1992 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

(1992 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

1992 ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் எசுப்பானியாவின் பார்சிலோனா நகரத்தில் சூலை 25 முதல் ஆகத்து 9 வரை நடைபெற்றதது. அதிகாரபூர்வமாக இப்போட்டி XXV ஒலிம்பிக் என அழைக்கப்பட்டது. 1924 லிருந்து ஒரே ஆண்டில் குளிர்கால ஒலிம்பிக்கும் கோடைகால ஒலிம்பிக்கும் நடத்துவதை விடுத்து இரண்டையும் இரு ஆண்டுகள் இடைவெளியில் வெவ்வேறு ஆண்டுகளில் நடத்துவது என்று 1986 இல் கூடிய ஒலிம்பிக் ஆணையகம் முடிவெடுத்தது. 1994ல் குளிர்கால ஒலிம்பிக்கை நடத்த முடிவெடுத்தது. 1992ம் ஆண்டே கோடைகால ஒலிம்பிக்கும் குளிர்கால ஒலிம்பிக்கும் ஒரேயாண்டில் நடந்த கடைசி ஆண்டாகும். பனிப்போர் முடிவுற்றதால் 1972க்கு பிறகு எந்த நாட்டின் புறக்கணிப்பு இல்லாமல் நடந்த ஒலிம்பிக்காகவும் இது திகழ்ந்தது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் ஒலிம்பிக்கான இதில் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் ஐக்கிய அணி என்ற பெயரில் போட்டியிட்டன. இவ்வணி அதிகளவு பதக்கங்களைப் பெற்று ஒலிம்பிக்கில் முதல் இடத்தை கைப்பற்றியது.

போட்டி நடத்தும் நாடு தெரிவு

தொகு

சுவிட்சர்லாந்தில் அக்டோபர் 17, 1986ம் ஆண்டு நடந்து ஒலிம்பிக் ஆணையத்தின் 91வது அமர்வில் எசுப்பானியாவின் இரண்டாவது பெரிய நகரான பார்சிலோனா 1992ம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக்கை நடத்த தேர்வுபெற்றது.[1] 1936ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கை நடத்த போட்டியிட்டு பெர்லினிடம் தோற்றது.

1992 ஒலிம்பிக் போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்[2]
நகரம் நாடு சுற்று 1 சுற்று 2 சுற்று 3
பார்சிலோனா   எசுப்பானியா 29 37 47
பாரிசு   பிரான்சு 19 20 23
பிரிஸ்பேன்   ஆத்திரேலியா 11 9 10
பெல்கிரேட்   யுகோசுலாவியா 13 11 5
பர்மிங்காம்   ஐக்கிய இராச்சியம் 8 8
ஆம்ஸ்டர்டாம்   நெதர்லாந்து 5

இவ்வொலிம்பிக்கின் குறிப்பிடதக்கத் நிகழ்வுகள்

தொகு
  • இனவெறி கொள்கை காரணமாக ஒலிம்பிக்கில் போட்டியிட தடைசெய்யப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்கா 1960ம் ஆண்டுக்கு பின் போட்டியிட்டது. வெள்ளை நிறத்தவரான தென் ஆப்பிரிக்காவின் எல்னா மெய்யருக்கும் கருப்பு நிறத்தவரான எத்தியோப்பியாவின் துலுவுக்கும் 10,000 மீட்டர் ஓட்டத்தில் கடும் போட்டி இருந்தது. இதில் துலு வென்றார். வென்ற பிறகு இருவரும் கைகோர்த்து திடலைச் சுற்றினர்.[3]
  • யூகோசுலாவியா உடைந்த பின் குரோவாசியா, சுலோவீனியா, பொசுனியா எர்செகோவினா ஆகியவை தனி நாடுகளாக ஒலிம்பிக்கில் முதல் முறையாக பங்கேற்றன. ஐக்கிய நாட்டின் தடையால் யூகோசுலாவியா ஒலிம்பிக்கில் பங்கெடுக்க தடைவிதிக்கப்பட்டதால் அதன் வீரர்கள் தனிப்பட்ட வீரர்களாக ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்றனர்.
  • இரண்டு பெரு வெற்றி தொடரில் அரையிறுதி வரை வந்த அமெரிக்காவின் செனிபர் கேப்ரியாட்டி பெண்கள் தனிநபர் பிரிவில் 16 வயதில் தங்கம் வென்றார்.
  • தனிப்பட்டவருக்கான நீச்சல் நடனத்தில் நடுவரின் தவறு காரணமாக ( கனடாவின் சில்வியா பிரச்செட்டு என்பவருக்கு 8.7 என்பதற்கு பதிலாக 9.7 புள்ளிகள் என்று கணினியில் உள்ளீடு செய்துவிட்டார் ) இருவருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. சில்வியாவுக்கு வெள்ளி கிடைத்த போதிலும் 1993 திசம்பரில் பன்னாட்டு நீச்சல் கழகம் சில்வியாவுக்கும் தங்கத்தை அளித்தது.[4]
  • 1988 ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்தோனேசியாவின் சுசி சுனதி பெண்கள் இறகுபந்தாட்டத்தில் அந்நாட்டுக்கு தங்கம் வென்றார். ஆண்கள் பிரிவில் ஆலன் புடிகுசும தங்கம் வென்றார். சில ஆண்டுகள் கழித்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதனால் அவர்களுக்குத் தங்கத் தம்பதிகள் என்று பட்டப்பெயர் கிடைத்தது.
  • பெண்கள் 200 மீட்டர் நீச்சல் (மார்பக நீச்சல் பிரிவு) போட்டியில் 14 ஆண்டு 6 நாட்கள் வயதுடைய சப்பானின் கியோகோ இவாசகி தங்கம் வென்றார். இவரே குறைந்த வயதில் நீச்சல் போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார்.

