விக்கிப்பீடியா பேச்சு:Request for Comment/Web fonts implementation for Tamil Wikimedia projects
விக்கியின் புதிய தோற்றம்
தொகுஇந்த புதிய தோற்றத்தில் தமிழ் எழுத்துக்கள பழைய மாதிரி தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் விசைப்பலகை தேர்வு செய்யும் முறை எளிதாக உள்ளது. மேலும் பழைய தோற்றத்தில் சில சமயம் தமிழ் விசைப்பலகையும் நீல நிறமாற்றமும் வருவதற்கு நேரமாகும். ரீலோட் செய்தே பெற முடியும் தற்போது எப்படி? --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:39, 11 சூன் 2013 (UTC)
- மாற்றத்திற்குப் பிறகு கட்டுரையின் தமிழ் எழுத்துரு சற்று சிறியதாகவும், மெல்லியதாகவும் எனக்கு தெரிகிறது. பழைய தோற்றத்தினை மீண்டும் பெற இயலுமா?. விரைவாக மாற்றிதந்தால் சிறப்பாக இருக்கும். புதிய எழுத்துரு சிரமமாக உள்ளது. நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:43, 11 சூன் 2013 (UTC)
- எனக்கும் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:12, 11 சூன் 2013 (UTC)
தீர்வு: விக்கப்பீடியா பக்கத்தின் இடதுபுறமுள்ள Languages -ல் தமிழ் எழுத்துரு தேர்வு அமைப்பு உள்ளது. அதில் சிஸ்டம் பான்டினை தேர்வு செய்தால் பழைய அமைப்பு கிடைத்துவிடுகிறது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:21, 11 சூன் 2013 (UTC)
- நீங்கள் தந்த தீர்வில் சென்று மாற்றினேன். ஆனாலும், புதிய பக்கங்களைத் திறக்கும் போது மீன்டும் புதிய எழுத்துருவிலேயே வருகிறது. ஒவ்வொரு பக்கத்திற்கும் மாற்ற வேன்டியுள்ளது.--Kanags \உரையாடுக 10:31, 11 சூன் 2013 (UTC)
- இல்லையே சிறீதரன். எனக்கு ஜெகதீஸ்வரன் சொல்லியபடி செய்த பிறகு, புதிதாக திறக்கும் பக்கங்களில் எந்த பிரச்சனையும் இல்லை. பழைய வடிவிலேயே எழுத்துக்கள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு முறை விடுபதிகை செய்யும் போதும் Lohit Tamil எழுத்துருக்கள் வந்துவிடுகின்றன. புதிதாக விக்கிக்கு வரும் நபர்களுக்கு இந்த புதிய எழுத்துரு கண்டிப்பாக அயற்ச்சியைத் தரும்.--அராபத் (பேச்சு) 10:52, 11 சூன் 2013 (UTC)
- நீங்கள் தந்த தீர்வில் சென்று மாற்றினேன். ஆனாலும், புதிய பக்கங்களைத் திறக்கும் போது மீன்டும் புதிய எழுத்துருவிலேயே வருகிறது. ஒவ்வொரு பக்கத்திற்கும் மாற்ற வேன்டியுள்ளது.--Kanags \உரையாடுக 10:31, 11 சூன் 2013 (UTC)
- எனக்கு தமிழில் எழுத என்ற தேர்வை மேலே காணவில்லையே? அந்தத் தேர்வுக்குச் செல்ல வேண்டுமாயின், இடதுபுறமுள்ள Languages இற்குப் போய் உள்ளீடு போய், பின்னர் தமிழ் ஐ அழுத்தித்தான், எழுத்தைத் தெரிவு செய்ய வேண்டுமா? முன்னர் மேலே இருந்த தமிழில் எழுத என்ற தேர்வில் நேரடியாகவே எழுத்தைத் தெரிவு செய்யக் கூடியதாக இருந்ததே? ஒருவேளை எனக்கு மட்டும்தான் அதைக் காணவில்லையா? இங்கே இணைக்கப்பட்டுள்ள புதிய தோற்றம் படத்தில் விசைப்பலகை மேலே தெரிகின்றதே. எனக்கு அப்படி எதையும் காணவில்லை. அத்துடன், தமிழில் எழுத என்ற தேர்வையும் காணவில்லை.--கலை (பேச்சு) 09:52, 11 சூன் 2013 (UTC)
விசைப்பலகைகளைத் தெரிவு செய்வது இப்போது தொகுப்புப் பெட்டியில் வலது பக்கக் கீழ் மூலையில் வருகிறது அல்லது வந்து போகிறது. யாரோ திறமைசாலிகள் இவ்வாறு குழப்பம் செய்கிறார்கள்.--Kanags \உரையாடுக 10:33, 11 சூன் 2013 (UTC)
