ஹெர்பட் சட்கிளிஃப்
ஹர்பட் சட்கிலிஃப் (Herbert Sutcliffe, பிறப்பு: நவம்பர் 24 1894, இறப்பு: சனவரி 22 1978), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 54 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 754 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1924 - 1935 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஹர்பட் சட்கிலிஃப் | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 215) | சூன் 14 1924 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூன் 29 1935 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 17 2009 |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுசம்மர் பிரிட்ஜ், வடக்கு யார்க்ஷயரில் ஹெர்பர்ட் சட்கிளிஃப் 24 நவம்பர் 1894 அன்று பிறந்தார் .இவரது பெற்றோர் வில்லி மற்றும் ஜேன் சுட்க்ளிஃப். ஹெர்பர்ட் ஆகியோரின் மூன்று மகன்களில் இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது சகோதரர்கள் ஆர்தர் மற்றும் பாப் ஆவர். இவரது வீட்டிற்கு அருகிலுள்ள டாக்ரே வங்கிகளில் ஒரு மரத்தூள் ஆலையில் பணிபுரிந்த வில்லி சுட்க்ளிஃப், ஒரு தீவிர துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சங்களுக்காக துடுப்பாட்டம் விளையாடினார்.[1]
ஹெர்பர்ட் குழந்தையாக இருந்தபோது இவரது குடும்பம் புட்ஸிக்கு குடிபெயர்ந்தது, அங்கு வில்லியின் தந்தை கிங்ஸ் நில உரிமையாளராக இருந்தார். வில்லி பப்பில் பணிபுரிந்தார் மற்றும் பரவலாக அறியப்பட்ட புட்ஸி செயின்ட் லாரன்ஸ் துடுப்பாட்டசங்கத்தில் துடுப்பாட்டம் விளையாடினார். இவர் ரக்பி கால்பந்தும் விளையாடியுள்ளார், மேலும் ஒரு ரக்பி போட்டியின் போது ஏற்பட்ட காயம் 1898 இல் இவரது மரணத்திற்கு வழிவகுத்தது. [2]
இவரது குடும்பம் மீண்டும் டார்லிக்கு குடிபெயர்ந்தது. இவரது மூன்று அத்தைகளும் உள்ளூர் சபை தேவாலயத்தின் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களாக இருந்ததால், மூன்று சிறுவர்களும் அங்கு மத போதனைகளைப் பெற்றனர். ஹெர்பர்ட் வாழ்நாள் முழுவதும் உறுதியான கிறிஸ்தவராக இருந்தார். இளைஞனாக இருந்த போது ஞாயிறு பள்ளி ஆசிரியராக இருந்த இவர், தேவாலய அணிக்காக விளையாடியபோது துடுப்பாட்டவீரராக முதலில் கவனிக்கப்பட்டார். [3]
ஹெர்பர்ட் 1908 ஆம் ஆண்டில் 13 வயதில் பள்ளியை விட்டு வெளியேறினார். மேலும் காலணி நிறுவனத்தில் ஒரு "கிளிக்கர்" ஆக பயிற்சி பெற்றார்.1911 ஆம் ஆண்டில், இவருக்கு ஒரு உள்ளூர் ஜவுளி ஆலையில் எழுத்தர் வேலைவாய்ப்பைப் பெற்றார்.
முதல் தரத் துடுப்பாட்டம்
தொகுயார்க்சயர் துடுப்பாட்ட அணிக்காக சட்க்ளிஃப் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் தேர்வானார். ஆனால் போர் வந்ததனால் இவரின் முதல் போட்டி தாமதமானது. இறுதியாக அவருக்கு வாய்ப்பு வந்தபோது அவருக்கு 24 வயது. மே 1919 இல், அப்போது அதிக பலம் கொண்ட அணியாக கருதப்பட்ட 1 வது லெவன் அணிக்கு எதிராக கவுண்டியின் 2 வது லெவன் அணிக்காக விளையாடினார். அந்தப் போட்டியில் 51 ஓட்டங்கள் எடுத்தார். இவரது விளையாடும் திறன் சிறப்பாக இருந்ததாக யார்க்ஷயர் போஸ்டில் இவர் இடம் பெற்றார். அதன்பிறகு இவர் மீண்டும் 2 வது லெவன் அணிக்காக விளையாடியதில்லை. [4] யுத்தத்தின் பின்னர் யார்க்ஷயரின் முதல் கவுண்டி வாகையாளர் போட்டி மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிரிஸ்டலில் க்ளூசெஸ்டர்ஷைர் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடந்தது. அதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பின்னர் இவர் ஆறாவதாக களம் இறங்கினார். அந்தத் தொடரின் முதல் போட்டியில் 11 ஓட்டங்களை எடுத்தார். மொத்தமாக 271 ஓட்டங்கள் எடுத்தார். அந்தப் போட்டியில் 63 ஓட்டங்கள் மற்றும் ஓர் ஆட்டப் பகுதியில் அந்த அணி வெற்றி பெற்றது.[5]