விக்கிப்பீடியா பேச்சு:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது
நான்கு நிரல்களாக இருப்பதனால் ஒரே பார்வையில் பார்க்க முடியாமல் உள்ளது. மூன்று நிரல்களாக்க முடியுமா? அத்துடன் ஆங்கில இணைப்புக்கள் இருப்பது பொருத்தமாயில்லை. நன்றி. -கோபி
- மூன்று நிரல்களாக ஆக்க முடியும், ஆனால் இன்னும் நீண்டுவிடும். இப்பட்டியலை அமைக்கவே எனக்கு மிக அதிக நேரம் எடுத்தது! ஓரளவுக்கு இணைப்புகள் கொடுத்தபின், ஆங்கிலப் பெயர்களை நீக்கிவிடலாம். ஆங்கில இணைப்புகள் இப்போதைக்கு நினைவுக்காக வைத்திருக்கின்றேன். ஆங்கிலத் தலைப்புகளின் பட்டியலும் சரியானதாக இல்லை. இப்பட்டியலில் சார்லஸ் டிக்கன்சன் இல்லை ஆனால் எமிலி டிக்கன்சன் உள்ளார்- இப்படியாகப் பல. மிகவும் ஐரோப்பிய சார்புடன் வேறு உள்ளது. இப்போதைக்கு இப்பட்டியல். பின்னர் இதனை விரித்தோ, மாற்றியோ செய்துகொள்ளலாம், அல்லது முக்கிய கட்டுரைகள்-3 என்று ஒன்று செய்துகொள்ளலாம். தனியாகத் தமிழ்ப் பட்டியல் ஒன்றும் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆர்வம். ஏறத்தாழ இதே தலைப்புகளில், தமிழர் கண்ணோட்டத்தில் என்னென்ன இருக்க வேண்டும் என்று. அது பட்டியல்-4 ஆக பின்னர் செய்யலாம் :) --செல்வா 03:39, 24 மே 2008 (UTC)
- கோபி நீங்கள் நீர்நிலைகள் வரிசையில் தந்த இணைப்புகள் சரியாக உள்ளன. மற்றவையும் அதுபோலவே திருத்த வேண்டும்.--செல்வா 03:51, 24 மே 2008 (UTC)
தமிழில் கட்டுரைகள் இல்லாத தலைப்புக்களுக்கு ஆங்கிலப் பெயரை அடைப்புக்குறிக்குள் தருவது கட்டுரை உருவாக்கத்தை இலகுபடுத்தும் என்று தோன்றுகிறது. நன்றி. கோபி 05:44, 12 செப்டெம்பர் 2008 (UTC)
- வலப்புறமாக நகர்த்திக்கொண்டால் நான்கு நிரல்களையும் ஒரே பார்வையில் காண இயலுகின்றது. (இடது பட்டி மறைந்து இருப்பதால் குழப்பம் ஏதும் இல்லை).--செல்வா 20:11, 21 நவம்பர் 2008 (UTC)
பக்க அமைப்பு மாற்ற
தொகுஇது முக்கிய கட்டுரைத் தலைப்புக்களின் விரிவான பட்டியலாகும். இதன் அமைப்புக் காரணமாக தலைப்புக்களை இலகுவில் கண்டடைய முடியாதுள்ளது. ஆதலால் இதனை இதன் ஆங்கில மூலத்தின் வடிவத்துக்கு மாற்றியமைப்பது பொருத்தமானதெனப் படுகிறது. ஆட்சேபனைகள் இருப்பின் தெரியப்படுத்த வேண்டுகிறேன். நன்றி. கோபி 12:24, 12 செப்டெம்பர் 2008 (UTC)
- ஆங்கில மூல வடிவத்தைவிட இது நன்றாக இருக்கிறது. ஆனால் நான்கு நிரல்கள் இருப்பது சற்று வசதிக் குறைவாக உள்ளது. இதையே இரண்டு நிரல்களில் செய்யமுடிந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து. மயூரநாதன் 14:14, 12 செப்டெம்பர் 2008 (UTC)
நான்கு நிரல்கள் இருப்பது தவிர பொருளடக்கம் இன்மையும் வசதிக்குறைவாக உள்ளது. விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2/மாதிரி போல மாற்றி அமைக்கலாமா? கோபி 08:51, 13 செப்டெம்பர் 2008 (UTC)
- எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மயூரநாதன் 12:16, 13 செப்டெம்பர் 2008 (UTC)
- வலப்புறமாக நகர்த்திக்கொண்டால் நான்கு நிரல்களையும் ஒரே பார்வையில் காண இயலுகின்றது. --செல்வா 20:12, 21 நவம்பர் 2008 (UTC)
எழுதப்பட வேண்டிய கட்டுரைகள்