- தற்போதுதான் அவதானித்தேன். தொகு பெட்டியின் வலது கீழ் மூலையில் தட்டச்சிற்கான விசைப் பலகையும், தமிழில் எழுதுவதற்கான தேர்வும் தெரிகின்றது. ஆனால் மேலே படத்தில் காட்டியபடி, இந்த விசைப் பலகையை தேடு பெட்டிக்கு அருகில் காணவில்லை. தேடு பெட்டியில் தட்டச்சு செய்வதானால் என்ன செய்வது?--கலை (பேச்சு) 10:35, 11 சூன் 2013 (UTC)
விக்கிமீடியா அறக்கட்டளையின் தொழில்நுட்பப்பிரிவின் i18n குழுவின் திருவிளையாடல் தான் எல்லாம். நரையம், இணைய எழுத்துரு இரண்டையும் இணைத்து இந்த மாதிரி மாற்றி விட்டார்கள். lohit tamil ஒன்று தான் இலவசமாகக் கிடைக்கும் திறமூல தமிழ் எழுத்துரு. எனவே அது தெளிவாக இல்லையென்றாலும் அதைத் தான் பயன்படுத்துவோம் என்று அடம் பிடிக்கிறார்கள். மேலும் system font ஐ default option ஆகத் தரவும் மறுக்கிறார்கள். டிசம்பர் 2011 இல் பிற இந்திய மொழி விக்கிகளுக்கு இது தரப்பட்ட போது தமிழ் விக்கிக்கு வர விடாமல் நானும் ஸ்ரீகாந்தும் சண்டையிட்டு தடுத்தோம். (அது குறித்து ஆலமரத்தடியிலும், தொழில்நுட்பப் பக்கங்களிலும் பகிர்ந்திருக்கிறோம்). lohit tamil க்கு பதிலாக வேறு நல்ல திறமூல எழுத்துருவை இலவசமாகப் பெறவும் இரவி, சுந்தர் உதவியுடன் முயன்றோம். ஆனால் அது இயலாமல் போனது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சத்தமின்றி இப்பட்டியலில் தமிழ் விக்கித் திட்டங்களையும் நுழைத்து விட்டனர். அப்போது நாங்கள் எதிர்த்த போதே, ஏகப்பட்ட வசவுகள் விழுந்தன; கெட்ட பெயர் கிட்டியது :-). அப்போது ஏகப்பட்ட வழுக்களுடன் மிக மோசமான நீட்சியாக இருந்த "இணைய எழுத்துரு" நீட்சி இப்போது காண மட்டும் அசிங்கமாகத் தோன்றும் ஒன்றாக மாறியுள்ளது.
இது வேண்டாமென சமூகம் கருதினால் ஒரு கருத்தறியும் பக்கத்தை (request for comment) உருவாக்கி தமிழ் விக்கிக்கு இணைய எழுத்துரு வேண்டாமென தீர்மானம் நிறைவேற்றி வழு பதியலாம். யாரேனும் செயல்படுத்திப் பாருங்கள். இவ்விசயத்தில் சைபிராண்ட் மேஸ்லாண்ட், ஜெரால்ட் மெசிஜின், சந்தோஷ் தொட்டிங்கால், அலோலிடா ஷர்மா என விக்கித்தொழில்நுட்ப குழுவில் உள்ளப் பலரோடும் 2011 இல் கடுமையாக மோதியிருப்பதால் என் கோரிக்கைகள் அங்கு எடுபடாது. --சோடாபாட்டில்உரையாடுக 11:50, 11 சூன் 2013 (UTC)
- புதிய மாற்றத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். புதிய பயனர்களுக்கு இது ஒரு தலையிடியாக இருக்கும். இந்த மாற்றத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக
- கொஞ்சம் முன்னர்தான் இங்கு ஒரு கோரிக்கை வைத்தேன். சோடாபட்டில் சொல்வதை பார்த்தால் இது வெட்டி வேலைதானோ :( --அராபத் (பேச்சு) 11:56, 11 சூன் 2013 (UTC)
புதிய எழுத்துருவில் வாசிக்க சிரமமாக இருக்குது lohit tamilல தவிர வேறு திறந்தமூல எழுத்துருக்கள் தமிழில் இல்லையா?--சங்கீர்த்தன் (பேச்சு) 12:21, 11 சூன் 2013 (UTC)
இச்சிக்கல் தமிழுக்கு மட்டும் தானா? வேறு ஏதாவது வட்டெழுத்து போல் உள்ள மொழி விக்கிப்பீடியாவுக்கும் இச்சிக்கல் வரும் எனத் தெரிகிறது. எனில் அனைவரும் சேர்ந்து மாற்றச் சொல்லலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:39, 11 சூன் 2013 (UTC)
- மிகவும் வருத்தமான மேம் படுத்தல்:( தமிழில் எழுத என்ற தேர்வு புதிய பயனர்களுக்கு எளிதாக இருந்தது. இப்போது சற்றுப் பயிற்சி தேவை. இது அயற்சியாகத் தான் இருக்கும். இதன் தீர்வு நெடுநாள் எடுக்கும் போலுள்ளதால், முதலில் தெளிவான விளக்கப் பக்கங்கள் எழுதப்பட்டால் உதவியாக இருக்கும். --மணியன் (பேச்சு) 13:06, 11 சூன் 2013 (UTC)
