ஸ்டான் சுவாமி

இந்திய ரோமன் கத்தோலிக்க பாதிரியார், பழங்குடி உரிமைகள் செயல்பாட்டாளர்

ஸ்டான் சுவாமி என்று பிரபலமாக அறியப்பட்ட ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி (26 ஏப்ரல் 1937 - 5 சூலை 2021) என்பவர் ஒரு இந்திய ரோமன் கத்தோலிக்க பாதிரியார். இவர் இயேசு சபயைச் சேர்ந்தவர். [1]பல தசாப்தங்களாக பழங்குடியின உரிமை செயற்பாட்டாளராக இயங்கிவந்தார். [2] [3] இந்தியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆளான மிக வயதான நபர் சுவாமி ஆவார். [4]

அருட்தந்தை
ஸ்டான் சுவாமி
சே.ச.
2010 இல் ஸ்டான் சுவாமி
சபைகத்தோலிக்க திருச்சபை
(இயேசு சபை)
பிற தகவல்கள்
இயற்பெயர்ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி
பிறப்பு(1937-04-26)26 ஏப்ரல் 1937
விரகாலூர், திருச்சினாப்பள்ளி மாவட்டம்,
மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு5 சூலை 2021(2021-07-05) (அகவை 84)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
வேலைகத்தோலிக்க குரு, பழங்குடி உரிமைச் செயல்பாட்டாளர்

2018 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள் 2018 பீமா கோரேகான் வன்முறை மற்றும் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) அமைப்பு உடனான தொடர்பு கொண்டவர் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. [5] அவை பொய்ச் சான்றுகள் என்றனர் அவரது ஆதரவாளர்கள்.[6] ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் கேரள முதல்வர் பிணறாயி விஜயன் இருவரும் சுவாமியை கைது செய்யப்பட்டதை எதிர்த்தனர்.

வாழ்க்கை

தொகு

சுவாமி 1937 ஏப்ரல் 26 அன்று பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணம், திருச்சினாப்பள்ளி மாவட்டம் (தற்போது அரியலூர் மாவட்டம்) விரகனூர் கிராமத்தில் பிறந்தார்.[6] [7] [8] [9] 1970 களில், இறையியல் படித்த இவர், பிலிப்பைன்சில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அங்கு ஆளும் நிர்வாகத்திற்கு எதிரான பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் பங்குகொண்டார். தனது மேலதிக ஆய்வுகளின் போது, இவர் பிரேசிலிய கத்தோலிக்க பேராயர் ஹால்டர் செமாராவுடன் நட்பு கொண்டார், ஏழை மக்களுடன் அவர் பணியாற்றியது இவரை ஈர்த்தது.

செயல்பாடுகள்

தொகு

சுவாமி 1975 முதல் 1986 வரை பெங்களூரில் உள்ள ஜேசுயிட் நடத்தும் இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். [10] அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தாமல் இருப்பது குறித்து இவர் கேள்வி எழுப்பியுள்ளார், இதன்படி மாநிலத்தில் பழங்குடிகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு, மேம்பாட்டுக்காக பழங்குடியினரை உறுப்பினர்களாகக் கொண்ட `பழங்குடியினர் ஆலோசனைக் குழு’ அமைக்க வேண்டும் என்று ஸ்டேன் சுவாமி குரல்கொடுத்தார். [11] மேலும், 1996இல் இந்திய ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட `பழங்குடியினர் கிராமப் பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் (பெசா)’ கிடப்பில் போடப்பட்டுள்ளது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.[6]

சிறையில் செயல்பாடு

தொகு

தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சுவாமி தனது இயேசுசபை சகாவுக்கு எழுதிய கடிதத்தில், கைதிகளின் அவல நிலையை எடுத்துரைத்தார், "இங்கு அடைக்கபட்டுள்ள பல ஏழைகளுக்கு அவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்றுகூட தெரியவில்லை. அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையைகூட அவர்கள் பார்க்கவில்லை. அப்படியே சிறையில் எந்தவொரு சட்ட உதவியும் இல்லாமல் பல ஆண்டுகளாக இருக்கிறார்கள். " [12] "ஆனால் நாங்கள் குழுவாக இன்னும் பாடுவோம். ஒரு கூண்டு பறவை இன்னும் பாடலாம். " என்று கடிதத்தை முடித்தார், [13]

