வியட்நாம் புவிப்பரப்பியல்
வியட்நாம் (Vietnam) இந்தோ சீனத் தீவகத்தின் கிழக்கோர விளிம்பில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு ஏறத்தாழ, 331,211.6 சதுரக் கிலோமீட்டர்கள் ஆகும். இதில் 1987 நிலவரப்படி, ஏறத்தாழ, 25% பயிர்விளைவுப் பகுதியாகும்.இதன் எல்லைகளாக, தாய்லாந்து வளைகுடாவும் தோன்கின் வளைகுடாவும் அமைதிக்கடலும் சீனாவும் இலாவோசும் கம்போடியாவும் அமைகின்றன. எசு வடிவமுள்ள வியட்நாம் வடக்கு-தெற்காக 1,650 கிலோமீட்டர்கள் நீளமும் குறுகிய பகுதியில் ஏர்றத்தாழ 50 கிலோமீட்டர்கள் அகலமும் பெற்றுள்ளது. இதன் வியட்நாம் தீவுகள் தவிர்த்த கடற்கரை நீளம் 3,260 கிலோமீட்டர்கள் ஆகும். வியட்நாம் தன் உரிமைப் பகுதிகளாக, 12 கிமீ நாடுசார் கடல்நீர்ப்பகுதியும் கூடுதலாக 12 கிமீ சுங்க, பாதுகாப்புப் பகுதியும், 200 கிமீ தனிப்பொருளியல் பகுதியும் பெற்றுள்ளது.
வியட்நாம்-இலாவோசு எல்லை புவியமைப்பு சார்ந்தும் இனவரைவியல் சார்ந்தும் இருநாடுகளையும் சேர்ந்த ஆட்சியாளர்களால் அன்னாமைட் மலைத்தொடரை மேற்கோளாக்க் கொண்டு 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தீர்த்துக்கொள்ளப்பட்டது. இது முறையாக ஓர் எல்லைப்பிரிப்பு வரையறையால் 1977 உடன்படிக்கையில் ஒப்புக்கொண்டு கையெழுத்திடப்பட்டது. இது பிறகு 1986 இல் பின்னேற்பும் பெறப்பட்டுள்ளது. வியட்நாம்- கம்போடியா எல்லை 1867 இல் மேகாங் கழிமுகப் படுகையை பிரெஞ்சு குடியேற்றத்துக்குள் இணைக்கப்பட்டபோது வரையறுக்கப்பட்டு, பின் அது மாற்றப்படவே இல்லை; கனாய் அறிக்கைப்படி, சில எஞ்சியிருந்த எல்லைப் பூசல்கள் இறுதியாக 1982-85 காலத்தில் தீர்க்கப்பட்டுள்ளன. சீனாவுடனான நில, கடல் எல்லை, 1887, 1895 ஆகிய பிரெஞ்சு-சீன உடன்படிக்கைகளில் பிரிக்கப்பட்டு வரன்முறைப்படுத்தப்பட்ட்தை 1957-58 இல் கனாயாலும் சீனாவாலும் மதித்து ஏற்கப்பட்டன. என்றாலும் 1979 பிப்ரவரியில் சீனா வியட்நாமை முற்றுகையிட்டதும் , கனாய் 1957 இல் இருந்தே சீனா எல்லைத் தகராறில் ஈடுபட்டு வருவதாக அதன் வியட்நாம் அயல்நாட்டுக் கொள்கையாலும் தென்கிழக்காசியாவில் நாடு விரிவாக்கும் எண்ணத்தாலும் செயல்படுவதாகத் தாக்கீதுகள் அளித்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, சீனா பராசெல் தீவுகளை 1974 இல் கைப்பற்றியுள்ளதைக் கூறுகிறது. இத்தீவுகளை இருநாட்டினருமே தம் பகுதியாகும் எனும் கோரிக்கையை வைத்துள்ளனர். இப்பூசல் 1980 கள் வரையிலும் கூட தீர்க்கப்படாமலே உள்ளது.
புவிக்கோள ஆயங்கள்:16|00|வ;108|00|கி
நிலக்கிடப்பியல்
தொகுநிலத்திணைப் பிரிவுகள்
தொகுவியட்நாம் மேட்டுச் சமவெளியாகவும் வடக்கில் உள்ள சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகையாகவும் நடுவண் மேட்டுச் சமவெளியாகவும் (அன்னாமைட் மலைத்தொடர் அல்லது தாய் திருவோங் சோன்) கடலோரத் தாழ் சமவெளியாகவும் தெற்கில் அமைந்த மேகாங் கழிமுகப் படுகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
தரைப்பகுதி
தொகுவியட்நாமிய நாடு வெப்பமண்டலத் தாழ்நிலப்பகுதியும் மலைகளும் அடர்ந்த காடுகள் அமைந்த மேட்டுச் சமவெளிகளும் மொத்தத்தில் சமவெளியாக 20% பரப்பளவும் கொண்டமைகிறது.