- இந்திய மொழிகளைப் பொருத்தவரை, சென்றமுறை தமிழும் மலையாளமும் மட்டும் தான் இணைய எழுத்துரு நடைமுறையை வேண்டாம் என்றிருந்தோம். அங்கு என்ன நிலவரம் / கலவரம் என்று அறிந்த பிறகு, அவர்களுடன் ஒருங்கிணைந்து இப்பிரச்சினையை அணுகுவது பயனளிக்கலாம்.--இரவி (பேச்சு) 13:10, 11 சூன் 2013 (UTC)
தட்டச்சுப் பலகைத் தெரிவு, மொழி அமைப்புகள் போன்றவைக்கான செயற்பாட்டையும் இடத்தையும் பயனெளிமைச் சோதனை அடிப்படையில் செய்து பார்த்தார்களா என்று தோன்றவில்லை. இல்லையெனில், பயனர்களின் கண்களுக்குத் தட்டுப்படும் இடத்தில் அவற்றை வைக்கச் சொல்லலாம். தற்போது உள்ள இடம் அப்படி இல்லை. பழைய முறையில் தளத்தின் மேலேயே இக்கருவி கூடுதலாகத் தோன்றுவதற்கு வழியிருந்தால் அதை நமது தளத்தில் மட்டும் செயற்படுத்திப் பார்க்கலாம். மற்றபடி, இந்தப் பிரச்சினையில் முற்றிலும் பழைய நிலைக்குக் கொண்ட வர இசைய மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. பேசுபுக்கு, கூகுள் மடல் போன்று பல தளங்களில் நிகழ்ந்து வரும் வடிவமைப்பு மாற்றங்களுக்குப் பழகிக் கொள்வது போல் பழகிக் கொள்ள வேண்டியது தான்.
@கலை - தேடல் பெட்டி உட்பட எந்த ஒரு உள்ளீட்டுப் பெட்டியில் சுட்டியை வைத்தாலும் தட்டச்சுப் பலகைத் தெரிவுகள் தோன்றுகின்றன.
இணைய எழுத்துரு பிரச்சினையைப் பொருத்த வரை, நாம் கண்டிப்பாக அதனைத் தமிழுக்கு மட்டுமேனும் திரும்பப் பெறுமாறு முறையாக கோரலாம். இது கண்டிப்பாக வெட்டி வேலையாக இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன் :) ஆனால், அதற்கு முன் என்னவெல்லாம் பிரச்சினைகள் என்ன என்று தெளிவாக ஒரு பக்கத்தில் தொகுத்து வைத்துப் பிறகு முறையிட வேண்டும். இதற்கு யுவி பாண்டா, அருண் (tecoholic), சூரியா, சிறீக்காந்த் உள்ளிட்ட நமது தொழில்நுட்ப அணிக்கு சோடாபாட்டில் தலைமையேற்க வேண்டும் :) எடுத்துக்காட்டுக்கு, நேற்று வரை நன்றாகக் காட்டிய ஐபேடு மினியில் குரோம், சப்பாரி இரண்டு உலவிகளிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் எழுத்துகள் பிய்ந்து போய் தெரிகின்றன (இது 10 ஆண்டுக்கு முந்தைய தமிழிணையப் பிரச்சினை!). குரோம் உலாவியோ அண்மைய மாற்றங்கள் போன்ற பக்கங்களில் திணறி மூடி விடுகிறது. இங்கு பயனர்கள் விண்டோசு / இன்டர்நெட் எக்சுபுளோரர் கொண்டு இட்டுள்ள திரைக்காட்சிகள் போல் எனக்கு இல்லை. நான் பயன்படுத்துவது உபுண்டுவில் குரோம் / பயர்பாக்சு. எனக்கு எழுத்துகளில் பெரிய மாற்றமோ அவ்வளவு அசிங்கமாகவோ காட்டவில்லை. ஆனால், உலாவியின் நிரல் லோகித் தமிழ் எழுத்துரு பயன்படுவதாக கூறுகிறது. நாளை மாலை வரை பயணத்தில் இருப்பதால், இதனை முழுக்க அலசிப் பார்த்து திரைக் காட்சிகளைப் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 13:01, 11 சூன் 2013 (UTC)
- ULS கருவியின் இடத்தை முன்பு போல் மாற்றி வைக்க முடியுமா என்று கேட்டேன். பயனர் சோதனைகளின் அடிப்படையில் (!) அதை மாற்ற முடியாது என்று தெரிவித்து உள்ளார்கள். --இரவி (பேச்சு) 08:17, 21 சூன் 2013 (UTC)