கைதும், எதிர்ப்பும்

தொகு

சுவாமிக்கு 2018 பீமா கோரேகான் வன்முறையில் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டினர். மேலும் இவர் ஒரு மாவோயிச அனுதாபி என்றும் குற்றம் சாட்டப்பட்டார். "மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 3,000 ஆண், பெண்களை விடுவிப்பதற்காக போராட" இவரும் சுதா பரத்வாஜும் நிறுவிய துன்புறுத்தப்பட்ட கைதிகள் ஒற்றுமைக் குழு (பிபிஎஸ்சி) என்ற அமைப்பு மாவோயிஸ்டுகளுக்கான நிதி திரட்டலுக்கான ஒரு முன்னணி என்று குற்றம் சாட்டப்பட்டினர். ஸ்டான் சுவாமி ஒரு மாவோயிஸ்ட் என்ற குற்றச்சாட்டை ஏசுசபையினர் மறுத்துள்ளனர். [14] ஏசுசபை சமூக செயல்பாட்டு மையமான பாகிச்சாவில் 2020 அக்டோபர் 8 அன்று [15] இவர் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டார். [16] மேலும் 1967 சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஜாமீன் மறுக்கப்படும்.

இந்த வழக்கை துவக்கத்தில் புனே காவல்துறையினர் விசாரித்தனர், ஆனால் பின்னர் என்ஐஏவிடம் ஒப்படைத்தனர். முன்னதாக இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் ராஞ்சியில் 2018 சூன் மாதம் கைது செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்ய இந்தியா முழுவதும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. குடிமை உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (பி.யூ.சி.எல்), அகில இந்திய கத்தோலிக்க ஒன்றியம், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேராயம், கேரள கத்தோலிக்க ஆயர்கள் பேராய (கே.சி.பி.சி), கேரள லத்தீன் கத்தோலிக்க சங்கம் (கே.எல்.சி.ஏ), கேரள ஏசுசபை மாகாணம் ஆகியவையும் போராட்டத்தில் ஈடுபட்டன இந்தியா முழுவதும் பரவலான போராட்டங்கள் நடந்துள்ளன., ஆசிய ஆயர்கள் பேராயம் (எப்ஏபிசி),[17] மற்றும் சர்வதேச ஏசுசபை சமூகம்[18][19][1] இவரை விடுவிக்க கோரிக்கை விடுத்தன.[20][21] ராஞ்சி கத்தோலிக்க திருச்சபை வெளியிட்ட ஒரு அறிக்கையில், இவர் கைது செய்யப்பட்ட முறையானது "மன உளைச்சலையும் கலக்கத்தையும்" ஏற்படுத்தியதுதாக குறிப்பிட்டது.[7] ஆதிவாசி சமூகத்தினரிடையே இவர் பணியாற்றியது, கைது செய்யப்பட்ட அந்த மக்களை விடுவிக்க, துன்புருத்தபட்ட கைதிகள் ஒற்றுமைக் குழுவில் பிறருடன் செயல்பட்டது போன்ற அரசியல் காரணங்களால் இவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது. இவர் கைது செய்யப்பட்டதற்கு மற்ற சிறுபான்மை சமயத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. 2020 அக்டோபர் 21 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், சசி தரூர், சீத்தாராம் யெச்சூரி, து. ராஜா, சுப்ரியா சுலே, கனிமொழி போன்ற முன்னணி எதிர்கட்சித் தலைவர்களுடன், பொருளாதார நிபுணர் ஜான் டிரேஸ், ராஞ்சியை தளமாகக் கொண்ட சேவியர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஜோசப் மரியானஸ் குஜூர் சமூக அறிவியல், ஆர்வலர்கள் தயாமணி பர்லா மற்றும் ரூபாலி ஜாதவ், மற்றும் வழக்கறிஞர் மிஹிர் தேசாய் ஆகியோர் கலந்து கொண்டு ஸ்டானின் விடுதலையை வலியுறுத்தினர்.

