ஆசியக் கோப்பை (காற்பந்து)

ஆசியக் கிண்ணம் (காற்பந்து) அல்லது ஏஎஃப்சி ஆசியக் கோப்பை (AFC Asian Cup) என்பது ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பால் நடத்தப்பெறும் நாடுகளுக்கிடையேயான கால்பந்துப் போட்டித் தொடராகும். கோப்பா அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் பழமையான கண்ட கால்பந்துப் போட்டியாகும். வெற்றிபெறும் அணி நேரடியாக பிஃபா கூட்டமைப்புகள் கோப்பையில் ஆடத் தகுதிபெறும்.[1]

ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு ஆசியக் கிண்ணம்
AFC Asian Cup
தோற்றம்1956; 68 ஆண்டுகளுக்கு முன்னர் (1956)
மண்டலம்ஆசியாவும் ஓசியானியாவும்
அணிகளின் எண்ணிக்கை24 (இறுதி)
47 (தகுதி-காண் போட்டிகளுக்குத் தகுதி)
தற்போதைய வாகையாளர் கத்தார் (1 வாகை)
அதிக முறை வென்ற அணி சப்பான் (4 வாகைகள்)
இணையதளம்www.the-afc.com/asiancup/ இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
2023 ஆசியக் கிண்ணம் (காற்பந்து)

ஆசியக் கிண்ணம் நான்காண்டுகளுக்கு ஒருமுறை 1956 (ஆங்காங்) முதல் 2004 (சீனா) வரை நடத்தப்பட்டு வந்தது. இதே சுழற்சியில் ஒலிம்பிக் போட்டிகளும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளும் ஆசியக்கிண்ணம் இடம்பெறும் அதே ஆண்டில் நடத்தப்பெற்றதால், ஆசியக் கிண்ணத்தை நடத்துவதற்கான காலகட்டம் மாற்றப்பட்டது. 2004 இற்குப் பிறகு 2007-இல் நடத்தப்ப்பட்டது. இப்போட்டிஅயி பெறுகிறது. 2007-இல் தென்கிழக்காசியாவில் இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் நடத்தின. அதன் பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஆசியக் கிண்ணம் பொதுவாக சிறிய எண்ணிக்கையிலான முன்னணி அணிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. தொடக்கத்தில் வெற்றி பெற்ற அணிகளில் தென் கொரியா (இரண்டு முறை), ஈரான் (மூன்று முறை) ஆகியவை அடங்கும். 1984 முதல், சப்பான் (நான்கு முறை), சவூதி அரேபியா (மூன்று முறை) ஆகியவை மிகவும் வெற்றிகரமான அணிகளாக உள்ளன, கடைசி பத்து இறுதிப் போட்டிகளில் இவையிரண்டும் ஏழில் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மற்ற அணிகள் கத்தார் (2019 நடப்பு வாகையாளர்), ஆத்திரேலியா (2015), ஈராக் (2007), குவைத் (1980) ஆகியவை ஆகும். இசுரேல் 1964 இல் வென்றது, ஆனால் பின்னர் அது வெளியேற்றப்பட்டது, அது பின்னர் ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியத்தில் இணைந்தது.

ஆத்திரேலியா 2007 இல் ஆசியக் கூட்டமைப்பில் இணைந்தது, அது 2015 இல் தனது நாட்டில் போட்டிகளை நடத்தி, இறுதிப் போட்டியில் தென் கொரியாவை வென்றது. 2019 ஆசியக்கிண்ணத்தில் பங்குபற்றிய அணிகளின் எண்ணிக்கை 16 இல் இருந்து 24 இற்கு அதிகரிக்கப்பட்டது.[2][3]

முடிவுகள்

தொகு
பதி. ஆண்டு புரவலர் இறுதி மூன்றாமிடப் போட்டி அல்லது அரையிறுதி தோல்வியாளர்கள் அணிகளின் எண்ணிக்கை
வாகையாளர் இறுதி முடிவு இரண்டாமிடம் மூன்றாமிடம் இறுதி முடிவு நான்காமிடம்
1 1956   ஆங்காங்  
தென் கொரியா
தொடர் சுழல்   இசுரேல்   ஆங்காங் தொடர் சுழல்   தெற்கு வியட்நாம் 4
2 1960   தென் கொரியா  
தென் கொரியா
தொடர் சுழல்   இசுரேல்   சீனக் குடியரசு தொடர் சுழல்   தெற்கு வியட்நாம் 4
3 1964   இசுரேல்   இசுரேல் தொடர் சுழல்  
இந்தியா
 
தென் கொரியா
தொடர் சுழல்   ஆங்காங் 4
4 1968   ஈரான்  
ஈரான்
தொடர் சுழல்   மியான்மர்   இசுரேல் தொடர் சுழல்   சீனக் குடியரசு 5
5 1972   தாய்லாந்து  
ஈரான்
2–1 (கூ.நே.)
தேசிய விளையாட்டரங்கு, பேங்காக்
 