User Acceptance Testing செய்யாமல் Productionல் விட எதற்கு தொழில்நுட்பக் குழுவுக்கு அதிகாரம் கொடுத்தார்கள். அதைப் பயனர்களான நம்மிடம் கேட்டுவிட்டே Productionல் விட வேண்டும் அல்லவா? ஆங்கில எழுத்துக்கள் போல் உள்ள மொழிகளுக்கு எல்லாம் Cut Outன்னா, தமிழ் எழுத்துக்கள் போலுள்ள மொழிகளுக்கு எல்லாம் Get Outஆ? முதலில் Defect Analysis Cycle படத்தில் உள்ளது போல் இதைப் போன்ற சிக்கலுக்கு எவரெவரிடம் எல்லாம் சிக்கல்கள் தெரிவிக்கப்பட்டு களையப்படுகின்றன என்பதற்கு ஒரு வாழ்க்கை வட்டம் உருவாக்கி அதை விக்கிப்பீடியா பக்கத்தில் போட்டால் னைவரும் தெரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:44, 11 சூன் 2013 (UTC)
- மலையாள விக்கிப்பீடியாவிலும் எழுத்துரு மாற்றப்பட்டுள்ளது. ஏதோ ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் இணையத்தளங்களைப் பார்ப்பது போல் உள்ளது. --மதனாகரன் (பேச்சு) 11:35, 12 சூன் 2013 (UTC)
Yes. Malayalam Wiki projects are also suffering this. Our pages are broken, IME is less responsive than narayam and even Santhosh advised someone to update local fonts for better view. But these guys regularly claims that Malayalam wikimedians are too egoists to agree someone's "contributions", I don't think we can do much here. :-( (Please remember that we were effectively blocked deployment of webfonts). Even bugs filed by us often get low priority or wontfix status. Regards--Praveen:talk 12:44, 12 சூன் 2013 (UTC)
மிகவும் கடினமாக இருக்கிறது இப்போது. ஏதோ பழைய இணையத்தைக்காண்பது போல் இருக்கிறது. MSATHIA (பேச்சு) 18:45, 12 சூன் 2013 (UTC)
விக்கிப்பீடியா எழுத்துருமாற்றம் குறித்து
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் எழுத்துரு Lohit Tamil என மாற்றப்பட்டிருக்கின்றது. தயவு செய்து அதனை நீக்க வேண்டுகின்றேன். வின்டோஸ் கணினியின் எந்த உலாவியிலும் அது நன்றாக தெரியவில்லை. ஒரு சில இடங்களில் தடித்தும், சில இடங்களில் பொடியாகவும் படிக்க மிகவும் சிரமமாக உள்ளது. default எழுத்துரு மிகவும் நன்றாகவும் அழகாகவும் இருந்தது. காண்க:
--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 10:19, 11 சூன் 2013 (UTC)
- விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:27, 11 சூன் 2013 (UTC)
- எழுத்துருவை எப்படி மாற்றுவது எனக்கண்டுபிடித்து விட்டேன்:
- ஆனால் தயவு செய்து எழுத்துரு மாற்றத்தை கைவிடவும். இது கண்கண்ணாடி அனிபவருக்கும், கண் கோளாறு உடையவருக்கும், வயது முதிர்ந்தவருக்கும் கண்டிப்பாய் உபத்திரவமாய் இருக்கும். குறைந்தது System fontஐஆவது defaultடாக வைக்கவும். மேலும் பலமுறை முயன்றும் ctrl+M எனக்கு வேலை செய்யவில்லை. வேறு யாருக்காவது இச்சிக்கல் உள்ளதா? --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:47, 11 சூன் 2013 (UTC)
- விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 05:26, 12 சூன் 2013 (UTC)
- குரோம் உலாவியிலும் மிகக் கொடுமையாக இருக்கின்றது! எனக்கும் தொகுக்கும் பொழுது தமிழ்-ஆங்கிலம் சிக்கல் இருந்தது, ஆனால் தொகுபட்டையின் வலதுகோடியில் எழுத்துப்பலகைக் குறி தாங்கிய பொத்தான் ஒன்று இருந்தது அதனை அழுத்தி செயற்பட்டேன். ஆனால் இப்பொழுது இயல்புநிலையில் பயன்படுத்த முடிகின்றது (எழுத்துருதான் கொடுமையாக உள்ளது!)--செல்வா (பேச்சு) 15:49, 11 சூன் 2013 (UTC)
- நெருப்புநரியிலும் மோசமாக இருக்கிறது. தயவுசெய்து பழைய எழுத்துருவுக்கு மாற்றவும்.