தொகுமாகிர், நிரல் மூலம் ஏற்கெனவே உள்ள கட்டுரைகளை ஏற்றியமைக்கு நன்றி. இவற்றிலிருந்து சிவப்பு வண்ண தலைப்புகள் மட்டும் தனியாக பட்டியலிடப்பட்டால் முனைப்பாக அவற்றை எழுதவும் மீளாயவும் எளிதாக இருக்கும். இந்தப் பட்டியல் முழுமையானப் பட்டியலின் மேல்பகுதியில் இருந்தால் நலம். இதனையும் ஏதேனும் நிரல்வழியாகச் செய்ய இயலுமா ?--மணியன் 17:58, 30 சனவரி 2012 (UTC)
- விக்கிப்பீடியா பேச்சு:முக்கிய கட்டுரைகள்-2/redlinks என்ற பக்கத்தில் சிவப்பிணைப்புகள் மட்டும் பட்டியிலிட்டிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 19:41, 30 சனவரி 2012 (UTC)
10,000 முக்கிய கட்டுரைகள்
தொகுவிரிவான முக்கிய கட்டுரைகள் பட்டியல் என்பது விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டிய 10,000 கட்டுரைகளின் தலைப்புக்களை அடையாளங் காணும் ஒரு முயற்சி ஆகும். ஆங்கில விக்கிப்பீடியாவில் 2012 சனவரி 15 வரை 9,116 கட்டுரைகளை அவ்வாறு பட்டியலிட்டிருக்கிறார்கள்.
தமிழ் விக்கிப்பீடியாவில் இப்போது உள்ள பட்டியல் ஆங்கில விக்கிப்பீடியாவில் சில ஆண்டுகளின் முன்பிருந்த பட்டியலின் தமிழாக்கம் ஆகும். இங்கே பட்டியல் விரிவுபடுத்தப்படாமலும் முழுமையாக மொழிபெயர்க்கப்படாமலும் காணப்படுகிறது. கோபி (பேச்சு) 17:10, 7 மார்ச் 2012 (UTC)
- கோபி, ஆங்கில விக்கிப்பீடியாவிலேயே இன்னும் முழுமையாக 10,000 கட்டுரைப் பட்டியலை இறுதி செய்யவில்லை. We should ideally wait until we are close to 10,000 before engaging in serious debate over what should stay or go என்கிறார்கள். எனவே, நாம் இப்போதைக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கிற பட்டியலை மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்று தோன்றுகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு இறுதியான பட்டியல் வந்த பிறகு, அதனை இங்கு இற்றைப்படுத்தும் பணியை அடுத்தடுத்த ஆண்டுகளில் செய்யலாம்.--இரவி (பேச்சு) 17:33, 7 மார்ச் 2012 (UTC)
நுட்ப வேண்டுகோள்
தொகுஆங்கில விக்கிப்பீடியா பட்டியலை அல்லது வேறு கலைக்களஞ்சியங்களின் பட்டியலை எடுத்துக்கொண்டு முக்கிய கட்டுரைகளை இனங்காணும் முயற்சி கலைக்களஞ்சிய விருத்திக்கு அவசியமே. ஆனால் நாம் ஆங்கிலத்தில் உருவாகும் பட்டியல்களை மீண்டும் மீண்டும் தொடங்குவதும் அதற்குச் சமாந்தரமான வேறு முயற்சிகளில் மீண்டும் முதலிலிருந்து தொடங்குவதும் (குறுவட்டு போன்றவை) எவ்வளவுதூரம் பொருத்தமோ தெரியவில்லை.
எல்லா மொழி விக்கிப்பீடியக்களிளிலும் இருக்க வேண்டிய கட்டுரைகள், முக்கிய கட்டுரைகள் என இரண்டினை மொழிபெயர்த்த பின்னர் மீண்டும் முக்கிய கட்டுரைகள்-2 இல் மொழிபெயர்க்கிறோம். ஆங்கிலத்தில் இற்றைப்படுத்தி முடிந்த பின்னர் மீண்டும் முதலிலிருந்து தொடங்குவது பொருத்தமில்லை. இந்த மொழிபெயர்ப்பு வேலைகளை தானியக்கமாகச் செய்ய முடியாதா? அதாவது ஆங்கிலப் பட்டியலிலுள்ள கட்டுரைகளில் தமிட் கட்டுரைக்கான இணைப்பு இருந்தால் அக்கட்டுரைகள் தமிழிலும் தமிழில் இல்லையெனின் ஆங்கில இணைப்பாகவும் தானியக்கமாக ஒரே சொடுக்கில் பட்டியல்களை உருவாக்க நுட்பத் தீர்வு எட்ட முடியாதா?