காட்சிக்கினிய பான் கியோசு அருவி, கனாயில் இருந்து 272 கிமீ வடக்கில் உள்ளது; அங்கு ஒருசில பயணர்களே வருகின்றனர்.[1]
மேலும் காண்க, வியட்நாம் மாகாணங்கள்
சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகை
தொகுசிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகை (இது சோங் கோங் எனவும் அழைக்கப்படுகிறது), முக்கோண வடிவத் தட்டையான சமநிலப் பகுதியாகும். இதன் பரப்பளவு 15,000 சதுரக் கிலோமீட்டர்களாகும்.[2] இது மிகச் சிறிய பகுதியானாலும், இங்கு மேகாங் ஆற்றுக் கழிமுகப் படுகையை விட மக்கள்தொகை செறிவாக அமைந்துள்ளது. முன்பு தோங்கின் வளைகுடாவின் உள்ளீடாக விளங்கியதல் அதில் ஆயிரம் ஆண்டுகளாக வண்டலை நிரப்பி, ஒவ்வோராண்டும் அதற்குள் 100 மீட்டர் வரை முன்னேறிவந்தது[சான்று தேவை]. இது விய்ட்நாமிய இனக்குழுவின் மூதாதையர் வாழ்ந்த இடமாகையால் இங்கு, வடக்கு வியட்நாமின் 70% வேளாண்மையும் 80% தொழிலகமும் 1975 ஆம் ஆண்டுக்கு முன்பு அமைந்திருந்தது.
சிவப்பு ஆறு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் ஏறத்தாழ, 1,200 கிமீ நீளத்துக்கு அமைந்துள்ளது. இதன் இரண்டு கிளையாறுகளாகிய, சோங்லோ (இது உலோ ஆறு அல்லது கிளேரி ஆறு அல்லது தெள்ளிய ஆறு எனவும் அழைக்கப்படுகிறது), சோங்தா (இது கருப்பாறு அல்லது நாயிரி ஆறு எனவும் அழைக்கப்படுகிறது) ஆகியவை, பெரும்பருமனளவு நீரை வழங்குகின்றன. அதாவது, நிரலாக நொடிக்கு 4,300 பருமீட்டர்கள் அள்வுக்கு தருகின்றன.[3]
பின்னணியில் காடுகள் செறிந்த மேட்டுநிலச் சமவெளிகள் அமைந்த சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகை கடல் மட்டத்துக்கு மேல் மூன்று மீட்டர் உயரத்திலேயே அமைந்துள்ளது. சில இடங்களில் உயரம் ஒரு மீட்டராகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது; சில இடங்களில் சுற்றியமைந்த பகுதியைவிட வெள்ளம் 14 மீ உயரம் வரையிலும் கூட எழுகிறது. பல நூற்றாண்டுகளாகவே கழிமுகப் படுகையின் பண்பாட்டிலும் பொருளியலிலும் ஒருங்கிணைந்த பகுதியாகவே வெள்ளக்கட்டுபாடு அமைகிறது. சிவப்பு ஆற்றைக் கட்டுபடுத்தவும் செறிவான நெல் பயிரீட்டுப் பகுதி நீர்ப்பாசனத்துக்கும் பரவலாக மதகுகளும் கால்வாய்களும் கட்டியமைக்கப்பட்டுள்ளன. சீனாவைப் போலவே அமைந்த பண்டைய வெள்ளக் கட்டுபாட்டு முறை, உயர் மக்கள்தொகையைப் பேணவும் படுகையின் பாதிப்பகுதியில் இருபோக நஞ்சைநெல் விளைச்சலை ஈட்டவும் வழிவகுத்துள்ளது.