கலந்து கொண்ட நாடுகள்

தொகு
 
பங்கேற்ட நாடுகள்
 
பல்வேறு நாடுகளிலிருந்து கலந்து கொண்ட வீரர்கள் எண்ணிக்கை

169 நாடுகள் இப்போட்டிக்கு வீரர்களை அனுப்பின. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதால் அதிலிருந்த பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அணி என்று ஒன்றாக போட்டியிட்டன. ஆனால் சோவியத் ஒன்றியத்தில் இருந்த பால்ட்டிக் கடல் பகுதியைச்சேர்ந்த நாடுகள் எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகியவை தனியாக கலந்து கொண்டன. சோசலிச யுகோசுலோவிய கூட்டமைப்பு கலைக்கப்பட்டதால் முதல் முறையாக குரோவாசியா, சுலோவீனியா, பொசுனியா எர்செகோவினா ஆகியவை தனி நாடுகளாக ஒலிம்பிக்கில் பங்கேற்றன. கிழக்கு செருமனியும் மேற்கு செருமனியும் 1990ல் இணைந்ததை தொடர்ந்து 1964ம் ஆண்டுக்கு பிறகு ஜெர்மனி ஒரே அணியை அனுப்பியது. நமீபியாவுக்கும் இது முதல் ஒலிம்பிக் ஆகும். பல ஆண்டுகளாக வடக்கு யேமன் தெற்கு யேமன் என்று பிரிந்திருந்த யேமன் ஒன்றுபட்ட அணியை அனுப்பியது. 32 ஆண்டுகளுக்கு பின் தென் ஆப்பிரிக்கா ஒலிம்பிக்கில் கலந்து கொண்டது. ஆப்கானித்தான், சோமாலியா, லைபீரியா, புருணை ஆகியவை இந்த ஒலிம்பிக்கிற்கு தங்கள் வீரர்களை அனுப்பவில்லை.

யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு ஐக்கிய நாடுகளால் தடை விதிக்கப்பட்டதால் அதன் வீரர்கள் அந்நாட்டின் சார்பாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக் கொடியின் கீழ் கலந்துகொண்டனர்.

  •   புரூணை 1998 விளையாட்டுகளில் கலந்து கொண்டது போல் தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டது ஆனால் அதன் உறுப்பினராக ஒரே ஒரு அதிகாரி மட்டும் கலந்து கொண்டார் [5][6]
  •   ஆப்கானித்தான் எந்த வீரர்களையும் போட்டியில் கலந்து கொள்ள அனுப்பவில்லை ஆனால் நாடுகளின் அணிவகுப்பில் கலந்துகொண்டது.[7]
  •   லைபீரியா[8] &   சோமாலியா[9] ஆகியவை தொடக்க நிகழ்வில் பங்கேற்றன ஆனால் தங்கள் நாட்டு வீரர்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை (ஆப்கானித்தானின் ஐந்து வீரர்கள் சோமாலியாவின் இரண்டு வீரர்கள்). அதனால் அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் போனது.[5]


பதக்கப் பட்டியல்

தொகு

பங்குகொண்டவைகளில் 64 நாடுகள் பதக்கம் பெற்றன'

