அந்த நாள் (1996 திரைப்படம்)

1996 திரைப்படம்

அந்த நாள் (Andha Naal) என்பது 1996 ஆம் ஆண்டய தமிழ் மர்மத் திரைப்படமாகும். விஷ்ணு பிரியன் இயக்கிய இப்படத்தில் பிரேம் மேனன், ராஜா, ஆனந்தராஜ், மோகினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி, அலெக்ஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். டி. ஆண்டனி தயாரித்த இப்படத்திற்கு, சௌந்தர்யன் இசை அமைத்துள்ளார். இப்படம் 11 அக்டோபர் 1996 இல் வெளியிடப்பட்டது. இந்த படம் 1954 ஆம் ஆண்டுத் திரைப்படமான அந்த நாள் படத்தை ஓரளவு முன்மாதிரியாக கொண்டது.[1][2]

அந்த நாள்
இயக்கம்விஷ்ணு பிரியன்
தயாரிப்புடி. ஆண்டனி
கதைவிஷ்ணு பிரியன்
இசைசௌந்தர்யன்
நடிப்பு
ஒளிப்பதிவுஜி. மாதவன்
படத்தொகுப்புஎம். சக்திவேல்
கலையகம்எம்பயர் மூவிஸ்
வெளியீடுஅக்டோபர் 11, 1996 (1996-10-11)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேவாலய பாதிரியாரான ஜேம்ஸ் ( ஆனந்தராஜ் ) நள்ளிரவில் கல்லறையில் ஒரு சவப்பெட்டியை தோண்டி எடுப்பதிலிருந்து படம் தொடங்குகிறது. பாதிரியார் ஜேம்ஸ் சவப்பெட்டியின் உள்ளே இருப்பதைக் காண்கிறார். உள்ளே பாபுவின் ( ராஜா ) சடலத்தைக் காணும்போது அவனின் இதயத்தில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதைக் கண்டு, அவர் உடனடியாக காவல் துறையை அழைக்கிறார். சடலத்தைப் பார்த்த காவல் ஆய்வாளர் ரங்கராஜ் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர சவப்பெட்டியை மீண்டும் அடக்கம் செய்கிறார். இச் செய்தி வேகமாக பரவுகிறது. அது ஒவ்வொரு செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் இடம் பெறுகிறது. காவல்துறையினர் ஒரு விவகாரத்தை மூடிமறைத்ததற்காக கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர்.

காவல் துணைத் தலைவர் விக்கிரமாதித்தன் ( பிரேம் மேனன் ) இந்த வழக்கை தானே எடுத்து விசாரிக்க முடிவு செய்கிறார். அவர் சவப்பெட்டியைத் தோண்டி, பிணக்கூறாய்வுக்கு அனுப்புகிறார். விக்ரமாதித்யன் முதலில் தேவாலயப் பாதிரியார் ஜேம்சிடம் விசாரிக்கிறார். ஜேம்ஸ் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்று கூறுகிறார்.

