விச்துலா ஆறு
விச்துலா (Vistula, /ˈvɪstjʊlə/; போலிய: Wisła ஒலிப்பு:விஸ்வா; இடாய்ச்சு மொழி: Weichsel [ˈvaɪksl̩]) போலந்தின் மிகப் பெரியதும் மிக நீளமானதுமான ஆறு. இதன் நீளம் 1,022 கிமீ (635 மைல்கள்). விச்துலா ஆற்றின் வடிநிலப் பரப்பு 193,960 கிமீ2 (74,890 ச மைல்), இதில் 168,868 கிமீ2 (65,200 சதுரமைல்) போலந்தில் உள்ளது. இது போலந்தின் நிலப்பரப்பில் 54% ஆகும்.[1] மற்ற வடிநிலப்பரப்பு பெலருஸ், உக்ரைன், சிலோவாக்கியா நாடுகளில் பரந்துள்ளது.
விச்துலா அல்லது விஸ்வா | |
River | |
தென் போலந்தில் விச்துலா ஆறு
| |
நாடு | போலந்து |
---|---|
கிளையாறுகள் | |
- இடம் | நிடா, பிலிகா, பிசுரா, ப்ர்டா, வ்டா |
- வலம் | துனாசெக், விஸ்வாகா, சான், வீப்ரசு, நரூ, த்ருவெகா |
நகரங்கள் | கிராகோ, சன்டோமிர்சு, வார்சா, பிளாக், விசுவாவெக், தோருன், பைட்கோசுசு, டான்ஸ்க் |
உற்பத்தியாகும் இடம் | |
- அமைவிடம் | பரனியா கோரா, சிலேசிய பெஸ்ட்கிட்சு |
- உயர்வு | 1,106 மீ (3,629 அடி) |
கழிமுகம் | |
- அமைவிடம் | கதான்ஸ்க் விரிகுடா, பால்டிக் கடல், இசுவிப்னோ அருகே பிரெசெகோப் கால்வாய், போலந்து |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 1,022 கிமீ (635 மைல்) |
வடிநிலம் | 1,93,960 கிமீ² (74,888 ச.மைல்) |
Discharge | for கதான்ஸ்க் விரிகுடா, பால்டிக் கடல் |
- சராசரி | |
போலந்து, இசுலோவாகியா, பெலாரசு, உக்ரைனில் பாயும் விச்துலா ஆற்று வடிநிலம்
| |
விக்கிமீடியா பொது: விச்துலா | |
விச்துலா ஆறு தெற்கு போலந்தில் பரனியா கோரா என்றவிடத்தில் உற்பத்தியாகிறது. கடல்மட்டத்திலிருந்து 1,220 மீட்டர்கள் (4,000 அடி) உயரத்தில் சிலேசிய பெஸ்ட்கிட்சில் (மேற்கத்திய கார்பத்தேயக் குன்றுகள்) இவ்விடம் அமைந்துள்ளது. துவக்கத்தில் வெள்ளைச் சிறு விச்துலா (Biała Wisełka) எனவும் கருஞ்சிறு விச்துலா (Czarna Wisełka) என இரு கிளைகளாக உள்ளது.[2] போலந்தின் பரந்த சமவெளியில் தொடர்ந்து ஓடி பல பெரிய போலிய நகரங்களினினூடே செல்கிறது. சில முக்கிய நகரங்களாவன: கிராக்கோவ், சன்டோமீர்சு, வார்சாவா, பிளாக், விசுவாவெக், தோருன், பைட்கோசுசு, கதான்ஸ்க். இந்த ஆறு விச்துலா காயலில் (Zalew Wiślany) கலக்கிறது; அல்லது நேராக பால்டிக் கடலின் கதான்ஸ்க் விரிகுடாவில் கலக்கிறது. இதன் கழிமுகத்தில் பலகிளையாறுகளாகப் பிரிந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Statistical Yearbook of the Republic of Poland 2017, Central Statistical Office (Poland), p. 85-86
- ↑ Barania Góra - Tam, gdzie biją źródła Wisły at PolskaNiezwykla.pl
வெளி இணைப்புகள்
தொகு- சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Vistula
- https://www.tandfonline.com/doi/pdf/10.1623/hysj.51.5.799 பரணிடப்பட்டது 2021-11-17 at the வந்தவழி இயந்திரம் History of floods on the River Vistula (Hydrological Sciences Journal)