இதனைச் சாத்தியமாக்கினால் இத்தகைய பட்டியல்களை மொழிபெயர்ப்பதில் செலவளியும் பெருமளவு நேரம் சிவப்பு இணைப்புக்களை நீக்கிப் புதிய கட்டுரைகள் எழுதுவதற்குப் பயன்பட வாய்ப்புக்கள் உள்ளது. தமிழுக்கான முக்கிய கட்டுரைகளின் பட்டியலை உருவாக்கும் முயற்சிகளையும் முடுக்கிவிடக்கூடியதாக இருக்கும். நன்றி கோபி (பேச்சு) 12:56, 8 மார்ச் 2012 (UTC)
- நல்ல பரிந்துரை. உடன்படுகிறேன். மீண்டும் மீண்டும் மனித முறையில் மொழிபெயர்ப்பதில் உள்ள ஒரே பயன், ஒரு தலைப்பை எப்படியெல்லாம் வேறு வேறு விதமாக எழுதக்கூடும் என்று உணர்ந்து வழிமாற்று உருவாக்குவது தான் :) விக்கிப்பீடியா:முக்கிய_கட்டுரைகள் , விக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் ஆகியவற்றை வடிவமைப்பில் சிறந்த விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்-2 பக்கத்துடன் ஒருங்கிணைத்துப் புதிய பெயர் அளிப்பதும் நன்றாக இருக்கும். --இரவி (பேச்சு) 20:54, 9 மார்ச் 2012 (UTC)
- விருப்பம் நானும் உடன்படுகிறேன். --மணியன் (பேச்சு) 03:07, 10 மார்ச் 2012 (UTC)
- இம்முயர்ச்சியில் யாரேனும் ஈடுபட்டிருகின்றீர்களா? வேறு காரணங்களுக்காக இதையே நானும் செய்ய எண்ணி இருந்தேன், பாதி முடித்தும் விட்டேன். பி.எச்.பியில் wiki API பயன்படுத்தி செய்திருக்கின்றேன்.
இதனை இயக்க XAMPP அல்லது அதனைப்போல வேறு package இருந்தால் போதும். யாரேனும் இதனை பரிசோதிக்க விறும்பினால் என் பேச்சு பக்கத்தில் தெரியப்படுத்தவும். இதனை இந்த வார இறுதிக்குள் முடித்துவிட்டு உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:10, 26 சூன் 2012 (UTC)- ஆயிற்று காண்க http://wikiproject.net76.net/Wiki/. கருத்துகளை இங்கே பதியவும் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#Auto_Wiki_Interlang_Linker. நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:36, 30 சூன் 2012 (UTC)
- இம்முயர்ச்சியில் யாரேனும் ஈடுபட்டிருகின்றீர்களா? வேறு காரணங்களுக்காக இதையே நானும் செய்ய எண்ணி இருந்தேன், பாதி முடித்தும் விட்டேன். பி.எச்.பியில் wiki API பயன்படுத்தி செய்திருக்கின்றேன்.
கூட்டு முயற்சி
தொகுஇவற்றில் தமிழ் அல்லது இந்தியா தொடர்பாக ஏதும் இருந்தால் அவற்றை கூட்டு முயற்சி கட்டுரையாக பரிந்துரைக்கலாமே? நான் இன்னும் பட்டியலை பார்க்கவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:41, 10 மார்ச் 2012 (UTC)
இற்றை
தொகுதற்போது தமிழில் உள்ள பட்டியல் ஒரு சில ஆண்டுகள் பழையதாகத் தோன்றுகிறது. மேல் விக்கியில் தற்போது உள்ள பட்டியலோடு ஒத்திசையச் செய்வோமா? @Neechalkaran: இதனைத் தானியக்கமாகச் செய்ய உதவ முடியுமா? நன்றி. --இரவி (பேச்சு) 14:44, 26 ஏப்ரல் 2018 (UTC)
- விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/நபர் இப்பக்கத்தை மாற்றியுள்ளேன். இதன் அமைப்பு ஏற்புடையதென்றால் மற்ற பக்கத்தையும் மாற்றிவிடுகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 16:14, 26 ஏப்ரல் 2018 (UTC)
- @Neechalkaran: அமைப்பு ஏற்புடையது. மாற்றலாம். --இரவி (பேச்சு) 07:59, 28 ஏப்ரல் 2018 (UTC)