சீலா தீக்‌சித்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி
(ஷீலா தீக்‌ஷித் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஷீலா தீட்சித் (Sheila Dikshit) (31 மார்ச் 1938 - 20 சூலை 2019) என்பவர் இந்திய அரசியல்வாதியும் 1998 ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லியின் முதலமைச்சராக பதவியில் இருந்தவரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். டிசம்பர் 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தன் சொந்தத் தொகுதியில் தோல்வியுற்றார்.பிறகு ஷீலா தீக்சித், மார்ச் 2014 முதல் ஆகத்து 2014 வரை கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்தார்.[2]

சீலா தீக்சித்
டெல்லி பிரதேச காங்கிரசு கமிட்டியின் தலைவர்
பதவியில்
10 ஜனவரி 2019 – 20 ஜூலை 2019
முன்னையவர்அஜய் மேக்கன்
கேரள ஆளுநர்
பதவியில்
11 மார்ச் 2014 – 25 ஆகத்து 2014
முன்னையவர்நிகில் குமார்
பின்னவர்ப. சதாசிவம் [1]
தில்லியின் 6வது முதலமைச்சர்
பதவியில்
3 டிசம்பர் 1998 – 28 டிசம்பர் 2013
முன்னையவர்சுஷ்மா சுவராஜ்
பின்னவர்அரவிந்த் கெஜ்ரிவால்
தில்லி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
03 டிசம்பர் 1998 – 28 டிசம்பர் 2013
முன்னையவர்கீர்த்தி ஆசாத்
பின்னவர்அரவிந்த் கெஜ்ரிவால்
தொகுதிபுது தில்லி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1984–89
முன்னையவர்சோட்டே சிங் யாதவ்
பின்னவர்சோட்டே சிங் யாதவ்
இந்தியக் குழு உறுப்பினர்
பெண்களின் நிலைக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம்
பதவியில்
1984–89
பிரதமர்இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1938-03-31)31 மார்ச்சு 1938
கபுர்தலா, பஞ்சாப், இந்தியா
இறப்பு20 சூலை 2019(2019-07-20) (அகவை 81)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரசு
துணைவர்வினோத் தீக்சித்
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிமிராண்டா இல்லம், டெல்லி பல்கலைக்கழகம்

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

பஞ்சாப் மாநிலம் காபுர்தாலாவில் ஷீலா திக்‌ஷித் பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை புது தில்லியில் உள்ள கான்வெண்ட் ஆப் ஜீசஸ் அண்ட் மேரி பள்ளியிலும், பிறகு தில்லி பல்கலைக்கழகத்தின் மிராந்தா ஹவுஸ் கல்லூரியிலும் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் தத்துவத்திற்கான முனைவர் பட்டம் பெற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னோ மாவட்டத்தின் உகு கிராமத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற சுதந்திர போராட்டத் தியாகியும் முன்னாள் ஆளுநர் மற்றும் மத்திய மந்திரியுமான உமாசங்கர் திக்‌ஷித் குடும்பத்தைச் சேர்ந்த வினோத் தீக்சித்தைத் திருமணம் செய்து கொண்டார். இவரது காலம் சென்ற கணவர் மதிப்பு மிக்க இந்திய ஆட்சிப்பணி சேவை அதிகாரியாவார். இவருக்கு காங்கிரஸ் கட்சிக்காக கிழக்கு தில்லியிலிருந்து நாடாளுமன்றத்தின் 15வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தீப் திக்‌ஷித்[3] என்ற மகனும், லத்திகா சையத் என்ற மகளும் உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை

தொகு

1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் உத்தரப் பிரதேசம் கானூஜ் மக்களவை தொகுதியின் பிரதிநிதியாக ஷீலா இருந்தார். நாடாளுமன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றிய இவர் மக்களவையின் மதிப்பீட்டு செயற்குழுவிலும் பணியாற்றினார். இந்தியாவின் நாற்பதாவது சுதந்திர தின நினைவு விழாவின் செயலாக்க செயற்குழு மற்றும் ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு நினைவு விழாவிலும் முனைவர் திக்‌ஷித் தலைவராக இருந்தார். பெண்களின் நிலைக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக ஐந்து ஆண்டுகள் (1984-1989) பணியாற்றினார். காங்கிரஸ் செயற்குழுவின் தில்லி பகுதித் தலைவராகப் பணியாற்றி 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறவைத்தார்.

