1997 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்

11வது இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்


இந்தியக் குடியரசின் பதினோராவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1997 ல் நடைபெற்றது. கே. ஆர். நாராயணன் 956,290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி. என் சேசன் 50,631 வாக்குகள் பெற்றார். நாராயணன் இந்தியாவின் தலித் சமூகத்தைச் முதல் குடியரசுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1997

← 1992 17 ஜூலை 1997 2002 →
 
வேட்பாளர் கே. ஆர். நாராயணன் டி. என். சேஷன்
கட்சி காங்கிரசு சுயேச்சை
சொந்த மாநிலம் கேரளா கேரளா

தேர்வு வாக்குகள்
956,290 50,631
வென்ற மாநிலங்கள் 31 0
விழுக்காடு 95. 0% 5.0%
மாற்றம் 29.1% Increase புதிய

மாநிலங்கள் வாரியாக
வெற்றியாளர்கள். நாராயணன் நீலம்.

முந்தைய குடியரசுத் தலைவர்

சங்கர் தயாள் சர்மா
காங்கிரசு

குடியரசுத் தலைவர் -தெரிவு

கே. ஆர். நாராயணன்
காங்கிரசு

பின்புலம்

தொகு

ஜூலை 17, 1997ல் பதினோராவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1992-97ல் குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா மீண்டும் போட்டியிடவில்லை. மாறாக துணைக்குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் இந்திய தேசிய காங்கிரசு, ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியும் அவருக்கு ஆதரவளித்தது. அவருக்கு எதிராக முன்னாள் முதன்மைத் தேர்தல் ஆணையர் டி. என். சேஷன் போட்டியிட்டார். அவருக்கு சிவ சேனா கட்சி மட்டும் ஆதரவளித்தது. நாராயணன் எளிதில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவர் ஆனார்.

முடிவுகள்

தொகு

மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம்[1][2][3]

மாநிலங்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற
உறுப்பினர்கள் எண்ணிக்கை
ஒவ்வொரு வாக்கின் மதிப்பு கே. ஆர். நாராயணன் (வாக்குகள்) கே. ஆர். நாராயணன் (மதிப்புகள்) சேசன் (வாக்குகள்) சேசன் (மதிப்புகள்) செல்லாதவை (வாக்குகள்) செல்லாதவை (மதிப்புகள்)
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 776 708 676 478,608 26 18,408 32 22,656
ஆந்திரப் பிரதேசம் 294 148 254 37,592 9 1,332 17 2,516
அருணாச்சலப் பிரதேசம் 60 8 56 448 0 0 3 24
அசாம் 126 116 110 12,760 5 580 1 116
பீகார் 324 174 285 49,590 8 1,392 15 2,610
கோவா 40 20 35 700 2 40 3 60
குஜராத் 182 147 156 22,932 11 1,617 7 1,029
அரியானா 90 112 77 8,624 3 336 6 672
இமாச்சலப் பிரதேசம் 68 51 63 3,213 0 0 2 102
சம்மு காசுமீர் 87 72 74 5,328 1 72 4 288
கர்நாடகா 224 131 191 25,021 13 1,703 11 1,441
கேரளா 140 152 135 20,520 0 0 2 304
மத்தியப் பிரதேசம் 320 130 296 38,480 9 1,170 13 1,690
மகாராட்டிரம் 288 175 173 30,275 96 16,800 1 175
மணிப்பூர் 60 18 52 936 4 72 0 0
மேகாலயா 60 17 43 731 10 170 4 68
மிசோரம் 40 8 34 272 2 16 0 0
நாகலாந்து 60 9 55 495 2 18 0 0
ஒரிசா 147 149 132 19,668 0 0 9 1,341
பஞ்சாப் 117 116 106 12,296 1 116 7 812
ராஜஸ்தான் 200 129 174 22,446 4 516 12 1,548
சிக்கிம் 32 7 31 217 0 0 0 0
தமிழ்நாடு 234 176 229 40304 2 352 2 352
திரிபுரா 60 26 59 1534 0 0 0 0
உத்தரப்பிரதேசம் 425 208 377 78,416 24 4,992 7 1,456
மேற்கு வங்கம் 294 151 272 41,072 5 755 4 604
தில்லி 70 58 58 3,364 3 174 8 464
புதுச்சேரி 30 16 28 448 0 0 1 16
மொத்தம் 4,848 3,232 4,231 956,290 240 50,631 171 22,656

மேற்கோள்கள்

தொகு
  1. *https://web.archive.org/web/19970804211707/http://alfa.nic.in/hm/result.html இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (பரண்)
  2. http://www.indiaonestop.com/Presidency/presidential_candidates.htm
  3. http://eci.gov.in/eci_main/miscellaneous_statistics/PresdElec/BriefNotes.pdf Election Commission of India

வெளியிணைப்புகள்

தொகு