24 மனை தெலுங்குச்செட்டியார்

(24 மனை தெலுங்கு செட்டியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

24 மனை தெலுங்குச் செட்டியார் (Twenty four Manai Telugu Chettiars) அல்லது சாது செட்டியார் (Sadhu Chettiar) என்பவர்கள் தென்னிந்தியாவில் உள்ள ஒரு சாதியினர் ஆவர். இவர்களது தாய் மொழி தெலுங்கு ஆகும்.[1] இச்சமூகத்தினர் பலிஜா சமூகத்தின் ஒரு பிரிவினராக இருந்தனர். பின்னர் தொழில் அடிப்படையில் தனித்துவமான சமூகமாக மாறினார்.[2]

24 மனை தெலுங்குச் செட்டியார்
வகைப்பாடுபிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
மதங்கள்இந்து
மொழிகள்கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், கருநாடகம், கேரளா, தமிழ்நாடு

இவர்கள் வீட்டில் தெலுங்கு மொழியில் பேசினாலும், தமிழ்ப் பண்பாட்டில் வாழ்வியல் முறையும், கலாசாரத்தையும் பின்பற்றுகின்றனர். இவர்கள் தங்கள் குல தெய்வமாக காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சனவரி முதல் ஞாயிறு அன்று காஞ்சியில் இச்சமூகத்தின் சார்பில் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுக்க இச்சமூகத்தினர் பரவி இருக்கிறார்கள் என்றாலும் மதுரை, தேனி, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் சென்னை பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அரசு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ளனர்.[3]

தொழில்

தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் குறித்த பொருட்களை பெருவாரியாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 18 ஆம் நூற்றாண்டில், அவர்கள் முதன்மையாக சாக்குப்பைகளை (கோணிப்பைகளை) உற்பத்தி செய்வதில் / விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்தனர். எனவே அவர்கள் சலுப்பன் செட்டி என அடையாளம் காணப்பட்டனர்.[4]

பிரிதானிய காலனித்துவ காலத்தில் (19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்), இவர்கள் பெரும்பாலும் வணிகம் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக மதுரை நகரில் பாரம்பரிய சாக்குப் பை வியாபாரத்தில் இருந்து நகர்ந்து பல்வேறு வகையான பழங்களின் விற்பனையில் பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் துணிகள் மற்றும் பிற பொருட்களின் வியாபாரிகளாகவும் இருந்தனர்.

நவீன நாட்களில், இந்த சமூகம் முக்கியமாக பணம் கடன் வழங்கும் வணிகம், தொழில், எண்ணெய், மளிகை, உலோகம், மற்றும் பிற சிறு வணிகங்களில் பன்முகப்பட்டு ஈடுபடுகின்றது.

திருமண உறவுமுறை

24 மனை தெலுங்குச் செட்டியார்களில் 24 மனை என்பது 24 கோத்திரத்தைக் குறிப்பிடுகிறது. இதில் 8 கோத்திரம் பெண் வீடு என்றும் 16 கோத்திரம் ஆண் வீடு என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரிவுகளுக்கிடையே திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள். ஒரே பிரிவில் இருப்பது சகோதர உறவாக கொள்ளப்பட்டுள்ளது. இச்சமூகத்தின் தலைவர் பெரியதனத்தார், நாட்டாமை அல்லது சாதித் தலைவர் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தலைமையில்தான் இச்சாதியினரின் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

கோத்திரங்கள்

16 பதினாறு வீடு (ஆண் வீடு)
இன்றைய மனை (குலம்) கோத்திரம் பண்டய மனை (குலம்) கோத்திரம் குல ரிசி
மும்முடியார் மும்மடியவன் திரு முகுந்த ரிசி
கோலவர் (கோலையர்) கொலவன் திரு குடிலகு ரிசி
கணித்தியவர் கையிறவன் திரு கௌதன்ய ரிசி
தில்லையவர் எடுக்கவயன் திரு தொந்துவ ரிசி
பலிவிரியர் (பலுவிதியர்) பலிதயவன் திரு சைலய ரிசி
சென்னையவர் கெஞ்சி திரு ஹரிகுல ரிசி
மாதளையவர் கொற்கவன் திரு குந்தள ரிசி
கோதவங்கவர் வங்கிசிவன் திரு கணத்த ரிசி
ராஜபைரவர் வரசிவன் திரு ரோசன ரிசி
வம்மையர் வருமயவன் திரு நகுல ரிசி
கப்பவர் கவிலவன் திரு சாந்தவ ரிசி
தரிசியவர் தரிச்சுவன் திரு தர்சிய ரிசி
வாஜ்யவர் வழமையவன் திரு வசவ ரிசி
கெந்தியவர் கெந்தியவன் திரு அனுசுயி ரிசி
நலிவிரியவர் கெடிகிரியவன் திரு மதகனு ரிசி
சுரையவர் சூரியவன் திரு கரகம ரிசி
8 எட்டு வீடு (பெண் வீடு)
இன்றைய மனை (குலம்) கோத்திரம் பண்டய மனை (குலம்) கோத்திரம் குல ரிசி
மக்கடையர் மக்கிடவன் திரு மங்கள ரிசி
கொரகையர் குதிரை வல்லவன் திரு கௌதம ரிசி
மாரெட்டையர் யக்கவன்னந்தவன் திரு மண்டல ரிசி
ரெட்டையர் நெட்டையவன் திரு கௌசிக ரிசி
பில்லிவங்கவர் வெலிவங்கிசவன் திரு பில்லி ரிசி
தவளையார் தவிலையவன் திரு கௌந்தைய ரிசி
சொப்பியர் சொற்பனவன் திரு சோமகுல ரிசி
லொட்டையவர் கோட்டையவன் திரு பார்த்துவ ரிசி

குறிப்பிடத்தக்க நபர்கள்

மேற்கோள்கள்

  1. K. S. Singh, ed. (2001). People of India: Tamil Nadu. Anthropological Survey of India. p. 1269. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185938882. The Sadhu Chetty are also known as Ippathunalumanai Chetty ( 24 Manai Chetty ). They are also known as Janappan, Telugupatti Chetty, Saluppan and Saluppa Chetty. Chetty is their title.
  2. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".