மத்திய அமைச்சராக 1986-1989 களில் பணியாற்றினார், முதலில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் சார் அமைச்சராகப் பிறகு பிரதம மந்திரி அலுவலகத்தின் சார் அமைச்சராகவும் பணியாற்றினார். உலக மேயர் விருதுக்காக 2008 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டார். தில்லியின் முதல் மந்திரியாகத் திக்‌ஷித் பணியாற்றியபோது 2008 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று இந்திய பத்திரிகையாளர் சங்கத்திலிருந்து சிறந்த முதல் மந்திரிக்கான விருது பெற்றார். 2009 ஆம் ஆண்டு NDTV வழங்கும் அந்த ஆண்டின் சிறந்த அரசியல்வாதி விருதையும் பெற்றார்.

பங்களிப்புகள்

தொகு

இந்தியாவின் பிரதிநிதியாகப் பெண்களின் நிலைக்கான ஐ.நா (U.N.) ஆணையத்தில் ஐந்து ஆண்டுகாலம் (1984 - 89) பணியாற்றினார். உத்தரப் பிரதேசத்தில், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 23 நாட்கள் இவரும் இவரது சகபணியாளர்கள் 82 பேரும் மாநில அரசால் சிறையில் அடைக்கப்பட்டனர். இக்கைது சம்பவத்தினால் தூண்டப்பட்ட ஆயிரக்கணக்கான உத்தரப் பிரதேச மக்கள் தாங்களும் இயக்கத்தில் பங்கு கொண்டு கைது செய்யப்பட்டனர். அதற்கு முன்னதாக 1970களில் தொடக்கத்தில் இளம் பெண்கள் சங்கத்தின் தலைவராக இருந்தபோது வேலை செய்யும் பெண்களுக்காகத் தில்லியில் இரண்டு விடுதிகள் உருவாகக் காரணமாக இருந்தார்.

இவர் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையின் செயலாளராகவும் உள்ளார். சர்வதேச புரிந்துணர்வு மேம்பாட்டில் அந்த அறக்கட்டளை முதன்மையான பங்கு வகித்தது. அவ்வறக்கட்டளை அமைதி, ஆயுத ஒழிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான இந்திராகாந்தி விருதை வழங்குகிறது, மேலும் சர்வதேச விவகாரங்களுக்கான மாநாடுகளையும் நடத்துகிறது.

குறிப்புதவிகள்

தொகு
  1. "Sathasivam becomes Kerala governor, to take oath on September 5". India Today. 3 September 2014. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
  2. "Kerala Governor Sheila Dikshit resigns". 26 August 2014. பார்க்கப்பட்ட நாள் 31 August 2014.
  3. ஷீலா திக்‌ஷித் இந்தியா டுடே

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sheila Dikshit
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


இந்திய மக்களவை
முன்னர்
சோட்டே சிங் யாதவ்
கண்ணௌஜ் மக்களவை தொகுதி உறுப்பினர்
31 திசம்பர் 1984 – 27 நவம்பர் 1989
பின்னர்
சோட்டே சிங் யாதவ்
அரசு பதவிகள்
முன்னர்
நிகில் குமார்
கேரள ஆளுநர்
11 மார்ச் 2014 – 4 மார்ச் 2014
பின்னர்
அரசியல் பதவிகள்


முன்னர் தில்லி முதல்வர்
3 திசம்பர் 1998 – 28 திசம்பர் 2013
பின்னர்
அரசியல் கட்சி பதவிகள்
முன்னர்
அஜய் மாக்கன்
தலைவர்
தில்லி பிரதேச காங்கிரஸ்

10 சனவரி 2019 – 20 ஜூலை 2019
பின்னர்
சுபாஷ் சோப்ரா
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீலா_தீக்‌சித்&oldid=3802122" இலிருந்து மீள்விக்கப்பட்டது