பிணை மற்றும் சிறை

தொகு

மருத்துவ தேவைக்காள இடைக்கால ஜாமீன் மனுவை சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் 23 அக்டோபர் 2020 அன்று நிராகரித்தது.[22] நடுக்குவாததாத நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக திட உணவை உட்கொள்ள முடியாத சூழலில், உறிஞ்சுகுழலும் சிப்பரும் (உறிஞ்சுகுழலுடன் கூடிய கோப்பை) கேட்டு 2020 நவம்பர் 6 அன்று, சுவாமி சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். விண்ணப்பத்திற்கு பதிலளிக்க என்ஐஏ 20 நாட்கள் அவகாசம் கோரியது.[23] 2020 நவம்பர் 26 அன்று, சுவாமிக்கான உறிஞ்சுகுழலும் சிப்பரும் இல்லை என்று நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ பதில் சொன்னது. 83 வயதான சுவாமி, நடுக்குவாத நோயால் அவதிப்படும் காரணத்தினால் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.[24] அடுத்த விசாரணையை 2020 திசம்பர் 4 ஆம் நாளுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது, அதே நேரத்தில் உறிஞ்சுகுழலும் சிப்பர், குளிரைத் தாங்கும் குளிர்கால ஆடைகளுக்கான இவரது கோரிக்கைக்கு பதிலளிக்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.[25] கைது செய்யப்பட்டு சுமார் 50 நாட்களுக்குப் பிறகு, பொதுமக்கள் சீற்றத்திற்கு இடையில், தலோஜா சிறை அதிகாரிகள் சுவாமிக்கு உறிஞ்சுகுழலையும் சிப்பரையும் கொடுத்தார்கள்.[26] செயற்பாட்டாளர்கள் வரவர ராவ், வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃபெரீரா ஆகியோரும் ஸ்டான் சுவாமியுடன் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.[27]

சுவாமி 2020 நவம்பரில் ஜாமீனுக்காக விண்ணப்பித்திருந்தார். இது சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தால் 22 மார்ச் 2021 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.[28]

விரைந்து மோசமடைந்து வரும் சுவாமியின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு, 15 நாட்களுக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி மகாராஷ்டிரா அரசுக்கு பம்பாய் உயர் நீதிமன்றம் 2021 மே 28 அன்று, உத்தரவிட்டது. அதன்பிறகு இவர் பாந்த்ராவின் ஹோலி பேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[29]

நோயும், மரணமும்

தொகு

“அரசும் நீதிமன்றமும் ஒரு முதிய மனித உரிமைப் போராளியைக் கொன்றுவிட்டன. ஸ்டேன் சுவாமி போன்ற அன்பான, மனிதநேய மிக்க நபரை இனிமேல் சந்திக்க முடியாது”.

~ டிவிட்டரில் பிரசாந்த் பூசண்[6]

சுவாமி நடுக்குவாதம் மற்றும் மூப்பு தொடர்பான பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். [9]சிறையில் இருந்தபோது பல முறை தவறி விழுந்தார். இரண்டு காதுகளும் கேளாததால் அவதிப்பட்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டார். [14]

நவம்பர் 2020 இல், சுவாமிக்கு உறிஞ்சுகுழலையும் சிப்பரையும் ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு எதிர்வினையாக, [30] சமூக ஊடக பயனர்கள் உறிஞ்சுகுழலையும் சிப்பரையும் என்ஐஏவின் மும்பை அலுவலகம் மற்றும் தலோஜா சிறைக்கு ஆன்லைனில் வாங்கி அனுப்பினர். [31]

2021, மே 18 அன்று, பம்பாய் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு குறிப்பில், [32] சிறையில் சுவாமி கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. [33] சுவாமியின் உடலிநிலையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. [34] 2021 மே 21 அன்று கானொளி வாயிலாக நீதிமன்றத்தில் நேர்நிறுத்தபட்ட, சுவாமி ஜே. ஜே. மருத்துவமனை அல்லது வேறு எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படுவதை மறுத்து, ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்குச் செல்ல, இடைக்கால ஜாமீன் மட்டுமே கோரினார். [35] மே 2021 இல் சுவாமிக்கு கோவியட்-19 தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