எழுத்துரு மாற்றத்திற்குப் பிறகு சுத்தமாக வாசிக்க முடியவில்லை. தயவுசெய்து விரைவில் பழைய எழுத்துருவுக்கே மாற்றுங்கள்
தயவு செய்து மாற்றவும் ..படிப்பதற்கு சிரமமாக உள்ளது -பயனர்:Duraionly
அருள்கூர்ந்து எழுத்துருவை மாற்றுங்கள்!
தொகுமுதலில் எனது கணினியில் ஏதோ கோளாறு என்றுதான் நினைத்தேன். இப்போதுள்ள எழுத்துரு மிக மோசமாக உள்ளது. உடனடியாக எழுத்துருவை மாற்றி, பழைய எழுத்துருவுக்குக் கொணருமாறு நிர்வாகிகளைப் பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 18:53, 11 சூன் 2013 (UTC)
கணினி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு வேண்டுகோள்
தொகுஇந்த உரையாடலில் மேலே இரவி குறிப்பிட்டபடி, தற்போது தமிழ் விக்கி சந்திக்கின்ற பலவிதமான தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகான ஒரு "தமிழ் தொழில்நுட்ப அணி" உருவாக்குவது மிகப் பயனுள்ளதாக இருக்கும். அப்பிரச்சினைகளை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்த வேண்டும். அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளையும் குறிப்பிடவேண்டும். பின்னர் தமிழ் விக்கி சமூகத்தினரின் ஒட்டுமொத்த ஆதரவு பெறப்படவேண்டும். இவ்வாறு ஒரு கோரிக்கைக் கடிதம் உருவாக்கி அதனை விக்கிப்பீடியாவின் மைய நிர்வாகத்துக்கு அனுப்பிவைத்து, தமிழ் விக்கி சமூகத்தின் பேரால் சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
எனவே, தமிழ் விக்கியின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இவ்விடயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 15:34, 12 சூன் 2013 (UTC)
பிரச்சினையின் தீவிரம்...
நான் இந்தப் பிரச்சினையை இன்னொரு பூதாகரமான முறையில் (பதட்டத்தில் உளறுகிறேனோ?!) பார்க்கிறேன். இங்கு தொடர்ந்து பங்களித்து வரும் பயனர்கள், பேச்சுப் பக்கங்களின் வாயிலாக நிலைமையைப் புரிந்துகொண்டு, தேவையான மாற்றங்களை தமது கணிப்பொறிகளில் செய்துகொள்வர். விக்கியுடன் தம் வாழ்வினை ஒருங்கிணைத்துக் கொண்டமையால், எவ்வித சிரமங்களுடனும் பணிபுரிவர். ஆனால், பாவம் வாசகர்களும், புதுப் பயனர்களும் என்ன செய்வர்? கண்களை உறுத்தும் எழுத்துக்களை எவர் படிப்பர்? ஒரு பக்கம் நாம் அனைவரும் தமிழ் விக்கிப்பீடியாவின் மீது பொது மக்களின் கவனத்தை ஈர்க்க முனைந்து வருகையில், இம்மாதிரி நிகழ்வது வருத்தமளிக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:46, 12 சூன் 2013 (UTC)
- இல்லை, சிவகுரு. நீங்கள் சொல்வது தான் உண்மையான, மிகப் பெரிய பிரச்சினை. ஒவ்வொரு நாளும் தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அனைத்துக்கும் சேர்த்து ஒன்றரை இலட்சம் பக்கம் பார்வைகளாவது வருகின்றன. அதனை முன்னிட்டே நாம் விரைந்து செயற்பட வேண்டி இருக்கிறது. எழுத்துருவை நிறுவச் சொல்வது, மாற்றச் சொல்வது எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பத்தாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. நெடுநாள் பங்களிப்பாளர்களைத் தவிர யாரும் அதனைச் செய்யப் போவதில்லை. இதிலும், எழுத்துருவை மாற்றுவதற்கான அமைப்பை ஒரு ஓரத்தில் ஒளித்து வைத்திருக்கிறார்கள். முதலில், இணைய எழுத்துரு பிரச்சினையைச் சரி செய்த பிறகு, universal language selector கருவியில் உள்ள பிரச்சினைகளை அணுக வேண்டும். --இரவி (பேச்சு) 20:08, 12 சூன் 2013 (UTC)
பக்கங்கள் மெதுவாக இயங்குகின்றனவா...?