தென் கொரியா
  தாய்லாந்து 2–2 (கூ.நே.)
(5–3 சநீ)
தேசிய விளையாட்டரங்கு, பேங்காக்
  கம்போடியா 6
6 1976   ஈரான்  
ஈரான்
1–0
அசாதி விளையாட்டரங்கு, தெகுரான்
  குவைத்   சீனா 1–0
அசாதி விளையாட்டரங்கு, தெகுரான்
  ஈராக் 6
7 1980   குவைத்   குவைத் 3–0
சபா அல் சலேம், குவைத் நகரம்
 
தென் கொரியா
 
ஈரான்
3–0
சபா அல் சலேம், குவைத் நகரம்
  வட கொரியா 10
8 1984   சிங்கப்பூர்  
சவூதி அரேபியா
2–0
தேசிய விளையாட்டரங்கம், சிங்கப்பூர்
  சீனா   குவைத் 1–1 (கூ.நே.)
(5–3 சநீ)
தேசிய விளையாட்டரங்கம், சிங்கப்பூர்
 
ஈரான்
10
9 1988   கத்தார்  
சவூதி அரேபியா
0–0 (கூ.நே.)
(4–3 சநீ)
அல்-ஆக்லி விளையாட்டரங்கு, தோகா
 
தென் கொரியா
 
ஈரான்
0–0 (கூ.நே.)
(3–0 சநீ)
அல்-ஆக்லி விளையாட்டரங்கு, தோகா
  சீனா 10
10 1992   சப்பான்  
சப்பான்
1–0
ஹிரோஷிமா
 
சவூதி அரேபியா
  சீனா 1–1 (கூ.நே.)
(4–3 சநீ)
ஹிரோஷிமா
  ஐக்கிய அரபு அமீரகம் 8
11 1996   ஐக்கிய அரபு அமீரகம்  
சவூதி அரேபியா
0–0 (கூ.நே.)
(4–2 சநீ)
சேக் சையது விளையாட்டரங்கு, அபுதாபி (நகரம்)
  ஐக்கிய அரபு அமீரகம்  
ஈரான்
1–1 (கூ.நே.)
(3–2 சநீ)
சேக் சையது விளையாட்டரங்கு, அபுதாபி (நகரம்)
  குவைத் 12
12 2000   லெபனான்  
சப்பான்
1–0
விளையாட்டு நகர விளையாட்டரங்கு, பெய்ரூத்
 
சவூதி அரேபியா
 
தென் கொரியா
1–0
விளையாட்டு நகர விளையாட்டரங்கு, பெய்ரூத்
  சீனா 12
13 2004   சீனா  
சப்பான்
3–1
தொழிலாளர் விளையாட்டரங்கு, பெய்சிங்
  சீனா  
ஈரான்
4–2
தொழிலாளர் விளையாட்டரங்கு, பெய்சிங்
  பகுரைன் 16
14 2007   ஈராக் 1–0
கெலோரா புங் கர்னோ விளையாட்டரங்கம், ஜகார்த்தா
 
சவூதி அரேபியா
 
தென் கொரியா
0–0 (கூ.நே.)
(6–5 சநீ)
கெலோரா சிறிவிஜயா விளையாட்டரங்கு, பலெம்பாங்
 
சப்பான்
16
15 2011   கத்தார்  
சப்பான்
1–0 (கூ.நே.)
கலீஃபா பன்னாட்டு விளையாட்டரங்கம், தோகா
 
ஆத்திரேலியா
 
தென் கொரியா
3–2
யசீம் பின் அமது விளையாட்டரங்கு, தோகா
  உஸ்பெகிஸ்தான் 16
16 2015   ஆத்திரேலியா  
ஆத்திரேலியா
2–1 (கூ.நே.)
ஆத்திரேலியா விளையாட்டரங்கம், சிட்னி
 
தென் கொரியா
  ஐக்கிய அரபு அமீரகம் 3–2
நியூகாசில் விளையாட்டரங்கு, நியூகாசில்
  ஈராக் 16
17 2019   ஐக்கிய அரபு அமீரகம்  
கத்தார்
3–1
சையது விளையாட்டரங்கு, அபுதாபி (நகரம்)
 
சப்பான்
  ஈரான்,   ஐக்கிய அரபு அமீரகம் 24
18 2023   கத்தார் உலுசைல் விளையாட்டரங்கம், உலுசைல் 24
19 2027   சவூதி அரேபியா மன்னர் பாகுது விளையாட்டரங்கு, ரியாத் 24

மேற்கோள்கள்

தொகு
  1. "FIFA Council votes for the introduction of a revamped FIFA Club World Cup". 15 March 2019 இம் மூலத்தில் இருந்து 16 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190716174909/https://www.fifa.com/about-fifa/who-we-are/news/fifa-council-votes-for-the-introduction-of-a-revamped-fifa-club-world-cup. 
  2. "Revamp of AFC competitions". The-afc.com. 25 January 2014. Archived from the original on 3 February 2014.
  3. "AFC Asian Cup changes set for 2019". Afcasiancup.com. 26 January 2014. Archived from the original on 30 January 2014.

வெளி இணைப்புகள்

தொகு