2021 சூலை 4 அன்று, சுவாமியின் உடல்நிலை மோசமடைந்ததால் , மும்பையின் ஹோலி பேமிலி மருத்துவமனையில் வென்டிலேட்டர் படுக்கையில் அனுமதிக்கபட்டார். [36] பம்பாய் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் விசாரணைக்கு முன்னதாக 2021 ஜூலை 5 அன்று இவர் இறந்தார். [37] [38] [39]

விருதுகள்

தொகு

2021 சனவரி அன்று சுவாமிக்கு மனித உரிமைகளுக்காக முகுந்தன் சி. மேனன் விருது 2020 வழங்கப்பட்டது. [40]

குறிப்புகள்

தொகு

 

  1. 1.0 1.1 "Petition for Fr Stanislaus Lourdusamy". Jesuits in Britain. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  2. "NIA court to pass order on Stan Swamy bail on March 22". The Hindu. 16 March 2021. https://www.thehindu.com/news/national/nia-court-to-pass-order-on-stan-swamy-bail-on-march-22/article34084504.ece. 
  3. Regi, Anjali (9 October 2020). "Fr. Stan Swamy arrested: Widespread protest". Catholic Focus. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  4. "Stan Swamy: The oldest person to be accused of terrorism in India". 13 October 2020. https://www.bbc.com/news/world-asia-india-54490554. 
  5. Kaur, Kamaljit. "This is what NIA's Bhima Koregaon chargesheet says about Stan Swamy". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 October 2020.
  6. 6.0 6.1 6.2 6.3 அ. இருதயராஜ், கட்டுரை, ஸ்டான் சுவாமி: நியாயம் யார் பக்கம்? இந்து தமிழ் (நாளிதழ்) 2021 சூலை 8
  7. 7.0 7.1 "Held by NIA over 'Maoist links', 83-yr-old priest worked for tribals, took on govt policies, and 'even the Church'". The Indian Express (in ஆங்கிலம்). 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  8. PM, Tony; Martin, Peter. "Adivasi rights activist Stan Swamy's life and work demonstrate why the powerful want him silenced". Scroll. பார்க்கப்பட்ட நாள் 22 October 2020.
  9. 9.0 9.1 Thekaekara, Mari Marcel. "The Indomitable Spirit of Father Stan Swamy". The Wire. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  10. "Directors, Indian Social Institute". Indian Social Institute. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  11. "Explained: Who is Stan Swamy, the latest to be arrested in the Elgar Parishad-Bhima Koregaon case?". The Indian Express (in ஆங்கிலம்). 10 October 2020. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  12. Murphy, Gavin T. (26 January 2021). "Fr Stan Swamy SJ – 'A caged bird can still sing'".
  13. "Father Stan Swamy pens letter on plight of other undertrials". www.telegraphindia.com.
  14. 14.0 14.1 Borges, Jane. "'He's a torchbearer of the Constitution' say father Stan Swamy's peers". Mid-Day. பார்க்கப்பட்ட நாள் 1 November 2020.
  15. "Christians seek Indian leaders' help for bail for jailed priest". Vatican News. 18 November 2020. பார்க்கப்பட்ட நாள் 27 November 2020.
  16. Shantha, Sukanya. "NIA Arrests 83-Year-Old Tribal Rights Activist Stan Swamy in Elgar Parishad Case". The Wire. பார்க்கப்பட்ட நாள் 11 October 2020.
  17. "Asian bishops' solidarity with jailed Indian Jesuit". Vatican News. 26 October 2020. பார்க்கப்பட்ட நாள் 29 November 2020.
  18. "Jesuits Demand Immediate Release of Fr. Stan Swamy, SJ". jesuits.org. The Jesuits. பார்க்கப்பட்ட நாள் 23 October 2020.
  19. "In Solidarity with Fr. Stan Swamy, a 83 year old Jesuit arrested in India". Jesuits Global. Jesuits. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  20. "PUCL Condemns the Detention and Arrest of Fr. Stan Swamy in Bhima Koregaon Case". Counter Currents. People's Union For Civil Liberties. 8 October 2020.