தொகுகடந்த 2 நாட்களாக தமிழ் விக்கிப்பீடியாப் பக்கங்கள் மெதுவாக இயங்குவதாக உணர்கிறேன். அலுவலகத்தில் அதிவேக இணைப்பு உள்ளதால் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால், வீட்டில் உள்ள சாதாரண இணைப்பில் இந்த வித்தியாசம் தெரிகிறது. மேலும் என்னுடைய கைப்பேசியிலும் இந்தப் பிரச்சினையை உணரமுடிகிறது. நாள்தோறும் நான் பேருந்தில் நிறைய பயணிப்பதால்... எனது கைப்பேசி மூலம் தொடர்ந்து தமிழ் விக்கியுடன் இணைந்திருப்பேன். கடந்த 3 மாதங்களில் நான் எப்போதும் இந்த ‘மெதுவாக இயங்குதலை’ உணர்ந்ததில்லை. ஏனெனில் எனது பயணம் நகரின் முக்கிய சாலைகள் வழியேயானது; மேலும் இணைப்பும் உயர்தரமானது. ஆனால், கடந்த 2 தினங்களாக எனது கைப்பேசியில் ரொம்ப மெதுவாக தமிழ் விக்கிப்பீடியாவின் பக்கங்கள் இயங்குகின்றன. (அதே நேரத்தில் மற்ற இணையத்தளங்கள் நன்றாக இயங்குகின்றன; பாடல்களைக் கூட பதிவிறக்கம் செய்ய இயலுகிறது!) வேறு எவரேனும் இதேபோல உணர்கிறீர்களா? அல்லது இது வெறும் என்னுடைய அகப்பார்வை (perception) மட்டும்தானா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:22, 12 சூன் 2013 (UTC)
- எனக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. என்னுடையது 4 mbps இணைய வேகம். அண்மைய மாற்றங்கள் போன்ற பெரிய பக்கங்களைத் திறக்கும் போது ஒரு நொடி உலாவி உறைகிறது. ஐபேடில் உள்ள குரோம் உலாவியோ முற்றிலும் குலைகிறது. மற்ற அனைத்துப் பக்கங்களிலும் கூட பக்கம் இறங்குவது மெதுவாகி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இணைய எழுத்துருவைப் பதிவிறக்குவதால் இந்தப் பிரச்சினை வரலாம்.--இரவி (பேச்சு) 18:27, 12 சூன் 2013 (UTC)
- அண்மைய மாற்றங்களைத் திறக்கும் போது வரும் வழுப் பெட்டியை இணைத்துள்ளேன்.--Kanags \உரையாடுக 22:53, 12 சூன் 2013 (UTC)
- எனக்கும் இந்த வேக பிரச்சனை உள்ளது. குறிப்பாக பக்கங்களை தொகுக்கும் போது அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. சில நேரங்களில் தொகுத்த பிறகும் கூட, தொகுத்துக்கொண்டிருப்பது போலவே காட்டுகிறது. --அராபத் (பேச்சு) 05:21, 13 சூன் 2013 (UTC)
- அண்மைய மாற்றங்களைத் திறக்கும் போது வரும் வழுப் பெட்டியை இணைத்துள்ளேன்.--Kanags \உரையாடுக 22:53, 12 சூன் 2013 (UTC)
பயன்பாட்டுச் சிக்கல்கள்
தொகுஇந்த முறையீட்டைச் செயல் திறம் மிக்கதாகச் செய்ய பின் வரும் வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறேன்.
