அருணிமா குமார்

அருணிமா குமார் (Arunima Kumar) இவர் 2008 ஆம் ஆண்டிற்கான குச்சிபுடி நடனத்திற்காக சங்க நாடக அகாதமி யுவ புரஸ்கார் விருது பெற்றவர் [1]. 9 வயது இளம் பெண்ணாக, அருணிமா ஆம்ரபாலியில் நடித்தார். குச்சிபுடி நடன அகாடமி 1995 ஆம் ஆண்டில் முறையாக இவரை அறிமுகப்படுத்தியது [2]. அங்கு புதுதில்லியின் திரிவேணி கலா சங்கத்தில் தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். [3]

அருணிமா குமார்

இவரைப் பற்றி

தொகு

அருணிமா இந்தியாவின் பல்துறை முன்னணி குச்சிபுடி நடனக் கலைஞர்களில் ஒருவராவார். மேலும் 2008 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமியின் (இந்திய குடியரசால் அமைக்கப்பட்ட இந்தியாவின் தேசிய அகாதமி) மதிப்புமிக்க இசை, நடனம் மற்றும் நாடகம் ஆகிய துறைகளில் விதிவிலக்கான திறமையைக் காட்டிய / நிரூபித்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உஸ்தாத் பிசுமில்லா கான் யுவ புரஸ்கார் விருது பெற்றவர். தற்போது இவர் இலண்டனில் வசித்து வருகிறார். அரிசென்ட் குழுமத்தில் மனிதவள ஆலோசகராக பணிபுரிகிறார். [4]

தொழில்

தொகு

அருணிமா தனது 7 வயதில் குச்சிபுடியைக் கற்கத் தொடங்கினார் .பத்ம பூசண் திருமதி சொப்பன சுந்தரியின் கீழ் தனது ஆரம்ப பயிற்சியைப் பெற்றார். பத்மசிறீ குரு ஜெயராம ராவ் மற்றும் வனஸ்ரீ ராவ் ஆகியோரின் மூத்த சீடரான இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

அப்போதிருந்து, அருணிமா பாரம்பரிய நடனத் துறையில் உயரங்களை அடைய இடைவிடாத பக்தியுடன் தனது கலையைத் தொடர்ந்தார் . மேலும் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மதிப்புமிக்க கலாச்சார விழாக்கள் மற்றும் அரங்குகளில் பல தேசிய மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்

தொகு

குடியரசுத் தலைவர் இல்லம் , சிட்னி ஓபரா மாளிகை, கான்பெர்ரா விழா, ஹனோவர் மற்றும் லிஸ்பனில் எக்ஸ்போ 2000 , லண்டனில் நேரு மையம், பெர்லினில் தாகூர் மையம், மணிலாவில் ஆசிய கலை விழா, அமெரிக்காவில் குச்சிபுடி மாநாடு ஐதராபாத் கலை விழா, குச்சிபுடி விழா போன்றவை இவரது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளில் அடங்கும். .

சித்ராங்கதை பாலே போன்ற பல பாலேக்களிலும் இவர் நடித்துள்ளார். அங்கு இவர் சித்திராங்கதை வேடத்தில் நடித்தார்; நள தமயந்தியில் தமயந்தி வேடத்தில் நடித்தார்

1998 ஆம் ஆண்டில் நடனத்திற்கான சாகித்யா கலா பரிசத் உதவித்தொகை மற்றும் 2001இல் சுர் சிரிங்கர் சம்சாத் எழுதிய சிரிங்கர்மணி பட்டத்துடனும் அருணிமா அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பில் , வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் நிறுவப்பட்ட கலைஞராக பட்டியலிடப்பட்டார். அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் ஏ தர கலைஞராகவும் உள்ளார்.

கல்வி

தொகு

நடனத்தைத் தவிர, அருணிமா கல்வியிலும் சிறந்து விளங்கினார். இந்தியாவின் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இலண்டன் பொருளியல் பள்ளியில் இருந்து நிதி மற்றும் கணக்கியலில் பட்டம் பெற்றுள்ளார். இவரது சிறந்த கல்வி செயல்திறன் 2002 இல் எல்எஸ்இ கோடைகால பள்ளியில் கற்பிக்க வழிவகுத்தது. கற்பித்தல் பணியை முடித்த பின்னர், தனது நடனத்தைத் தொடர இந்தியா திரும்பினார். நிகழ்த்து கலைகளை மேம்படுத்துவதற்காக தனது சொந்த கலை அடித்தளத்தை உருவாக்க இப்போது கவனம் செலுத்துகிறார்.

இவர் ஒரு தீவிர கைத்துப்பாக்கி சுடும் மற்றும் மாநில மற்றும் தேசியப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் இந்திய அரசு விளையாட்டு திறமை தேடல் உதவித்தொகை (1991-1992) பெற்றவர் ஆவார்.

திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு மற்றும் தோற்றங்கள்

தொகு

நாடகங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், ஸ்டார் நியூஸ் பரணிடப்பட்டது 2018-06-15 at the வந்தவழி இயந்திரம், மியூசிக் வீடியோஸ் யூபோரியா, விளம்பரங்கள் மற்றும் குறும்படங்கள் பற்றிய பல வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். புதுதில்லி பற்றிய ஆவணப்படம், சர்வதேச படம், மைக்ரோசாப்ட், குளோபஸ் போன்றவை . இவர் சமீபத்தில் பிரகாஷ் ஜா - ரஜ்னீதி இயக்கிய ஒரு திரைப்படத்தில் ஒரு அருணிமாகவே தோன்றியுள்ளார்.

குறிப்புகள்

தொகு
  1. "About Arunima". www.artindia.net. பார்க்கப்பட்ட நாள் 2012-04-18.
  2. http://www.facebook.com/thekda
  3. "StageBuzz: Arunima Kumar Rocks Varanasi". Stagebuzz.info. Archived from the original on 2012-03-03. பார்க்கப்பட்ட நாள் 2012-04-18.
  4. "Arunima Kumar - United Kingdom | LinkedIn". Uk.linkedin.com. Archived from the original on 2012-07-16. பார்க்கப்பட்ட நாள் 2012-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணிமா_குமார்&oldid=3792608" இலிருந்து மீள்விக்கப்பட்டது