விக்கிப்பீடியா பேச்சு:100விக்கிநாட்கள்

Latest comment: 8 மாதங்களுக்கு முன் by சத்திரத்தான் in topic விலகல் அறிவிப்பு

மணியனின் சுயவிளக்கம்

தொகு

இது நல்ல திட்டம். விக்கியில் பங்கேற்கும் அனைத்து முனைப்பான பயனர்களும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விக்கியில் அனைத்துத் திட்டங்களிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் எனக்கு தற்போது எனது தனிப்பட்ட பிரச்சினைகளால் இணையத்தில் புழங்கும் நேரத்தை முறைப்படுத்த வியலாததாக உள்ளது. எப்போது வருவேன், எந்தளவு பங்களிக்க இயலும் என மதிப்பிட இயலாத சூழலில் உள்ளேன். எனது பெயரை அதனால்தான் பதிவு செய்யவில்லை. இருப்பினும் சிறந்த முயற்சி என்றளவில் நாளும் ஒரு கட்டுரை உருவாக்க முயல்கிறேன். --மணியன் (பேச்சு) 15:06, 16 ஆகத்து 2015 (UTC)Reply

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:53, 20 ஆகத்து 2015 (UTC)Reply

வாழ்த்துகளும், நன்றிகளும்...

தொகு

100விக்கிநாட்கள் எனும் இந்தத் திட்டத்தில் இணைந்து, நாள்தோறும் புதிய கட்டுரைகளை சிறப்பான முறையில் எழுதிவரும் இரவி, மயூரநாதன், மதனாகரன், சிறீதரன் ஆகியோரின் உழைப்பு வென்றிட எனது வாழ்த்துகள்! தமது தனிப்பட்ட அலுவல்களுக்கு நடுவே, இத்திட்டத்தின் வாயிலாக தமிழ் மொழிக்காக பங்காற்றும் உங்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுகின்றன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:40, 20 ஆகத்து 2015 (UTC)Reply

சீரியப் பங்களிப்பினை அமைதியாக தந்துகொண்டிருக்கும் சக்திகுமாரும் இத்திட்டத்தில் இணைந்தது, மிகுந்த மகிழ்ச்சியினைத் தருகிறது. தங்களின் முயற்சியும், உழைப்பும் வென்றிட எனது வாழ்த்துகள்! ஏதேனும் உதவி தேவைப்படின் என்னிடம் கேட்கலாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:53, 29 ஆகத்து 2015 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

வணக்கம் சிறீதரன்! நவம்பர் 22 அன்றோடு தங்களின் 100ஆவது நாள் முடிவடைவதாக உணர்கிறேன். உறுதிபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:02, 22 நவம்பர் 2015 (UTC)Reply

2024 எளிய கட்டுரைகள்

தொகு

பரிந்துரை

தொகு

@கி.மூர்த்தி and சத்திரத்தான்: @பிரயாணி:வணக்கம். பங்குபெறும் பயனர், தனது பட்டியல் பக்கத்தில் கீழ்க்காணுமாறு தரவுகளை இட்டால் சிறப்பு எனக் கருதுகிறேன். அவர்களுக்கும் எளிதாக இருக்கும், பார்வையிடும் மற்றவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும்.

  1. 01-சனவரி-2024: தமிழ், தமிழர், தமிழ்நாடு (அன்று எழுதிய கட்டுரையின் தலைப்புகள்)
  2. 02-சனவரி-2024: இந்தியா, ஆசியா (அன்று எழுதிய கட்டுரையின் தலைப்புகள்)
  3. 03-சனவரி-2024: இலங்கை (அன்று எழுதிய கட்டுரையின் தலைப்பு) - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:33, 2 சனவரி 2024 (UTC)Reply

தேதி குறிப்பிடாமல் பட்டியலிடும்போது - எடுத்துக்காட்டாக 25 கட்டுரைத் தலைப்புகள் பட்டியலாகி இருந்தால், இவை எத்தனை நாட்களில் எழுதப்பட்டவை எனும் ஐயம் ஏற்படும். ஏனெனில், ஒரு நாளில் ஒன்றிற்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதும் வாய்ப்புகள் உள்ளன. மயூரநாதன் அவர்களின் பட்டியலை இங்கு காணலாம்: பயனர்:Mayooranathan/100wikidays. அட்டவணையில் பட்டியலிடுவது அதிகப்படியான வேலையாக இருக்கக்கூடும். எனவே, மேற்கண்ட எளிதான வழிமுறையை பரிந்துரைத்தேன். இதனை தானாக இற்றையாகும்படி செய்துவிட்டால், இன்னமும் சிறப்பு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:30, 3 சனவரி 2024 (UTC)Reply

2024 ஆண்டில் பயனாகும் வார்ப்புரு

தொகு

{{100விக்கிநாட்கள்2024}} என்ற வார்ப்புருவை திட்டப்பயனர்கள் அவர்கள் உருவாக்கும் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இட உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில், 11 சனவரி உருவாக்கப்பட்ட, கட்டுரைகளை இவ்வார்ப்புருவை இட்டுள்ளேன். சனவரி 1 முதல் 10 வரை உருவாக்கப்பட்ட திட்டப்பயனர் கட்டுரைகளுக்கு இவ்வார்ப்புரு உள்ளதா? என சரிபார்க்க உள்ளேன். பகுப்பு:100விக்கிநாட்கள்2024 என்ற பகுப்பில் அனைத்துப் பயனர்களின் கட்டுரைகளையும் காணலாம். உழவன் (உரை) 01:52, 17 சனவரி 2024 (UTC)Reply

சனவரி 1 முதல் 6 வரையுள்ள நாட்களில் உருவாக்கப்பட்ட, இத்திட்ட கட்டுரைகளுக்கு, அவற்றின் பேச்சுப்பக்கத்தில் இத்திட்ட வார்ப்புரு இடவேண்டும். 7-16வரை சரிபார்த்து இட்டுள்ளேன். உழவன் (உரை) 15:56, 17 சனவரி 2024 (UTC)Reply
நேற்றைய தேதி வரை, திட்டப்பயனர்கள் உருவாக்கிய அனைத்துக் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இத்திட்ட வார்ப்புருவை சரிபார்த்து இட்டுவிட்டேன். இனி இன்று முதல் பார்த்து, இட்டால் போதும். உழவன் (உரை) 00:03, 19 சனவரி 2024 (UTC)Reply

விலகல் அறிவிப்பு

தொகு

ஒரு சிலர் தேவையின்றி நான் தொகுத்துவரும் தொகுப்புகளில் ஆக்க நோக்கின்றி தொகுப்பினை மேம்படுத்தாமல் பேச்சு பக்கத்தில் வார்ப்புருவினை மட்டும் இட்டுவருவதாலும், வேண்டுகோளினை மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் 100 விக்கிநாட்கள் திட்டத்திலிருந்து விலகிக் கொள்கிறேன். சத்திரத்தான் (பேச்சு) 05:55, 19 பெப்பிரவரி 2024 (UTC)Reply

Return to the project page "100விக்கிநாட்கள்".