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஐக்கிய அணி 45 38 29 112
2   ஐக்கிய அமெரிக்கா 37 34 37 108
3   செருமனி 33 21 28 82
4   சீனா 16 22 16 54
5   கியூபா 14 6 11 31
6   எசுப்பானியா* 13 7 2 22
7   தென் கொரியா 12 5 12 29
8   அங்கேரி 11 12 7 30
9   பிரான்சு 8 5 16 29
10   ஆத்திரேலியா 7 9 11 27
11   கனடா 7 4 7 18
12   இத்தாலி 6 5 8 19
13   ஐக்கிய இராச்சியம் 5 3 12 20
14   உருமேனியா 4 6 8 18
15   செக்கோசிலோவாக்கியா 4 2 1 7
16   வட கொரியா 4 0 5 9
17   சப்பான் 3 8 11 22
18   பல்கேரியா 3 7 6 16
19   போலந்து 3 6 10 19
20   நெதர்லாந்து 2 6 7 15
21   கென்யா 2 4 2 8
22   நோர்வே 2 4 1 7
23   துருக்கி 2 2 2 6
24   இந்தோனேசியா 2 2 1 5
25   பிரேசில் 2 1 0 3
26   கிரேக்க நாடு 2 0 0 2
27   சுவீடன் 1 7 4 12
28   நியூசிலாந்து 1 4 5 10
29   பின்லாந்து 1 2 2 5
30   டென்மார்க் 1 1 4 6
31   மொரோக்கோ 1 1 1 3
32   அயர்லாந்து 1 1 0 2
33   எதியோப்பியா 1 0 2 3
34   அல்ஜீரியா 1 0 1 2
34   எசுத்தோனியா 1 0 1 2
34   லித்துவேனியா 1 0 1 2
37   சுவிட்சர்லாந்து 1 0 0 1
38   ஜமேக்கா 0 3 1 4
38   நைஜீரியா 0 3 1 4
40   லாத்வியா 0 2 1 3
41   ஆஸ்திரியா 0 2 0 2
41   நமீபியா 0 2 0 2
41   தென்னாப்பிரிக்கா 0 2 0 2
44   பெல்ஜியம் 0 1 2 3
44   குரோவாசியா 0 1 2 3
44 தனிப்பட்டவர்கள் 0 1 2 3
47   ஈரான் 0 1 2 3
48   இசுரேல் 0 1 1 2
49   சீன தைப்பே 0 1 0 1
49   மெக்சிக்கோ 0 1 0 1
49   பெரு 0 1 0 1
52   மங்கோலியா 0 0 2 2
52   சுலோவீனியா 0 0 2 2
53   அர்கெந்தீனா 0 0 1 1
53   பஹமாஸ் 0 0 1 1
53   கொலம்பியா 0 0 1 1
53   கானா 0 0 1 1
53   மலேசியா 0 0 1 1
53   பாக்கித்தான் 0 0 1 1
53   பிலிப்பீன்சு 0 0 1 1
53   புவேர்ட்டோ ரிக்கோ 0 0 1 1
53   கத்தார் 0 0 1 1
53   சுரிநாம் 0 0 1 1
53   தாய்லாந்து 0 0 1 1
மொத்தம் 260 257 298 815

^ அ. ஐக்கிய அணி என்பது பால்டிக் நாடுகளை தவிர்த்த முன்னால் சோவியத் ஒன்றியத்திலுள்ள நாடுகளின் கூட்டு அணியாகும், 1992 குளிர்கால ஒலிம்பிக்கிலும் ஐக்கிய அணி என்றே அவை போட்டியிட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. "IOC Vote History". Aldaver.com. Archived from the original on 2008-05-25. பார்க்கப்பட்ட நாள் 2011-12-04.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-03-17. பார்க்கப்பட்ட நாள் 2011-03-17.
  3. "Barcelona 1992 Summer Olympics | Olympic Videos, Photos, News". Olympic.org. பார்க்கப்பட்ட நாள் 2011-12-04.
  4. "On the Bright Side". Sports Illustrated. 1996-07-30. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.
  5. 5.0 5.1 1992 Olympics Official Report. Part IV. Archived from the original (PDF) on December 25, 2018. பார்க்கப்பட்ட நாள் October 24, 2012. List of participants by NOC's and sport
  6. யூடியூபில் Barcelona 1992 Opening Ceremony Parade of Nations 2/8
  7. யூடியூபில் Barcelona 1992 Opening Ceremony Parade of Nations 1/8
  8. யூடியூபில் Barcelona 1992 Opening Ceremony Parade of Nations 4/8
  9. யூடியூபில் Barcelona 1992 Opening Ceremony Parade of Nations 6/8