222
ஆண்டு 222 (CCXXII) யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "அந்தோனினசு, செவெரசு தூதர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Antoninus and Severus) எனவும், "ஆண்டு 975" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 222 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
ஆயிரமாண்டு: | 1-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
222 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 222 CCXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 253 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 975 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2918-2919 |
எபிரேய நாட்காட்டி | 3981-3982 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
277-278 144-145 3323-3324 |
இரானிய நாட்காட்டி | -400--399 |
இசுலாமிய நாட்காட்டி | 412 BH – 411 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 472 |
யூலியன் நாட்காட்டி | 222 CCXXII |
கொரிய நாட்காட்டி | 2555 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 11 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன.
- எலகபாலுசுவிற்குப் பின்னர் அலெக்சாந்தர் செவெரசு தனது 13வது அகவையில் ஆட்சியில் அமர்ந்தான். இவனது தாயார் யூலியா அவத்தா மமேயா உரோமைப் பேரரசை 16 மேலவை உறுப்பினர்களின் உதவியுடன் ஆட்சி புரிந்தார்.
- சீன நாடுகளான சூ கான், கிழக்கு வூ ஆகியவற்றிடையே போர் மூண்டது.
- அக்டோபர் 14 – ஐந்து ஆண்டுகள் ஆட்சியியின் பின்னர் திருத்தந்தை முதலாம் கலிஸ்டசு உரோமில் கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பின் கருதினால் முதலாம் உர்பான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- மார்ச் 11 – எலகபாலுசு, உரோமைப் பேரரசர் (பி. 203)
- முதலாம் கலிஸ்டஸ் (திருத்தந்தை)
- பர்தைசான், சிரிய மெய்யியலாளர் (பி. 154)