ஹோசங்காபாத் மாவட்டம்

(ஹோசங்கபாத் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹோசங்காபாத் மாவட்டம் (Hoshangabad District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஹோசங்காபாத் ஆகும். இது நர்மதாபுரம் கோட்டத்தில் அமைந்துள்ளது.

ஹோசங்காபாத் மாவட்டம்
होशंगाबाद जिला
ஹோசங்காபாத்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்நர்மதாபுரம்
தலைமையகம்ஹோசங்காபாத்
பரப்பு6,703 km2 (2,588 sq mi)
மக்கட்தொகை1,241,350 (2011)
மக்கள்தொகை அடர்த்தி185/km2 (480/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை31.42%
படிப்பறிவு75.29
பாலின விகிதம்914
மக்களவைத்தொகுதிகள்ஹோசங்காபாத்
[narmadapuram.nic.in அதிகாரப்பூர்வ இணையத்தளம்]

இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையம், ஹோசங்காபாத் நகரத்திலிருந்து 18 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.

அமைவிடம் தொகு

6,703 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஹோசங்காபாத் மாவட்டத்தின் வடகிழக்கில் ராய்சென் மாவட்டம், கிழக்கில் நர்சிங்பூர் மாவட்டம்‎, தென்கிழக்கில் சிந்த்வாரா மாவட்டம் , தெற்கில் பேதுல் மாவட்டம்], தென்மேற்கில் ஹர்தா மாவட்டம், வடமேற்கில் செஹோர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.[1]

 
சாத்பூரா மலைத்தொடர்கள்

புவியியல் தொகு

நர்மதை ஆற்றுச் சமவெளியில் அமைந்த இம்மாவட்டத்தின் வடக்கு எல்லையாக நர்மதை ஆறு உள்ளது. இம்மாவட்டத்தின் தெற்கில் சாத்பூரா மலைத் தொடர் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,241,350 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 68.58% மக்களும்; நகரப்புறங்களில் 31.42% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.49% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 648,725 ஆண்களும் மற்றும் 592,625 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 914 914 பெண்கள் வீதம் உள்ளனர். 6,703 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 185 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 75.29 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 83.35 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 66.45 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 164,602 ஆக உள்ளது. [2]

சமயம் தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,175,203 (94.67 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 52,269 (4.21 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள் தொகு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார பழங்குடியின மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

பொருளாதாரம் தொகு

வேளாண்மை தொகு

இம்மாவட்டம் வேளாண் பொருளாதரத்தை அடிப்படையாகக் கொண்டது. கோதுமை, நெல், கரும்பு, சோளம், பருப்பு வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

தொழிற்சாலைகள் தொகு

எண்ணெய் பிழிதல், சர்க்கரை ஆலைகள், மரத்தளவாடத் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. இடார்சி நகரம் இம்மாவட்டத்தின் பெரும் வணிகச் சந்தையாக உள்ளது. இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம் ஹோசங்காபாத் நகரத்தில் செயல்படுகிறது. மேலும் இராணுவ தளவாடத் தொழிற்சாலை இடார்சி நகரத்தில் உள்ளது.

போக்குவரத்து வசதிகள் தொகு

சாலை தொகு

தேசிய நெடுஞ்சாலை எண் 69 மற்றும் மாநில நெடுஞ்சாலை எண்கள் 15, 19, 19A மற்றும் 22 நாட்டின் பிற பகுதிகளுடன் சாலை வழியாக இணைக்கிறது.

தொடருந்து தொகு

இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் வகையில் இருப்புப்பாதைகள் உள்ளது. இடார்சி இம்மாவட்டத்தின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் ஆகும். இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 250 தொடருந்துகள் வந்து செல்கிறது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. https://narmadapuram.nic.in/. {{cite web}}: Missing or empty |title= (help)| title =Narmadapuram | work = |publisher =District administration |accessdate = 2010-08-19 }}
  2. Hoshangabad District : Census 2011 data

வெளி இணைப்புகள் தொகு

  • [1] list of places in Hoshangabad


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோசங்காபாத்_மாவட்டம்&oldid=3890863" இலிருந்து மீள்விக்கப்பட்டது