மேட்டுச் சமவெளிகள்
தொகுவடக்கிலும் வடமேற்கிலும் அமைந்த மேட்டு நிலங்களிலும் மலைச் சமவெளிகளிலும் சிறுபான்மை பழங்குடியினரே வாழ்கின்றனர். தாய் திருவோங் சோன் (அன்னமைட் மலைத்தொடர்) தென்மேற்கு சீனாவின் திபெத்திலும் யுன்னான் பகுதியிலும் தொடங்கும் இது வியட்நாம்- இலாவோசு எல்லையாக அமைகிறது. இத்தொடர் ஓ சி மின் நகரத்துக்கு (முந்தைய சாய்கோன் நகரத்துக்கு) வடக்கே அமைந்த மேகாங் ஆற்றுக் கழிமுகப் படுகையில் முடிவடைகிறது. இந்த மலைகளின் நடுவில், ஒழுங்கற்ற குத்துயரமும் வடிவமும் கொண்ட பல உயர்சமவெளிகள் அமைகின்றன. வடக்குப் குறுகிய கரட்டு நிலமாகும்; வியட்நாமின் மிக உயர்ந்த கொடுமுடியான (சிகரம்) பான் சி பான் அருதி வடமேற்கில் கடல்மட்ட்த்தில் இருந்து 3,142 மீட்டர்கள் உயரம் கொண்டது. தென்பகுதி பல தொடர்வரிசை மலையெழுச்சிகளால் அமைந்து குறுகிய கடலோரப் பகுதியைப் பலவாகப் பிரிக்கிறது. பல நூற்றாண்டுகளாக இந்த நிலக்கிடப்பியல் கூறுபாடுகள் வடக்கு- தெற்குத் தொடர்பை அரியதாக்கிவருகிறது. மேலும் இது மேகாங் படுகை மக்களுக்கான இயற்கை அரணாகவும் அமைந்துவிட்டது.
நடுவண் மேட்டுச் சமவெளிகள்
தொகுவியட்நாமின் தெற்குப் பகுதிக்குள் தாய் நிகுயேன் எனப்படும் நடுவண் மேட்டுச் சமவெளிஏறத்தாழ 51,800 சதுரக் கிஓமீட்டர் பரப்பளவுடன் அமைந்துள்ளது, இது கரடான மலைக் கொடுமுடிகளையும்செறிந்த காடுகளையும் செழிப்பான மண்வளத்தையும் கொண்டுள்ளது. இதில் தாக்லாக் மாகாணம், கியாலாய் மாகாணம், கோந்தும் மாகாணம் ஆகிய மாகாணங்களில் பரவியுள்ள பசால்ட் மண்கூறு அமைந்த ஐந்து மேட்டுச் சமவெளிகள் அமைந்துள்ளன, இதில் அமைந்த மேட்டுநிலங்கள் நாட்டின் பரப்பளவில் 16% பரப்பளவும் மொத்தக் காடுகளில் 22% பரப்பளவும் கொண்டுள்ளன. வடக்கு வியட்நாம் 1975 ஆம் ஆண்டுக்கு முன்பு மேட்டுநிலச் சமவெளியும் கியாய் திருவோங் பகுதியும் மிக முதன்மயான பகுதிகளாகவும் இவற்றைக் கொண்டு தென்வியட்நாமையும் ஏன், தெற்கு இந்தோசீனப் பகுதியையும் கூடக் கட்டுபடுத்தலாம் எனக் கருதியது . இப்பகுதியில் 1975 ஆம் ஆண்டில் இருந்து அடர்ந்த மக்கள்தொகையுள்ள தாழ்நிலப் பகுதிகளில் இருந்து இடம் மாற்றிக் குடியேற்றப்படுகின்றனர்.
கடலோரத் தாழ் சமவெளிகள்
தொகுகுறுகிய தட்டையான கடலோரத் தாழ் சமவெளி சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகைக்குத் தேற்கில் இருந்து மேகாங் கழிமுகப் படுகைவரை அமைகிறது. தாழ்நிலப் பக்கத்தில், தாய் திருவோங் சோன் மலை. தாழ் மட்டத்தில் இருந்து செங்குத்தாக மேலெழுகிறது; இதன் தொடர்ச்சி கடலிலும் பல இடங்களில் துருத்திக் கொண்டு காணப்படுகிறது. பொதுவாக கடலோரப் பகுதியின் நிலம் செழிப்பானது. இங்கு நெல் செறிவாகப் பயிரிடப்படுகிறது.
மேகாங் ஆற்றுக் கழிமுகப் படுகை
தொகுமேகாங் கழிமுகப் படுகை 40,000 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.இது கடல் மட்ட்த்துக்கு மேல் 3 மீ உயரத்தில் அமைந்த சமவெளியாகும். இதில் குறுக்கு மறுக்காக ஆறுகளும் கால்வாய்களும் அமைந்துள்ளன. மேகாங் ஆறும் அதன் கிளையாறுகளும் ஏராளமான வண்டல் மண்ணைக் கொண்டுவருவதால் ஒவ்வோராண்டும் கழிமுகப் படுகை 60 முதல் 80 மீ வரை கடலுக்குள்ளே ஊடுருவுகிறது. இவ்வண்டல் படிவின் பருமனளவு 0ரு பில்லியன் பர்மீட்டர்களாக வியட்நாமிய அலுவலக மத்திப்பீடு கணக்கிட்டுள்ளது; இது சிவப்பு ஆற்று வண்டல் படிவைப் போல 13 மடங்கினதாகும். ஏறத்தாழ, கழிமுகப் பட்கையின் 10,000 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. இது உலகின் பேறளவு நெல் பயிரீட்டுப் பகுதிகளில் ஒன்றாகும். சா மவுத் தீவகம் எனப்படும் இதன் தென்முனைப் பகுதி அடர்ந்த காடுகளால் சதுப்பு நிலங்களாலும் ஆனதாக அமைகிறது.