முதலில், இந்த நடைமுறையால் எழுத்துரு அழகாக இருக்கிறது / அசிங்கமாக இருக்கிறது என்ற கோணத்தில் கருத்துகளை முன்வைக்காமல் பயனெளிமை நோக்கில் முன்வைக்க வேண்டும். இணைய எழுத்துரு அசிங்கமாக இருக்கிறது என்று சொன்னால், "அதனால் என்ன?' என்ற கேள்வியே பதிலாக கிடைத்திருக்கிறது. பார்க்க - http://ultimategerardm.blogspot.in/2011/11/freely-licensed-fonts-are-ugly-now-what.html
புதிய எழுத்துருவைப் படிப்பது உங்களுக்குச் சிரமமாக இருக்கிறதா? உங்கள் கணினியின் இயக்குதளம், உலாவி ஆகியவற்றின் பதிப்பு விவரங்கள், திரைக்காட்சிகளுடன் உங்கள் கருத்தை இங்கு இடுங்கள். உங்கள் கணினியிலேயே வெவ்வேறு இயக்குதளங்கள், உலாவிகளை முயலுங்கள். புகுபதிந்தும் புகுபதியாமலும் முயலுங்கள். வெளிப்படையான உலாவல் முறையிலும் incognito / private browsing முறையிலும் முயன்று பாருங்கள். உங்கள் விருப்பத் தெரிவுகளை அது நினைவில் கொள்கிறதா?
எழுத்துகளின் அளவு சிறதாகவோ பெரிதாகவோ உள்ளதா? எழுத்துகளைப் பெரிதாக்கும் போதும் சிறிதாக்கும் போதும் வாசிப்பதில் சிரமம் உள்ளதா?
உங்கள் வயது, கண் பார்வைத் திறன் போன்ற நோக்குகளில் புதிய எழுத்து சிரமம் தருகிறதா?
தொடர் பயன்பாடு, தொகுத்தல் பணியின் போது சிரமம் தருகிறதா?
இது போன்ற நோக்குகளில் எவ்வளவு தரவு / கருத்து திரட்ட முடிகிறதோ நல்லது.
உங்கள் கருத்துகளை இயன்றால் ஆங்கிலத்தில் இடுங்கள். தமிழில் இட்டாலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முன்வைக்கலாம்.
முறையீட்டை முன்வைக்கும் வழிமுறை
தொகுபயன்பாடு / சிக்கல் குறித்து மேற்கண்ட கருத்துகளைத் திரட்டிய பிறகு, இதனை எப்படி முன்வைக்கிறோம் என்பது முடிவு செய்ய வேண்டும். இணைய எழுத்துரு, மீடியாவிக்கி தொழில்நுட்பம் நன்கு அறிந்த நம்மில் ஒரு சிலரைச் சார்பாளராகத் தேர்ந்தெடுத்து mediawiki-i18n மடற்குழுவிலும் மென்பொருள் உருவாக்குனர்களிடம் நேரடி உரையாடலில் ஈடுபடவும் கேட்டுக் கொள்ளலாம். இது நமது கருத்தைக் குழப்பமின்றியும் திட்டமிட்டும் முன்வைக்க உதவும். −முன்நிற்கும் கருத்து [[பயனர்:{{{1}}}|{{{1}}}]] ([[பயனர் பேச்சு:{{{1}}}|பேச்சு]] • [[சிறப்பு:Contributions/{{{1}}}|பங்களிப்புகள்]]) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- மீடியாவிக்கி மடற்குழுவிலும் பிற வெளியாரிடமும் முன்வைக்கும்போது நேரடியாக நுட்பம், சிக்கல், விக்கியின் விடுபாட்டுரிமை போன்றவற்றை மட்டும் குறிப்பிடுவது நல்லது. தற்போதுள்ள முன்னுரையைச் சற்று சுருக்கலாம். -- சுந்தர் \பேச்சு 08:53, 13 சூன் 2013 (UTC)
- சரி, சுந்தர். முன்னுரையைக் குறைத்து நேரடியாக விசயத்துக்கு வரும் வகையில் மாற்றி இருக்கிறேன்.--இரவி (பேச்சு) 11:56, 13 சூன் 2013 (UTC)
- நன்றி இரவி. -- சுந்தர் \பேச்சு 13:52, 13 சூன் 2013 (UTC)
உபுண்டு இயங்குதளம் பிரச்சனை இல்லை
தொகுவிக்கிப்பீடியா எழுத்துருமாற்றம் குறித்து துவக்க நிலை முதல் திட்டத்தின் பக்கம் வரை பயனர்களின் அனுபவம் அனைவருக்கும் பொதுவானது என நினைக்கின்றேன்,
- நான் விண்டோசு இயங்குதளம் உள்ள மடிக்கணினி யை பயன்படுத்தியபோது இதே அனுவம்தான்.