பாபு ( ராஜா ) மற்ற மாணவர்களை ஏமாற்றுவது, பேராசிரியர்களுக்கு எரிச்சலூட்டுவது போன்றவற்றில் ஈடுபடும் கெட்டப்போக்குள்ள மாணவன். பாபு தனது வகுப்புத் தோழியான மேரி ( மோகினி ) உடன் அடிக்கடி மோதல் போக்கில் ஈடுபடுகிறான். மேரி இறைபக்தி மிக்கவளாகவும், மென்மையான குணம் கொண்டவளாகவும் இருக்கிறாள். அனாதையான அவள், பாதிரியார் ஜேம்சால் வளர்க்கப்பட்டவள். பாபு மெல்ல மெல்ல அவளை காதலிக்கத் தொடங்குகிறான். அவன் ஒரு நல்ல மனிதனாகி, இறுதியில் அவன் கிறிஸ்தவ சமயத்துக்கு மாறுகிறான். இறுதியில், வின்சென்ட் பாபுவும் மேரியும் பாதிரியார் ஜேம்சின் ஆசீர்வாதத்துடன் தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமண நாளின் இரவில், பாபு தனது சுயரூபத்தைக் காட்டுகிறான். உண்மையில், அவன் ஒரு குடிகாரன், பெண்பித்தன், அவன் மேரிமீதான தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ளவே நல்லவனாக நடித்தான். மறுநாள் அவளை விட்டுப் பிரிந்து சென்றான். பல ஆண்டுகளுக்குப் பிறகு, பாபு தனது செல்வத்தை எல்லாம் இழந்தவனாக, மனச்சோர்வடைந்தவனாக பாதிரியார் ஜேம்ஸிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் வந்தான். மேரிக்கு அலெக்ஸ் (மாஸ்டர் நதீம் கான்) என்ற ஒரு மகன் இருந்தான். அலெக்ஸ் தனது தாய் மேரியை பாபுவுடன் சேர்ந்து வாழும்படி வற்புறுத்துகிறான். மீண்டும் பாபுவின் நடத்தை மோசமாகிது : அவன் பள்ளி ஆசிரியர் பூர்ணிதாவிடம் ( ரக்சா ) மோசமாக நடந்து கொள்ளுதல், விபச்சாரியுடன் ( சகீலா ) நேரத்தை செலவிடுதல், தனது மகள் மேரியைப் பார்க்க வந்த லட்சுமியை (கவிதா) கவர்ந்திழுக்க முயலுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றான். ஒருநாள் அவன் (அலெக்ஸ்) என்பவருக்குச் சொந்தமான குடிப்பகத்தில் நிறைய மது குடிக்கிறான் பின்னர் அவன் தனது மனைவியை துன்புறுத்துகிறான். மகனை அடிக்கிறான். ஒரு இரவு, பாதிரியார் ஜேம்சுக்கு பாபுவின் மரணம் குறித்து தகவல் தரப்படுகிறது. அவர்கள் அனைவரும் அதே நாள் மாலை அவனது இறுதி சடங்கிற்கு செல்கிறார்கள். ஒரு தொழிலாளி சவப்பெட்டியில் முதல் ஆணியை அடிக்க முயன்றபோது, சுத்தி அவரது கைகளில் இருந்து நழுவி விழுந்து பாபுவின் மார்பில் படுகிறது. பாபு சற்று கண்களைத் திறந்தான். பாதிரியார் ஜேம்ஸ் அதைக் கவனிக்கிறார்.

விக்ரமாதித்யன் பின்னர் குற்றவாளி யார் என கண்டுபிடிப்பதில் தீவிரமாக செயல்படுகிறார். அடுத்தது என்ன என்பதே கதையின் பின்பகுதி ஆகும்.

நடிகர்கள்

தொகு

படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல் இசையை திரைப்பட இசையமைப்பாளர் சௌந்தர்யன் மேற்கொண்டார். 1996 இல் வெளியான பாடல் பதிவில், பிறைசூடன், விசாலி கண்ணதாசன், சௌந்தர்யன் ஆகியோர் எழுதிய பாடல் வரிகளுடன் ஆறு பாடல்கள் இடமெபெற்றன.[3][4]

பாடல் பாடல் பாடகர் (கள்) காலம்
1 'வச்சா வச்சா' அனுராதா ஸ்ரீராம் 5:00
2 'அந்த நாள்' கே. ஜே. யேசுதாஸ் 5:02
3 'அடியே தண்ணி' மனோ 5:12
4 'தேவனின் வாசலில்' மனோ, அனுராதா ஸ்ரீராம் 5:00
5 'யேசுவே யேசுவே' பிரபாகர், ராஜ்குமார் 1:21
6 'அந்த நாள்' சுவர்ணலதா 5:06

மேற்கோள்கள்

தொகு
  1. "Antha Naal (1996) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-06.
  2. "Find Tamil Movie Andhanaal". jointscene.com. Archived from the original on 2011-02-18. பார்க்கப்பட்ட நாள் 2016-04-06.
  3. "Andha Naal Songs". play.raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-06.
  4. "Andha Naal Songs". saavn.com. பார்க்கப்பட்ட நாள் 2016-04-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்த_நாள்_(1996_திரைப்படம்)&oldid=4048893" இலிருந்து மீள்விக்கப்பட்டது