மேகாங் ஆறு 4,220 கிமீ நீளமுள்ளது; உலகின் 12 பேராறுகளிலொன்றாக விளங்குகிறது. திபெத்திய மேட்டுச் சமவெளியில் தொடஙும் இந்த ம்ந்ந்க்காங் ஆறு, சீனாவின் திபெத்திய, யுன்னான் பகுதிகள் ஊடாகப் பாய்ந்து இது இலாவோசுக்கும் மியன்மருக்கும் எள்ளையாகவும் தாய்லாந்துக்கும் இலாவோசுக்கும் எல்லையாகவும் அமைகிறது. இது பினோம் பென் அருகில் தோனி சப்புடன் கலக்கிறது; பின்னர், கம்போடியாவில் பசாக் ஆறு என வழங்கும் சோங் காவு கியாங் (காவு கியாங் ஆறு), சோன் தியேன் கியாங் (தியேன் கியாங் ஆறு) எனும் இருகிளைகளாகப் பிரிந்து கம்போடியாவிலும் மேகாங் கழிமுகப் படுகையிலும் பாய்ந்து சென்று சூவு உலோங் ஊடாகக் தென்சீனக் கடலில் கலக்கிறது.இந்த ஆறு பேரளவு வண்டலைப் படியவைக்கிறது. இதில் கம்போடியாவில் உள்ள காம்போங் சாம் நகர் வரை தாழ் ஆழக் கப்பலை ஓட்டலாம். பினோம் பென்னில் இதனோடு கலக்கும் கிளையாறு தோனி சாப் எனும் சிறிய நன்னீர் ஏரியை வடியச் செய்கிறது. இந்த ஏரி, மேகாங் தாழ்நிலத்தூடாக அமையும் நீர்ப்பாய்வை நிலைப்புறச் செய்யும் இயற்கை அனையாகச் செயல்படுகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, இதன் வண்டல் பைந்த கழிமுகப் படுகை உயர்வெள்ள நீர்ப்பாய்வை கொண்டுசெல்ல இயலாத்தாக உள்ளது. வெள்லநீர் பின்னேறி தோனி சாப் ஏரியில் நிரம்புவதோடு, ஏறத்தாழ, 10,000 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவை நீரி அமிழவைக்கிறது. வெள்ளம் குறைந்த்தும், நீர்ப்பாய்வு திரும்பி, ஏரியிலிருந்து க்டல் நோக்கிப் பாய்கிறது. இது மேகாங் கழிமுகப் படுகையின் வெள்ளப் பேரழிவைத் தடுத்து மட்டுப்படுத்துகிறது. இப்படுகையில் ஒவ்வோராண்டும் ஒன்று அல்லது இரண்டு மீட்டர் உயரத்துக்குச் சூழ்ந்துள்ள வயல்களில் வெள்ளநீர் பாய்கிறது.
காலநிலை
தொகுதட்பவெப்பநிலை வரைபடம் Vietnam | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
19
20
12
|
27
21
13
|
39
24
18
|
80
29
21
|
198
32
22
|
240
33
25
|
322
32
26
|
345
32
25
|
250
31
24
|
99
28
23
|
44
25
19
|
21
21
16
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: "The Climate of Vietnam". The Embassy of the Socialist Republic of Vietnam in the United Kingdom. Archived from the original on 2008-02-09. | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
பரப்பளவும் எல்லைகளும்
தொகுபரப்பளவு:
- மொத்தம்: 331,210 கிமீ²
- நிலம்: 310,070 கிமீ²
- நீர்: 21,140 km²
பரப்பளவு ஒப்பீடு:
- ஐக்கிய அமெரிக்காவின் நியூமெக்சிகோவை விடச் சற்றே பெரியது.
- கனடாவின் நியூபவுண்டுலாந்து, இலேபிரடாரை விடச் சற்றே சிறியது.
- ஆத்திரேலியவின் நியூசவுத் வேல்சைப் போல ஓரளவு அரைபங்கினது.