- ஆனால் உபுண்டு இயங்குதளம் உள்ள மேசை கணினி யை பயன்படுத்திய போது எவ்விதமான பிரச்சனையும் வரவில்லை
- தற்போழுது விக்கிப்பீடியா:எழுத்துரு மாற்றம் வழிகாட்டல் பயனுள்ளதாக உள்ளது. விண்டோசு இயங்குதளம் உள்ள மடிக்கணிணியில் பிரச்சனை இல்லை--ஸ்ரீதர் (பேச்சு) 10:29, 13 சூன் 2013 (UTC)
- உபுண்டு / ஆண்டிராய்டில் எழுத்துரு அசிங்கமாக, படிக்க முடியாமல் உள்ளது என்ற பிரச்சினை இல்லை தான். ஆனால், பெருவாரியான பயனர்கள் விண்டோசில் இருந்து அணுகுகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. --இரவி (பேச்சு) 11:56, 13 சூன் 2013 (UTC)
Tamil Wikimedia Community would like to be clarified on the following
தொகு- On a mail written on Dec 14, 2011 at 9:49 AM by Siebrand Mazeland (WMF), it is mentioned as below:
//On Monday December 12 at 18:00 UTC we deployed the extension WebFonts to 40 wikis in 11 Indic languages and Wikimedia Incubator -- all wikis in Assamese, Bengali, Gujarati, Hindi, Kannada, Marathi, Nepali, Oriya, (Eastern) Punjabi, Sankrit and Telugu have WebFonts now. WebFonts was not deployed on Malayalam and Tamil projects. The reason for this was that community members had requested us not to. We are confident that in time, the communities will request that WebFonts is enabled on their projects.//
Now, who requested for this feature to be implemented in Tamil Wikimedia projects? Was there a community consensus? Did the developers request for the community's view or invite them to beta test?
- https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=31936 clearly states that the community doesn't want this feature. How come this request was over ridden?
- Can this feature be implemented only for the systems that don't have a system font that can't display Tamil Unicode properly?
Two bugs
தொகுI put two bugs, one get "expected behaviour" and so invalid status, the other is just WORKSFORTHEM :-) IMO second one is serious one.
ml.wp discussion
தொகுA simillar discussion at ml.wikipedia can be seen at here. A bug is filed because of the severity of the problem, but immediately low prioritized. Please share any links If you've reported this anywhere else (like meta)--Praveen:talk 00:28, 21 சூன் 2013 (UTC)
- Thanks for the update, Praveen. We'll keep a watch. -- சுந்தர் \பேச்சு 03:11, 21 சூன் 2013 (UTC)
Total denial mode
தொகுAccording to this comment, these guys are in a total denial mode about the web fonts part of ULS. For sure, webfonts are not required to both Malayalam and Tamil for general reading, so it should not be enabled by default. IMO, Unfortunately these guys need just another CV line and will do whatever for it. Situation at ml.wp is more pathetic. At there, some guys comes the mailing list and did teach us what is wikimedia and things like that. I think we should go meta or wikitech list. Please inform us if you start any thread anywhere there. I feel, starting a thread from your side have more credibility than any such actions from ml.wikimedians.
PS. I am terribly sorry for writing in English repeatedly. Although I am able to read and understand Tamil, creating sentence is a different thing. :-)--ப்ரவீண்:பேச்சு 13:44, 25 சூன் 2013 (UTC)
ULS @ ml.wikipedia
தொகுAfter that long (a month long) hide and seek game,. ULS is completely disabled in ml.wiki projects. As it appears as a petty vengeance towards ml.wikimedians, but it is so convenient to most of regular users. (Devs are so harsh to implement Narayam back.) --ப்ரவீண்:பேச்சு 10:18, 12 சூலை 2013 (UTC)
- Like! --அராபத் (பேச்சு) 11:16, 12 சூலை 2013 (UTC)
- Ctrl + M seems to be working fine now in Tamil. The only issue with regards to that is it is not visible to newbie users as Narayam was. I am also yet to find a global setting. --Natkeeran (பேச்சு) 13:52, 12 சூலை 2013 (UTC)
- After taking a bit panchagusthi, ULS re-enabled exactly as user's requested. Although they claimed that ULS font defaulting is essential for Malayalam, they just step back. ULS enabled with no default font (system font as default), and no IME as default. Probably because of oncoming WikiMania. Even if so, I believe it need some explanations to unilateral actions (especially for disabling input method) from devs side.--ப்ரவீண்:பேச்சு 04:30, 23 சூலை 2013 (UTC)