  21. "CBCI seeks release of Stan Swamy". The Indian Express (in ஆங்கிலம்). 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  22. "Court rejects bail plea of Stan Swamy". The Hindu. 23 October 2020. https://www.thehindu.com/news/national/court-rejects-bail-plea-of-stan-swamy/article32932596.ece. 
  23. Saigal (6 November 2020). "Stan Swamy files plea to allow use of straw, sipper in Taloja jail". The Hindu. https://www.thehindu.com/news/cities/mumbai/stan-swamy-files-plea-to-allow-use-of-straw-sipper-in-taloja-jail/article33042730.ece. 
  24. Joshi (27 November 2020). "[Bhima Koregaon Not likely to jump bail, arrest malafide: Father Stan Swamy moves Special NIA Court for bail"]. Bar And Bench. https://www.barandbench.com/news/litigation/father-stan-swamy-bail-application-special-nia-court. 
  25. Roy (26 November 2020). "Not Till December. Stan Swamy's Wait For A Straw And Sipper Extended". NDTV. https://www.ndtv.com/india-news/stan-swamys-wait-for-a-straw-and-sipper-extended-not-till-december-2330570. 
  26. Ganapatye (29 November 2020). "Stan Swamy gets a sipper, finally". Mumbai Mirror. https://mumbaimirror.indiatimes.com/mumbai/other/stan-swamy-gets-a-sipper-finally/articleshow/79470395.cms. 
  27. . 
  28. Hakim, Sharmeen. "BREAKING : NIA Court Refuses Bail To Stan Swamy In Bhima Koregaon Case". Livelaw. http://livelaw.in/top-stories/stan-swamy-bombay-high-court-bail-bhima-koregaon-uapa-nia-171518. 
  29. "Bombay HC directs prison authorities to shift SwamySwamy to Holy Family Hospital". 29 May 2021. https://indianexpress.com/article/cities/mumbai/bombay-high-court-allows-transfer-of-father-stan-swamy-to-holy-family-hospital-from-prison-for-15-days-7334074/. 
  30. "NIA says it didn't seize Stan Swamy's straw and sipper". https://www.thehindu.com/news/cities/mumbai/nia-says-it-didnt-seize-stan-swamys-straw-and-sipper/article33206122.ece. 
  31. "Why people are posting orders of straws and sippers for arrested tribal activist Stan Swamy". The Indian Express (in ஆங்கிலம்). 28 November 2020. பார்க்கப்பட்ட நாள் 5 July 2021.
  32. Hakim, Sharmeen (19 May 2021). "'Ayurvedic Doctor At Prison Prescribed Allopathic Antipsychotic Drug' :Stan Swamy Tells Bombay High Court". www.livelaw.in.
  33. "'Shift jailed Stan Swamy to hospital': Jharkhand rights group to Maharashtra govt". The New Indian Express.
  34. "Elgaar Parishad case: Bombay HC directs Stan Swamy's health check-up at J J Hospital". 19 May 2021.
  35. Hakim, Sharmeen (21 May 2021). "'I Would Rather Suffer, Possibly Die Very Shortly If This Were To Go On' : Stan Swamy Pleads For Interim Bail In Bombay HC". www.livelaw.in.
  36. "Elgaar Parishad case: Stan Swamy put on ventilator support as health deteriorates". https://indianexpress.com/article/cities/mumbai/elgaar-parishad-case-stan-swamy-health-ventilator-7388859/. 
  37. "Fr. Stan Swamy passes away" (in en-IN). https://www.thehindu.com/news/national/other-states/fr-stan-swamy-passes-away/article35143941.ece. 
  38. "Elgar Parishad Case: Activist Stan Swamy, 84, Passes Away Ahead of Hearing on Bail Plea". News18. 5 July 2021. பார்க்கப்பட்ட நாள் 5 July 2021.
  39. "Tribal activist Stan Swamy dies at 84". Scroll.in. 5 July 2021. பார்க்கப்பட்ட நாள் 5 July 2021.
  40. "Award for Fr. Stan Swamy". The Hindu. 25 January 2021. https://www.thehindu.com/news/cities/bangalore/award-for-fr-stan-swamy/article33652620.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டான்_சுவாமி&oldid=4088053" இலிருந்து மீள்விக்கப்பட்டது