- பெரும்பிரித்தானியாவைப் போல ஒன்றரை மடங்கினது.
நில எல்லைகள்:
- மொத்தம்: 4 639 கிமீ
- எல்லையோர நாடுகள்: கம்போடியா (1 228 கிமீ), சீனா (1 281 கிமீ), இலாவோசு (2 130 கிமீ)
கடற்கரை நீளம்: 3 444 கிமீ ( வியட்நாம் தீவுகள் இல்லாமல்)
கடற்சார் உரிமைப்பகுதிகள்:
- contiguous zone: 24 கிமீ
- கண்ட்த்தட்டு: 200 கிமீ அல்லது கண்டத்திட்டு விளிம்பு வரை
- தனிப்பொருளியல் பகுதி: 200 கிமீ
- நாடுசார் கடல்: 12 கிமீ
குத்துயர அறுதிமங்கள்:
- சிறுமத் தாழ்மட்டம்: தென்சீனக் கடல் 0 மீ
- பெரும உயரமட்டம்: பான்சிபான் 3 144 மீ
இயற்கை வளங்களும் நிலப் பயன்பாடும்
தொகுஇயற்கை வளங்கள்: பாசுபேட்டுகள், நிலக்கரி, மங்கனீசு, அருமண் தனிமங்கள், பாக்சைட்டு, கடற்சேய்மை எண்ணெய், வளிமம் தேக்கம், மரக்கட்டை, புனல்மின்சாரம்
நிலப் பயன்பாடு:
- பகுதிவறட்சி நிலம்: 19.64%
- தொடர்பயிரீட்டு நிலம்: 11.18%
- பிற: 69.18% (2011)
பாசன நிலம்: 45,850 கிமீ² (2005)
மொத்த புதுப்பிக்கவியன்ற நீர்வளங்கள்: 864.1 கிமீ3 (2011)
நன்னீர் பயன்படு (குடியிருப்பு/தொழிலகம்/வேளாண்மை):
- மொத்தம்: 82.03 கிமீ3/yr (1%/4%/95%)
- தனிநபர் வீதம்: 965மீm3/yr (2005)
சுற்றுச்சூழல் அக்கறைகள்
தொகுஇயற்கைப் பேரழிவுகள்: மேகாங் கழிமுகப் படுகையில் அடிக்கடி கொடுஞ்சூறாவளிகளால் ஏற்படும் அகல்விரிவான வெள்ளப் பேரழிவுகள்.
சுற்றுச்சூழல் சார்ந்த நடப்புச் சிக்கல்கள் மரம் வெட்டலும் எரிபுன(slash-and-burn) வேளாண்மையும் காடழிப்புக்கும் மண்வளமிழப்புக்கும் வழிவகுக்கின்றன; நீர்மாசுறுதலும் மிகை மீன்பிடிப்பும் கடல்வாழ் உயிரின்ங்களுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன; நிலத்தடி நீர்மாசுறுதல் குடிநீர் வளத்தைக் குறைக்கின்றன; நகரமயமாக்கமும் மாந்தரிடப் பெயர்வும் வேகமாகக் கனாய் நகரிலும் ஓ சி மின் நகரிலும் சுற்றுச்சூழலை தரமிழக்கசெய்கின்றன.
சுற்றுச்சூழல் சார்ந்த பன்னாட்டு ஒப்பந்தங்கள் வியட்நாம் பின்வரும் பன்னாட்டு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த கையெழுத்திட்டுள்ளது: உயிர்ப்பன்முகம், காலநிலை மாற்றம் சார்ந்த ஒன்றிய நாட்டவையின் சட்டக மாநாடு, காலநிலை மாற்ரத்துக்கான கயோட்டொ நெறிமுறை, பாலைவனமாக்கம், அச்சுறுத்தப்படும் உயிரினங்கள்,சுற்றுச்சூழல் திருத்த்ம், தீங்குறு கழிவுகள், கடல்சார் சட்டம், ஓசோன் அடுக்கு பாதுகாப்பு, கப்பல் மாசு (மார்போல் (MARPOL) 73/78), சதுப்புநிலங்கள்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Vietnam Destinations: Ban Gioc (Cao Bang)". Archived from the original on 2007-02-17. பார்க்கப்பட்ட நாள் 2007-02-12.
- ↑ "Agroviet Newsletter September 2005". Archived from the original on 2008-02-21. பார்க்கப்பட்ட நாள் 2017-11-12.
- ↑ "State of water: Vietnam". Water Environment Partnership in Asia. Archived from the original on 2008-03-14. பார்க்கப்பட்ட நாள் 2008-03-26.