • மயூரனாதன் அவர்கள் தெரிவித்துள்ள இக்கூடலினால், தமிழ் விக்கியை மேலும் மேம்படுத்திச் செல்வதற்கான பலவகையான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பயனர்கள் மத்தியில் புதிய ஊக்கம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதில் பெருமளவு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழ் விக்கிச் சமூகத்துக்கு வெளியில் இருந்தும் நமது முன்னெடுப்புக்களுக்கு அங்கீகாரமும் உதவிகளும் கிடைத்துள்ளன. எனவே இவ்வாய்ப்புக்களையும், ஆற்றல்களையும் சரியான முறையில் புரிந்து கொண்டு ஒற்றுமையாக அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டியது அவசியம். எங்களோடு பேசிய பல ஊடகத்தினர் தமது தேவைகளுக்காகத் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். பள்ளிகளில் விக்கிப்பீடியாவைப் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதிலும் பல பயனர்கள் ஈடுபட்டுக் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றுள்ளனர். தமிழ்ச் சமூகத்தின் அறிஞர்கள் பலரும் கூட நமது செயற்பாடுகளை ஆர்வத்துடன் கவனித்து வருவது தெரியவந்துள்ளது. இவை எல்லாம் நாம் தமிழ் விக்கியின் தரத்தையும் அதன் நம்பகத் தன்மையையும் மேம்படுத்துவதற்கான தேவையை உணர்த்தி நிற்கின்றன. நமது அடுத்த கட்ட முயற்சிகள் இவற்றை முன்னிலைப்படுத்தி அமையவேண்டியது அவசியம். இதற்காக நமக்குக் கிடைக்கக்கூடிய எல்லா வளங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் கருத்து-மழை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:09, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

சில கருத்துக்கள்

தொகு
  • விக்கி பத்தாண்டு நிகழ்வின் நோக்கம் பற்றிக் குறிப்பிட்டும், மேலும் மேலும் நோக்கத்திற்கு விலகி நின்று கேள்விகள் தொடுப்பது ஏன்? விளக்கமளிக்கப்பட்டிருக்கையில் மீண்டும் அதே கேள்விகள் தொடுப்பது எதற்கு?
  • விதை விதைத்தாயா? நாட்டு நட்டாயா? களை பிடுங்கினாயா? என்ற தொனியில் கேள்வி கேட்போர் நீங்கள் என்ன செய்தீர்கள் என உங்களையே கேட்டுப்பாருங்கள்.
  • உங்கள் கேள்விகளையே மீண்டும் ஒரு முறைபாருங்கள். அதன் உள் நோக்கம் தெளிவாகவுள்ளது. “பக்கத்தில் இருப்பவருக்கு கறியில்லை” என திருமண வீட்டில் தனக்கும் சேர்த்துக் கேட்பவர் கேள்வி போல் உங்கள் கேள்விகள்.
  • விடயத்துடன் பேசுங்கள். உதாரணங்களுடன் விளக்குவதற்கு நாங்கள் விளக்கமில்லாதவர்கள் இல்லை. நீங்கள் PhD எங்கு படித்தீர்கள் என்றோ, எத்தனை மேடை ஏறினீர்கள் என்றோ, குறிப்பிடுவானேன்?
  • இது என்ன நூல் வெளியீட்டு விழாவா? அல்லது பத்தாண்டு விழாவா? நீங்கள் நூல் எழுதியது உங்களுக்காக. அதற்கு எப்படி விக்கியில் விளம்பரம் தேடுகிறீர்கள்?
தமிழ் விக்கிப்பீடியாவின் பயனராக அடையாளம் காட்டி கேள்வி கேட்டால் நான் பதிலளிக்கலாம். ஒளிந்து கொண்டு கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வதில் எனக்கு விருப்பமில்லை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:23, 14 அக்டோபர் 2013 (UTC)Reply
//அணுக்கங்கள் மீள்பெறுவதற்கும் இடமுண்டு// Do it if you can. Will do lookafter wiki?
//அணுக்கத்தைப் பயன்படுத்தி கணக்கை முடக்குவே என அச்சுறுத்தல் போன்ற செயல்பாடுகள்// when? where?
//ஆண்டுக்கணக்கில் விக்கியில் எந்த கட்டுரையையும் ஆரம்பிக்காதவர்// what about you?

I hope I have the rights to give my opinion like others, including பயனர்:786haja‎, who do not create at least one an article and seems like anonymous. If someone want to sensor my comment, do the same to him.

Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள்".