ஷீலா தர் (1929 - 26 ஜூலை 2001) இந்தியாவின் புது தில்லியில் வசித்து வந்த எழுத்தாளரும், கிரானா கரானா வகைப் பாடகருமாவார். இசை மற்றும் இசைக்கலைஞர்கள் பற்றிய மூன்று புத்தகங்களை உள்ளடக்கிய அவரது எழுத்துக்களுக்காக பரவலாக அறியப்பட்டுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தைக் கற்பித்து வந்த இவர், பொருளாதார நிபுணரும் பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசகருமான பி.என்.தாரின் மனைவி ஆவார். [1] [2]

ஷீலா தர்
பிறப்பு1929
இறப்பு26 ஜூலை 2001 ( 71–72 வயதில்)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி பாரம்பரிய இசை
இசைக்கருவி(கள்) பாடல் பாடுதல்

லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியேறிய பிறகு, ஷீலா இந்துக் கல்லூரியில் சேர்ந்தார் மேலும் 1950 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸ் படிப்பை முடித்துள்ளார். பாஸ்டன் பல்கலைக்கழகம் சும்மா கம் லாட் விருதை இவரது முதுகலை படிப்பிற்காக வழங்கியுள்ளது, டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் கல்லூரிப் பிரிவான மிராண்டா ஹவுஸில் சிறிது காலம் ஆங்கில இலக்கியம் கற்பித்துள்ள இவர், அரசாங்கத்தின் புத்தக பதிப்பகம் மற்றும் வெளீயிடுகள் பிரிவில் பணியில் சேர்ந்துள்ளார்.[சான்று தேவை]

ஷீலா, 1940கள் மற்றும் 50களில் தில்லியில் இருந்த இசைக்கலைஞர்களான மாதுர் காயஸ்தாக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி ராகா ன் ஜோஷ் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இவரது அதிகாரத்துவ வாழ்க்கையின் அனுபவங்கள் மற்றும் படே குலாம் அலி கான், கேசர்பாய் கெர்கர், பிரான்நாத் மற்றும் பேகம் அக்தர் போன்ற இசைக்கலைஞர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகளை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ளது.

ஷீலா தர் எழுதிய மேலும் இரண்டு புத்தகங்கள் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசை மற்றும் அதன் பயிற்சியாளர்களின் உலகம் பற்றிய அவரது நுண்ணறிவை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. [3]

நூற்பட்டியல் தொகு

  • இந்தியாவின் குழந்தைகள் வரலாறு (1961)
  • நமது இந்தியா (1973)
  • இதோ நான் சந்திக்க விரும்பும் ஒருவர் (1995)
  • ராக'ன்' ஜோஷ்
  • அப்பாவிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் அதிகாரத்துவவாதிகளின் கதைகள்

மேற்கோள்கள் தொகு

  1. Padgaonkar, Dileep (28 July 2001). "Remembering Sheila". https://timesofindia.indiatimes.com/home/sunday-times/all-that-matters/Remembering-Sheila/articleshow/871982908.cms. 
  2. "Sheila Dhar | Biography & History | AllMusic". AllMusic. பார்க்கப்பட்ட நாள் 2015-12-18.
  3. Kumar, Kuldeep (2016-06-27). "Diving into the roots of our notes" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/mumbai/entertainment/Diving-into-the-roots-of-our-notes/article14403950.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷீலா_தர்&oldid=3699978" இலிருந்து மீள்விக்கப்பட்டது